Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து ஒரு இராணுவ முகாமைக்கூட அரசு அகற்றவில்லை! தகவல் இருப்பின் மஹிந்த வெளிப்படுத்தட்டும்

Featured Replies

kabir%20hashim%20456345463.jpg

 

ஐ.தே.க. ஆட்சியிலேயே வடக்கிலிருந்து 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தாம் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றதன் பின்னர் வடக்கிலிருந்து ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்றவில்லை. அனைத்தும் மஹிந்தவின் காலத்திலேயே அகற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளது. தமது ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டிருந்தால், அவற்றின் பெயர் விவரங்களை வெளியிடுமாறு மஹிந்தவுக்கு ஐ.தே.க. சவால் விடுத்துள்ளது.
 
வடக்கிலிருந்த 152 முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டு 93 முகாம்களே தற்போது எஞ்சியுள்ளன என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாத்தறையில் கடந்தவாரம் இடம்பெற்ற கூட்டத்தில் தகவலொன்றை வழங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை குறித்து குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஸிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
 
"மக்கள் ஆதரவை இழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டபோதிலும், தற்போது உண்மைக்குப் புறம்பான பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றார். இதனூடாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றார். நல்லாட்சிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதன்மூலம் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் முன்னுரிமை பெற முயற்சிசெய்கின்றார்.
 
தனது கோடிக்கணக்கான ஊழல் மோசடிகளை மறைப்பதற்கு முனைகின்றார். மீண்டும் நாட்டில் விடுதலைப்புலிகள் தலைதூக்குவதற்கான வசதிகளை அரசு செய்துகொடுத்துள்ளதாகவும், வடக்கில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை இதனைக் குறித்து நிற்பதாக அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
 
இதன் மூலம் அவர் இந்நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்த இராணுவத்தினரை அசெளகரியத்துக்கு உட்படுத்தி குறைத்து மதிப்பிட்டுள்ளார். தனது சுய இலாபத்துக்காக இவ்வாறான கருத்துகளை முன்வைத்துள்ளமை தொடர்பில் அவர் விளக்கம் வழங்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாலோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாலே அல்லது இந்த அரசாலே ஒரு இராணுவ முகாம்கூட அகற்றவில்லை.
 
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில்தான் 59 முகாம்களும் அகற்றப்பட்டன. அதுமட்டுமன்றி, வடக்கில் இராணுவத்தினர் கைப்பற்றிய 11 ஆயிரம் ஏக்கர் காணியில் 5 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்ததும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயேயாகும். தற்போதைய அரசானது இராணுவத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஆயிரம் ஏக்கர் மாத்திரமே விடுவித்துள்ளது. எனினும், 2014 நவம்பர் மாத்தில் சம்பூர் இராணுவ முகாமை அகற்றுவதற்கு மஹிந்த ராஜபக்­ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார். 59 இராணுவ முகாம்கள் புதிய அரசால் அகற்றப்பட்டுள்ளதாயின் அதன் பெயர்கள் அடங்கிய விவரங்களை வெளியிடுமாறு நாம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால் விடுக்கின்றோம். இதற்கு முன்னரும் நாங்கள் பல சவால்களை அவருக்கு விடுத்துள்ளபோதிலும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை'' - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
http://www.malarum.com/article/tam/2015/06/14/10536/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.HFNqAfZT.dpuf
 
 
பார்ரா .. ஏதோ எதிரி நாடு நிலங்களை பிடித்த மாதிரி உங்கள் கதை ... அட பண்ணிகளா ... உனது நாட்டு மக்களின் அவர்களின் வாழ்விடங்களை அடாவடி தனமாக வைத்துகொண்டு அதற்கு விளக்கம் வேற ...
 
தமிழ் மக்களின் நிலங்களை அவர்களிடம் திருப்பி கொடுப்பதற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் ... இன்னும் சிங்களவனை இனவாத அரசியலுக்குள் வைத்து கொண்டு உங்கள் பிழைப்பினை பர்ர்த்துகொண்டு வருகின்றீர்கள் ...எப்ப தான் எல்லாரும் இலங்கை மக்கள் என்று ஏற்று கொள்வீர்கள் ....
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஒரு மாற்றமும் இல்லை போல இருக்கு.. :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஒரு மாற்றமும் இல்லை போல இருக்கு.. :(

 

 

ஒன்றையும் கொடுக்கவில்லை

கொடுக்கமாட்டோம் என சிங்களம் தெளிவாக உள்ளதை மீண்டும் மீண்டும் நேரடியாகவே சொல்கிறது

யாழ்ப்பாணத்தில் 59 முகாம்களை மூடவில்லை – சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுப்பு JUN 17, 2015 | 1:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Army_Sentry-300x199.jpgசிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2009 மே 19ம் நாள் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ஒழுங்கான முறையில் பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டு படை நிலைகள் மாற்றியமைக்கப்பட்டன.

இது உலகின் எந்தவொரு நிபுணத்துவ இராணுவமும் கையாளுகின்ற தர நியமமே தவிர, சிறிலங்காவில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் புதிய ஒரு முறை அல்ல.

இதற்கமைய, வடக்கில் 2009ம் ஆண்டு மே 19ம் நாளுக்குப் பின்னர் 59 சிறிய முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

வடக்கில் 2009ஆம் ஆண்டு, 7 புறக்காவல்நிலைகள் (outposts) அகற்றப்பட்டன. 2010 ஆம் ஆண்டு 9 புறக்காவல்நிலைகளும், 2011ஆம் ஆண்டு 4 புறக்காவல்நிலைகளும், 2013ஆம் ஆண்டு 15 புறக்காவல்நிலைகளும், 2014ஆம் ஆண்டு 24 புறக்காவல்நிலைகளுமாக, மொத்தம் 59 புறக்காவல் நிலைகள் மூடப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு எந்தவொரு புறக்காவல் நிலையும் மூடப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த 59 புறக்காவல் நிலைகளும் அகற்றப்பட்டுள்ளன.

இராணுவத் தலைமையகம், வடக்கில் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளைக் கண்காணித்தும், ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமிருக்காது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இதனால், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/06/17/news/7001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.