Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை

Featured Replies

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை APR 11, 2015 | 1:27by கனடாச் செய்தியாளர்in செய்திகள்

ltte-flag-300x199.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான புவனேசன் துரைராஜா என்பவரை போர்க்குற்றவாளி என்று கூறி, அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப, கனேடிய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

ஆனால்,அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறி, கனேடிய உயர்நீதிமன்ற நீதிபதி சீன் ஹரிங்டன் அந்த முடிவுக்குத் தடைவிதித்துள்ளார்.

இந்த உத்தரவு கனேடிய உயர்நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புவனேசன் துரைராசாவைத் திருப்பி அனுப்புவதால், அவர் சிறிலங்காவில் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளமாட்டார் என்ற கனேடிய குடியுரிமை மற்றும் குடிவரவு த்துறையின் மதிப்பீட்டையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரி வசூலிப்பாளராக இருந்த புவனேசன் துரைராஜா, பின்னர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியிருந்தார்.

அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதையடுத்து, போலிக் கடவுச்சீட்டில் கனடா வந்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையில், போருக்காக அவர் வரிவசூரித்தார் என்ற குற்றச்சாட்டில், கனேடிய அதிகாரிகளை அவரை நாடு கடத்த உத்தரவிட்டனர்.

புவனேசன் துரைராஜா, விடுதலைப் புலிகளின் ஆவண பணியகம் மற்றும் நிதிப்பிரிவில் பணியாற்றியிருந்தார்.

இவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பினால் அவர் ஆபத்தை எதிர்கொள்வார் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/04/11/news/5131

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் வழக்கம்போல லிபரல் அல்லது என்டிபிக்கு வாக்குப்போட உள்ளேன்.. இதில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கு வாக்கை வழங்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற புஷ் காலத்து சமாச்சாரத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு இன்னும் திரிகிறது பழமைவாதக் கட்சி.. சிரியாவில் இதைச் சொல்லித்தான் இன்றும் குண்டு வீசுகிறார்கள்..

இவர்களின் சித்தாந்தப்படி எல்லோரையும் இறுக்கிப் பிடிக்கிறார்கள்.. அதாவது இன்றைய ஐசிஸ்காரனும், முன்னாள் புலி வீரரும் ஒன்றுதான் இவர்களைப் பொறுத்தவரையில்..

ஆட்சி மாறினால் ஒரு இளக்கத்தை கொண்டுவர முடியும்.

புலிகள் தன்னை பலவந்தமாக வரி சேகரிப்பில் ஈடுபடுத்தியதாக தெரிவிப்பு.

 

வாதத்தை ஏற்று நாடுகடத்தலை நிறுத்தியது கனடா நிதிமன்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 மாதம் முன்பு என்று நினைக்கிறன் 
ரேடியோவில் ஒரு கனடிய மிகவும் கொன்செர்டிவ் ஆனா அரசியல் வாதியை பேட்டி 
எடுத்து போட்டார்கள் காரில் போகும்போது கேட்டுக்கொண்டு இருந்தேன்.
(கனடாவில் அப்போது பொலிசாரை சுட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்)
அவரிடம் தமிழர்கள் பற்றி கேட்டார்கள் ..... (இஸ்லாமியரை வாங்கு வாங்கென்று வாங்கிகொண்டு இருந்தார்)
தமிழர்கள் அரசியல் ரீதியாகவே போராடுகிறார்கள் 
தவிர புலிகள் ஒருபோதும் பொதுமக்களை குறிவைப்பதில்லை என்று கூறினார்.
பயங்கரவாதம் என்று எல்லாவற்றையும் போட்டு குழப்புவதால் ....
உண்மையான பயங்கரவாதிகள் மீது கவனத்தை சிதரடிக்கிறோம் என்று முழங்கினார்.
 
(நான் நினைக்கிறேன் அவர் யுதாரக இருக்கலாம். இஸ்லாமியரை போட்டுத்தாக்கினால் அவர்களுக்கு லாபம் 
என்று எண்ணுகிறார் என்று)
இருந்தாலும் ஒரு கொன்செர்டிவ் காரார் தமிழர்கள் பற்றி இப்படி அபிப்பிராயம் 
தெரிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தன்னை பலவந்தமாக வரி சேகரிப்பில் ஈடுபடுத்தியதாக தெரிவிப்பு.

 

வாதத்தை ஏற்று நாடுகடத்தலை நிறுத்தியது கனடா நிதிமன்றம்.

 

அசைலம் என்று வந்திட்டால்.. எங்கள் கண்ணுக்கு தெரிவது.. விசாக்களும்.. பிரஜா உரிமைகளுமே. புலி பலவந்தமா பிடிச்சுது.. பலவந்தமா கொண்டு போச்சுது.. புலி கொலை செய்யப் பார்த்துது.. இப்படிச் சொல்லித் தானே அசைலம் எல்லாம் எடுத்து வைச்சிருக்கிறம் வகை வகையா..!

 

இவர் மட்டும் என்ன அதில் இருந்து விதிவிலக்கா.

 

ஒரு பெரிய தளபதியின் மனைவி பிள்ளைகள் அசைலம் அடிக்க...கொடுத்திருக்கிற ஸ்ரேட்மென்ட்.. இவர்கள் எல்லாம் எப்படி புலியில் யோக்கியமாக இருந்திருப்பார்கள் என்ற கேள்வியையே கேட்க வைச்சுது. இவர்களை நம்பி போராடப் போய் வீரமரணம் அடைந்த உறவுகள் தான் பாவம். :icon_idea::rolleyes::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.