Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

[Thursday 2015-05-07 08:00]
TGTE-Annual-Dinner-nimal-300.jpg

கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவருக்கான கட்சித் தேர்தலில் போட்டியிடும் பற்றிக் பிரவுண் (Patrick Brown)அவர்களது தமிழினப்படுகொலை தொடர்பிலான கருத்து நம்பிக்கை தருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே கனடியப் பாராளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த திரு.பற்றிக் பிரவுண் அவர்கள் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்;, இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மோசமான மனித உரிமைகள் விவகாரத்தில் நம்பிக்கையான முன்னேறம் எதனையும் அடையவில்லை எனவும் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

  

இந்நிலையில் பற்றிக் பிரவுண் அவர்களது கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளதென கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, கனேடிய அரசியற்பீடங்களில் இவர்போல் உள்ள வலுவான தலைவர்கள் மட்டத்தில், தமிழினப்படுகொலை விவகாரம் இனப்படுகொலை எனும் கோணத்தில் கவனம் பெற்றிருப்பது, பரீகார நீதிக்கான எமது போராட்டத்துக்கு எதிர்காலத்தில் உறுதுணையாக அமையுமெனத் தெரிவித்துள்ளார்.

 

பற்றிக் பிரவுண் அவர்கள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலில் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

 

batricbrown-tgte-seithy-001.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=131628&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

 

 

குளப்புகிறார்களப்பா.... :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

 

 

குளப்புகிறார்களப்பா.... :(

 

ஏன் குளம்பிறீயள்...உப்படி அமைச்சர்மார் எங்களுக்கு தமிழர்விடுதலை கூட்டணி 1979 ஆண்டுகளில் சொல்லி தந்தவையள் அல்லோ ,அதற்கு பிறகு ஈ.பி.ஆர். எல் .எவ் உம் சொல்லி தந்தவையள்......கூட்டணியில் தர்மலிங்கத்தாரை நிதி அமைச்சாரக நியமித்தவையள்,ஈபி யில் கிருபாகரன் என்பவர் நிதிஅமைச்சராக இருந்தவர்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.