Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் கெரியின் இலங்கை விஜயம்: அறிக்கைகள் அல்ல, செயலே தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜோன் கெரியின் இலங்கை விஜயம்: அறிக்கைகள் அல்ல, செயலே தேவை

c02f45de-dacf-488b-8e48-3209a188e9b51.jp
முத்துக்குமார்

 

அமெரிக்க அரசுச் செயலர் ஜோன் கெரி தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். இவர் இலங்கை வருமுன் இலங்கையின் வெளிநாட்டமைச்சருக்கும் படைத்தளபதிகளுக்கும் இந்துசமுத்திரக் கடலில் தரித்திருந்த இராட்சத விமானம் தாங்கிக் கப்பலை அமெரிக்கப் படையினர் காட்டியிருக்கின்றனர். அவரது பயணத்தின் நோக்கம் ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பதும் தமிழர் எழுச்சியைத் தடுப்பதும்தான். மோடியைப் போலவே அரசாங்கத்திற்குக் கரைச்சல் கொடுக்கவேண்டாம் எனக் கூட்டமைப்பினருக்கு புத்திமதியும் கூறிச் செல்லவும் அவர் தவறவில்லை.

அமெரிக்க இராஜதந்திரிகள் அரசுமுறைப் பயணத்தின்போது கருத்துச் சொல்வதிலும் ஒரு ஒழுங்குமுறை உண்டு. தாம் பயணம் செய்த நாட்டின் செயற்பாடுகளை மெச்சுதல், போதாமைகளைக் கூறுதல், ஆலோசனைகளைக் கூறுதல் என்பதுதான் அந்த ஒழுங்குமுறை. ஜோன் கெரியின் பயணத்திலும் அது பின்பற்றப்பட்டது. அவர் இலங்கை அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளையும் ஜனநாயக மறுசீரமைப்பு முயற்சிகளையும் மெச்சினார். பின்னர் போதாமைகளைக் கூறி சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணை மேற்கொள்ளுதல், மனிதஉரிமை நிலவரத்தினை முன்னேற்றுதல், அதிகாரப் பகிர்வை வழங்குதல் என ஆலோசனைகளையும் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர் மெச்சிய விடயங்களும் ஆலோசனை கூறிய விடயங்களும்தான் கவனத்தைப் பெறுகின்றன. இவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

ஜோன் கெரி அவர்கள் முதலில் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றார். இங்கு எது சமாதானம் என்ற ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சிங்களத் தரப்பிற்கு போரில்லா நிலைமட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு போரில்லா நிலைமட்டும் சமாதானமல்ல. போரில்லாநிலை, இயல்புநிலையைக் கொண்டுவருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் கிடைக்கின்றபோதே சமாதானம் உருவாகும்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை போர் முடிவடைந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை போர் இன்னோர் வகையில் தொடர்கின்றது என்பதே உண்மை. ஆயுதப் போரின் முடிவின் பின்னரும் கட்டமைப்புசார் இனப்படுகொலை தொடர்கின்றது. மகிந்தர் அரசாங்கம் மன்னர் ஆட்சிக் காலத்தில் வெற்றியடைந்த மன்னர், தோல்வியடைந்த நாட்டை சூறையாடுவதுபோல் பச்சைச் சூறையாடலில் ஈடுபட்டது. ஆட்சிமாற்றம் வந்தபின்னர் சூறையாடல்  நின்றுவிட்டது எனக் கூறமுடியாது. சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பும், சிங்கள வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பும், சிங்களக் குடியேற்ற முயற்சிகளும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.

இயல்புநிலையைக் கொண்டுவருதலில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரத்திற்கான தீர்வு, இராணுவம் அகலுதல் என்பன உள்ளடங்கும். இவை எவையுமே தீர்க்கப்படவில்லை. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக 1000 ஏக்கர் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டபோதும் 400 ஏக்கர் வரையே விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கும் ஏகப்பட்ட இராணுவ கெடுபிடிகள் உண்டு. விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதார திட்டங்கள் பெரியளவிற்கு முன்னெடுக்கப்படவில்லை. சம்பூர் மக்கள் நீண்டகாலமாக அகதிமுகாம்களில் வசிக்கின்றனர். அவர்களது காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டபோதும் எதுவும் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடயம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களும் உள்ளனர். இவர்களை விடுவிப்பது கஸ்டமான ஒன்றல்ல. ஒரு அரசியல் தீர்மானம் மூலம் ஒருநாளிலே அனைவரையும் விடுதலை செய்துவிடலாம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்போது அவ்வாறான விடுதலை இடம்பெற்றது. ஆட்சியாளர்களுக்கு இது தொடர்பில் பெரிய விருப்பங்கள் இல்லை.

அடுத்தது காணாமல் போனோர் விவகாரம். தங்கள் கணவன்மார்களையும் பிள்ளைகளையும் நேரில் கையளித்த சாட்சியங்கள் பல உண்டு. அவர்கள் தரும் சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிவது கஸ்டமான காரியமல்ல. இங்கு தமது படையினரை குற்றவாளியாக்க அரசாங்கம் தயங்குவதால் பின்னடிக்கின்றது. பெயருக்கு ஆணைக்குழு அமைத்து விசாரிக்கின்றது. அந்த ஆணைக்குழு ஒழுங்காக விசாரணைகளை மேற்கொள்வதில்லை. விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. வெறும் சிபாரிசுகளைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உண்டு. சிங்கள உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆணைக்குழு ஒழுங்கான சிபார்சுகளை முன்வைப்பதுமில்லை. முன்வைத்த சிபார்சுகளை அரசாங்கம் கணக்கெடுப்பதுமில்லை. இந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு மட்டும்தான்.

c02f45de-dacf-488b-8e48-3209a188e9b54.jp

இராணுவத்தை அகற்றும் விடயத்திலும் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. இராணுவம் தனது செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றது. ஹோட்டல் நடத்துதல், மக்களின் நிலங்களில் விவசாயம் செய்தல், பண்ணைகளை நடத்துதல் என எவற்றையும் இதுவரை விட்டுவிடவில்லை.

மூன்றாவது அரசியல் தீர்வு விவகாரம். இது விடயத்தில் விருப்பத்திற்கான சைகை எவற்றையும் ஆட்சியாளர்கள் காட்டவில்லை. அமெரிக்க தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும்கூட அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை. இந்தியா தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்தவகையிலும் தீர்க்காத 13 ஆவது திருத்தத்தையே அரசியல் தீர்வாக முன்வைப்பதில் முனைப்புக்காட்டி வருகின்றது. மேற்குலகமும் அதற்கு ஒத்தூதுகின்றது. வடமாகாண சபை தந்த அனுபவத்தை பரிசீலித்துப் பார்ப்பதற்குக் கூட இந்தச் சக்திகள் தயாராக இல்லை.

இந்நிலையில் சமாதானம் வந்துவிட்டது என ஜோன் கெரி தெரிவிக்கும் கருத்து மிகைப்படுத்தப்பட்ட கருத்தேயாகும். சமாதானம் வந்துவிட்டது. அது முதிர்ச்சியடைய வேண்டும் என ஜோன் கெரி கூறியிருக்கின்றார். கட்டமைப்புசார் இனப்படுகொலைகள் நிறுத்தப்பட்டு, இயல்புநிலையினைக் கொண்டுவருதல் விவகாரமும் தீர்க்கப்பட்டு, அரசியல் தீர்வு தொடர்பாக இடைக்காலத் தீர்வு ஒன்றினையும் வழங்கியிருந்தால் ஜோன் கெரி கூறிய கருத்தில் உண்மை இருந்திருக்கும். வெறுமனவே சில ஏக்கர் காணிகள் விடுவித்ததையும், ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதையும் வைத்துக் கொண்டு சமாதானம்  வந்துவிட்டது எனக் கூறுவதை ஏற்கமுடியாது. ஜனாதிபதி செயலணிகள் தொடர்பாக நிறையவே அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. தவிர சந்திரிகா தலைமையிலான  ஜனாதிபதி செயலணி இதுவரை எதனைச் செய்துள்ளது என்றால் எதுவுமே இல்லை.

மக்கள் எந்தப் பகுதிக்கும் சென்று வரக்கூடிய நிலை உள்ளது என ஜோன் கெரி கூறுகின்றார். மக்கள் சம்பூருக்கும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கும் செல்ல விரும்புகின்றனர். ஜோன் கெரி கொண்டுபோய் விடுவாரா? பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஜோன் கெரி முற்படுகின்றார்.

ஜோன் கெரியின் கருத்துக்களில் மிகவும் அபத்தமான விடயம் சர்வதேச தரத்தில் நம்பத்தகுந்த உள்ளக விசாரணை வேண்டும் எனக் கூறப்பட்ட கருத்தாகும். இது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாட்டினை சமாதானம் செய்வதற்கு கூறப்பட்ட கருத்தாகவே இருக்கலாம்.

உள்ளக விசாரணை என்பது குற்றவாளியே நீதிபதியாகின்ற நிலையைக் குறிக்கின்றது. நீதியான உள்ளக விசாரணை ஒருபோதும் நடைபெறப் போவதில்லை. தனது படையினரையே குற்றவாளியாக்க இந்த அரசாங்கம் ஒருபோதும் முன்வரப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு இதில் எந்தவித நம்பிக்கையும் கிடையாது.

இனப்படுகொலைகளுக்கு, உள்ளக விசாரணை, அரசியல் தீர்விற்கு உள்ளக முயற்சிகள் என்பதெல்லாம் இலங்கைக்குள்ளேயே விவகாரத்தை முடக்கும் செயற்பாடுகள். சர்வதேச சமூகம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்;கும் செயற்பாடுகளே இவை. தமிழ் மக்களுக்கு இவற்றில் நம்பிக்கை எதுவும் கிடையாது. அவர்கள் இவற்றை அனுமதிக்கவும் போவதில்லை.

சமாதானம் என்பது நல்லிணக்கம், சகல இனங்களையும் சமமாக நடாத்துதல், சமஉரிமை வழங்குதல், ஒடுக்குமுறை இன்மை என்பவற்றில் தங்கியுள்ளது என ஜோன் கெரி குறிப்பிடுகின்றார். காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனும் ஐ.நாவுடனும் இணைந்து செயற்படவேண்டும் என்கிறார். நல்லிணக்கத்திற்கு நீதியும் பதிலளிக்கும் கடமையும் அவசியம் என்கிறார். இவையெல்லாம் வரவேற்கப்படக் கூடிய கருத்துக்கள். ஆனால் இலற்றை அடைவதற்கான வரைபடம் என்ன? இது விடயத்தில் சர்வதேசச மூகத்தின் பங்கு என்ன?

தமிழ் மக்களுக்குவெறும் அறிக்கைகள் தற்போது தேவையில்லை. செயல்களே தேவை.

http://ponguthamizh.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=c02f45de-dacf-488b-8e48-3209a188e9b5

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை செல்லும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் யாவரும் புத்த பிக்குகளை வணங்குகின்றார்களே ஏனென்று தெரியுமா?  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.