Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் ரஸ்ய தூதுவரை கைதுசெய்ய் மேற்குலக நாடுகளின் புலானய்வு அமைப்புகளின் உதவி நாடப்பட்டுள்ளது

Featured Replies

uthaya%20veerathunga_CI.jpg

 

முன்னாள் ரஸ்ய தூதுவரை கைதுசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளின் புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்சியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா என்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கேட்டறிந்துகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதவிற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்கவை கண்டுபிடிப்பதற்கு மேற்குலகின் உதவிநாடப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகாரஅமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அவரை விரைவில் கைதுசெய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை உதயங்க குறித்து இலங்கை ரஸ்சியாவிடமிருந்து விபரங்களை கோரவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை உதயங்கவை தேடி சர்வதேச வேட்டையொன்றை நடத்துவதற்கு இலங்கையிடம் உரிய வளங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் மேற்குலக நாடுகளால் அவரை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் உக்ரைன்கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களை வழங்கியவர் என்பதால் அவர் எங்கிருக்கின்றார் என்பது மேற்குலக நாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118635/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.