Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா 212/1 62.4 ஓவர்களில்

Rogers 87

Smith 77

  • Replies 82
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கிறிஸ் ராஜர்ஸ், ஸ்டீவன் ஸ்மித் சதம்; ரன்குவிப்பில் ஆஸ்திரேலியா

 
  • மேலேறி வந்து வெளுக்கும் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
    மேலேறி வந்து வெளுக்கும் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • ஸ்வீப் ஷாட்டை திறம்பட பயன்படுத்திய கிறிஸ் ராஜர்ஸ். | படம்: ஏ.எஃப்.பி.
    ஸ்வீப் ஷாட்டை திறம்பட பயன்படுத்திய கிறிஸ் ராஜர்ஸ். | படம்: ஏ.எஃப்.பி.

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டும் இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ராஜர்ஸ், 3-ம் நிலை வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் எடுத்து ஆடி வருகின்றனர்.

வார்னர் விக்கெட் விழுந்த பிறகு ஸ்மித், ராஜர்ஸ் கூட்டணியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறி வருகின்றனர்.

இன்று முதல் நாள் ஆட்டத்தில் இன்னமும் 19 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ராஜர்ஸ் 109 ரன்களுடனும், ஸ்மித் 103 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 182 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.

சுத்தமாக மழிக்கப்பட்ட பேட்டிங் பிட்சைப் போட்டு இங்கிலாந்து தனக்குத் தானே குழிதோண்டிக் கொண்டதாக விமர்சகர்களும், வர்ணனையாளர்களும் கூறிவருகின்றனர்.

ராஜர்ஸ் 19 பவுண்டரிகளையும், ஸ்மித் 9 பவுண்டரி 1 சிக்சர் அடித்துள்ளனர்.

கடந்த முறை இந்தியாவுக்கு எதிராக ‘கிரீன் டாப்’ விக்கெட்டை கொடுத்து இஷாந்த் சர்மாவின் ‘வேகத்துக்கே’ சுருண்ட நினைவு இன்னமும் இங்கிலாந்து கேப்டன் குக்கை விட்டு அகலவில்லை போலும்.

http://tamil.thehindu.com/sports/கிறிஸ்-ராஜர்ஸ்-ஸ்டீவன்-ஸ்மித்-சதம்-ரன்குவிப்பில்-ஆஸ்திரேலியா/article7430355.ece

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா  337/1 (90.0 ov)

Chris Rogers  158

Steven Smith  129 இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.    
   
  • தொடங்கியவர்

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய ஜோடி!

ண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிறிஸ் ரோஜர்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி  272 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

lords.jpg

ஆஷஸ்  தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக ரோஜர்சும், வார்னரும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 38 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் ரோஜர்சுடன் இணைந்தார். இந்த ஜோடி எந்த சிரமும் இல்லாமல் இங்கிலாந்து பந்துவீச்சை சந்தித்தது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சு, இந்த ஜோடியின் முன் எடுபடவில்லை.

இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 272 ரன்கள் குவித்தது. இதில் ரோஜர்ஸ் 173 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 139 ரன்களுடன் களத்தில் உள்ளார். அத்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை ரோஜர்ஸ், ஸ்மித் ஜோடி பெற்றது. இதற்கு முன் கடந்த 1993ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மார்க் டெயிலர், மைக்கேல் சிலேட்டர் இணை 260 ரன்கள் எடுத்ததே புகழ்பெற்ற இந்த மைதானத்தில் ஒரு  ஆஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 368 ரன்களை எடுத்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49631

  • தொடங்கியவர்

டெஸ்ட் வெற்றி தோல்வியை டாஸ் தீர்மானிப்பது வெட்கக் கேடானது: மைக்கேல் வான் கடும் சாடல்

 
 
லார்ட்ஸ் பிட்ச் செத்த பிட்ச் என்று கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்.
லார்ட்ஸ் பிட்ச் செத்த பிட்ச் என்று கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்.

முதல் டெஸ்ட் போட்டியில் கார்டிப்பில் அபார வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து லார்ட்ஸ் பிட்ச் மூலம் பின்னோக்கி அடி எடுத்து வைத்துள்ளது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக சாடியுள்ளார்.

டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது:

“கார்டிப் வெற்றிக்குப் பிறகே, அதனை தக்கவைக்குமாறு பிட்ச் அமைக்கப்படவேண்டும், ஆனால் லார்ட்ஸ் பிட்ச் செத்த பிட்ச் ஆக உள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் அணிகளின் வெற்றி தோல்வியை டாஸ் தீர்மானிப்பது வெட்கக் கேடானது.

இந்த லார்ட்ஸ் பிட்சில் ஒரு வாரத்துக்கு முன்னதாக புல் இருந்தது. ஆனால் தற்போது புல் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளது. கார்டிப் வெற்றிக்குப் பிறகே ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாக உணர்ந்திருந்தனர், இந்நிலையில் இது போன்ற பிட்சை 2-வது டெஸ்டுக்கு தயாரித்திருப்பது ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கவே செய்யும்.

பிட்சிலிருந்து வேகத்துக்கான கூறுகளை அகற்றி விட்டு டாஸிலும் தோற்றால் என்ன நடக்குமோ அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. டாஸில் தோற்றாலும் இங்கிலாந்து தனது பவுலிங் சிறப்புறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துமாறு பிட்ச் இருப்பது அவசியம். தற்போதைய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் தாக்குதல் ஆட்டம் ஆடுகின்றனர். இந்நிலையில் வேகத்துக்கு தடை போடும் இத்தகைய பிட்சினால் மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக நம் பேட்ஸ்மென்கள் மீதான நம்பிக்கையை குறைவாக எடைபோடுவதாக அமைகிறது.

இப்போது ஆஸ்திரேலியா பெரிய அளவுக்கு முதல் இன்னிங்ஸில் ரன் குவித்தால், இங்கிலாந்துக்கு இரண்டக நிலை ஏற்படும். அடித்து ஆடுவதா, அல்லது விக்கெட்டுகளை பாதுகாப்பதா என்ற இரட்டை மனநிலையில் பேட்ஸ்மென்கள் ஆட வேண்டி வரும்.

பெரிய ஸ்கோர் வந்து விட்டால் கிளார்க் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். நிச்சயம் கடும் நெருக்கடி கொடுப்பார். இங்கிலாந்தின் பெரிய தலைவலி ராஜர்ஸ், அவரை வீழ்த்த இன்னமும் உத்திகளை இங்கிலாந்து கண்டுபிடிக்கவில்லை. மொயீன் அலிக்கும் அனுபவம் போதாது. இந்த நிலையில் டிரா செய்ய இங்கிலாந்துக்கு பெரிய மனோபலம் தேவைப்படும். இன்னும் 4 நாட்கள் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடிதான்” இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் வான்.

 

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-வெற்றி-தோல்வியை-டாஸ்-தீர்மானிப்பது-வெட்கக்-கேடானது-மைக்கேல்-வான்-கடும்-சாடல்/article7434116.ece

  • தொடங்கியவர்

ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம்: ஆஸ்திரேலியா 566/8 டிக்ளேர்

 
 
  • இரட்டைச் சதம் எடுத்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
    இரட்டைச் சதம் எடுத்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 32 வேதனை தரும் பந்துகளைச் சந்தித்து கடைசியில் அவுட் ஆகிச் செல்லும் ஆஸி. கேப்டன் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி.
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 32 வேதனை தரும் பந்துகளைச் சந்தித்து கடைசியில் அவுட் ஆகிச் செல்லும் ஆஸி. கேப்டன் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி.

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம் எடுக்க ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஸ்டீவ் ஸ்மித் 346 பந்துகளைச் சந்தித்து 25 பவுண்டரி 1 சிக்சருடன் 215 ரன்கள் எடுத்து ரூட் பந்தில் எல்.பி.ஆனார். இவர் எடுக்கும் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் இதுவாகும், இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 192 ரன்களையும், மே.இ.தீவுகளுக்கு எதிராக 199 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

இன்று 337/1 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, கிறிச் ராஜர்ஸ் 158 ரன்களுடன் தொடங்கி முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 173 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் பந்தில் பவுல்டு ஆனார். பிராட் இன்று அருமையாக வீசினார், நல்ல கட்டுக்கோப்புடன் நல்ல அளவில் வீசி ஓரளவுக்கு ஸ்விங் செய்தார்.

மைக்கேல் கிளார்க் இறங்கி 32 பந்துகள் வேதனையைச் சந்தித்தார். 7 ரன்கள் எடுத்திருந்த போது மார்க் உட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடி நேராக பேலன்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிளார்க் 23 இன்னிங்ஸ்களில் 613 ரன்களை 32.36 என்ற சராசரியில் எடுத்துள்ளார் 2 அரைசத ஸ்கோர் மட்டுமே அவரது பங்களிப்பாக கடந்த 23 இன்னிங்ஸ்களில் இருந்துள்ளது. மாறாக வாட்சன் கடந்த 20 இன்னிங்ஸ்களில் 654 ரன்களை 34.42 என்ற சராசரியில் 4 அரைசத ஸ்கோருடன் எடுத்துள்ளார். ஆனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கிளார்க் ஆட்டமிழந்த பிறகு வோஜஸ் 25 ரன்கள் எடுத்து பிராட் வீசிய பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாட்சனுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் பிராட் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

அறிமுக விக்கெட் கீப்பர் நெவில் 45 ரன்களை எடுத்து ரூட் பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்தார். ஜான்சனை 15 ரன்களில் பிராட் வீழ்த்தினார். ஸ்டார்க் 12 நாட் அவுட். 566/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.

பிராட் 27 ஓவர்கள் 5 மெய்டன்கள், 83 ரன்களுக்கு 4 விக்கெட். மொயீன் அலிக்கு இந்தத் தடவை சாத்துமுறை அரங்கேறியது, 36 ஓவர்களில் 138 ரன்கள் ஒரு விக்கெட். ரூட் 2 விக்கெட்.

தொடர்ந்து இன்று 29 ஓவர்கள் சோதனையை எதிர்கொள்ள களமிறங்கிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஆடம் லித், ஸ்டார்க் வீசிய 2-வது பந்தை, வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கு முதல் கேட்சாக முடிந்தது. தற்போது இன்று இன்னமும் 23 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 21/1 என்று ஆடி வருகிறது, கேப்டன் குக் 4 ரன்களுடனும் கேரி பேலன்ஸ் 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/ஸ்டீவ்-ஸ்மித்-இரட்டைச்-சதம்-ஆஸ்திரேலியா-5668-டிக்ளேர்/article7434741.ece

இன்றைய ஆட்ட நேர முடிவில் 

ஆஸ்திரேலியா  566/8d
இங்கிலாந்து  85/4 (29.0 ov)
  • தொடங்கியவர்

சுவராய் நின்ற அலிஸ்டர் குக் 96 அவுட்: இங்கிலாந்து போராட்டம்

 
அலிஸ்டர் குக் ஆட்டமிழந்து செல்கிறார். | படம்: ஏ.பி.
அலிஸ்டர் குக் ஆட்டமிழந்து செல்கிறார். | படம்: ஏ.பி.

233 பந்துகளைச் சந்தித்த அலிஸ்டர் குக் 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் பந்தில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் தேநீர் இடைவேளையின் போது பிறகு இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து பாலோ-ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 215 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 173 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குக் 21, பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 87

3-வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் 67 பந்துகளில் அரைசதம் கண்டார் பென் ஸ்டோக்ஸ். மறுமுனையில் நிதானமாக ஆடிய குக் 142 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்த ஜோடியைப் பிரிக்க கடுமையாகப் போராடிய ஆஸ்திரேலியாவுக்கு 55-வது ஓவரில் பலன் கிடைத்தது. மார்ஷ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் போல்டு ஆனார். அவர் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.

அலிஸ்டர் குக் 96 அவுட்

இதையடுத்து வந்த ஜோஸ் பட்லர் 13 ரன்களில் வெளியேற, குக்குடன் இணைந்தார் மொயீன் அலி. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குக் 96 ரன்கள் எடுத்திருந்தபோது மார்ஷ் பந்துவீச்சில் போல்டு ஆனார். தேநீர் இடைவேளையின்போது 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. மொயீன் அலி 38, ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

http://tamil.thehindu.com/sports/சுவராய்-நின்ற-அலிஸ்டர்-குக்-96-அவுட்-இங்கிலாந்து-போராட்டம்/article7438387.ece

  • தொடங்கியவர்

3 ம் நாள் ஆட்ட முடிவில்

அவுஸ்திரேலியா  566/8d & 108/0 (26 ov)
இங்கிலாந்து  312
  • தொடங்கியவர்

ஆஸி., வலுவான முன்னிலை: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

Steve Smith, Australia, Lords Test, Cricket, England

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை நோக்கி செல்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 566 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குக் (21), ஸ்டோக்ஸ் (38) அவுட்டாகாமல் இருந்தனர்.                  

சதம் நழுவல்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் குக், ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்பாக விளையாடியது. ஜான்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்டோக்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 4வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய அலெஸ்டர் குக், டெஸ்ட் அரங்கில் தனது 43வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்த போது மிட்சல் மார்ஷ் பந்தில் ஸ்டோக்ஸ் (87) அவுட்டானார். ஜாஸ் பட்லர் (13) ஏமாற்றினார். நிதானமாக ஆடிய குக் (96) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.      

‘பாலோ–ஆன்’ இல்லை: அடுத்து வந்த மொயீன் அலி (39), ஸ்டூவர்ட் பிராட் (21) ஓரளவு ஆறுதல் தந்தனர். மார்க் வுட் (4) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 312 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு ‘பாலோ–ஆன்’ கொடுக்கவில்லை. ஆண்டர்சன் (6) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட், ஜான்சன் தலா 3, மிட்சல் மார்ஷ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

வார்னர் அரைசதம்: பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய வார்னர், டெஸ்ட் அரங்கில் 16வது அரைசதம் அடித்தார்.

மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் (60), ரோஜர்ஸ் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2015/07/1437154401/SteveSmithAustraliaLordsTestCricketEngland.html

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  566/8d & 254/2d
இங்கிலாந்து  312 & 45/3 (20.1 ov, target: 509)
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  566/8d & 254/2d
இங்கிலாந்து  312 & 103 (37.0 ov)
அவுஸ்திரேலியா 405  ஓட்டங்களால் வெற்றி
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு இமாலய வெற்றி: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்தல்

Steve Smith, Australia, Lords Test, Cricket, England
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.                  

 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 566/8 (டிக்ளேர்), இங்கிலாந்து 312 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்திருந்தது. ரோஜர்ஸ் (44), வார்னர் (60) அவுட்டாகாமல் இருந்தனர்.                                                      

வார்னர் நம்பிக்கை: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ் 49 ரன்கள் எடுத்திருந்த போது மயக்கம் காரணமாக ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினார். அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் (83) நம்பிக்கை தந்தார்.                                                      

ஸ்மித் அபாரம்: அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ரன் சேர்த்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 42வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த ஸ்மித், 43வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 49 பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்த போது மொயீன் அலி ‘சுழலில்’ போல்டானார். பின் களமிறங்கிய மிட்சல் மார்ஷ், மொயீன் பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார்.                                                

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் (32), மிட்சல் மார்ஷ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.                                                

கடின இலக்கு: பின் 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஆடம் லித் (7), கேப்டன் அலெஸ்டர் குக் (11) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கேரி பேலன்ஸ் (14), இயான் பெல் (11), பென் ஸ்டோக்ஸ் (0) ஏமாற்றினர்.                  

விக்கெட் மடமட: தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட்டாகினர். ஜாஸ் பட்லர் (11), மொயீன் அலி (0), ஸ்டூவர்ட் பிராட் (25), ஜோ ரூட் (17) அடுத்தடுத்து அவுட்டாக ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது.                  

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. மார்க் வுட் (2) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 3, ஹேசல்வுட், லியான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் வென்றார்.      

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது டெஸ்ட் பர்மிங்காமில் வரும் ஜூலை 29ல் துவங்குகிறது.

ரோஜர்ஸ் மயக்கம்            

நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தில் 2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ், 37, தலைசுற்றல் காரணமாக மைதானத்தில் அப்படியே அமர்ந்தார். உடனடியாக இவருக்கு ஆஸ்திரேலிய மருத்துவ குழுவினர் சிகிச்சை வழங்கினர். பின் இவர் 49 ரன்களுடன் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியனுக்கு’ திரும்பினார்.            

சமீபத்தில் நடந்த வலைப்பயிற்சியின் போது தலைப்பகுதியில் பந்து தாக்கியதால் நிலை தடுமாறிய ரோஜர்ஸ், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் வீசிய பந்து இவரது ‘ஹெல்மெட்டை’ தாக்கியது. இச்சம்பவம் இவரது மயக்கத்துக்கு காரணமாக இருக்கலாம்.            

ஆஷஸ் தொடருடன் ரோஜர்ஸ் ஓய்வு பெற இருப்பதால், ‘பெவிலியன்’ திரும்பிய இவருக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.            

28      

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 509 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய அணி 28வது முறையாக எதிரணியின் வெற்றிக்கு 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் நிர்ணயம் செய்தது. இதில் 27 முறை ஆஸ்திரேலியா வென்றது. ஒரு போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

http://sports.dinamalar.com/2015/07/1437154401/SteveSmithAustraliaLordsTestCricketEngland.html

  • தொடங்கியவர்

3 வது அஷெஸ் டெஸ்ட் போட்டி ஜூலை 29 ம் திகதி Birmingham நகரில் தொடங்கும்.

  • தொடங்கியவர்

பென் ஸ்டோக்ஸின் யோசனையற்ற ரன் அவுட்: பாய்காட் சாடல்

 
 
பென் ஸ்டோக்ஸ் மட்டையை நீட்டி ரீச் செய்யாமல் ரன் அவுட் ஆனார். | படம்: ராய்ட்டர்ஸ்.
பென் ஸ்டோக்ஸ் மட்டையை நீட்டி ரீச் செய்யாமல் ரன் அவுட் ஆனார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸில் நேற்று இங்கிலாந்து 37 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

இதில் 5-வது விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆன விதம் பலதரப்பு விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.

2005 ஆஷஸ் தொடரில் பிளிண்டாஃப் என்ன செய்தாரோ அதனை பென் ஸ்டோக்ஸ் செய்வார் என்று தொடருக்கு முன்பாக இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸும் தனது சிறப்பான ஆட்டத்தை முதல் இன்னிங்சில் வெளிப்படுத்தி 87 ரன்களை விரைவாக எடுத்தார்.

ஆனால் 2-வது இன்னிங்ஸில் 3 பந்துகளைச் சந்தித்த பென் ஸ்டோக்ஸ், தனது கணக்கைக் கூட தொடங்கவில்லை.

இந்நிலையில் ஜோ ரூட் லெக் திசையில் ஒரு பந்தை அடித்து விட்டு விரைவு சிங்கிளுக்காக பென் ஸ்டோக்ஸை அழைத்தார். ஜான்சன் பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் அடிக்க, கிரீஸை மட்டையை நீட்டி கடக்க வேண்டிய பென் ஸ்டோக்ஸ் மட்டையை தொங்கவிட்டுக் கொண்டே ஓடினார், கிரீஸில் வலது காலை வைக்கும் முன்பாக பந்து ஸ்டம்பைத் தாக்கியது. பந்து தாக்கும் போது ஸ்டோக்ஸின் மட்டை, கால்கள் எதுவும் கிரீஸுக்குள் இல்லை. இப்படி ரன் அவுட் ஆனார்.

யோசனையில்லாமல் அவர் எப்படி ரன் ஓடினார், எப்படி கிரீஸிற்குள் முதலில் மட்டையைக் கொண்டு வர மறந்தார் என்பது பெரிய விவாதத்துக்குரிய விவகாரமாகிவிட்டது.

இது குறித்து ஜெஃப் பாய்காட் விமர்சனம் செய்யும் போது, “பென் ஸ்டோக்ஸ் ஜான்சனின் த்ரோ தன் மேல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒதுங்கினார். இதனால் மட்டையையும், கால்களையும் கிரீஸுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இரண்டும் அந்தரத்தில் இருந்தன. முதலில் ஒரு பேட்ஸ்மென் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பந்து மேலே வந்து அடித்தால் என்ன? பந்து மேலே வந்து தாக்குவதை ஒரு பேட்ஸ்மென் ஒரு பொருட்டாகக் கருதக்கூடாது, ஆனால் பென் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டின் முக்கியத்துவம் பற்றிய யோசனை இல்லாமல் ரன் அவுட் ஆனார்” என்று சாடியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆன விதம் குறித்து கேப்டன் குக்கும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/பென்-ஸ்டோக்ஸின்-யோசனையற்ற-ரன்-அவுட்-பாய்காட்-சாடல்/article7443682.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடருக்கு மந்தமான ஆட்டக்களம் தயாரிக்க உத்தரவு: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுப்பு

 
  • இங்கிலாந்து கோச் பெய்லிஸ் (இடது), அலிஸ்டர் குக் உள்ளிட்டோர் புல் நிரம்பிய பிட்சை பார்வையிடுகின்றனர். | படம்: ராய்ட்டர்ஸ்.
    இங்கிலாந்து கோச் பெய்லிஸ் (இடது), அலிஸ்டர் குக் உள்ளிட்டோர் புல் நிரம்பிய பிட்சை பார்வையிடுகின்றனர். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • 300 விக்கெட்டுகளுக்கு அருகில் மிட்செல் ஜான்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
    300 விக்கெட்டுகளுக்கு அருகில் மிட்செல் ஜான்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆக்ரோஷத்தை குறைக்க நடப்பு ஆஷஸ் தொடரில் மந்தமான, பந்துகள் எழும்பாத, மெதுவாக மட்டைக்கு வருமாறான ஆட்டக்களங்களை அளிக்குமாறு பிட்ச் தயாரிப்பாளர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை கேட்டுக் கொண்டதாக எழுந்த செய்திகளை இயக்குநரும் முன்னாள் கேப்டனுமான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுத்துள்ளார்.

புதன் கிழமை எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், பிட்சில் இப்போதைக்கு கொஞ்சம் பசும்புல் விட்டுவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதனை கடுமையாக மறுத்தார் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்.

முதல் டெஸ்ட் போட்டியில் இத்தகைய மந்த பிட்சில் வென்ற இங்கிலாந்து, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் இதே உத்தியைக் கடைபிடித்தது. ஆனால் டாஸில் தோற்றதால் மந்தமான பிட்சில் ஆண்டர்சன், பிராட், மார்க் உட் ஆகியோரது பவுலிங் எடுபடாமல் போக ஆஸ்திரேலியா பெரிய அளவுக்கு ரன்களைக் குவித்து இங்கிலாந்தை நெருக்கியது. 2-வது இன்னிங்ஸில் ஜான்சனின் ஆக்ரோஷமான ஷாட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 103 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து.

இதனையடுத்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ், இம்மாதிரியான மந்தமான, பேட்டிங் சாதக ஆட்டக்களங்களை இடுவது, ஆஸ்திரேலியாவின் வலையில் போய் விழுவதற்கு சமம் என்று விமர்சித்திருந்தார். பாய்காட், ஆண்டி லாய்ட், மைக்கேல் வான், ஆர்த்தர்டன் ஆகிய முன்னாள் வீரர்களும் இங்கிலாந்து பிட்ச்களின் இத்தகைய தயாரிப்புகள் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் குறித்து கூறிய மைக்கேல் கிளார்க், “இப்போது வரை பிட்சில் 9மிமீ புல் உள்ளது. பார்த்தால் பிரிஸ்பன் ஷெபீல்ட் ஷீல்ட் போட்டி பிட்ச் போன்று உள்ளது.

இங்கிலாந்தில் நான் பார்த்த அளவில் இது அதிக புல்தரை பிட்ச் ஆகும். ஊடகங்களும், வர்ணனையாளர்களும் பேசியது பிட்ச் தயாரிப்பாளர்களையும் சற்றே பாதித்துள்ளது போல் தெரிகிறது.

இப்போது இருப்பது போல் போட்டி தொடங்கும் போதும் புல் இருந்தால் டாஸ் வென்று நிச்சயம் முதலில் பவுலிங் செய்வேன், ஆனால் இந்தப் புல்தரை இப்படியே விட்டுவிடப் படாது என்றே நான் கருதுகிறேன்” என்றார்.

மிட்செல் ஜான்சன் 300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் ஒரேயொரு விக்கெட் மீதமுள்ளது.

300 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார் மிட்செல் ஜான்சன். 68 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்ன் 708, கிளென் மெக்ரா 563, டெனிஸ் லில்லி 355, பிரெட் லீ 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-தொடருக்கு-மந்தமான-ஆட்டக்களம்-தயாரிக்க-உத்தரவு-ஆண்ட்ரூ-ஸ்ட்ராஸ்-மறுப்பு/article7473939.ece

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்

 
 
1_2490220f.jpg
 

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. முதல் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து, அடுத்த போட்டியில் 405 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

குக் தலைமையிலான இங்கி லாந்து அணி, படுதோல்வியி லிருந்து மீள வேண்டிய கட்டாயத் திலும், கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியைப் போலவே சிறப்பாக ஆடி வெற்றியைத் தொடரும் முனைப்பிலும் இந்த போட்டியில் களம் காண்கின்றன.

தடுமாறும் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி சமபல மில்லாத அணியாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே அந்த அணியை சமபலம் கொண்ட அணியாக மாற்றுவதற்கு சில மாற்றங்கள் அவசியமாகும். கேரி பேலன்ஸ் நீக்கப்பட்டுவிட்டதால், இந்தப் போட்டியில் இயான் பெல் 3-ம் நிலை வீரராகவும், ஜோ ரூட் 4-ம் நிலை வீரராகவும் களமிறங்கவுள்ளனர். கேரி பேலன்ஸுக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள ஜானி பேர்ஸ்டோவ் 5-ம் நிலை வீரராக களமிறங்குகிறார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் குக், ஜோ ரூட், இயான் பெல், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் தவிர யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கேப்டன் குக்-ஆடம் லித் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது மிக முக்கியமானதாகும்.

மார்க் உட் ஆடுவாரா?

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் கூட்டணி பலம் சேர்க்கிறது. இவர்களில் மார்க் உட்டுக்கு இன்று காலையில் உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதனடிப்படையிலேயே அவர் விளையாடுவாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும். சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியுள்ளது இங்கிலாந்து.

மிரட்டும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் அறிமுகப் போட்டியில் அசத்தலாக ஆடியதன் மூலம் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில். 2-வது போட்டியின்போது மயங்கி விழுந்த கிறிஸ் ரோஜர்ஸ் பூரண குணமடைந்துவிட்டதால் அவரும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். எனவே ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணி கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் கிறிஸ் ரோஜர்ஸ் கடந்த போட்டியில் 173 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் இரட்டை சதமும் அடித்தனர். எனினும் கேப்டன் கிளார்க் தொடர்ந்து தடுமாறி வருவது கவலையளிக்கிறது.

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட் கூட்டணியை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. கடந்த போட்டியில் 6 விக்கெட் டுகளை வீழ்த்திய ஜான்சன், இந்தப்போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத் தலாக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பி யுள்ளது ஆஸ்திரேலியா.

இதற்கு முன்னர் இங்கு 2005-ல் நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது ஆஸ்தி ரேலியா. அதன்பிறகு 2009-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத் தக்கது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் எட்பாஸ் டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. அதிக அளவில் பந்துகள் எகிறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

சாதனையை நோக்கி…

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 11 பேர் மட்டுமே 2000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் அந்த வரிசையில் இணையலாம். ஸ்டூவர்ட் பிராட் 2,353 ரன்களையும், 296 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஜான்சன் 1,999 ரன்களையும், 299 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்துஆஸ்திரேலியா-இடையிலான-3வது-ஆஷஸ்-டெஸ்ட்-இன்று-தொடக்கம்/article7476749.ece

  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்து ஆடுகிறது.

அவுஸ்திரேலியா  7/1 (2.2 ov)

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு...அதுக்கிடையில இரண்டு விக்கட் போட்டுது!:love:

  • தொடங்கியவர்

என்னப்பு...அதுக்கிடையில இரண்டு விக்கட் போட்டுது!:love:

ம்ம் 3 விக்கெட் போட்டுது:shocked:

அவுஸ்திரேலியா 38/3 (12.2 ov)

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா  99/7 (29.2 ov)

  • தொடங்கியவர்
 அவுஸ்திரேலியா 120/9 (35.0 ov)

 

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா 136
இங்கிலாந்து 34/1 (11.2 ov)
  • தொடங்கியவர்

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்விங்கில் 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா

 
  • ஆஸி.யை சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
    ஆஸி.யை சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் பின் பந்தில் பவுல்டு ஆனார் கிளார்க். | படம்: ஏ.பி.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் பின் பந்தில் பவுல்டு ஆனார் கிளார்க். | படம்: ஏ.பி.

ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது, டாஸ் வென்ற கிளார்க் பேட் செய்ய முடிவெடுத்தார். 36.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் மைதானத்தின் பெயருக்கேற்ப ஆஸ்திரேலிய வீரர்கள் எட்ஜில் காலியாயினர். எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலிய வீரர்கள் ‘எட்ஜ் பேட்ஸ்மென்’ களானார்கள்.

கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 103 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் இங்கிலாந்தை கடுமையாகக் கேலி செய்திருந்தன, அதற்கு இங்கிலாந்து இப்போது பதிலடி கொடுத்துள்ளது, ஆனால் இங்கிலாந்து இன்று இன்னமும் குறைந்த்து 53 ஓவர்களையாவது சந்திக்க வேண்டியுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 14.4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் திருப்பு முனை ஏற்படுத்தியவர் மார்க் உட்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஸ்டீவன் ஃபின். இவர் அடுத்தடுத்து உலகின் இப்போதைய தலைசிறந்த பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோரை சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 7 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இதில் ஆண்டர்சன் மட்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிட்ச் பற்றி நேற்று கிளார்க் கூறும் போது பவுலிங்கை முதலில் தேர்வு செய்ய வேண்டிய பிட்ச் என்றார். இன்றும் ஷேன் வார்னும், ரிக்கி பாண்டிங்கும் பிட்ச் பற்றி அறுதியிடும் போது முதலில் பந்துவீச வேண்டிய பிட்ச் என்றார். ஆனால் மைக்கேல் கிளார்க், பிரபலமான ஆஸ்திரேலிய வழியை தேர்ந்தெடுத்தார். டாஸ் வென்றால் பேட்டிங் என்பதே அதன் தாரக மந்திரம், ஆனால் இம்முறை இங்கிலாந்தின் பிரபலமான ஸ்விங் எடுக்க, ஆஸி தாரக மந்திரம் உடைந்து நொறுங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் 52 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தொடக்கத்திலேயே ரன் அவுட்டிலிருந்து தப்பித்த வார்னர், 2 ரன்களில் ஆண்டர்சனிடம் எல்.பி.ஆனார். மிடில் லெக்கில் பிட்ச் ஆன பந்து சற்றே நேராக, கால்காப்பில் வாங்கினார் வார்னர், அவுட் தீர்ப்பை தவறாக ரிவியூ செய்தார். வெளியேறினார். கிரீஸில் தேங்கச் செய்யப்பட்டார் வார்னர், அருமையான பந்து வீச்சு.

நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பவுண்டரியை தைரியமாக அடித்தார். ஆனால் ஸ்டீவ் ஃபின் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் நேராக பிட்ச் செய்ய பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது குக் கேட்ச் எடுத்தார். ஸ்மித் 7 ரன்னில் அவுட்.

கிளார்க் 2 திருப்தியற்ற பவுண்டரிகளை அடித்தார். ஒன்று எட்ஜ், ஒன்று பந்தை விட்டுவிடலாம் என்று அரைகுறை மனதோடு ஆடிய போது மட்டையின் விளிம்பில் பந்தே பட்டு பவுண்டரிக்குச் சென்றது. கிளார்க் ஆடும் போது அவரது உடல் முன்னால் செலுத்தப்படுவதற்கு பதிலாக பின்னால் செல்கிறது, இந்த உத்தியிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் என்று பாண்டிங் ஏற்கெனவே கூறியுள்ள நிலையில், முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துக்கு கிரீசிலேயே நின்றதால் ஃபுல் லெந்த் பந்துக்கு மட்டையை விரைவில் கீழே இறக்க முடியவில்லை. பவுல்டு ஆனார்.

வோஜ்ஸ் கதை அவர் 16 ரன்களில் இருந்த போது முடிந்தது. ஆண்டர்சன் பந்தை விட்டு விட ஆடினார் ஆனால் பந்து எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆனது. மிட்செல் மார்ஷ் மிக மோசமாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் ஸ்விங் பந்தை விடுவதற்கு பதிலாக டிரைவ் ஆடி ஆண்டர்சனிடம் டக் அவுட் ஆனார்.

விக்கெட் கீப்பர் பீட்டர் நெவிலுக்கு தனது கால் எங்கிருக்கிறது, ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லையாதலால், ஆண்டர்சனின் ஆங்கிளாக உள்ளே வந்த பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ஜான்சனுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினார் ஆண்டர்சன், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார் 4-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

கிறிஸ் ராஜர்ஸ் 52 ரன்கள் எடுத்தார். அவர் 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடித்தார். இவர் மட்டுமே இங்கிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சை சரியாகக் கணித்து ஆடினார்.

ஆனால் கடைசியில் பிராட் வீசிய பந்தின் திசையைக் கணிக்கத் தவறி கால்காப்பில் வாங்கி எல்.பி ஆகி வெளியேறினார், ரிவியூவும் பயனளிக்கவில்லை. ஸ்டார்க்கும் பந்தை விட்டு விட தாமதமாகச் செயல்பட்டதால் மட்டையின் விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது.

கடைசியில் 37-வது ஓவரில் ஆண்டர்சனிடம் பிளேய்ட் ஆன் ஆனார் லயன். ஆஸ்திரேலியாவை 37-வது ஓவரில் மடித்தது இங்கிலாந்து. ஆண்டர்சன் 6 விக்கெட்டுகள், ஃபின் மற்றும் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள்.

http://tamil.thehindu.com/sports/ஜேம்ஸ்-ஆண்டர்சன்-ஸ்விங்கில்-136-ரன்களுக்குச்-சுருண்டது-ஆஸ்திரேலியா/article7477967.ece

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா 136
இங்கிலாந்து 133/3 (29.0 ov)
 
6.44pm Well, that's all for the day actually, stumps officially.
  • தொடங்கியவர்

11703195_1009821842370390_40078095331752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.