Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிய சிங்களரோடு குலாவும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கும் கொடிய சிங்களரோடு குலாவும் இந்தியா

- இலெனின் தங்கப்பா

இந்திய அரசைப் போன்ற கடைந்தெடுத்த கயவாளித் தனமான அரசு உலகில் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. சொல்லப்போனால் இலங்கையில் ஆட்சி நடத்தும் கொடிய இனவெறியரசாகிய சிங்கள அரசைவிட இந்திய அரசு இன்னும் கீழ்த்தரமானது. உண்மையாளர் நெஞ்சில் அருவருப்பை எழுப்பக்கூடியது.

சிங்கள அரசின் இனவெறியும், ஈழத்தமிழர்களுக்கு அது இழைத்துவரும் கொடுமைகளும் அவர்களை ஒடுக்குவதற்காக அது பரப்பிவரும் பொய்களும் மேற்கொள்ளும் அரசியல் விரகாண்மைகளும், சில கயவர்களைக் காவுகொடுத்து விலைக்கு வாங்கும் மட்டமான நடைமுறைகளும் உலக வரலாற்றையே கறைப்படுத்தும் தன்மை வாய்ந்தவை; உண்மைதான். ஆனால் சிங்கள அரசு ஈழத்தமிழரைத் தன் எதிரியாகக் கருதி அவர்களை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டி அத்திட்டத்தைத் தான் பல்வேறு வகையில் செயல்படுத்தி வருகின்றது. உலகின் எல்லாப் பேரின வெறி அரசுகளும் தம் கீழிருக்கும் சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்கித் தம் மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்ளும் வன்முறையையும் சூழ்ச்சிகளையுமே சிங்கள அரசும் செய்து வருகின்றது. கொடியவன் கொடியவனாகத்தான் இருப்பான். வெளிப்படையாகவே தன் கொடுமைகளையும் அவன் செய்கின்றான்.

ஆனால் நல்லவன் போல் நடித்துக்கொண்டு எவன் ஒருவன் கொடியவனாக இருக்கின்றானோ, அவனே வெளிப்படையான கொடியவனைவிட மிகமிகக் கொடியவன். அதனால்தான் வள்ளுவர் கூறினார்.

"வாள்போற் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக

கேள் போற் பகைவர் தொடர்பு.

என்று!

அமெரிக்கா போன்ற அடாவடி அரசும் இசுரேல் போன்ற இனவெறி நாடும் பிற இனங்களை அடக்கியும் ஒடுக்கியும் படுகொலை புரிந்தும் செய்யும் அட்டுழியங்கள் உலகறிந்தவை. ஆனால் 'புண்ணிய பூமி', 'ஞானபூமி' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்திய நாட்டின் நடுவணரசு, காந்தியடிகள் அடி நின்று அன்புவழி நடப்பதாகப் பீற்றிக் கொள்ளும் தில்லி அரசு மாந்த நேயமற்றதும், பிறரை அழித்தொழித்துத் தன்னை நிலை நாட்டிக் கொள்கின்றதுமான ஓர் அரசாக இருப்பதுதான் அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது. தன் பிழையான அரசியல் கோட்பாடுகளால் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்கின்றது.

அமெரிக்கா, இசரேல் போன்ற கொடிய நாடுகள் உட்பட உலகிலுள்ள வல்லாட்சி நாடுகள் பிற நாடுகளுக்குத் தீங்கிழைக்கின்றனவே தவிரத் தம் சொந்தக் குடிகளைப் பேணிக் காப்பதில் மிக மிக அக்கறை காட்டி, மிக மிக உறுதியாக நடந்துகொள்கின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒருவன் வேறெந்த நாட்டிலோ சிக்கலில் மாட்டிக் கொள்கின்றான் என்றால் உடனே அமெரிக்கா பதறித் துடிக்கின்றது. விரைந்துபோய் அவனுக்கு உதவி செய்கின்றது. ஆனால் இந்தியா தன் சொந்தக் குடிகளாகிய தமிழ் மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?

ஒரு நாட்டின் குடிமகன் வேறொரு நாட்டில் குற்றம் செய்து தண்டனை பெறும் நிலைகளில் இருந்தால்கூட அந்த நாடு தலையிட்டு அவனை விடுவிக்கவோ அல்லது தண்டனையைக் குறைக்கவோ உடனடி நடவடிக்கை மேற்கொள்வதைக் கண்முன் நடைமுறையில் காண்கின்றோம்.

ஆனால் தன் சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு எதிராக அண்டை நாட்டுடன்

கூட்டுச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இந்தியாவைத் தவிர உலகில் வேறெதுவும் இருக்க முடியாது!

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் பல ஆண்டுகளாகவே அல்லல்கட்கு ஆளாகின்றனர். சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதுவரை சிங்கள இன வெறியரால் சுடப்பட்டு மாய்ந்த தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கை 300 ஐயும் தாண்டிவிட்டது. தன் குடிமக்களைக் காக்கவேண்டிய பொறுப்புள்ள இந்திய அரசு பதறவில்லையே; துடிக்கவில்லையே? கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு கல்நெஞ்சத்தோடு கவலையின்றி நடமாடுகிறதே! உலகிலேயே இத்தகைய அருவருப்பான செயலை வேறெந்த நாடாவது செய்திருக்குமா?

இந்திய அரசு தமிழனைத் தனக்கு முற்றிலும் அயலானாகவே கருதுகின்றது என்பதைத் தவிர வேறெந்த வகையில் இதற்கு அமைவுகூற முடியும்?

எத்தனையோ செய்திகளில் இந்திய அரசு இந்தி வெறி அரசாகவும், வடக்கர்களின் தன்னல அரசாகவும் இருந்து கொண்டு தமிழர்க்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தமிழனைக் காலின் கீழிட்டு மிதிக்கின்றது. இழிவுபடுத்துகின்றது. செம்மொழிச் செய்தியில் அது நடந்துகொண்ட அருவருக்கத்தக்க முறை ஒன்றே போதும் - அது தமிழுக்கெதிரான அரசு என்பதைக் காட்டுவதற்கு. இனி இவை எல்லாவற்றையும் விடத் தமிழ் மீனவர் செய்தியில் அது நடந்துகொள்ளும் முறைதான் அதன் போலி முகத்திரையைக் கிழித்து உண்மை உருவத்தை வெளியுலகுக்கு அப்பட்டமாய்க் காட்டி நிற்கின்றது.

தன் சொந்தக் குடிமக்களை அண்டைநாட்டு அரசின் அடாவடித்தனமான வன்முறையிலிருந்து காக்கவேண்டிய கடமையைக்கூட மறந்து, உலக நாடுகளிடையே தன் பெயர் கெட்டுப்போவது பற்றிக் கூடக் கவலைப்படாமல் தன் முகத்தில் தானே கரிபூசிக் கொள்ளுமளவுக்கு இந்திய அரசின் தமிழினப் புறக்கணிப்புப் போக்கு இருந்து வருகின்றது என்பதை நடுநிலையாளர் எவரேனும் மறுக்க முடியுமா?

உலகிலுள்ள வேறு எந்த நாடும் கூட இந்திய அரசின் இந்த அருவருக்கத்தக்க போக்கைச் சுட்டிக்காட்டவோ கடிந்துரைக்கவோ முன்வரவில்லை என்பதற்கு - தமிழ் மீனவர் படுகொலை வெளி உலகின் கவனத்தில் படுமளவுக்கு எடுத்துக்காட்டப்படவில்லை, அல்லது வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்பதைத் தவிர வேறென்ன காரணம் கூற முடியும்?

தமிழ் மீனவர் தமிழ்நாட்டு மக்கள். நூற்றுக்கு நூறு இந்தியக் குடிகள், தன் சொந்தக் குடிகளை அண்டை நாட்டுக் கடற்படை காரணமே இன்றிச் சுட்டுக் கொல்கிறது. இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது. எந்தக் காரணப் பொருத்தத்துக்கும் உட்படுத்த முடியாத வெட்கங்கெட்ட, கயமைத்தனமான செயல் இது என்பதைத் தவிர வேறு என்ன விளக்கம் கூறமுடியும்?

மீன்பிடித்து வயிறு வளர்க்கச் செல்லும் அப்பாவித் தமிழ் மீனவரைக் குற்றம் சொல்ல முடியுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இலங்கைக் கடல் எல்லையை அவர்கள் மீறியதாகத்தான் இருக்கட்டுமே, அதற்காக அவர்கள் உயிரைக் கொள்ளை கொள்வதுதான் தண்டனையா? அப்படியானல் சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு எதற்கு இருக்கிறது? நாடுகளின் இறையாண்மை (தப்பாக இருந்தாலும்) காப்பாற்றப்படவேண்டுமாம்! குடிமக்களின் உயிர் மட்டு:ம காப்பாற்றப்படக்கூடாதாம்! என்ன மக்களாட்சி இது?

இரண்டு நிலைகளை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். ஒருநாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே உள்ள கடல்பகுதி அகன்று விரிந்ததாக இருக்குமானால் சிக்கலுக்கு வழியில்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கடற்பகுதி அப்படியில்லை! 25 கல்லுக்கும் குறைவாகத்தானே உள்ளது. மேலும் கடலின் நடுவில் என்ன குறுக்கே எல்லைச் சுவரா கட்டிவைத்திருக்கிறார்கள்! தப்பித் தவறி எல்லை மீறல் நடக்கத்தான் நடக்கும். அதற்குச் சட்டப்படியான நடவடிக்கைதான் மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு தலையிட்டு முறையான நடவடிக்கைக்கு மாறாக எதுவும் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை இருமுறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டோ சுட்டுக்கொல்லப்பட்டோ போனபொழுது இந்திய அரசு தலையிட்டுத் தட்டிக் கேட்டிருக்குமானால் மேற்கொண்டு சிங்களக் கடற்படை வாலை ஒடுக்கிக்கொண்டு போயிருக்கும். ஆனால் இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை என்பதால்தானே தொடர்ந்து மீனவர்களைக் கொல்லும் துணிச்சல் சிங்கள வெறியர்கட்கு ஏற்பட்டிருக்கிறது! தமிழ் மீனவரின் தொடர் சாவுகட்கும் பிற அல்லல்களுக்கும், சிங்கள அரசன்று, நூற்றுக்கு நூறு இந்திய அரசுதான் காரணம். இந்திய அரசின் கண்மூடி வாய்மூடித்தனந்தான் காரணம்.

மற்றொரு வகையிலும் தமிழ் மீனவர் படும் அல்லல்கட்கு இந்திய அரசின் தவறான, போலித்தனமான, தமிழரின் நலம் கருதாத அரசியல் கொள்கையே காரணமாக இருக்கின்றது. கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு. அது முன்னாளில் இந்திரா காந்தி அரசு தமிழர்களுக்கு இழைத்த பெரும் பிழை. ஓரின மக்களைப் பொறுத்தவரை அவர்களின் தாய்மொழி எப்படிப் புனிதமானதோ அப்படியே தாய்மண்ணும் புனிதமானது. இங்கே புனிதம் என்று சடங்குத்தனமாக எதையும் நான் குறிப்பிடவில்லை. மக்களின் உள்ளத்துத் தூய உணர்வுகளைப் போலவே அவர்களின் உயிர்காப்புக்கான சூழலும் மதித்துப் போற்றப்படல் வேண்டும் என்ற பொருளிலேயே கூறுகிறேன்.

கச்சத்தீவு தமிழர்க்குரியது. தமிழ் மண்ணின் ஒருபகுதி. வழிவழியாகத் தமிழ் மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலுக்குத் துணையாகப் பயன்படுத்தி வந்த கடல்நடுத் திட்டு அது. தமிழினத்தின் தலைவர்கள் என்பவர்கள் எப்பொழுதும் தங்கள் சொந்த மக்களின் நலம் கருதாமல் தங்கள் அரசியல் ஆண்டைகளுக்கு வால் குழைப்பவர்களாக இருந்து வந்துள்ளமையாலேயே தமிழர்களின் வழிவழியான, வாழ்வுக்கடிப்படையான தமிழ்மண்ணின் பகுதிகள் ஆங்காங்குப் பறிபோயின. வடவேங்கடத்தை ஆந்திரரும், தேவிகுளம், பீர்மேட்டுப் பகுதிகளைக் கேரளத்தினரும் குறிவைத்தது போலவே தமிழர்க்குரிமையாயிருந்த கச்சத் தீவைச் சிங்களத்தான் குறிவைத்தான். சிங்கள அரசின், சூழ்ச்சித்தன்மை வாய்ந்த கரவுமிக்க அரசியல் தந்திரங்கட்கு ஆட்பட்டு இந்திரா காந்தி காலத்தில் இந்திய அரசு தமிழ் மக்கள் மீது கடுகளவும் அக்கறையற்ற நிலையில் கச்சத்தீவைச் சிங்கள அரசுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அன்றுமுதல் தொடங்கியதுதான் தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படைக் கொடியவர்களின் கையில் இந்த நொடிவரை பட்டுவரும் அவலமும் அழிவும்.

தன்னால் ஏற்பட்ட அவலம் இது என்பது இந்திய அரசுக்குத் கொஞ்சமும் உறைக்கவில்லை. அவ்வாறு உறைக்கும் படி எடுத்துக்கூற நடுவணரசுக்கு வால்பிடிக்கும் எந்தத் தமிழினக் காவலரும் கடுகளவுகூட முயலவும் இல்லை.

வடநாட்டுக்காரனுக்கு வெளிநாட்டில் ஒன்று என்றால் உடனே இந்திய அரசு பதைத்துத் துடிக்கிறது. உதவிக்கு ஓடுகிறது. ஆனால் தன் போலித்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு உட்பட்டுத் தன் கடமையைத்தான் இந்திய அரசு செய்யவில்லை என்றாலும் மாந்தநேய அடிப்படையில் கூடத் தமிழ் மீனவர் உயிர்காக்க முன்வரவில்லையே! தமிழர்களைப் பற்றிய புறக்கணிப்பு இவ்வளவு மட்டமாகவா போகவேண்டும்!

இந்த அரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருப்பதைவிட நாம் ஒட்டுமொத்தமாகச் செத்தே போகலாம்.

"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று"

-தென்செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலெனின் தங்கப்பா நல்லா எழுதியிருகிறார் நண்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.