Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் கிராமத்தை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! வீமன்காமம் வடக்கு மக்கள் கோரிக்கை

Featured Replies

veeman%20kaamam%20ff9689889.jpg

 

எமது குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதைத் தடுத்து நிறுத்தி தாம் மீள்குடியேற வழியை ஏற்படுத்தித் தாருங்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் வலி.வடக்கு, வீமன்காமம் வடக்கு மக்கள். இன்று திங்கட்கிழமை சிவசக்கி ஆனந்தனைச் சந்தித்த மக்கள் இதுகுறித்த மனு ஒன்றையும் கையளித்தனர்.
 
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
யாழ்ப்பாணம், வலி.வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 25 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது. எனினும் நாம் 25 வருடங்களாக எமது கிராமத்திற்கு திரும்பிச் செல்லமுடியாது தவிக்கின்றோம். கடந்த 11 ஆம் திகதி வீமன்காமம் வடக்கு (காங்கேசன் துறை தெற்கு) ஜே-236 கிராம சேவகர் பிரிவிற்கு சென்ற போதும் வீமன்காமம் வடக்கு வெங்காயச்சங்கத்தின் (மைலப்பை) பின் பகுதிக்கு செல்வதற்கோ மீள் குடியேறவோ இராணுவம் அனுமதி வழங்காமை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இப் பகுதியில் மக்கள் குடியிருப்புகளில் இராணுவ நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாகவும் அத்திவாரம் இட்டு இராணுவ கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் இப்பகுதி 75க்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட ஒரு பாரம்பரிய குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்ந்த மக்களாகிய நாம் இன்று வேறு மாவட்டங்களில் வாழ்கின்றோம்.
 
எமது இப்பிரதேசத்தில், குருந்தடி இராஜ இராஜேஸ்வரி அம்மன், கண்ணகி அம்மன், புளியடி வைரவர், மைலப்பை வைரவர், சுடுகாட்டு வைரவர், கூத்தியவத்தை பிள்ளையார் ஆகிய வழிபாட்டுத் தலங்களும் வாலிபர் முன்னேற்றகழக வாசிக சாலை, வீமன்காமம் வடக்கு முன்பள்ளி (வெங்காயச்சங்க முன்பள்ளி), வெங்காயச்சங்கம், கூட்டுறவுச்சங்கம், இந்துமயானம் என்பனவும் அமைந்துள்ளன. இதில் முன்பள்ளியில் தற்போது இராணுவத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. அத்துடன் இராணுவ முகாம் புதிதாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ் முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறும் எமது சொந்த கிராம மண்ணையும் அதனுடன் சூழ உள்ள குடியிருப்பு பகுதியையும் விடுவித்து நாம் மீள்குடியேறத்தக்க நடவடிக்கைகளை செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.- என்றுள்ளது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.