Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் இடம்பெறுவார் மைத்திரி: நிமால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இடம்பெறுவார் மைத்திரி: நிமால்

chamber-300x193.jpg

 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான வாதங்கள் நாடாளுமன்றத்தில் சூடுபிடித்திருக்கின்றன. இன்று நாளையும் இடம்பெறப்போகும் 19 ஆவது சட்டமூல நிறைவேற்றம் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இப்போது தொடங்கியிருக்கின்றன.

 

19 ஆவது சீர்திருத்தத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்திருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர், அதற்கு ஆதரவாகத் தற்போது உரையாற்றிவருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, 19 ஆவது சீர்திருத்த சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள சரத்துக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

அவர் மேலும் தனது உரையில்:-

“இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மேலும்மேலும் தங்கள் அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ள வழிவகைகளைப் பார்த்தார்களே தவிர தம்மிடமிருக்கின்ற அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள வழிசெய்யவில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தனது அதிகாரங்களைத் தானே குறைத்து இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். இது போற்றத்தக்க செயல். இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாகிவிடமாட்டார்கள். இனி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கிடைக்கும். அவர்களாக அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ள முடியாது,” எனவும் குறிப்பிட்டார்.

 

 

அடிமைநிலை அகன்றது

இந்த விவாதத் தொடரில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, 19 ஆவது சீர்திருத்த சட்டம் நிறைவேறும் இன்றும், நாளையும் வரலாற்றில் இடம்பிடிக்கும் நாட்களாகும் என்றார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சி பீடமேறிய ஜனாதிபதிகள், 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை நீக்குவதாகக் கூறிவந்த போதிலும் அதனைச் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அதனை நிறைவேற்றியிருக்கிறார்.

 

கடந்த காலங்களில் நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவந்துள்ளது. எனவே மக்களை அடிமைநிலையிருந்து மீட்டு வரும் ஒரு செயற்பாடாகவே 19 ஆம் சீர்திருத்த நிறைவேற்றம் அமைகிறது. எனவே இதனை நிறைவேற்றி, மக்களை அடிமைநிலையிலிருந்து மீட்டு வர அனைத்துக்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரினார்.

 

http://www.colombomirror.com/tamil/?p=4156

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.