Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்துகொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என அக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார்.


null


ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கக்கூடாது என்பது சாத்தியமற்ற திட்டம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அங்குள்ள மலையக மக்களைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பொதுவான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற தமிரசுக் கட்சியின் திருகோணமலை கூட்டத்தில் இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு இம்முறை வேட்பாளராக சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோது, அத்தகைய முடிவொன்று உண்மையாக அங்கு எடுக்கப்பட்டதா என்பதை முதலில் ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அத்தகைய முடிவெடுக்கப்பட்டிருந்தால், அதனைத் தீர்மானித்த கட்சி அதனை நடைமுறைப்படுத்திய பின்னர் அது குறித்து யோசிக்கலாம் என குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன், இதனை சாத்தியமற்ற ஒரு திட்டமாகவே தான் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150629_tna

Edited by Athavan CH

அப்படியானால் சம்பந்தர் மாவை அடைக்கலநாதன் சுரேஸ் பிரேமச்சந்திரன் எனப் பலரும் பாராளுமன்றம் போக முடியாதே...

அல்லது இந்தச் சட்டம் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு மட்டும்தான் செல்லுபடியாகுமா?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரைக்கும் தமிழரசுக் கட்சி அப்படியானவொரு தீர்மானத்தை எடுத்திருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யோகேஸ்வரன் , சரவணபவன் , சிறீதரன் , சுமந்திரன் இவர்கள் மட்டுமே ஒருதடவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.