Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓகஸ்ட் 17க்கு முன் மக்களுக்கு கிடைப்பன எல்லாம் கிடைக்கட்டும் - கேட்பனவற்றை எல்லாம் கேளுங்கள்..

Featured Replies

ஓகஸ்ட் 17க்கு முன் மக்களுக்கு கிடைப்பன எல்லாம் கிடைக்கட்டும் - கேட்பனவற்றை எல்லாம் கேளுங்கள்..

 

கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 3ம் மாத இறுதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை திங்கள் கிழமை மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவருடன் மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,எம்.ஏ சுமந்திரன் , அ.விநாயகமூர்த்தி , ஈ.சரவணபவன் ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்டவர்களும் சென்று பார்வையிட்டனர்.

அதன் போது வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள வீதியான குரும்பசிட்டி - தெல்லிப்பளை  வீதியினை  இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு அனுமதிக்க விடாது தடுத்து வைத்துள்ளதனால். மக்கள் மாற்று வீதியினை சிரமத்தின் மத்தியில் பயன்படுத்துவதனால் தடுத்து வைத்துள்ள வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீள் குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனை அடுத்து அவ்விடத்திற்கு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவை மீள் குடியேற்ற அமைச்சர் அழைத்து வீதியினை மக்கள் பாவனைக்கு அனுமதிமாறு கோரினார்.

அதற்கு இராணுவ தளபதி அது தொடர்பில் தனது உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்பதாக கூறினார்.

அத்துடன் இக் குழுவினர் நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் கடற்படை முகாம் ஒன்றிற்கு அருகில் உள்ள காணிகளில் மக்களை மீள் குடியேற கடற்படையினர் அனுமதிக்கவில்லை அவ்விடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டனர். அது தொடர்பில் கடற்படையினருடன் கலந்துரையாடி அக் காணியில் மக்கள் மீள் குடியேற நடவடிக்கை எடுப்பதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதி அளித்தார் 

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்” சுமந்திரன்:-


“யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம், அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட  பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று திங்கட்கிழமை (29) சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '1000 ஏக்கர் விடப்படுவதாகக் கூறப்பட்ட போதும், அதற்கும் குறைவான இடங்களே விடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சிறிய சிறிய பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலை பக்கமாக 46 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டால் மக்கள் வைத்தியசாலைக்கு இலகுவாக சென்றுவரமுடியும்' என்றார். 


'இது தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசு செய்வதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார். மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் அசையவில்லை. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுப்போம்' என்று அவர் மேலும் கூறினார்.

வலி வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்-
**********************************************************************************************
வலி வடக்கில் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு மக்களை மீள்குடியமர்விற்கு அனுமதித்த 1013 (ஆயிரத்தி பதின்மூன்று) ஏக்கர் காணிகளிலிருந்தும் இதுவரை படையினர் முற்றாக வெளியேறவில்லை ஆனால் அவர்களை வெளியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படையினருக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமுடைய அரசாங்கம் ஏன் தமது ஆளுமையை இதுவரை பயன்படுத்தவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு படையினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அதுதொடர்பாக ஜனாதிபதி பிரதமமந்திரி மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகாப ண்டாரநாயக்க ஆகியோரின் கவனத்தறிகு கொண்டுவந்துள்ளதாகவும் ஆனாலும் படையினரை வெளியேற்ற முடியாதுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்த கருத்திற்கு பதிலளித்து உரையாற்றும்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் 

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரார் இணைந்து மக்களை உத்தியோக பூர்வமாக மீள்குடியேற்றிய காணிகளிலிருந்து இதுவரை படையினர் வெளிறேவில்லை என்பது ஆச்சரியத்திற்குரிய விடையமே ஏனெனில் படையினருக்கு கட்டளை பிறப்பிக்கின்ற அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு எனினும் கட்டளையிட்டும் படையினர் ஏற்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

ஆனால் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்தான் 59 படைமுகாம்கள் அகற்றப்பட்டதாகவும் இன்றைய ஆட்சியில் படைமுகாம்கள் எவையும் அகற்றப்படவில்லை எனவும் இன்றுள்ள அமைச்சர்களே குறிப்பிடுகின்றனர் எனவே அரசாங்கம் தமது முழு ஆளுமையையும் பிரயோகித்து எமது மக்களின் நிலங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர்.


மீள்குடியேறி வரும் மக்களுக்காகன உலருணவுக் கொடுப்பணவுகள் அவர்களுக்கான தற்காலிக வீடுகளை வழங்குதல் மற்றும் அவர் களின் சுகாதார நலன்களை கருத்தில்கொண்டு தரமான மலசல கூடங்களை அமைத்துக்கொடுத்தல் தொடர்ந்து அம்மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டகளை வழங்குதல் போன்ற விடையங்களிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டதோடு மீள்குயேறிய மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இலவச மின்சாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளநிலையில் அதனை மீளவும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் இவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மா.வை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் அப்பையா வினாயகமூர்த்தி மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் படை அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


இதேவேளை இக் கலந்துரையாடலுக்கு முன்னதாக மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவினர் வலிவடக்கில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

 

காணிகளை விடுவிக்க இராணுவம் ஒத்துழைக்கும்: விஜயகலா:-

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், இதுவரையில் 600 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளை மறித்து அடைத்துள்ள கம்பி வேலிகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (29) பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'குரும்பசிட்டி மக்கள், தெல்லிப்பளை பகுதிக்கு வருவதற்கு 7 கிலோமீற்றர் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது. வீதியின் குறுக்கே இராணுவத்தினர் அமைந்துள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவதன் மூலம் மக்களின் பயணம் இலகுவாக்கப்படும். இதற்கு யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த இணக்கம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்றார்.

'கடந்த காலங்களில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும் இடையூறாக இருந்துள்ளனர். மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும். இதற்காக இராணுவத்தினரின் கால்களில் விழத்தேவையில்லை.


பலாலி விமான நிலையத்தை கடலுக்குள் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐப்பான் நாட்டு அரசாங்கம் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும்' என்று பிரதியமைச்சர் மேலும் கூறினார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121451/language/ta-IN/article.aspx

என்னப்பா தேர்தலுக்காக இந்த காமெடி பீசுகள் அடிக்கும் அலப்பறைக்கு அளவே இல்லையா ? 

ஒருத்தி சொல்ற ராணுவம் விடும் என்று ... ராணுவ தளபதி சொல்றார் அதிகாரிகளை கேட்டு சொல்கின்றோம் என்று ... பார்த்தீர்களா இவர்களின் ராஜதந்திர அரசியலை ... தமிழரின் வரலாற்றில் இப்படியான கேவலமான் அரசியல் வாதிகள் என்றால் சங்கரியாருக்கு பிறகு இந்த அலப்பறை கூட்டம் தான் ....

தெரிந்து போய்விட்டது இந்த முறை தேர்தலில் கந்தல் கிழியப்போகுது என்று ... அதற்கு தான் விடுதலை புலிகளின் ஒரு அரசியல் தலைவராக இருந்த ரூபன் அவர்களை தேர்தலில் இறக்க அனுமதித்து உள்ளார்கள் ..
ஆனால் ஒன்று அனந்தி மாதிரி அடக்க முடியும் என்று தப்பு கணக்கு போட்டால் தான் இவர்களுக்கு அதன் விளைவு தெரிய வரும் ...

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை கடலுக்குள் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐப்பான் நாட்டு அரசாங்கம் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும்' என்று பிரதியமைச்சர் மேலும் கூறினா

 

கடலில் விமான நிலையம் அமைத்தவுடன் தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுமாம்.......இதையும் மக்கள் கேட்டு இவர்களுக்கு வாக்கு போட வேண்டுமாம்........போரபோக்கில் கடலில் தமிழர்களுக்கு வீடுகட்டி கொடுப்போம் என அறிக்கை விட்டாலும் விடுவினம் போல கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.