Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பட்டினியால் உயிரிழந்த வயோதிபர்

Featured Replies

நெல்லியடியில் சம்பவம்

யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர்.

யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி இவர் வாடி வந்தார் எனவும், இந்நிலையில் இவர் நேற்று திடீரென உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு பெருந்தொகையானோர் பட்டினியின் கோரப்பிடிக்குள் சிக்கி தினந்தோறும் பரிதவித்து வரும் நிலையில், இந்நிலை தொடர்ந்தால் மேலும் பல பட்டினிச் சாவுகள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2006/11/16...s_page15317.htm

  • தொடங்கியவர்

இன வெறி விளைவுயாழ்ப்பாணத்தில் பட்டினி சாவு

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் உணவு கிடைக்காததால் பட்டினியில் வாடிய 50 வயது தமிழர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் யாழ்ப்பாணம் வளைகுடாவில் பட்டினிச் சாவு கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கும், இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான ஏ 9 சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ். குடாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மருந்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் வளைகுடாவில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் பட்டினிச் சாவுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கை அரசு வேண்டும் என்றே உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்லாமல், செயற்கைப் பற்றாக்குறையை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நலையில் உணவுப் பற்றாக்குறை காரணமாக முத்தையா சந்திரபாலா என்ற 50 வயது தமிழர் பரிதாபமாக இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் பட்டினிச் சாவு நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். ராணுவத்தின் பிடியில் உள்ள யாழ் குடாவைச் சேர்ந்த பிசாசு முனை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா.

இதுகுறித்து பிசாசு முனை மாவட்ட நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியான நடராஜா தங்கராஜா இதுகுறித்துக் கூறுகையில், பட்டினிக்கு ஒருவர் பலியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். உணவுப் பற்றாக்குறையால்தான் முத்தையா இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கென்று சொந்த பந்தங்கள் யாரும் இல்லை.

நிரந்தர வீடும் கிடையாது. தினக் கூலியாக வேலை பார்த்து ஜீவனம் செய்து வந்தார். நாடோடி போல வாழ்ந்து வந்தார் முத்தையா என்றார் தங்கராஜா. ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை யாழ்ப்பாணத்தில் 11,055 டன் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் யாழ்ப்பாணம் மக்களின் துயரத்தை அதிகரிக்கும் வகையில் சிக்குன்குனியா காய்ச்சலும் தற்போது பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

ரவிராஜ் உடல் தகனம்:

இதற்கிடையே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜின் உடல் சாவகச்சேரியில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கொழும்பில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்த ரவிராஜ் சில நாட்களுக்கு முன்பு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜின் படுகொலைச் சம்பவம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட ரவிராஜின் உடலுடன், இலங்கை அரசையும், பாதுகாப்புப் படையினரின் படுகொலைக் தாக்குதல்களையும் கண்டித்து கொழும்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ரவிராஜின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரவிராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் ரவிராஜின் உடல் சாவகச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்குள்ள டிரைட்பெர்க் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ரவிராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பிற்பகல் 1 மணியளவில் கண்ணாடி பேட்டை மயானத்திற்கு ரவிராஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிதைக்கு ரவிராஜின் 12 வயது மகன் தீ வைத்தார். இதற்கிடையே இலங்கை ராணுவ உளவுப் பிரிவின் தூண்டுதலின் பேரில், ஈழ மக்கள் புரட்சிகர கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ரவிராஜைக் கொன்றிருக்க வேண்டும் என்று ரவிராஜின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ரவிராஜா சாவகச்சேரிக்கு வந்தபோது இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளி, கைத் துப்பாக்கியுடன் ரவிராஜாவைத் தேடியதாக அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் ரவிராஜா சாவகச்சேரிக்கு வந்திருந்தார். அப்போது ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஒருவர், கைத் துப்பாக்கியுடன் ரவிராஜாவின் வீட்டுக்கு வந்து அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டுள்ளார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி விட்டார். அப்போது வீட்டில் ரவிராஜா இல்லை என்பதால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தற்போதும் அதே நபர்தான் ரவிராஜவை கொன்றிருக்க வேண்டும். இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவுதான் அவரை அனுப்பி வைத்ததாக சந்தேகப்படுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/16/raviraj.html

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?

என்று அகலும் எங்கள் அவல வாழ்வு?

என்று திகழும் எங்கள் தமிழரின் மான்பு?

  • கருத்துக்கள உறவுகள்

றோய்டர்ஸில் வந்த செய்தி

Sri Lankan starves to death in north, first on record

JAFFNA, Sri Lanka (Reuters) - An odd-job man has starved to death in Sri Lanka's war-torn north, officials said on Thursday, the first such death since state records began in 1991.

But officials said the death of Muthiah Chandrapala, 50, was not linked with food shortages in the northern Jaffna peninsula due to renewed civil war.

Chandrapala died on Wednesday near the town of Point Pedro in the army-held Jaffna peninsula, where around 500,000 Tamils have been cut off from the rest of the island by Tamil Tiger rebel lines for months.

"This is the first time a person has died of starvation," said Nadarajah Thangarajah, acting judge at the district court of Point Pedro, who conducted the inquest and signed the death certificate.

"But please don't try to connect this death to the shortage of food in Jaffna," he added. "It is not relevant, because this person was almost like an orphan. He didn't have a permanent home, he was a daily wage earner doing odd jobs. He lived like a vagabond."

Sri Lankan state authorities have not kept records of starvation deaths prior to 1991. However a Tamil Tiger fighter starved himself to death in a protest in 1987.

Food is in short supply in the Jaffna region because the military has shut down the main north-south highway that runs through rebel territory, saying it was unsafe because of rebel artillery fire. Food is being shipped in by boat.

Residents receive rations, but say they are not enough.

Local government officials say that between August and September, Jaffna peninsula was short 11,055 tonnes of essentials like rice, flour and sugar.

The price of staples like fish and vegetables have soared and some goods, like matches and mosquito coils, have gone up 10-fold, in turn coinciding with a suspected outbreak of hundreds of cases of mosquito-borne Chikungaya fever.

http://ca.news.yahoo.com/s/reuters/061116/...starvation_dc_1

"But please don't try to connect this death to the shortage of food in Jaffna," he added. "It is not relevant, because this person was almost like an orphan. He didn't have a permanent home, he was a daily wage earner doing odd jobs. He lived like a vagabond."

I have a doubt kanthappu :lol: I don not understand why the judge is saying not to relate his death to the shortage of food in Jaffna? is he trying to say that there is plenty of food in Jaffna and this man refused to eat? How can he say that it is irrelavnt?

றோய்டர்ஸில் வந்த செய்தி

Sri Lankan starves to death in north, first on record

But officials said the death of Muthiah Chandrapala, 50, was not linked with food shortages in the northern Jaffna peninsula due to renewed civil war.

Chandrapala died on Wednesday near the town of Point Pedro in the army-held Jaffna peninsula, where around 500,000 Tamils have been cut off from the rest of the island by Tamil Tiger rebel lines for months.

"This is the first time a person has died of starvation," said Nadarajah Thangarajah, acting judge at the district court of Point Pedro, who conducted the inquest and signed the death certificate.

"But please don't try to connect this death to the shortage of food in Jaffna," he added. "It is not relevant, because this person was almost like an orphan. He didn't have a permanent home, he was a daily wage earner doing odd jobs. He lived like a vagabond."

http://ca.news.yahoo.com/s/reuters/061116/...starvation_dc_1

I have a doubt kanthappu :D I don not understand why the judge is saying not to relate his death to the shortage of food in Jaffna? is he trying to say that there is plenty of food in Jaffna and this man refused to eat? How can he say that it is irrelavnt?

  • தொடங்கியவர்

அன்றாட கூலி தொழிலாழிக்கு இப்போதுவிக்கும் விலையில் சப்பாடை வாங்கமுடியாதுதானே அல்லது இப்படி சாகும் அளவுக்கு சாப்பாடு மிகையாக இருந்து சாக விடுமளவுக்கு யாழ்ப்பானத்தார் மோசமானவர்கள் இல்லை அதாவது அவர் பிச்சைகாரராக இருந்தால்

விருந்தோம்பல் யாழ்பாணத்தவரின் பண்பாடு உலகை அதாவது உலகில் வாழும் இளகிய மனம் கொண்டவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்

எம்மினத்துக்குள் இருக்கும் இந்த நீதிபதி போன்ற கறுபாடுகல் இல்லாது போகும் வரை எமினம் உருப்படுவது சாத்தியமா??

  • கருத்துக்கள உறவுகள்

அநாதையாக வாழ்ந்தவர் பட்டினியால் மரணம்!

புலோலிப் பகுதியில் உறவுகள் எவருமின்றி ஆதரவற்ற நிலையில் அநா தையாக வாழ்ந்து வந்த வயதான ஒருவர் பட்டினி கிடந்ததால் மரணமானார்.

இவர் ஒரிரு நாள்களாக உணவோ, தண்ணீரோ உட்கொள்ளாமல் இருந் துள்ளார். இவர் இறந்த பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின்போது இரைப்பையில் உணவோ, நீரோ இல்லை என்று கண்டறியப்பட்டது.

பட்டினியாலும் வசதிகள் இல்லாததால் ஏற்பட்ட குளிர் மற்றும் பலமிழந்து சுகவீனத்தாலும் இறந்தார் என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

முத்தையா சந்திரபாலா என்பவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர்.

தென்னிலங்கையில் இருந்து வந்து பல வருடங்களாக புலோலி மற்றும் நெல் லியடிப் பகுதிகளில் கதிரை பின்னும் தொழில் செய்துவந்தார். அந்தத் தொழி லைச் செய்ய முடியாத வேளைகளில் கூலி வேலை செய்து வந்தார். கடைகளி லேயே சாப்பிட்டு வந்தார். சொந்த இருப்பிடம் என்று எதுவும் இல்லை. இரவில் அநேகமாக கடைகளின் தாழ்வாரங்களில் படுத்து உறங்குவார். ஆகக் கடை சியாக புலோலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஆள்களில்லாத வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.

குடாநாட்டில் அசாதாரண நிலை தோன்றி கடந்த மூன்று மாதங்களாக தொழில் வாய்ப்பு எதுவும் இல்லை. அதனால் வருவாய் இல்லை.

தெரிந்த, இரக்கமுள்ள கடைக்காரர்கள் உணவு கொடுத்து வந்தனர். நாளாக ஆக அவருக்கு உணவு கொடுத்து வந்தோருக்கும் பஞ்சம். பொருள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு. ஆதரிப்போர் எவருமில்லை என்றாகிவிட்டது. அற்ப சொற்ப உணவும் கிடைக்கும் நிலை அருகியது. அவரைத் தேடிச் சென்று உணவு கொடுக்க எவருமில்லை.

அதனால் பல நாள்கள் தண்ணீரை மட்டுமே குடித்து நாள்களைப் போக்கி னார். அவ்வாறு எத்தனை நாள்களுக்கு உயிரோடு வாழ முடியும்?சடலம் பருத்தித்துறை மாவட்ட அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல் லப்பட்டு பிரேத பரிசோதனையும் மரண விசாரணையும் நடத்தப்பட்டன.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவர் உணவோ, நீரோ அருந்தாமல் பட்டினியால் மரணம் சம்பவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

-உதயன்

u r correct eelavn. the Judge could have used this oppourtunity to tell the whole world about the situation in Jaffna.I'm sure Retures is read by so many people around the world. We are not asking him to lie. What is his problem in telling the truth? I don't know why the judge said that. It is sad that the so called "educated" people of our society are not helping their own people.

I'm finding it very hard to type thamil in this 'improved version' :P of yaarl kalam.

is there any olther way that I can type tamil?

  • தொடங்கியவர்

இந்த இணைப்பை பாருங்கள் mooki உங்களுக்கு உதவக்கூட்டும்

http://www.jaffnalibrary.de/tools/bam-uni.htm

அல்லது

suratha.com

இதில் keyman மென்பொருளை தரவிரக்கி பாவியுங்கள் இது உங்களுக்கு நிச்சயமாக உதவும்

http://www.megaupload.com/?d=0DH0AZ0V

நன்றி ஈழவன்.

  • தொடங்கியவர்

வீட்டில மரக்கறி வாங்கின அனுபவம் இருக்காது உந்த நீதிபதிக்கு அல்லது முன்னமே வாங்கி பதுக்கி வச்சிருப்பார் உவருக்கு எப்படி தெரியும் அன்றாட கூலி வேலை செய்பவரின் கஸ்டத்தை உவங்களையெலாம் நடுரோட்டில போட்டு உதைக்கவேணும் இப்ப செயிரதுகெல்லாப்ம் பதில் இருக்கும் வினை விதைத்தவன் வினையாருபானெண்டு ஒரு ப்ழமொழி இருகெல்லா

என்னை பொருத்தவரைக்கும் போரினலோ அல்லது குன்டு பட்டு சாவதையும் விட பட்டினியால் சாவது தான் மிகவும் கொடுமையானது. நினைத்து பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது. நாங்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம்?, இந்த கொடுமைகளை அனுபவிக்க?

கீழே உள்ளதை போன்ற நிலை எம்மக்களுக்கும் வர கூடாது.

Have a close look at both the photographs & read the messages below them. Forwarding this message to as many people as you can. This wouldn't fulfill any of your wish; nor deleting it will cause any misfortune; but its our moral duty to be concerned...towards humanity; take care...

post-3028-1163767200_thumb.jpg

post-3028-1163767224_thumb.jpg

Kevin Carter

This was found in his diary ,

Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may be. I pray that He will protect this little boy, guide and deliver him away from his misery. I pray that we will be more sensitive towards the world around us and not be blinded by our own selfish nature and interests.

I hope this picture will always serve as a reminder to us that how fortunate we are and that we must never ever take things for granted.

Please don't break.. keep on forwarding to our friends On this good day. Let's make a prayer for the suffering in anywhere any place around the globe and send this friendly reminder to others Think & look at this...when you complain about your food and the food we wasted daily

In the Meantime Be Blessed

post-3028-1163767408_thumb.jpg

தமிழர் தாயக பிரதேசங்களில் அன்றாடக் கூலிவேலைகள் இல்லாது போய் குறைந்த பட்சம் 1 வருடம் ஆகிறது. உலக உணவுத்திட்டம், இடம் பெயர்ந்தவர்களிற்கான மற்றும் வறியவர்களிற்கான நிவாரணம் என்று தான் பலரது உயிர்கள் பிழைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது நிவாரணமும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஊடகங்களிலும் யாழ் களத்திலும் பலர் விழித்திருப்பது நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்திற்கும் உணவு இல்லாது அல்லது அவர்களுடைய பணத்திற்கு அப்பால் விலைகள் சென்ற பொழுது தான். எம்மவர்களிற்குள்ளேயே இத்தனை பாகுபாடு கவலையீனம் இந்தக் கேவலத்தில் சிங்களவனையும் வெளிநாட்டவனையும் எங்கள் நலனில் அக்கறையில்லை என்று குற்றங் குறைகள் வேறை.

பணமில்லாது பொருட்களைப் பெறமுடியாது யாழ் மக்கள் திண்டாட்டம்.

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகள் மற்றும் ஏ9 பாதை மூடப்பட்டமையாலும் பெரும் அளவிலான பொது மக்கள் தமது தொழிலை இழந்துள்ளமையால் பணமின்றி திண்டாடும் நிலமைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

கடந்த காலத்தில் பலருடைய நிவாரணம் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களினால் அரசாங்க அதிபரின் பணிப்பெனக் கூறி தான்தோன்றித்தனமாக தன்னிச்சையாக நிறுத்தியிருந்தார்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை பெருமளவில் இந்த உயர் அதிகாரிகள் மேற்கொண்டு இருந்தார்கள்.

தற்போது குறிப்பிட்ட மக்கள் அனைவரும் தொழில் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு பங்கீட்டக்கு வழங்கப்படும் பொருட்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலமைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

சுமார் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் தனி நபர்கள் எனப் பலரும் இத்தகைய அவலத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் இவர்களின் தற்போதைய அவல நிலமையை எடுத்துக் கூறி பிரதேச செயலகங்களுக்கு மக்கள் படி ஏறி வருகின்ற போதிலும் உரிய அதிகாரிகள் அதனைக்கருத்தில் கொள்ளாது விரட்டி அடித்து வருகின்மை குறிப்பிடத்தக்தாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

வாகரையிலும் இதே பட்டினி நிலமை தான். அதுவும் இடம்பெயர்ந்த மக்கள் படும் அவலம் மிகவும் வேதனையானது.

http://sankathi.org/news/index.php?option=...07&Itemid=1

இப்ப செயிரதுகெல்லாப்ம் பதில் இருக்கும் வினை விதைத்தவன் வினையாருபானெண்டு ஒரு ப்ழமொழி இருகெல்லா

இப்ப எல்லாம் அநியாயமும் அட்டூழியமும் செய்ரவர்கள் தானே நல்லா இருகிரார்கள்? கஷ்டபடுரவன் மேலும் மேலும் கஷ்டபட்டுகொன்டே போறான்.

ஐயோ என்ன பரிதாபம். பாவமுங்க யாழ் மக்கள். :lol::(:lol::lol::D

2003586185953862438_rs.jpg

வணக்கம் முதியவரே அஞ்சலிகள். எங்களுக்கு கதைப்பதற்கு இதைவிட முக்கியமான பிரச்சனைகள் இருப்பதால் நாங்கள் உங்களது பட்டினி மரணத்தை நாங்கள் மறந்து விடுகிறோம். உண்மையிலேயே உங்களது மரணம் இராணுவத்தின் டிவிசன் 52 53 இல் இறந்த இராணுவத்தின் அளவுக்கு கூட முக்கியம் பெறவில்லை. உங்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட எமக்கு நேரமில்லை. உங்கள் மரணத்துக்கு நியாயம் கேட்டு நாங்கள் அதிகம் ஆர்வம் காட்டும் சர்வதேச சமூகத்துக்கு ஒரு கடிதம்தானும் இன்னும் அனுப்பவில்லை. இதற்காக ஒரு போராட்டங்களும் நாங்கள் செய்யப்போவதில்லை. நீங்கள் அநாதை. உங்களுக்கு ஒருவரும் இல்லை. உங்கள் மரணம் எங்களைப் பாதிக்கவில்லை. அடுத்த பட்டினி மரணம் வரையும் உங்களை மறந்திருப்போம். பிறகு அதையும் மறந்திடுவோம். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.