Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா என்னும் தெய்வம் - கஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்னும் தெய்வம்

கஜன்

எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு.

கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென்ற பின் எனக்கு லண்டனில் இருந்த இரண்டு பாசமான உயிர்கள் அம்மாவும் எனது செல்ல நாய்க்குட்டியும்தான், என் சோகத்தை சொல்லி அழுவதற்கு இருந்த இரண்டு ஜீவன்கள் அவை இரண்டும்தான் ,எனது அம்மாவும் போய்விட்டால் , எனது சுக துக்கத்தை பகிர இருப்பது அந்த வாயில்லா ஜீவன் மட்டும்தான் , கடவுளே என் அம்மாவைக் காப்பாற்று ,உனக்கு நூற்றியெட்டு தேங்காய் உடைக்கின்றேன் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். லண்டன் எலிசபெத் தனியார் வைத்தியசாலையில் அம்மா அனுமதிப்பட்டு இருக்கும்போது அம்மாவின் நினைவுகள் ஒவ்வொன்றாக எனக்கு நினைவுக்கு வந்தன , எங்களுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவள் எங்கள் அம்மா .

அவள் தனக்காக என்ன செய்தாள்?, ஒன்றுமே செய்யவில்லை , இருபத்திநான்கு மணி நேரமும் கணவன் மற்றும் பிள்ளைகளுக்காகவே ஓடிக்கொண்டு இருந்தாள், , வயது போனபின் தான் ஓட்டம் நின்று ஓய்ந்து தேய்ந்து போனாள் எங்கள் அம்மா என்னும் தெய்வம்.அம்மாக்கள் உண்மையிலையே தெய்வம்தான் .நான் எனது இரண்டு தங்கைகள் என எங்களை சுற்றியே ஓடிக் கொண்டு இருந்தவள் எங்கள் தாய் , அவள் அவளுக்காக என்ன செய்து இருப்பாள் ,அவளுக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் அல்லது இலட்சியம் ஏதாவது இருந்ததா?, அவள் முழித்து எழுந்தவுடன் முதன் முறையாக அதையே கேட்டாக வேண்டும் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.

எண்பது வயதான கிழவி இன்னும் சில நாட்களில் இந்த உலகத்தை விட்டே சென்றுவிடும் பிறகு அவள் நினைவாக எல்லோருக்கும் கொடுப்பதில் என்ன பயன் ?, அவளின் ஆசைகள் நிறைவேற்றப்படவிலையே என தினமும் ஏங்கி ஏங்கி சாகவேண்டும்.

நாம் எத்தனை பிழை செய்தாலும் அடிக்காமல் பேசாமல் அன்பான கண்டிப்புடன் நடத்துவாள் அம்மா , ஒவ்வொரு பிழையின் தன்மையையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் விளக்கமாக சொல்லி புரிய வைப்பாள் , அவள் சொல்லும் மொழியிலும் அன்பிலுமே இனிமேல் அந்தப் பிழை வாழ்க்கையில் செய்யவே கூடாது என மனதினுள் சபதம் எடுத்துக்கொள்வேன் . இந்த இயல்பு அவளுக்கு எப்படி வந்தது , பிறப்பால் வந்ததா?, இல்லை எனது தாத்தா, பாட்டி அவளுக்கு சொல்லிக் கொடுத்தார்களா , அவள் எங்கிருந்து இதெல்லாம் கற்றுக்கொண்டாள்?, சமயத்தில் நானே என் பிள்ளையை அடிக்கவும் , பேசவும் செய்து இருக்கின்றேன் , ஆனால் படிப்பிலோ , அனுபத்திலோ ,வசதியிலோ என்னை விட குறைவான என் தாயால் எப்பிடி என்னை விட ஒரு படி மேலான வழிநடத்தலை எங்கள் மீது மேற்கொண்டு இருக்கமுடியும் , இதெல்லாம் அவளால் எப்பிடி சாத்தியமானது என்று எண்ணி கலங்கி அவளை திரும்பி பார்க்கின்றேன் , நான் பார்ப்பதே தெரியாமல் சலனமற்று, வைதியசாலைக்கட்டிலில் படுத்து இருக்கின்றாள் எனது மாதா.

அடிக்கடி அவளருகே செல்வதும் ,அவள் தலையைத் தடவி விடுவதும், அவளைப்பற்றி நினைப்பதுமாகவே எனது ஒவ்வொரு மணித்துளிகளும் கடந்து போய்க்கொண்டு இருக்கின்றன !

சில மணிநேரம் கழித்து,டாக்டரும் நார்சும் குறுக்கு மறுக்காக ஓடுகின்றனர் சினிமாவில் காட்ப்படுவதைப்போல் , “டாக்டர் அம்மாக்கு என்னாச்சு ,எனிதிங்க் சீரியஸ் , இஸ் ஷி ஆல்ரைட்? “அட்தி மொமென்ட் ஆல்ரைட், பட் அவங்க ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டங்க , இன்னும் கொஞ்ச மணித்தியாலம்தான் , சொல்லப்போன இன்னும் ஒரு சில நாட்கள் தான் அவங்களுக்கான நேரம் ,சிவனோ ,ஏசுவோ உங்களுக்கானத்தை பிரார்த்தியுங்கள் , அம்மா கஷ்டப்படாமல் உயிர் பிரிய வேண்டும் என்று, என் கையில் இனி ஒன்றும் இல்லை “-என்றார் டாக்டர்.

டாக்டரே கை விரித்து விட்டார் , எனக்கு இதயமே வெடித்து விட்டது , உலகமே வறண்டு விட்டது, இன்னும் ஓரிரு நாட்களில் அம்மா இறந்து விடுவாளா?, இனிமேல் அம்மா இல்லாத உலகமா எனது இந்த உலகம் , எப்பிடி வாழ்வேன் நான் என குமுறிக்கொண்டு இருந்தேன். அம்மாவின் அருகில் சென்று அம்மா நான் பவானி வந்திருக்கிறேன் , யு ஆர் ஓகே , உனக்கு ஒன்ண்டும் இல்லையாம் , நீ எழும்பி நடப்பாய் நாளைக்கு, டாக்டரே சொல்லிடார் என்றேன். எந்த வித மூச்சு பேசும் இன்றிக்க் கிடந்தால் என் தாய் , என் பத்தரை மாற்றுத் தங்கம் , என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தங்க புஸ்பம்.அவள் வயிறு மட்டும் மேலும் கீழும் போய்க்கொண்டு இருந்தது , அவள்உயிரோடு இருக்கின்றாள் என்பதற்கு அதுவே சாட்சியாக இருந்தது. அம்மாவின் அருகில் சென்று அவள் தலையின் பின் புறத்தில் கையால் பிடித்து ,என்ர குஞ்சு ராசாத்தி உனக்குஎன்னடா செய்யுது? உனக்கு என்ன வேணும் ?என்று கேட்டேன் . எதுவித பதிலும் இல்லை.வயிறு மட்டும் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டு இருந்தது. அம்மாவின் நினைவுகள் என் மண்டைக்குள் ஓடுகின்றன , அப்பா எங்களை விட்டு பிரிந்த பின் எங்கள் மூன்று பெண்களையும் வளர்த்து படிக்க வைத்து , ஒருநிலைக்கு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டது மனுசி .

மூவருக்கும் சீதனம் சேர்த்து படித்த மாப்பிள்ளைகளுக்கு மணமுடித்து கொடுத்து தனது கடனை எதுவித பிழையும் இன்றி சரியாகவே நிறைவு செய்தது அந்த கிழவி ! எத்தனையோ பட்டங்கள் பெற்ற எனக்கு இன்னும் எப்பிடி வாழ்வதென்று தெரியவில்லை , பணி செய்யும் இடங்களிலும் , பயணம் செய்யும்பொழுதும் , படிக்கும் போதும் , புத்தகங்கள் படிக்கும் போதும் பெற்ற அனுபவங்களைக்கொண்டே எனது வாழ்க்கையை நான் நகர்த்தி இருக்கின்றேன் , புத்தகம் எதனையும் படிக்காத , பள்ளிக்கே செல்லாத , தனது கிராமத்தை விட்டு எங்குமே செல்லாத,எங்களைப் போல் பெரிய பெரிய ஐ. டி கம்பனிகளில் வேலை செய்யாத அவளுக்கு வாழ்க்கை நெறியை சொல்லிக்கொடுத்தது யார் ? எங்களுக்கு ஒரு குறையும் வைக்காமல் , அதே நேரம் கட்டுக்கு மீறிய சுதந்திரத்தையும் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக எங்களை வளர்க்கச் சொல்லிக்க் கொடுத்தது யார்?.

இத்தனை அனுபவத்தை பெற்ற எனக்கே சில சமயங்களில் வாழ்க்கை புதிதாகவும் பயமாகவும் விரக்தியாகவும் இருக்கும், என்னைப்போல் ஒரு அனுபவத்தையும் பெறாத அவள் எப்பிடி மிகச் சரியாக எங்களை வளர்த்து தெடுத்தாள். நான் வேலையில் இருக்கும் போது , பணி அதிகமானால் அம்மாவின் தொலைபேசிக்கு பதில் அளிப்பதே இல்லை, அது பல தடவை ஒலித்து விட்டு தானாய் அடங்கும் , அதன் பின் அந்த ,மனுசி அனுப்பும் வாய்ஸ் மைல்களை கூடக் கேட்பது இல்லை. அம்மா எனது போனுக்கு அனுப்பிய வாய்ஸ் மைல்களை மறுபடியும் இப்பொழுது ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.

“பிள்ளை பால் முடிந்து விட்டது வாங்கிக் கொண்டு வா”,

“இண்டைக்கு சமைக்க இல்லை, வரும்போது பாண் வாங்கிக்கொண்டுவா”,

“உண்ட உடுப்பெல்லாம் தோச்சு போடட்டே”,

“உனக்கு இண்டைக்கு என்ன சமைக்க”,

“உனக்கு காய்ச்சல் குறைஞ்சுட்டுதோ ?”-

இப்பிடி ஒவ்வொரு செய்திகளும் என்னை பற்றி கரிசனத்துடனே வந்து கொண்டு இருந்தன , அய்யோவ் அம்மா, நீ இறுதிவரைக்கும் என்னைப் பற்றிய நினைப்புடன்தான் இறுதி இருக்கின்றாய் நான்தான் , உன்னை பற்றி நினைக்கவே இல்லை என என் மனச்சாட்சி என்னை குத்தி குதறிக்கொன்று இருந்தது, கண்கள் பூராகவும் குளமாகி வழிந்தொடிக்கொண்டு இருந்தது கண்ணீர் என்னும் வெள்ளம், அம்மா என்னும் தெய்வத்தின் உள்ளத்தை எண்ணி. “டாக்டர் எப்பிடியாவது என் அம்மாவைக் காப்பாத்துங்க டாக்டர், நான் அவளுக்கு ஒண்டுமே செய்யவில்லை டாக்டர், ஒரு 30 நாள் அவள் ஆரோக்கியமா இருந்தால் கூடப் போதும் , அவளுக்கு தேவையானதை செய்து, அவளது ஆசைகளை நிறைவேற்றி விடுவேன் “.

இஞ்ச பாருங்கம்மா , யாரும் இருக்கும் போது உறவுகளை மதிக்கிறதே இல்லை, நீங்களும்அப்பிடிதான் போலும் உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது , உங்கள் அம்மாவுக்கு வலிக்காமல் இருக்கவே தற்போது ஊசி போடப்படுள்ளது , நாங்கள் செய்வதற்க்கு இதுக்கு மேல ஒண்டும் இல்லை, ஐ ஆம் வெரி சாரி , கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உயிர் பிரிந்து கொண்டு இருக்கின்றது “இல்லை டாக்டர் எதாச்சும் விலை கூடின ஊசியோ மருந்தோ போட்டு காப்பாத்த முடியாத டாக்டர்?” என முட்டாள்தனமாக கேட்டேன் நான்,உங்கள் அம்மாக்கு நரம்புகள் அனைத்தும் தளர்ந்து போய் விட்டன , ஆகவே அதிகமான ஊசிகளும் ஏற்றாமுடியாது ,தற்போது அவர்களின் உடல் உபாதைகளைக் குறைக்கவே ஊசிகளும், மருந்துகளும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம் , அது அவரின் உயிரை காப்பாற்றுவதற்க்கான செயல்ப்பாடு இல்லை, மே பி ஷி கேன் லிவ் டூ த்ரீ அவர்ஸ் எக்ஸ்ட்ரா , தட்ஸ் இட் என்று சொல்லி விட்டு டாக்டரும் நகர்ந்து விட்டார் வெள்ளைக் கோட்டுடன். நர்சுடன் சிரித்து பேசிக்கொண்டே அவர் செல்கின்றார் ,சிரிப்பென்றே என்ன என்று தெரியாமல் ஆஸ்பிடல் வெள்ளை சுவரை வெறிச்சோடிப் பார்த்துக்கொண்டு நின்றேன் .

ஒவ்வொரு நாளும் நரகமாகவே கழிந்தது எனக்கு ,எனது இரு தங்கைகளும் கடமைக்கு அம்மாவை வந்து பார்த்துவிட்டு செல்வார்கள் , போகுற வயசுதானே போகட்டும் விடு என்பாள் எனது முதல் தங்கை ,வேலைக்காரியை பிடிச்சு விட்டுட்டு நீ வீட்டுக்கு போவன் அக்கா, ஏன் இங்கயே இருபத்திநாலு மணித்தியாலமும் இருக்கிறாய் , உனக்கென்ன லூசா அக்கா – இது இரண்டாவது தங்கை. இப்பிடியெல்லாம் பேசவா அந்த மனுசி ஒன்டிக்கட்டையாய் தனியாய் கஷ்டப்பட்டு வளர்த்துச்சு உங்களை எல்லாம் என்று உள்ளே மனதுக்குள் நொந்து கொண்டேன் . நல்ல வேளை இவர்களின் பேச்சைக் கேட்கும் நிலைமையில் அம்மா இல்லை, ஐம்புலன்களும் செயலற்று இருந்தன அவளுக்கு, கிட்டத்தட்ட கோமா நிலைதான் , அதாவது கோமாவுக்கு முந்திய நிலையாம் டாக்டர் சொன்னார்.அவர்களுக்கென்ன கணவன் , பிள்ளைகள் என நேர்த்தியான வாழ்க்கை , அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் அவர்களும் இல்லை, அதற்க்கான நேரமும் இல்லை, லண்டன் கேளிக்கை வாழ்க்கையே அவர்களுக்கு தேவையானதாக இருந்தது , அம்மா கூட பிறகுதான் . படித்த வெளிநாட்டு மாப்பிளை தான் தனது மகள்களுக்கு வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து அதனையே நிறைவேற்றிய அம்மாவுக்கு அப்போது புரிந்திருக்காது , இன்று வைத்தியசாலையில் இருக்கும் தன்னைப் பார்க்க வருவதற்க்கு கூட தனது பிள்ளை களுக்கு நேரமும், முக்கியமாக விருப்பமும் இருக்காது என்று.

காலத்தின் கோலத்தை எண்ணி கதிகலங்கி நிற்கின்றேன் வைத்தியசாலையில், இன்றாவது அம்மா எழும்ப மாட்டாளா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டு.டாக்டர் சொன்னது போல் இரண்டாவது நாளில் அவள் இறந்தும் போனாள்.

இனியேதும் துன்ப துயரங்கள் வந்து தொல்லை தரும் வேளை ஐயோ அம்மா என்று கத்தி அழும்போது அம்மாவின் நினைவுகள் அல்லவா மீண்டும் வந்து அழுத்தி கவலைகளை அதிகரித்து விடும். கவலை தீர அம்மா என்று கத்தி அழும் காலம் போய் , கவலைகளை அதிகரித்து விடவல்லவா போகிறது இந்த அம்மா என்னும் சொல்லின் நினைப்பு. இனியேதும் வழியில்லை , போன அம்மாதிரும்பி வரமாட்டார் என்று புத்திக்குத் தெரிந்தாலும் மனது நம்ப மறுக்கின்றது .கிறிஸ்டியன் ஆண்டர்சனின் சிறுகதையே எனக்கு திரும்பத் திரும்ப ஞாபகம் வருகின்றது . இறந்து போன மகனைத் தேடி எமனிடம் செல்லும் தாய் உனக்கு என்ன வேணும் என்றாலும் கேள் தருகிறேன் , என் மகனை மட்டும் என்னிடம் கொடுத்து விடு என்கிறாள். எமனோ இங்குள்ள தோட்டத்தில் உள்ள ரோஜாச்செடிகள் அனைத்தும் நான் காவு கொண்ட ஒவ்வொரு உயிர்களே , உன்னுடைய மகன் இருக்கும் ரோஜாச்செடியை கண்டுபிடித்து நீயே எடுத்துச் செல் என்கிறான் .

இந்தக்கதையே திரும்பத் திரும்ப என் அடி மனதில் வருகிறது . அந்த எமனின் இருப்பிடமோ ரோஜாச்செடித் தோட்டமோ எங்கிருக்கிறது எனத் தெரிந்தால் எப்பிடியாவது என் அம்மாவின் உயிரை மீட்டு வந்துவிடுவேன் ஆனால் எமனைத் தேடி எங்கு செல்வது ? எப்பிடிச் செல்வது ? தெரியவில்லையே . உண்மையில் அப்பிடி ஒரு ரோஜாச்செடித் தோட்டம் இருக்கின்றதா என்று என் மனது தனக்குத்தானே புலம்பித் தீர்க்கின்றது ராவணனை இழந்த மண்டோதரி போல அம்மாவின் இறுதி ஆசை அவளின் உடலை யாழ்ப்பாணத்தில் புதைக்க வேண்டும் என்பதே , அடுத்த கிழமை அம்மாவின் உடலை யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்போகின்றேன்.

ஏற்கனவே வீட்டுக்கு கடன் , லோன், கிரெடிட் கார்டு என்றுபல கடன் சுமைகள் இருந்தாலும் , அம்மாவின் இறுதி ஆசையை எனது கடன் சுமையைக் குறைப்பதற்காக நிராசையாக்ப் போவதில்லை. அவள் பிறந்த மண்ணிலே அவளைப் புதைக்கப் போகின்றேன் . ஐம்பெரும் பூதங்கலாலன உடலை யாழ்ப்பாண பஞ்ச பூதங்களே எடுத்துக்கொள்ளட்டும். கடந்த இருபது வருடமாக தனக்கு சற்றும் பிடிக்காத மேற்க்கத்திய வாழ்வை எனக்காக , எனக்குத் துணை யாருமே இல்லை என்பதற்காக குளிரையும் பனியையும் பொருட்படுத்தாது வாழ்ந்து வந்தாள் அம்மா, இனியும் வேண்டாம் இந்தக் குளிரும் பனியும் அவளுக்கு , அவள் பிறந்தமண்ணில் சாம்பலை போகட்டும் அந்நிய மண்ணில் வேண்டாம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்

“மம்மி வென் ஆர் யு கோயிங் டு ஸ்ரீலங்கா ?”

“அடுத்த கிழமை”

“ஐ கான்ட் கம் , பெரிய ப்ராஜெக்ட் இருக்கு நெக்ஸ்ட் வீக் சோ என்னால லீவு எடுக்க முடியாது” என்றால் மகள், ஆங்கிலமும் தமிழும் கலந்து-

“என்ர அம்மா செத்ததுக்கு நீ லீவு எடுக்க வேணாம் , உன்ர அம்மா சாகும்போது லீவு எடு அது போதும்” என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றுபடுத்துக்கொண்டேன்

செத்த வீட்டுக்கு கூட லீவு எடுக்க முடியாதபடி அப்பிடிஎன்ன பொல்லாத வேலையோ என மனதுக்குள் புறுபுறுத்துக் கொண்டேன்.நேற்று உயிருடன் இருந்த அம்மாஇன்று உயிரற்ற உடலை இருக்கின்றாள் , நாளை அந்தஉடலும் இல்லாமல் போகும் , என்னவாழ்க்கை இது , நினைக்கவே தலை சுற்றியது. அம்மாவை எரித்த பின் மீண்டும் நான்லண்டன் இற்கு வரவேண்டும் , ஏன் வரவேண்டும்? நாய்க்குட்டியை தவிர இங்கு யாருமே இல்லை, மறுபடியும் வந்து பனியிலும் குளிரிலும் மாடு மாதிரி உழைத்து என்ன பிரயோசனம் ? முப்பது வருட வெளிநாட்டு வாழ்வு தந்தது கடலளவு துன்பங்களையும் ,துளியளவு இன்பங்களையும்தான்.

இதுவரை நான் லண்டனில் இருந்தமைக்கு காரணம் உண்டு , இனியேன் இருக்க வேண்டும் என்று மனம் வேறு வடிவில் சிந்திக்கத் தொடங்கியது . நிலையாமை , மாயை போன்ற என்றோ படித்த தத்துவக் கருத்துகளும் திடீர் திடீர் என்று ஞாபகத்துக்கு வரத் தொடங்கின. ஆம் இந்த வாழ்வு பொய், அதுவும் இந்த மேற்க்கத்திய வாழ்வுமுற்றிலும் பொய், இதை தூக்கி எறிந்து விட்டு ஊருக்கே செல் என்றது அடிமனம் , கொஞ்சக் காலமாவது உற் றார் , உறவினர் நண்பர்களுடன் ஊரில் சென்று வாழ் , வாழப்பிறந்த நீ உன் மண்ணிலே சென்று வாழ்ந்து பார் , அந்நிய மண்ணில் வாழ்ந்தது போதும் என்று சொல்லியது அடி மனது. இதுவே எனது இறுதி முடிவும் கூட. அம்மாவின் வாழ்வு முடியும் இடத்தில் எனது புது வாழ்வை மீண்டும் தொடங்கப் போகின்றேன், நான் பிறந்த ஊரில்

••••

http://malaigal.com/?p=6560

  • கருத்துக்கள உறவுகள்

மனதெல்லாம் எதோ பிசைகிறது. நன்றி கிருபன் பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டு இயந்திர வாழ்க்கை அன்பு பாசம் சுற்றம் சூழல்

எல்லாவற்றையும் விழுங்கிவிடுகின்றது.

இதில் அம்மாவும் விதிவிலக்காகவில்லை.

 

யாரும் இருக்கும் போது அவர்களின் பெறுமதி  தெரிவதில்லை.
இல்லாமற்போகும் போது அழுவதிலும் பிரயோசனமில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.