Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழியும் பொய் முகங்கள்

Featured Replies

பேச்சளவில் மட்டுமின்றி செயல் வடிவிலும் மஹிந்த காட்டிய அக்கரை[i

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்கை;கை வரலாற்று நூலை எழுதிய மஹிந்த இளையப்பெரும அந்தக்காலகட்டத்தில் இமட்பெற்ற கொடூரப படுகொலைகள், ஆள்கடத்தல் காணாமற்போதல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவசங்களுடன் தொடர்புபட்ட குழுக்களது செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டடம் உருவான விதம் குறித்தக் கீழ்காணும் விதத்தில் தமது நூலில் விவரித்துள்ளார்.

“பகல் இரவு என்றில்லாது தமது இல்லத்தின் தகவுகளைத் தட்டிக் காணாமற்போன தமது பிள்ளைகள் குறித்த ஓப்பாரியிடும் - கதறியழும் பெற்றறோரின் ஓலதத்தை நிறுத்த வேண்டுமானால் பொது நலவாய நாடுகள் சபையின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்பவைத்தாக வேண்டுமமென மஹிந்த நம்பினார்.

இதனிடையே பொது நலவாய நாடுகள் சபையின் மனித உரிமைகள குழுவின் கூட்டம் அந்தவேளையில், ஜெனிவா நகரில் இடம் பெற விருந்தது. ஆனால் அக் கூட்டத்தில் விரும்பும் எவராலும் பங்கு கொள்ள இயலாது அரசொன்றினால் நியமிக்கப்டும் பிரதிநிதியொருவரே அக் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார். ஆனால், அரசொன்றினால் நியமிக்கபட்படும் பிரதிநிதியொருவர் அரசுக்குச் சார்பாக – அரசு தனது நாட்டில் எவ்வாறு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கறது என்ற வகையிலலேயெ அக் கூட்டத்தில் கருத்து வெளியிடுவார், என்பதில் சந்தேகம் இருக்க இயலாது. ஆகவே அரசசார்பற்ற தொண்டு நிறுவனமாக பொது நலவாய நாடுகள் சபையில் அங்கீகரிக்கபட்ட அரசசார்பற்றற கொண்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டு அந்த நிறுவனங்களது பிரதிநிதியாக மாநாட்டில் தாம் கலந்து கொண்டு இலங்கையில் இடம் பெறும் மனிதப் படுகொலைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அறித்து பொது நலவாயா நாடுகளுக்கு எடுத்துக் கூற வாய்ப்பளிக்குமாறு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் சிலவற்றிடம் மஹிந்த கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. வெளிநாடுகளின் உதவியில் செயற்படும் அந்த அரச சார்பற்ற நிறுவனங்கள், இந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த அக்கறை காட்டிக் கொள்ளவில்லை.

அதனையடுத்து , “நாம் ஜெனிவாவுக்குச் சென்று பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம் பெறவுள்ள மண்டபத்துக்கு வெளியே இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவதை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்கள் பொறித்த பதாகைகளைத் தாங்கிநின்று அந்த மகாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகளின் கவனத்தைக் கவர முயற்சிப்போம். அத்தகைய எமது எதிர்ப்பு முயற்சி, உலகத்து மக்களுக்கு இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும் செய்தியை வெளிப்படுத்துமல்லவா?” என்ற தமது யோசனையை மஹிந்த தமது தரப்புச் சாகாக்களிடம் வெளியிட்டார்.

அந்த வகையில், மஹிந்த, வாசுதேவ நாணயக்காரவுடன் இணைந்த குறிப்பிட்ட அந்த மாநாடு இம் பெற்ற ஜெனிவாவின் சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கூடத்தக்குள் குறிப்பிட்ட தினத்தற்று பிரவேசித்தார். அந்த மண்டாபத்தின் கூடத்துக்குள் பிரவேசிக் முடிந்த போதிலும் அவர்கள் அந்த மாநாடடில் கலந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை. ஆதலால் மஹிந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலவேறு நாடுகளின் பிரதிநிதிகளை மாநாட்டு மண்டபத்தக்கு வெளியில் வைத்தச் சந்தித்து இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகுறித்தும் பிரேமதாஸ அரசின் பயங்கரமான அடக்குமுறை குறித்தும் பல தகவல்களை எடுத்துரைத்தார்.

“எமது நாட்டில் தற்போது ஆயிரக்காணக்கான இளைஞர்களை அரசு கொன்று குவித்துள்ளது தினமும் காலையில் பாதையோரங்களில் சடலங்கள் கண்டெடுக்கபடபடுகின்றன. ஓடும் நதிகளில் வீசப்பட்ட சடலங்கள் நீரில் மிதந்து செல்கின்றன. காணமற் போன தமது பிள்ளைககைத் தொடர்பாக பல பெற்றோர் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக அலைகின்றனர். குறிப்பிடத்தக்க தொகையினரான இளம் பெண்கள் விதவைகளாகிவிட்டுள்ளனர். தயவு கூர்ந்து எமது நாட்டின் இன்றைய பயங்கரநிலை குறித்த ஜ.நா சபை மாநாட்டில் குரலெழுப்புங்கள் ஜ.நா சபை இவ்விடயத்தில் தலையிட்டுமானால் இத்தகைய படுகொலைகளைத் தடுத்து நிறுத்திவிட இயலும்”.

குறிப்பட்ட மாநாடு இடம் பெற்ற முதலிரு நாள்களும் இவ்விதம் மாநாட்டு மண்டபத்துக்கு வெளியில் வைத்து மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுத்து விளக்கிக்கூறிய மஹிந்த மாநாட்டின் மூன்றாவது நாளன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்;தை வைத்திருந்த வெளி நாடோன்றின் பிரதிநிதியிடமிருந்து அவரது அனுமதிப் பத்திரத்;தைப் பெற்றுக ;கொண்டு மாநாடு இடம்பெற்ற மண்டபத்துக்குள் பிரவேசிக்க எத்தனித்தார். அந்த வேளையில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தார்களால் அவர் தடுதது நிறுத்தபட்டதுடன், குறிப்பிட்ட அனுமதிப் பத்திரத்துக்குச் சொந்தமான பிரமுகர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே பேச்சு மேற்கொள்ளபட்டு முடிந்து விட்டதால் அந்த அனுமதிப் பத்திர்துடன் மாநாட்டு மண்டபத்துள் பிரவேசிக்க இயலாதென அவர்களால் மஹிந்தவுக்குத் தெரிவிக்கப்ட்டது.

தம்மைச் சூழ்ந்து கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இலங்கையில் இடம்பெறும்மனித உரிமை மீறால்கள் குறித்து அவர்கள் மனதில் அனுதாபம் ஏற்படடும் விதத்தில் பக்குவமாக எடுத்து விளக்குவதில் பல மணித்தியால நேரத்தை மஹிந்த செலவிடத் தவறவில்லை. கடைசியில் ஒருவாறு அப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களது அனுமதியைப் பெற்று மாநாட்டு மண்டபத்துள் பிரவேசிக்க மஹிந்தவால் முடிந்தத. அதுமட்டுமான்றி, இலங்கை அரசினாலும் கொலைக்காரக் குழுக்களாலும் இலங்கையில் மேற் கொள்ளப்படும் மனிதப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அச்சர்வதேச மாநாட்டினூடாக நடவடிக்கை றே;கொள்ளுமாறு அம்மாநாட்டில் கலந்த கொண்ட சர்வதேச hநடுகளின் பிரதிநிதிகளிடம் மஹிந்த கோரிக்கை விடுத்தார்.”

…..அதுமட்டுமன்றி, பிரேமதாச அரசால் படுகொலை செய்யபட்டட இளைஞர்,யுவதிகளின் புகைப்படங்களை படுகொலைகளுக்கான சாட்சியங்களாக முன்வைக்கும் நோக்கில் தம்முடன் எடுத்துக் கொண்டு, ஒரு சந்தர்ப்பத்தில் மஹிந்த ஜ.நா சபையின் மனித உரிமை ஆனைக்குழு உறுப்பினர்களைச் சந்திக்கும் நோக்கில் புறப்பட்டுச் செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்;குச் சென்றிருந்தார். அந்த வேளையில் மஹிந்த, பிரேமாதாச அரசால படுகொலை செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளது 600 வரையிலான புகைப்படங்களையும் தம்வசம் வைத்திருந்தார். ஆனால், விமான நிலையப் பொலிஸாரால் அத்தனை புகைபடங்களும் பறிமுதல் செய்யபட்டன. ஆனாலும் ஜெனிவாவுக்குச் சென்று ஜ.நா சபையின் ஆணைக்குழு உறுப்பினர்கைளச் சந்தித்த வேளையில் தாம் எடுத்து வந்த புகைப்படங்கள் இலங்கைப் பொலிஸாரால் பறிமுதல் செய்யபட்ட சம்பவம் குறித்தும் மஹிந்த முறையிடத் தவறவில்லை.

நன்றி : சுடர் ஒளி

இ;ன்றைய சுடர் ஒளி (18 நவம் 2006) நாளிதளில் வந்த மனித உரிமை மீறல்களை எதிhத்துப் போராடிய மஹிதர் சொன்னதைச் செய்வதற்கு இப்போது பின்னடிப்பது ஏன்? என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது. இக் கட்டுரை கடந்த 16ம் திகதிய “லங்காதீப” பத்திரிகையில் ‘உப்புல் ஜோசெப் பெர்னாண்டோ’வினால் சிங்களத்தில் எழுதப்பட்டதன் தமிழாக்கம்.

ஈழத்திலிருந்து

ஜானா :rolleyes::)

தன் இனத்துக்கு வந்தால்தான் ஜ்யா செய்வாராம் தான் செய்கிரது மனிதவுரிமை பாதுகாப்பாம் இவரின் முகமூடி எப்போதோ கிழிக்கப்பட்டுவிட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.