Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசரத சக்கரவர்தியாக முடிசூட்டி உங்கள் ஜனநாயகத்தை ரசிக்கும் கம்பவாருதிகளின் காலத்தையும் தவறவிடாதீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜா குருபரன்...

My3%20Dasaratha_CI.png

ஜனாதிபதி அவர்களே தசரத  சக்கரவர்தியாக முடிசூட்டி உங்கள் ஜனநாயகத்தை ரசிக்கும் கம்பவாருதிகளின் காலத்தையும் தவற விடாதீர்கள் -

இலங்கையில் ஆட்சிமாற்றமா? ஆள் மாற்றமா என்ற வாதப் பிரதிவாதங்கள் புலத்திலும் புலப்பெயர்விலும் அதிர்ந்துகொண்டு இருக்கின்றன...


ஹம்பாந்தோட்டை கடலில் இருந்து சுனாமி அலைகளாக எழும்  ராஜபக்ஸக்கள் மீண்டும் நாட்டுக்குள் புகுந்து விடுவார்களா? எனத் தவிக்கும் நல்லிணக்க அரசாங்கம் சீனப்பெருமதிலை தகர்த்த சிறுபான்மைத் தமிழரை கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கமும் பெரும்பான்மையான தமிழர் மனங்களை அரிக்கத்தான் செய்கின்றன...


சுதந்திர இலங்கையில், டீ.எஸ் சேனநாயக்கா முதல் - டட்லிசேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே. ஆர் ஜெயவர்தன, பிரேமதாஸா, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா, மகிந்த ராஜபக்ஸ, றணில் விக்கிரமசிங்க வரை இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை பற்றி பேசிப் பேசியே அரை நுற்றாண்டை கழித்தவர்கள்...


தந்தை செல்வநாயகம் முதல் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை,  இவர்கள் யாவரும்   பேசிப்பேசியே ஏமாற்றியவர்கள்.. பேச்சுக்களால் அகிம்சை தோற்றுப் போக ஆயுதங்கள் பேசத் தொடங்கி இப்போ ஆயுதங்களும் மௌனித்துப் போயின...


இருந்தும் மாற்றத்தின் நாயகனாக மக்களாலும் – தசரத சக்கரவர்த்தியாக கப்பவாருதிகளாலும்,  முடி சூட்டப்பட்ட ஜனாதிபதி அவர்களே உங்கள் ஆட்சியில் இலங்கையின் நீதிமன்றம் ஒன்று வன்னியில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றிருக்கிறது


இது மாற்றமா? நீதித்துறையின் சுதந்திரமா? இல்லை அதிசயமா, எனப் புரியவில்லைத்தான்.. ஆனாலும் கிளிநொச்சி நீதிமன்றின் இந்த ஏற்புடன் கூடிய தீர்ப்பு தமிழ் மக்களின் வாழ்வின் யதார்த்தத்தை  உங்களுக்கும், உலகின் கண்களுக்கும் புரிய வைக்கப் போதுமானது....


ஜனாதிபதி அவர்களே இங்கே ஒரு கணம் நில்லுங்கள் ஜெயக்குமாரியின் வேதனையை கேளுங்கள்...  


'கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் முன்னர் தங்கியிருந்த வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டன. அத்துடன், எனது மகளை என்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது அவளுக்கு பாதுகாப்பு இல்லை, இதனால் விபூசிகா மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே  வளரட்டும்' என நீதிமன்றிடம் ஜெயக்குமாரி கோரியிருக்குறார்.. இந்தக் கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்... அதனால் மீண்டும் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து கல்விகற்பதற்கு அனுமதித்திருக்கிறார்....


நாங்கள்  சொல்லவில்லை, தமக்கு பாதுகாப்பு இல்லை என   வன்னயில் வாழும் மக்கள் சொல்கிறார்கள்... அடக்கு முறையில் இருந்து மக்களை விடுவித்து இருக்கிறோம் என்று நல்லிணக்க அரசாங்கம் கூறலாம்.....  ஆனால் பாதுகாப்பு இல்லை என... சட்டமும் நீதியும் சொல்கிறதே....


புதிய ஆட்சியில், மாற்றத்தின் ஏற்றமாக, சட்டமும் ஒழுங்கும் கோலோச்சிகிறது என நல்லாட்சி அரசாங்கம் சொல்லலாம்... ஆனால் யாழ்ப்பாணத்தில் வாளும் போதையும் ஆட்சிசெய்கிறது.. என நாங்கள் சொல்லவில்லை  பொலிஸார் சொல்கிறார்களே...


அரை நுற்றாண்டுகளாக எங்கள் மூதாதையரும் நாங்களும் எதிர்கொண்டதை, ஆயுதங்கள் மூலம் பேசாத - மூன்றாவது பரம்பரையும் எதிர்கொள்கிறதே...


ஜனாதிபதி அவர்களே.... நல்லாட்சி அரசாங்கத்தினரே....


ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையில் இருந்து, உள்ளுராட்சி சபைகள் - மாவட்ட சபைகள் - இணைந்த மாகாண சபைகள், பிரிந்த மாகாண சபைகள் - வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னான தனியரசுக் கோரிக்கை  வரை தொடர்ந்தோம்...


வட்ட மேசை மாநாடுகள்... சதுர மேசை மாநாடுகள், திம்புப் பேச்சுவார்த்தை, அவ்வப்போது ஆளும் ஆட்சியாளர்களுடன் உள்ளுர் பேச்சுக்கள், தீர்வுப் பொதிகள், 8 சமாதானப் பேச்சுவார்த்தைகள் என காலம் கடத்தும் சமாதானங்களை, சாகசங்களை, எங்களை ஆண்டவர்கள் செய்தார்கள்..


அகிம்சை தோற்று ஆயுதங்கள் எழுந்தன... ஈழம் எழுந்து முள்ளி வாய்க்காலில் வீழ்ந்தது .. அதனால் ஆயுதங்கள் தோற்று மீண்டும் அகிம்சை எழுந்தது....


இன்று  பிரிபடாத இலங்கை - சுயகௌரவ வாழ்வு -  ஒருநாடு - இருதேசம் எனும் எண்ணங்கள்தான் மேல் எழுகின்றன... இன்னோர் புறம் பாராளுமன்ற மாகாண சபைக் கதிரைச் சுகம்  போதும்   என்ற மகிழ்வும் மலர்கிறது...


30 வருடக் களைப்பும், யுத்தம் தந்த இழப்பும், இழந்தவை தந்த கசப்ப்பும், ஆயுதம் தந்த வெறுப்பும் ஜனநாயகத்தின் மீது ஆர்வத்தை பலருக்கும் தருகிறது...


போர்க் காலத்தில் அரசியலில் ஈடுபடாது இருந்த கம்பவாருதிகள், இரு தரப்பிலும் நீதியைக் கடந்து, துப்பாக்கிகள் பேசிய காலத்தில், அரசியலிலிருந்து; ஒதுங்கியே இருந்த கம்ப வாருதிகள், இன்;று மீண்டும் மலர்ந்நிருக்கும் ஜனநாயகத்தில், எல்லோரும் தம் எண்ணப்படி கருத்துரைக்கும் சூழலில் உங்களை தசரத சக்கிரவர்த்தியாக்கி, அமச்சரவையில் சுமந்திரன் வீற்றிருக்க விரும்புகிறார்கள்...


இலக்கியம் அரசியலைத் தொடுகிறது... கம்பன்  சோழச் சக்கரவர்த்தியின் அவையில் இருந்ததும், ஒளவை மூவேந்தரை நல்வழிப்படுத்தியதும், வள்ளுவன் தன் நூலின் மூன்றில் ஒரு பகுதியை அரசியலுக்கு ஒதுக்கியிதும், சம்பந்தர். பாண்டியனைச் சமணத் திலிருந்து மீட்டெடுத்தது பற்றியும் ஜனாதிபதி அவர்களே உங்கள் ஆட்சியில் பேசப்படுகின்றன...  


புலிகளின் ஆயுதங்கள் பேசிய காலம் போய் கம்பரின் ராமாயனமும், ஓளவையின் நல்வழிப்படுத்தலும், வள்ளுவரின் அரசியல் அதிகாரமும், சம்பந்தரின் ஞான உபதேசங்களும் பேசப்படுகின்றன...


உங்களை தசரத சக்கரவர்த்தியாக்கி தலைநகரில் முடிசூட்டி உங்கள் அறம்சார்ந்த ஆட்சியையும்,  ஜனநாயகத்தையும் ரசிக்கும் கம்பவாருதிகள், கூடப்பிறந்த, கூடிப் பிரிந்த உற்ற உறவுகளையே தூக்கி எறிந்து விட்டார்கள்...


"மூன்றாம் தலைமுறையுடன் இனம் மாறப்போகிற, புலம்பெயர் தமிழர்கள், எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை, இனி வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்காளர்களாய்க் கருத நாங்கள் தயாராயில்லை" என்று தங்கள் அரசவையில் முரசறைந்துவிட்டார்கள்....


இப்படி ஒரு பொற்காலம் என்றும் இருந்ததில்லை இனியும் இருப்பதில்லை.... தசரத சக்கரவர்த்தியாகிய ஜனாதிபதி அவர்களே...


நீங்கள் ஜனாதிபதியானதற்கும், தசரத சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டதற்கும், பங்காளர்களாக இருந்த புலம்பெயர் தமிழர்களை, கம்பவாருதிகள் பார்வையாளர்களாக மாற்றியதற்கும் பின்னால் தமிழர்களின் ரத்தமும், சதையும், தியாகமும் இருக்கிறது...


இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுக் காலத்திலும், ஜெயக்குமாரியும் அவர் போன்ற ஆயிரம் ஆயிரம் ஜெயக்குமாரிகளும், அவர் மகள் விபூசிகாவும், ஆயிரமாயிரம் விபூசிகாக்களும் வாழும் உரிமையற்று பாதுகாப்பற்று வாழலாமா?


உங்கள் ஆட்சியிலும் காணாமல் போன கணவனது, பிள்ளைகளது, மனைவிகளது, தந்தையினது தாயினது, சகோத சகோதரிகளினது, உறவினர்களது உருவப்படங்களை சுமந்து  கொண்டு அவர்தம் உறவினர்கள் வீதிகளில் அலையலாமா?


குடியிருக்க காணியில்லை – குந்தியிருக்க திண்ணையும் இல்லை – கூடியிருந்த உறவுகள் இல்லை... தண்ணி அள்ள கிணறுகள் இல்லை – சிறை இருப்போர்க்கு விடுதலை இல்லை... அவையம் இழந்தோர்க்கு உதவிகள் இல்லை... கணவரை இழந்தோர்க்கு வாழ்க்கையும் இல்லை... வாழ்விழந்தோர்க்கு பாதுகாப்பில்லை....


இந்நிலை தொடர்வதா? இல்லை மாற்றம் காண்பதா என்பதை 100 நாட்களின் புன்புதான் கேட்கிறோம் உங்களை.... ஜனாதிபதி அவர்களே! சிறுபான்மை இனங்களுக்கான கௌரவமான வாழ்வை வழங்குவதில், தசரத  சக்கரவர்தியாக முடிசூட்டி மகிழ்ந்து, உங்கள் ஜனநாயகத்தை மதிக்கும் கம்பவாருதிகளின் காலத்தையும் தவறவிட்டால் மீண்டும் அகிம்சை தோற்று ஆயுதம் பேசலாம்.... அப்போ வேகமும் விவேகமும் கூடிய  3ஆவது பரம்பரையும்  உங்களுடனம் யுத்தம் செய்யலாம்...


அத்தகைய காலத்தில் 'இரு தரப்பிலும் நீதியைக் கடந்து, துப்பாக்கிகள் பேசுகின்றன அதனால் அரசியலிலிருந்து நாம் மீண்டும் ஒதுங்குகின்றோம் 'அஞசுவது அஞசாமை பேதமை' என கம்பவாருதிகளும் ஒதுங்கி விடுவார்களல்லவா....
  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119495/language/ta-IN/article.aspx

 

என்ன கொடுமை சரவணா ... இந்த கம்ப வாருதிகளின் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

----

இந்நிலை தொடர்வதா? இல்லை மாற்றம் காண்பதா என்பதை 100 நாட்களின் புன்புதான் கேட்கிறோம் உங்களை.... ஜனாதிபதி அவர்களே! சிறுபான்மை இனங்களுக்கான கௌரவமான வாழ்வை வழங்குவதில், தசரத  சக்கரவர்தியாக முடிசூட்டி மகிழ்ந்து, உங்கள் ஜனநாயகத்தை மதிக்கும் கம்பவாருதிகளின் காலத்தையும் தவறவிட்டால் மீண்டும் அகிம்சை தோற்று ஆயுதம் பேசலாம்.... அப்போ வேகமும் விவேகமும் கூடிய  3ஆவது பரம்பரையும்  உங்களுடனம் யுத்தம் செய்யலாம்...

அத்தகைய காலத்தில் 'இரு தரப்பிலும் நீதியைக் கடந்து, துப்பாக்கிகள் பேசுகின்றன அதனால் அரசியலிலிருந்து நாம் மீண்டும் ஒதுங்குகின்றோம் 'அஞசுவது அஞசாமை பேதமை' என கம்பவாருதிகளும் ஒதுங்கி விடுவார்களல்லவா....

 

கட்டுரையாளர் நடராஜா குருபரனுக்கு.... ஒரு சபாஷ்.

கடைசி வரிகள், நெத்தியடி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.