Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலப் பிச்சைபோடும் புதிய அரசு ஆசை காட்டி அரசியல் மோசம் செய்யுதே? யாழ்ப்பாணத் தம்பி

Featured Replies

27-years-of-experience-red_CI.png

எங்கட சனங்கள 27 வருசமாய் தங்கட சொந்த நிலத்தப் பறிச்சு அகதியளாய் அல்லல்பட வைச்வையள் இப்ப அந்த சனங்கள புதுசாய் ஒரு டிசைனில வருத்துறினம்... 

அது என்ன தெரியுமே?

வாங்கோ உங்கட காணியள தாறம் எண்டு கூப்பிட்டிட்டு தற ஏலாது எண்டு பெரிய இராணுவ வேலிக்கு அங்கால பாழடைந்த ஊரைக் காட்டி சனங்களின்ட வயிற்றில நெருப்பெரிய வைக்கிறது...

நேற்று வலி வடக்கில ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகள விடுறம் எண்டு வறச்சொல்லிப்போட்டு ஒரு கிராம சேவையாளர் பிரிவ மட்டும் விட்டிருக்கினம்...

எங்கட சனம் தங்கட சொந்த நிலத்துக்கு போகலாம் எண்டுதான் நிலத்த ஆக்கிரமிச்சிருந்த மகிந்தவை தோற்கடிச்சு மைத்திரிக்கு வாக்களிச்சதுகள்... இவையள் விடுறம் விடுறம் என்று சனங்களிட்ட வித்தை காட்டுறினம்..

கேட்டால் கட்டம் கட்டமாய் விடுறம் எண்டுறினம்... கட்டம் கட்டமாயே நிலத்த பிடிச்சனியள். ஊரை விட்டு துரத்தேக்குள்ள கட்டம் கட்டமாயே துரத்தினவையள்? 

விடுக்குள்ள மட்டும் கட்டம் கட்டம்..? அதென்ன கட்டம் கட்டம்? போன ஜனாதிபதித் தேர்தலில எங்கட மக்கள் கட்டம் கட்டமாய் வாக்களிச்சிருந்தால் மைத்திரி வந்திருப்பாரே? 

ஆறாயிரம் ஏக்கர பிடிச்சு வைச்சுக் கொண்டு அதில ஆயிரம் ஏக்கர விடுறம் எண்டவையள்.. அதிலயும் இப்பிடி துளித்துளியாய் கட்டம் கட்டமாய் வித்தை காட்டுறது என்ன நியாயம்? 

அப்ப ஆறாயிரம் ஏக்கர் விட்டதாய் வெளிநாடுகளுக்கு புதினம் காட்டுறினம்? ஆமி இராணுவ வேலிய போட்டுக் கொண்டிருக்கிறான்.. எங்கட சனத்தின்ட நெஞ்சு கொதிக்குது...

அறிவிக்கப்பட்ட சனங்கள் வந்தது. சாகிற வயதில தடியள ஊண்டிக்கொண்டு தன்ட தாய் நிலத்த பாக்கிறதுக்காய் உயிரை இன்னும் கையில பிடிச்சிருக்கிற அந்த மனுசர்கள் வந்தினம்...

அகதியாளாய் பிறந்து சொந்த ஊர் தெரியாத குழந்தையள் தங்கட மண்ணை பாக்க துள்ளிக் கொண்டு வந்ததுகள்... இதுதான் இந்த மண்ணில வாழ்வின்ட தொடர்ச்சியும் நம்பிக்கையும்...

ஆனால் எல்லாரையும் அழ வைச்சு அனுப்பிச்சினம்...

விட்ட நிலங்கள் எல்லாம் வயல் விவசாய நிலங்கள். குடியிருக்கிற நிலங்கள் இன்னும் இராணுவத்தின்ட வசம்...

எங்கட காணிய விடேல்ல எண்டு சொன்ன சனம்தான் நிறைய... தங்கட காணிய பாக்கவேணும் எண்டு வெயில்ல வந்த சனம் கையெடுத்து கும்பிட்டுக் கேக்குதுகள்...

தவணை சொல்லுறது ஆர் எண்டு தெரியுமே? ஆமிதானே... ஓ.. ஆமிதான் கட்டம் கட்டம் விளையாட்டுகளும் தவணை விளையாட்டுக்களும் காட்டுறினம்.. இராணுவ மயமாக்கப்பட்ட எங்கட மண்ணில நடக்கிறது இராணுவ நிர்வாகம் எண்டு நல்லா காட்டுறினம்...

வடக்கு முதலமைச்சர் சொன்ன மாதிரி தமிழ் மக்கள் விசயத்தில இராணுவம்தான் நிறைவேற்று அதிகாரத்த வைச்சிருக்கினம்... உதெல்லாம் எப்ப மாறும்? எங்கட சனம் எப்ப வீடு திரும்புவினம்..

கொஞ்சம் கொஞ்சமாய் விடுறம் எண்டு எங்கட சனங்களுக்கு தங்கட சொந்த நிலத்தை பிச்சசை போட்டு அதில அரசியல செய்யாமல் உந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பட்ட கடனையும் கடந்த அரசுகள் செய்த பாவத்தையும் தீரக்க வேணும்? தீப்பினமே?

யாழ்ப்பாணத் தம்பி

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118601/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.