Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் நிலத்தடிநீரில் ஒயில்கசிவு; தமது தவறு இல்லை என்கிறார் சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் நிலத்தடிநீரில் ஒயில்கசிவு; தமது தவறு இல்லை என்கிறார் சம்பிக்க


சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் டீசல் கலந்துள்ளமை எமது தவறு இல்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின்  வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 

news


அவர் மேலும்  தெரிவிக்கையில்,  
 
வடக்கில் கடந்த காலங்களில் மின்சாரத்தை வழங்குவதற்கு எண்ணெயினைப் பயன்படுத்துவதற்கு 160 கோடி ரூபாவைத் தாண்டியது.
 
தனியார் நிறுவனத்தினால் அன்று வழங்கப்பட்ட மின்சாரத்தை நிறுத்த முடியாத நிலை இருந்தது.  அதனையடுத்து சுன்னாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சார நிலையத்தினால் கடந்த கால செலவீனத்தை ஈடுசெய்யக் கூடியதாக உள்ளது.
 
இந்தநிலையில் சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் டீசல் கலந்துள்ளதாக அண்மையில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இந்தநிலை எங்களால் ஏற்படவில்லை என்பதனை நான் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். எனினும்  தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
 
நிலத்தடி நீரில் டீசல் கலக்கவில்லை என்றும் கிருமிநாசினியே கலந்துள்ளது என்றும் அதனாலேயே மாசடைந்துள்ளது என்றும்  தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2010 ஆண்டு நான்  சுன்னாகம் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள விவசாயிகளுடன் பேசினேன். அதன்போது தாங்கள்  கிருமிநாசினிகளை பாவிப்பதில்லை என்று தெரிவித்தனர்.
 
அந்தநிலையில் இந்த கிருமிநாசினிகளின் பாவனையால் கிட்னி தொடர்பிலான பிரச்சினைகள்  ஏற்பட்டுள்ளன. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
 
எனினும் இன்னமும்  உத்தியோக பூர்வ அறிக்கை பரிசோதனை செய்யும்  தொழில்நுட்ப நிறுவனத்தினால் அறிக்கை கிடைக்கவில்லை. அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மின்சார நிலையத்தின் கழிவு ஒயில் என கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன்  என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எனினும் இன்னமும்  உத்தியோக பூர்வ அறிக்கை பரிசோதனை செய்யும்  தொழில்நுட்ப நிறுவனத்தினால் அறிக்கை கிடைக்கவில்லை. அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மின்சார நிலையத்தின் கழிவு ஒயில் என கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன்  என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்."

கடவுளே இன்னும் 10 வருடத்துக்குள் அறிக்கை வந்தாலே சந்தோஷமான விடயம் . 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.