Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார் (2ம் இணைப்பு)

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார்  

APR 07, 2015 | 1:56

by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

chamal-rajapaksha-300x199.jpegசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படப் போவது யார் என்பது குறித்து, இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.

அத்துடன், 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானமும், இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடும் போது, சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, அந்தக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால  டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்ற சர்ச்சை கிளப்பப்பட்டது.

அத்துடன் தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமை அளிக்கப்பட வேண்டும் என்று சிறுபான்மைக் கட்சிகளும், ஜேவிபியும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 19வது அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

19வது திருத்தச்சட்டத்தை சாதாரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற முடியுமா, அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன், கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்து இந்த வியாயக்கியானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2015/04/07/news/5037

 


எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் – ஏமாற்றினார் சபாநாயகர் APR 07, 2015 | 10:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Chamal-Rajapaksa-300x200.jpgஎதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும், இதுகுறித்த தீர்மானம் எடுக்க தமக்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படுவதாகவும், சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான சர்ச்சை எழுதிருந்த நிலையில், இன்று தாம் அதுபற்றிய முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதேவேளை, தினேஸ் குணவர்த்தனவை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று பிற்பகல் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/07/news/5059

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.