Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலா கட்டைப்பஞ்சாயத்து!வடக்கு இரண்டாகியது!!

Featured Replies

 இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது.

அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனின்; தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து  சபையினில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டு;ள்ளது.

ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த இருந்த ஏ.அஸ்கர் nஎன்பவர் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய முகாமையாளராக நேற்று முன்தினம்  முதல் சி.கேதீஸன்  என்பவர் நியமிக்கப்பட்டார்.   இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸன் முகாமையாளராகவும்,  வன்னிக்கு ஏ.அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய 7 சாலைகளை கொண்ட வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் , கிளிநொச்சி ஆகியவற்றை யாழ். பிராந்தியமாகவும் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு ஆகியவற்றைக் கொண்ட வன்னி பிராந்தியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

 வடக்கு மாகாணத்தில் இவ்வாறு இரண்டு பிரிவுகள்  இருப்பதனை தாங்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்  ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த அஸ்கர் ஊழல் மோசடியிலேயே இடமாற்றம்  செய்யப்பட்டதாகவும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக பிரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண இ.போ.ச ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மேற்கொண்டனர்.இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. http://www.pathivu.com/news/39508/57//d,article_full.aspx

அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரத்திற்கு உடந்தையாக விஜயகலா மகேஸ்வரன் செயற்படுகிறார்
 
Vijakala_CI.jpg

அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரத்திற்கு உடந்தையாக விஜயகலா மகேஸ்வரன் -  வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றச்சாட்டு:-

அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரத்திற்கு கையாளாக மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்படுகின்றார் என வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டமையை கண்டித்து யாழ்.பேருந்து நிலையத்தில் சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று மதியம் 12 மணியளவில் சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.


அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.


மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபை 1958 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் வடபிராந்தியம் கோண்டாவில் , காரைநகர் , பருத்தித்துறை கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய 7 டிப்போக்களை கொண்டதாகவே இருக்கின்றது.

தற்போது அதனை யாழ்ப்பாண பிராந்தியம் வன்னி பிராந்தியம் என  இரு பிராந்தியங்களாக பிரித்துள்ளனர்  கோண்டாவில் , காரைநகர் , பருத்தித்துறை , கிளிநொச்சி ஆகிய டிப்போக்களை யாழ்ப்பாண பிராந்தியமாகவும் வவுனியா முல்லைத்தீவு , மன்னார் ஆகிய டிப்போக்களை வன்னி பிராந்தியமாகவும் பிரித்துள்ளனர்.

சிங்கள அரசாங்கம் தொடர்ந்து மக்களை பிரித்தாளும் தந்திரத்தில் ஈடுபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கை பிரித்தார்கள் புலிகளில் இருந்து கருணாவை பிரித்தார்கள் அதே போல தற்போது வடமாகாணத்தையும் யாழ்ப்பாணம் வன்னி என இரண்டாக பிரிக்க முயல்கின்றார்கள்.

வடமாகாண தமிழ் மக்களிடையே யாழ்ப்பாணம் வன்னி என பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். அதற்காக தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.

அதேவேளை வடபிராந்திய முகாமையாளராக இருந்த ஏ . அஸ்கர் என்பவர் பல லட்ச ரூபாய் ஊழல்களை மேற்கொண்டுள்ளார். அது தொடர்பில் எம்மால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதனை அடுத்து அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய வடபிராந்திய முகாமையாளராக நேற்று முன்தினம் முதல் சி.கேதீஸ்சன் நியமிக்கப்பட்டார்.

அந் நிலையில் லஞ்ச ஊழல் விசாரணைகளில் இருந்து அஸ்கரை காப்பாற்றும் முகமாகவே பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவசர அவசரமாக போக்குவரத்து அமைச்சரின் ஊடாக வடபிராந்திய த்தை யாழ். வன்னி என இரு பிராந்தியங்களாக பிரித்து வன்னி பிராந்திய முகாமையாளராக அஸ்கரை நியமித்து உள்ளார்.

அதன் மூலம் தமிழ் மக்களை பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்ளும் அரசாங்கத்திற்கு விஜயகலா மகேஸ்வரன் துணை போனதுடன் ஊழல் பேர்வழிக்குயும் துணை போனமை எமக்கு கவலை அளிக்கின்றது என மேலும் தெரிவித்தார்கள் 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119009/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.