Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை
ab74eb5d124e5dbdd2956ad4bdc48819.jpg

ஆதாம் பாலம்  அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 687 கிலோ கஞ்சாவை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளனர்.

 
இராமநாதபரம் மாவட்டம் கடலோர பகுதியிலிருந்து  இலங்கைக்கு  கஞ்சா கடத்த இருப்பதாக கடலோர காவற்படையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். 
 
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கும் ஆதாம் பாலத்திற்கு இடையே மூன்றாவது மணல் திட்டில் பதக்கி வைத்திருந்த 23 மூட்டை கஞ்சா கைப்பற்றப்பட்டு மண்டபம்  கடலோரகாவல்படை முகாமிற்கு கொன்டுவரப்பட்டது.
 
இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஒப்படைத்தனர். 
 
ஒப்படைக்கப்பட்ட கஞ்சா 687 கிலோ எடையுடையதும் இதன் சர்வதேச மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடத்தல் சம்பவம் குறித்து  பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மேலும் கடந்த 14 ஆம் திகதி கீழக்கரை அருகே திருப்புல்லாணி சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த கனகரக வாகனத்தை மடக்கிபிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
 
அதில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு  கீழக்கரை அருகே படகில் ஏற்றபட்டமை விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கனகரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
விசாரணையில் திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 687 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=609964091517690392#sthash.M27pJZHX.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கடத்தியவர்கள் விடுதலைப்புலிகளா?   :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.