Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….?

இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன.

 

இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய் தலைவேறு முண்டம் வேறாய் துடிதுடித்து கிடந்த ஒரு கடா ஆடு தன் வாழ்க்கையையும் துன்பத்தினையும் அந்த ஆலய சந்நிதானத்தில் அதாவது அந்தக்கடாவின் பலிபீடத்தில் கிடந்தவாறு தன் ஆற்றாமையை சொல்லி புலம்புகின்றது.

 

அவ்வளவு சனக்கூட்டத்திற்கு மத்தியிலும் அதன் புலம்பல்கள் மட்டும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன.

 

எனதருமை அன்புத்த தமிழா!  உன் நம்பிக்கைகள் கண்டு எமது இனம் இன்று வெட்கித்தலைகுணிகின்றது.

 

மன்னித்துக்கொள்ளுங்கள். சாப்பிட இலை போட்டு, தாகத்திற்கு தண்ணீர், கஞ்சி வைத்து, மழையில் நனையாமல் இருக்க கொட்டகை போட்டு ராஜ மரியாதையோடு வளர்த்த உங்களைப்பார்த்து நாம் வெட்கித் தலைகுணிகின்றோம் என சொன்னதற்காக.

 

நாங்கள் நன்றி மறப்பவர்கள் அல்ல. அதற்காக உங்கள் மூட நம்பிக்கைகளைப்பார்த்து சும்மாயிருக்கவும் எங்களால் முடியவில்லை. நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு நாங்கள் செஞ்சோற்றுக் கடன் செய்ய வேண்டிய கடமையிருக்கிறது. அது தான் இது.

 

அன்பான மனிதா..! விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்து அதை புசித்து உயிர் வாழும் இயல்பு கொண்டன. அதாவது இன்னொன்றில் இன்னொரு உயிர் தங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஒன்று இல்லையாயின் இன்னொன்று இல்லை.

 

ஆனால் மனிதன் மட்டும் தனக்குள் அடித்துக்கொண்டும், கொன்று கொண்டும் இருப்பது உலக வேதனை.

 

இது உங்கள் பிரச்சினை. அதில் நாங்கள் தலையிடவும் இல்லை. ஆனால் பேசவே முடியாத விலங்குகளை இன்று இத்தனை கொடூரத்தனமாக கொன்று குவித்திருப்பதை நினைக்கும் போது நீங்கள் இன்னமும் நாகரிமடையவில்லை அல்லது முழுமை பெறவில்லையா என்று எண்ணத்தோன்றுகின்றது.

 

தமிழனே உலகின் மூத்த குடியென்று என்றுமே பெருமை பேசிக்கொள்ளும் நீ உலகின் மற்றைய இனங்களுக்கு எடுத்துக்காட்டாகவல்லா இருக்க வேண்டும். ஆனால் நீ இன்னமும் மூட நம்பிக்கையில் இருப்பதை நினைத்து ஐந்தறிவு படைத்த ஆடுகள் நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

மிருகங்கள் வதைக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று அரசாங்கங்கள் இன்று சட்டங்கள் இயற்றி மிருகங்களை பாதுகாத்துவருகின்றன. ஆனால் தமிழன் மட்டும் ஆலயங்களில் மிருகங்களை வெட்டி வீழ்த்தி நரபலி வேட்டை ஆடுகின்றான்.

 

இது தமிழனுக்கு நியாயமா? இப்படி எங்களை நீங்கள் வெட்டி வீழ்த்திய போது உங்களுக்கு சிங்களவன் அடித்தவைகள் கூடவா ஞாபகத்திற்கு வரவில்லை. ஓட ஓட விரட்டி தமிழர்களை சிங்களவர்கள் வெட்டி வீழ்த்திய போதும், விமானங்களைக்கொண்டு குண்டு மழை பொழிந்த போதும் எத்தனையோ உயிர்கள் துடிதுடித்து இறந்து போயின.

 

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள்,பாடசாலைகள் என அத்தனை இடங்களிலும் தமிழன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். இதை தமிழனுக்கு சொல்லித்தரன் தேரிய வேண்டும் என்றில்லை.

 

இவற்றையெல்லாம் பார்த்து, அனுபவித்த தமிழன் தான் இன்று செல்லமாக ஆசையாக வளர்த்த ஆடுகளை நேர்த்திக்கடன் என்ற பெயரில் வெட்டி வீழ்த்துகின்றான்.

 

ம்ம். உங்களைக்கொன்ற சிங்களவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும், தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் உலக பொதுமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்றாடுகின்றீர்களே எங்களையும் நீங்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கும் போது உங்களை எந்த நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்த? அதுவும் இறைவன் சந்நிதியில்.

 

தமிழனைக் கொன்றால் இனவழிப்புத் தீர்மானம் எனில் வாய்பேச முடியாத ஆடுகளைக்கொன்றால் என்ன தீர்மானத்தை வடமாகாண சபையும் முதலமைச்சரும் கொண்டுவருவார்கள்.

 

எல்லாமே உயிர்களின் அழிப்புத் தானே?

 

ஓ!  தமிழன் என்றைக்கும் தான் செய்வதை சரியென்று வாதாடும் கூட்டம் தானா?

 

தமிழா உன்னிடம் ஒரு கேள்வி உனக்கு ஐக்கிய நாடுகள் சபையிருக்கின்றது. சர்வதேச நீதிமன்றம் இருக்கின்றது. வெளிநாட்டு தூதுவர்கள் இருக்கின்றார்கள். உனக்கு ஏதாவது சிறு துன்பம் விளைவிக்கப்பட்டதும் ஓடோடிப்போய் முறையிடலாம்.

 

அங்கு தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ ஒரு மன ஆறுதலுக்கேனும் முறைப்பாட்டை தெரிவிக்கலாம். ஆனால் வெட்டி வீழ்த்தப்பட்ட என் வாய் பேசா இனம் எங்கே போய் முறையிடும்.

 

ஓ…! எங்களுக்கு வாய் பேச முடியாது என்பதனால் தான் இப்படி செய்கின்றீர்களா? அப்படியாயின் உங்களை சிங்களவன் கொன்றதும் சரியென்று சொல்கிறீர்களா?

 

சற்றுச் சிந்தித்துப்பாருங்கள் தமிழர்களே, ஆசையாசையாக நீங்கள் எங்களை வளர்த்த போது எங்கள் மனம் குளிர்ந்தது. தடவித்தடவி வளர்த்தீர்கள். உங்கள் அரவணைப்பு கண்டு ஆனந்தம் அடைந்தோம்.

 

ஆனால் வளர்ந்து பருவமடைந்த உங்கள் இளம் ஆண் மகனை திருமணம் செய்து கொடுக்கும் தருணத்தில் இராணுவ வீரன் ஒருவன் சுட்டுவீழ்த்தினாலோ? வெட்டி வீழ்த்தினாலோ உங்கள் மனம் எத்துனை துன்பத்திற்கு ஆளாகும் என்பதை சற்று நினைத்துபாருங்கள்.

 

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை இராணுவம் கடத்தி சென்று இன்னமும் விடுதலை செய்யவில்லை. அதை நினைத்து ஆர்பாட்டம் செய்யும் நீங்கள் எங்களை கடவுளின் பெயரால் இப்படி வெட்டி வீழ்த்துவது உங்களுக்கு ஏற்புடையதா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

நாங்கள் தவறாக ஏதும் சொல்லியிருந்தால் எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் பாசமான வளர்ப்போடும், கோரமான பலியிடலையும் பார்த்து விட்டு இந்த மண்ணுலகைவிட்டு பிரித்து செல்கின்றோம்.

 

இனி ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் நாங்களும் மனிதர்களாக பிறக்க கூடாது அப்படி பிறந்தால் தமிழர்களாக பிறக்க கூடாது என்று இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் கடவுளிடம் மண்றாட்டமாக வேண்டிக்கொள்கின்றோம்.

 

உங்கள் பிள்ளைகளுக்காக போராடும் நீங்கள் எங்கள் இனத்தையும் காப்பாற்ற போராடுங்கள். எங்கள் உயிர்காக்க உதவி செய்யுங்கள்.

 

எஸ்.பி.தாஸ்

 

velvi.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிரங்கமாக கொல்லப்படும் ஆடுகளுக்கான உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, மறைவில் கொல்லப்படும் ஆடுகள் எண்ணிக்கை அதிகமானது அல்லவா.

இதிலும் பார்க்க, ஒட்டுமொத்த விலங்குணவுக்கு எதிராக போராடுங்கள், எழுதுங்கள்.

பலியிடப்படும் ஆடுகள், வீணாக்கப்படாமல் உண்ணப்படுமாயின், பகிரங்கமாகப் கொல்லப்படுவதற்கும், மறைவில் கொல்லப்படுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதே நம்ம நிலைப்பாடு.

அந்நாளில், ஆட்டிறைச்சி, உண்ணக் கூடிய வசதியில்லாத, பலருக்கு இந்த வகை ஆலய நேர்த்தி முறைகளினால் பலன் கிடைத்தது என்பது இதன் மறுபக்கம்.

இது ஒரு போலி அனுதாபம் என்பதே எமது நிலை.

அதேவேளை முன்னர் ஒரு தமிழ் படம் ஒன்றில் 1000 வரையான ஆடுகள் கொல்லப் பட்டு தோலுரித்து தொங்க விடப் பட்ட நிலையில் அந்த இடத்தில் வில்லன்களைப் ஹீரோ பந்தாடுவதாக எடுக்கப் பட்ட காட்சியில், படப்பிப்பு முடியும் போது ஆடுகள் உண்ண முடியாதவாறு பழுதாகி வீணாகி விட்டது பெரும் புயலைக் கிளப்பி, அதன் பின்னர் இதற்கு சினிமா துறையினரால் சுஜ தடை விதிக்கப் பட்டதும் குறிப்பிடப்படவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ந்தமிழ் மக்களின் கிராமிய நம்பிக்கைகளையும் சிறுதெய்வ வழிபாட்டையும் எதிர்ப்பது தமிழர் நலன்கலுக்கு எதிரான சக்திகளையே ஊக்குவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றையும் கொல்வார்கள். ஆனால் அவர்களது உயரிய தத்துவம் என்னவென்றால் கொல்லப்படும் விலங்கை உடனே கொன்றுவிட வேண்டும். :huh:

மாட்டைக் கொல்வதற்கு ஒருவகை கருவியை (stun gun) பயன்படுத்துவார்கள். பிறகு அதற்கு அருகே அமர்ந்து சென்டிமென்ட் ஆக நன்றி தெரிவிப்பார்கள். :blink:

(முள்ளிவாய்க்காலிலும் உடனடியாகக் கொல்லவில்லை என்பதே அவர்களது கவலையெல்லாம்.)

ஆக.. மாட்டை, பன்றியைக் கொன்று தின்பதை நிறுத்த முடியாமல், உடனே கொல்கிறேன்.. சாப்பிடுகிறேன் என்று வேதாந்தம் பேசுகிறவர்கள் அவர்கள். அதை அரைகுறையாகப் பிடித்துக்கொண்டு நாங்களும் அல்லாடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் டி சிவ்வா என்ற காடையர், மகிந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தார். கொலை, கட்டப் பஞ்சாயத்து, மாமா வேலை எல்லாம் தாராளம்.

முன்னேசுவரம், காளி கோவிலில், பலியிடக் கொண்டுவரப்பட்ட ஆடுகளை, பாவமாம், என்று, அடாவடியாகத் தடுத்து, பறித்து வண்டிகளில் ஏத்திக் கொண்டு போய், தமது ஆக்களுக்கு தராளமாக கொடுக்க, வேறென்ன அவர்களும், அடித்து தின்றார்கள்.

மகா போக்கிலித்தனமான திருட்டு.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.