Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் நிறைவடைந்த பின்னரே வடக்கிற்கு போதைப் பொருட்கள் வந்தன - முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

2009ம் ஆண்டின் பின்னரே வடமாகாணத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கவில்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னரே இது வடக்கில் பரவியுள்ளது.

இதன் காரணமாகவே பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் வடமாகாணத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.pathivu.com/news/40673/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

 

அதே போல்..... "வாள் வெட்டு" கலாச்சாராமும்,
வாளேந்திய சிங்கக் கொடியை... சம்பந்தன் தூக்கிப் பிடித்து, ஆட்டிய... பின் தான்,
தமிழ்ப் பகுதிகளில்... தினமும்.... "வாள் வெட்டு" தொடங்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளும்.. மறைமுகமாக இந்தப் போதை யுக்தியை பயன்படுத்தி தான் இளைய சமூகத்தை புரட்சிகரமாக சிந்திக்க செயற்பட விடாமல் தடுத்து வருகின்றன.

 

வெள்ளிக்கிழமை வரை வேலை.. படிப்பு.. கடனுக்கு வட்டி உழைப்பு.... வெள்ளி பின்னேரம் தொடங்கி.. ஞாயிறு பின்னேரம் வரை போதையில் மிதப்பு. இப்படி தான்.. இன்றைய மேற்குலக கலாசாரமும் கட்டி வளர்க்கப்படுகிறது. இதில்.. ஆட்சியாளர்களுக்கு இரண்டு நன்மைகள்.

 

1. மறைமுகப் பொருண்மியம்.

 

2. இளைய சமூகத்தின் புரட்சிகர சிந்தனைகளை.. ஆட்சியாளர்களுக்கு எதிரான சிந்தனைகள்.. முற்றாக மழுங்கடிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்கள் நினைத்ததை செய்ய முடிகிறது.

 

இந்தத் தேவைகளை விடுதலைப்புலிகள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் மக்கள் புரட்சி.. விடுதலை என்ற கொள்கையோடு நின்றதால்.. அவர்களால்.. போதையை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்தது. அதற்கான அவசியம் இருந்தது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு அந்த அவசியம்.. இல்லை. போதை..குழு வன்முறை.. பாலியல் வன்முறை.. வாள் வெட்டு தான் பெருகனும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் கும்பலுக்கும் இன்று அதுவே அரசியல் மூலதனமும் ஆகியுள்ளது. :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளிக்கிழமை வரை வேலை.. .. கடனுக்கு வட்டி உழைப்பு.... வெள்ளி பின்னேரம் தொடங்கி.. ஞாயிறு பின்னேரம் வரை போதையில் மிதப்பு. இப்படி தான்.. இன்றைய மேற்குலக கலாசாரமும் கட்டி வளர்க்கப்படுகிறது. இதில்.. ஆட்சியாளர்களுக்கு இரண்டு நன்மைகள்.
என்னை மாதிரி கிழடுகள் இரண்டு கிளாஸ் எடுத்த பிறகுதான் சர்வதேச அரசியல் ,பங்குசந்தை,நிலவரம்,இன்வெஸ்மன்ட் புரொப்பட்டி பற்றி அலசி ஆராய்கிறனாங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.