Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாகும்வரை உண்ணாவிரதத்தினில் குதித்தனர் மாணவர்கள்! தர்மசங்கடத்தினில் வடமாகாணசபை!! Photo's

Featured Replies

 

யாழ்ப்பாணம் வலிகாமத்தில் கழிவு ஓயில் கலந்த நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்த முடியுமா?இல்லையாவென்பது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை வடமாகாணசபையிடமிருந்து எதிர்பார்த்து சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தினில் மக்கள் மற்றும் மாணவர்கள் குதித்துள்ளனர்.

unnaviratham.JPGசுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளை சேர்ந்த நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என அனைத்து தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.எனினும் வடமாகாணசபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு உத்தியோகபூர்வமற்ற நிலையினில் ஊடகங்களிற்கு குறித்த நீரினில் அபாயமில்லையென அறிவித்திருந்தது.

 unnaviratham-1.JPGஇது தொடர்பில் குழப்பகரமான அறிக்கைகளும் செய்திகளும் வெளியாகி வருவதால் இந்த சிக்கலில் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவர்கள் இதில் நேரடியாக தலையிடக்கோரி ‘நீருக்காகத்திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் இன்று  செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மாபெரும் பேரணியொன்று ஆரம்பித்திருந்தது.

unnaviratham-2.jpgபோராட்டத்தினில் பங்கெடுத்தவர்கள் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக கோவில் வீதியினூடாக றக்காவீதியை சென்றடைந்து முதலமைச்சர் அலுவலகத்தினில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

பின்னர் ஏ-9வீதியினூடாக பயணித்து அரச அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கான மகஜரை கையளித்திருந்தனர்.

unnaviratham-3.JPGமகஜர்கள் கையளிக்கப்பட்ட வேளை தமக்கான தீர்க்கமான முடிவெதுவுமே தெரிவிக்கப்படாத நிலையினில் உறுதியான பதிலை வலியுறுத்தியே அவர்கள் பின்னர் நல்லூர் ஆலய முன்றலில் சாகும் வரையான உண்ணாவிரதத்தினில் குதித்துள்ளனர்.

water%20pro-9.JPGஉணவு மற்றும் நீராகாரம் என்பவற்றினை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பினில் மாணவ சமூகம் இப்போராட்டத்தினில் குதித்துள்ளது.

பேரணி ஆரம்பத்தினில் இப்போராட்டம் எந்தவொரு சபைக்கும் எதிரானதல்லவென அறிவிக்கப்பட்டிருந்த போதும் பங்கெடுத்தோர் வடமாகாணசபை மற்றும் நொதேர்ண் பவர் நிறுவனங்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

water%20pro-10.JPGபொதுமக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள்,மருத்தவர்கள்,சிவில் சமூக அமைப்பனை சேர்ந்தவர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு வருகை தரவேண்டாமென பகிரங்கமாக கோரப்பட்டமையால் எந்தவொரு அரசியல் தரப்பும் எட்டியும் பார்த்திருக்கவில்லை.

water%20pro-11.JPGஇன்று வடமாகாணசபை அமர்வு நடைபெறும் நிலையினில் அதனூடாக பயணித்த முதலமைச்சர் போராட்டகாரர்களை அவதானித்தே சென்றிருந்தார்.

தொடர்புடைய செய்தி :-  தூய நீருக்கான போராட்டம் நல்லூரடியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆதரவுடன் ஆரம்பமாகியது

 

http://www.pathivu.com/news/39038/57//d,article_full.aspx

உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, போத்தல் நீரைப் பருகுமாறு மாகாண அமைச்சர்கள் கோரியதையதால் அமளிதுமளி

யாழ் வலிகாமம் பகுதிகளில் மிகவும் வேகமாகப் பரவிவரும் நிலக்கீழ் நீர் மாசடையும் விடயத்தில் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வினைக்காண வேண்டுமெனக் கோரி இன்று நல்லூர் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை உறுதிமோழியேதுமின்றிக் கைவிடுமாறு வடமாகாணசபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோரியதால் அங்கு இன்று மாலை அமளிதுமளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுக்கிறது.  
 
 
நொதெர்ஸ் பவர் என்ற தனியார் மின்பிறப்பாக்கி நிறுவனம் கடந்த ஆறு வருடங்களாக தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் இயந்திரக் கழிவு எண்ணையை நேரடியாகவே பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் பாச்சியமையினாலே வலிகாமம் பகுதியில் சுமார் 1000 ற்கும் மேற்பட்ட கிணறுகள்  கழுவு ஓயிலினால் மாசடைந்திருக்கிறது.
 
இதனால் வளமான அந்தப்பகுதி விவசாயச் செய்கை மாத்திரமன்றி, குடிநீர் மற்றும் வீட்டுப்பாவனைக்கும் நீரிற்குப் பாரிய மாசடைதல் ஏற்பட்டுள்ளது.
 
இதனைக் கண்டித்துப் பல்வேறு வெகுஜனப் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையிலும், இதற்கான தீர்வொன்றினை வழங்கவோ அல்லது தக்க நடவடிக்கைகளை எடுக்கவோ மத்திய மற்றும் மாகாணசபை அரசுகள் தவறியுள்ளன.
 
இதன் பின்னணியில் இன்று நல்லூர் வீதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றினை மாசடைந்த நீரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பித்திருந்தனர்.
 
இதுதொடர்பாக இன்று காலை இடம்பெற்ற ஒரு பேரணியில் ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
 
நீரைப் பருகலாமா? பருகக்கூடாதா என்பது குறித்த உறுதி மொழி 72 மணித்தியாலத்தினுள் தரப்படவேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய பத்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துள்ள ஐந்து இளைஞர்கள் ஆரம்பித்திருந்தனர்.
 
ஆனால் இன்று மாலை உண்ணாவிரதமிருந்தவர்களிடம் விஜயம் செய்த வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கால்நடை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஐங்கரநேசன், நன்னீர் மீன்பிடி அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் குருகுலராஜா போன்றோர் உண்ணாவிரதத்தினை உடனடியாகக் கைவிடும்படியும், எதிர்வரும் 12 திகதி வரைக்கும் அதனைத் தள்ளிப்போடும் படியும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
 
ஆனாலும், இந்த விடயத்தில் மாகாண சபை ஏற்கனவே கடைப்பிடித்துவரும் அசமந்தப் போக்கினைக் கண்டித்த அங்கிருந்தவர்கள், குறைந்த பட்சம் நீரைப் பருகலாமா பருகக்கூடாதா?, என்ற கோரிக்கைக்காவது தீர்க்கமான பதிலொன்றினை முதல்வரும், மாகாணசபை அமைச்சர்களும் அடுத்த 72 மணி நேரத்தினுள் பெற்றுத்தருவதாக எழுத்துமூல உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கைவிடலாம் என்று வாதாடியிருக்கிறார்கள்.
 
protest-1.jpg
 
இதற்கான பதிலொன்றை எதிர்வரும் 12 ஆம் திகதி தரமுயற்சிப்பதாகவும், அது வரைக்கும் போத்தல் நீரைப் பருகும்படியும் அங்கு வந்திருந்த அமைச்சர்களில் ஒருவர் தெரிவித்திருந்தமை அங்கு காரசாரமான வாக்குவாதத்தையும், அமளிதுமளியையும் ஏற்படுத்தியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
இதனையடுத்து மாகாணசபை முதல்வரும், அமைச்சர்களும் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின் பிரகாரம் நேற்றியதினம் முதல் சுன்னாகத்தில் அமைந்துள்ள நொதேர்ண் பவர் நிலையத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டிருப்பதோடு தமது ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பதாகவும் சர்ச்சைக்குரிய அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.
 
நீர் மாசடைதல் தொடர்பான வழக்கொன்றில் இந்த நிறுவனத்தினைக் காலவரையறையின்றி மூடும்படி மல்லாகம் நீதிமன்றம் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
 
இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் பிரகாரம் இந்த நிறுவனம் தற்போது திறக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த வழக்கு எதிர்வரும் புதன்கிழமை (ஏப்பிறில் 16) மேலதிக விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டவிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.colombomirror.com/tamil/?p=3864

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.