Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் தலை தப்பியது….! நாடாளுமன்றத்தில் மகிந்தரா???

Featured Replies

 
[ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 08:27.31 PM GMT ]
mahintha_raja_maithiri_manthiri_001.jpg
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

மேற்குலகின் விருப்பத்திற்குரிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டாலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர்கள் விரும்பும்படியான நிகழ்வுகள் நடந்ததாக இல்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 18ஐ அகற்றி 19வது சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது தான்.

19வது சீர்திருத்தம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், பல ஆய்வாளர்களின் கருத்துக்களை ஊடகங்களில் வந்திருந்தாலும், சில யதார்த்தத்தை இதுவரை எவரும் முன்வைக்கவில்லை என்பது தான் உண்மை.

உண்மையில் 19வது சீர்திருத்தம் யாரைப் பாதுகாத்திருக்கின்றது என்று சொன்னால் அது இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் என்பது வரலாற்று உண்மை. அது தமிழர்களுக்கோ அல்லது ஏனைய சமூகத்தினருக்கோ சாதகமானதாக மாறியிருக்கின்றதா என்றால் இல்லை என்றாகிவிடும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தர் பற்றி சற்று பின்னர் பார்க்கலாம். ஆனால் மைத்திரி எப்படி பாதுகாக்கப்பட்டார் என்பது பற்றி சற்று விரிவாக பார்த்துவிட்டு மகிந்தரின் அடுத்த நகர்வைப் பற்றி பார்க்கலாம்.

19வது சீர்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவரின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கு செல்கின்றது. இவ்விடத்தில் தான் மைத்திரியின் தலைக்கு மேல் இருந்த கத்தி சற்று விலகியிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

அதாவது தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரி அமெரிக்காவினாலும், இந்தியாவினாலும் தத்தெடுக்கப்பட்ட செல்லப்பிள்ளை என்றாலும் அவருக்கு ஆயா வேலை பார்த்து ஜனாதிபதி ஆக்கிவிட்டது தமிழ் முஸ்லிம் மக்கள் என்பது சகலரும் அறிந்த உண்மை.

அப்படியாயின் சிறுபான்மையினத்தவர்களின் உரிமை விடயத்தில் அதிகம் பேசவேண்டியவர் யாரெனில் சிறுபான்மை இனத்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரியாகின்றார்.

அவரிடம் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்ந்து இருக்குமாயின் நாளைய வரலாற்றில் நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருந்தவர் சிறுபான்மை மக்களால் அதிகாரத்திற்கு வந்தவர் ஆனால் அந்த சிறுபான்மை இனத்தவர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

ஆனால் 19ன் அமுலாக்காத்தோடு மைத்திரி அதில் இருந்து தப்பித்து இருக்கின்றார். இப்பொழுது மைத்திரி இலங்கை அரசியல் வரலாற்றில் சிறந்த கதாநாயகன். தனக்கான அதிகாரங்களை வேண்டாம் என்று தூக்கியெறிந்தவர்.

இனித் தமிழர்கள் மைத்திரியைப்பார்த்து எங்களுக்கு உதவி செய்யவில்லை என்று கேட்க முடியாது. காரணம் அவர் இப்பொழுது தனது அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு கொடுத்துவிட்டார்.

இப்பொழுது தான் விரிவான ஒரு ஆய்வு முக்கியமாகின்றது. அதிகாரங்கள் நாடாளுமன்றத்திடம் சென்றால். அங்கே நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் யாரென்று சற்று யோசிக்க வேண்டியிருக்கின்றது.

பௌத்த சிங்கள கடும்போக்காளர்களை அதிகம் கொண்டது இலங்கை நாடாளுமன்றம். எனில் அங்கே அவர்கள் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க விடுவார்களா? அப்படி ஏதாவது ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்பதே இப்பொழுது எழுகின்ற மிக முக்கியமான கேள்வியாகவிருக்கின்றது.

இதுவரை காலமும் தனி நபர் ஒருவரிடம் இருந்த அதிகாரங்கள் ஒரு நாட்டின் பாராளுமன்றத்திடம் சென்றது வரவேற்கப்படவேண்டிய ஒன்று தான், ஆனால் அந்த பாராளுமன்றத்தில் வீற்றிருப்பவர்கள் யார் என்பதே முக்கியம். ஏனெனில் சிறுபான்மை கட்களின் பேச்சுக்கள் எல்லாம் இன்றுவரை செல்லாக்காசாகியே கிடக்கின்றன.

ஆக இனி மைத்திரிபாலவை தெரிவு செய்தவர்கள் அவரின் மீது நம்பிக்கை வைக்கவும் முடியாது, அவரிடம் கேள்வி கேட்கவும் முடியாது.

இது ஒரு புறமிருக்க, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. அங்கே சிங்களத்தையும் பௌத்தத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் அதிகம் இருக்கின்றார்கள் என்பதைப்போல மகிந்தரின் வருகைக்காக காத்திருக்கும் உறுப்பினர்களும் அதிகமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் மகிந்தரின் மீள்வருகைக்காக தவமிருக்கின்றார்கள்.

மகிந்தர் ஒருவேளை பிரதமராகவோ? நாடாளுமன்ற உறுப்பினராகவோ அரசியலில் உள்நுழைந்தால் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கற்பனைக்கு உங்களுக்கு நாங்கள் மகாபாரதத்தை மூலமாக கொண்டு விளக்குகின்றோம்.

இவ்விடத்தில் கங்கை மைந்தர் பீஷ்மரை மைத்திரியாகவும், மகிந்த தரப்பினர், ரணில், இலங்கை நாடாளுமன்றத்தை அஸ்த்தினாபுர அரண்மனையாகவும், மகிந்தரை துரியோதனனாகவும், கோத்தபாயவை துச்சாதனனாகவும் பிரதி விம்பப்படுத்திப் பாருங்கள்.

அஸ்த்தினாபுர அரண்மனையில், தர்மன் தன்னுடைய நாடு நகரத்தை இழந்து, தன் சகோதரர்களையும் இழந்து, இறுதியாக தன் மனைவியையும் இழந்து கௌரவர்களாகிய துரியோதனனுக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள். அவ்வேளை துரியோதனன், சகுனியினர் தாம் நினைத்தததை சாதிக்க துடிக்கின்றனர்.

பாஞ்சாலி அரண்மனைக்கு இழுத்து வரப்படுகின்றாள். சேலையை உரிகின்றான் துச்சாதனன்(கோத்தபாய) தடுக்க யாருமில்லை. அஸ்த்தினாபுர அரண்மனையே தலையை தொங்கப்போட்டுக்கொண்டு கற்பை இழந்து காணப்பட்டது.

இவ்விடத்தில் பாஞ்சாலியை தமிழர்களின் உரிமையாகப் பார்க்கவும்.

இப்பொழுது இலங்கை அரசியல் களத்திற்கு வாருங்கள். தனது கடமைகளை சரியாக செய்து ஆட்சி நிர்வாகத்தை நிலைநாட்டி, அஸ்த்தினாபுரத்தை காப்பாற்றி, கொடுத்த வாக்கை கடைப்பிடித்து, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தன் வாழ்நாளையே அர்ப்பணித்த கங்கை மைந்தர் பீஷ்மர் அங்கே பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டு அவள் அவமானப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது தடுத்தொரு வார்த்தை கூற முடியாத நபராக நின்று கொண்டிருந்தார்.

துச்சாதனன்(கோத்தபாய) அண்ணன் துரியோதனன்(மகிந்தர்) கட்டளையிட்டதை ஏற்று துகில் உரிகின்றான். அங்கே தர்மம் நீதி, நேர்மை காப்பாற்றுவேன் என்ற பீஷ்மர்(மைத்திரி) தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கின்றார்.

இது தான் இலங்கையில் நடக்கப்போகின்றது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சையம் மகிந்த தரப்பில் ஏதாவது ஒரு பெரும் புள்ளி நாடாளுமன்றத்திற்குள் நுழையும், அது மகிந்தராகவும் இருக்கலாம் அவர் தம்பி கோத்தாவாகவும் இருக்கலாம்.

மகிந்தர் பிரதமரானால் இங்கே நிகழவிருக்கும் காட்சிகள் அன்றே மகாபாரதத்தில் பார்த்துவிட்டோம்.

பாஞ்சாலி வடிவத்தில் அப்பொழுது தமிழர்களின் உரிமைப்பிரச்சினை. பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டது போல இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும். கௌரவர்களாக மகிந்தர் தரப்பின்னர் இருந்து சூழ்ச்சி செய்வார்கள்.

பக்கபலமாக தமிழர் தரப்பில் இருந்து ஒரு சகுனி அங்கே வீற்றிருப்பார்.

ஆனால் தன்னை நல்லவராக அறிமுகப்படுத்திக்கொண்ட மைத்திரிபால சிறிசேன தலையை தொங்கப்போட்ட நிலையில் இருக்க வேண்டிய நிலை வரும். இது தான் இனி நடக்கப்போகின்ற அரசியல் களம்.

அன்று பாஞ்சாலியை காப்பாற்ற இந்தியாவின் கண்ணன் வந்தான். இங்கோ தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா வராது என்பது தான் உண்மை.

19வது திருத்த சட்டம் அமுலுக்கு வந்தால் தான் என்ன வராவிட்டால் தான் என்ன? மகிந்தர் தரப்பு வெற்றியை பெறும் என்பதே உண்மை. அது நாடாளுமன்றத்தில் எவ்வாறான தாக்கத்தை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே நேரம் தமிழர் தரப்பில் இருந்து சகுனி யார் என்பதையும் இன்னும் சில மாதங்களில் காண்பீர்கள்.

மகாபாரத்தில் கௌரவர்கள் இத்தனை அட்டகாசம் செய்த பின்னர் பாண்டவர்கள் வெற்றிபெற்றார்கள் என்பதற்காக இங்கே பாண்டவர்களின் வெற்றி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். இங்கே பாண்டவர்கள் என்று சொல்வதற்கு எங்களிடம் இப்பொழுது யாருமில்லை. இருந்தவர்கள் இப்பொழுது அங்குமில்லை. இப்பொழுது இலங்கை அரசியலில் முழுக்க முழுக்க கௌரவர்களே இருக்கின்றார்கள். அதில் பாதிப்பேர் சகுனிகள்.

இனி வரும் நாடாளுமன்றத் தேர்தல்? பல்வேறு கதவுகளை திறக்கவிருக்கின்றது. பொறுத்திருந்து பாருங்கள். முடிந்தால் பாண்டவர்கள் வெளியில் இருந்து உருவாகலாம். அதாவது மாண்டவர்கள் மீண்டவர்களாக….!

எப்பொழுதும் காலம் ஒரே மாதிரியிருப்பதில்லை. அது காலச்சுழற்சிக்கு ஏற்ற மாதிரி மாறும்.

- எஸ்.பி.தாஸ் -

http://www.tamilwin.com/show-RUmtyFRaSUhx0D.html

 

 

சிறிலங்காவில் நடப்பதை ஜோன் கெரியும், கமரூனுமே தீர்மானிக்கின்றனர் – கெஹலிய ரம்புக்வெல MAY 27, 2015 | 2:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

keheliya-rambukwella-300x199.jpgசிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“நாட்டில் தற்போது இடம்பெறும் சில நிகழ்வுகள் திருப்தியளிப்பதாக இல்லை.

குறிப்பாக வடக்கில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கவில்லை.

ஆனால் ஒரு விடயம் நன்றாக புரிகின்றது.  அதாவது சிறிலங்காவில் இன்று என்ன நடக்கவேண்டும் என்பதனை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/05/27/news/6562

 

  • கருத்துக்கள உறவுகள்

"முடிந்தால் பாண்டவர்கள் வெளியில் இருந்து உருவாகலாம். அதாவது மாண்டவர்கள் மீண்டவர்களாக….!" நம்பிக்கைதான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கன்ட சும் $ சம் லொக்கல் பாண்டவர்கள் அவர்கள் இருக்க பயம் ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.