Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்!

Featured Replies

டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்!

காலே: பாகிஸ்தான்  வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து  ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.

you.jpg

காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பாகிஸ்தான்  வீரர்  யூனிஸ் கான் 4வது நாளான நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை பூர்த்தி செய்தார். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 29 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.தற்போது அவரை யூனிஸ்கான் முந்தியுள்ளார்.

30 சதங்கள் அடித்த வீரர்களான ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால் ஆகியோருடன் யூனிஸ்கான், 8வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49098

  • தொடங்கியவர்

கிரீனிட்ஜ், பிராட்மேன் வரிசையில் யூனிஸ் கான்

 
ஆட்ட நாயகன் விருது பெறும் யூனிஸ் கான். | படம்: ஏ.எப்.பி.
ஆட்ட நாயகன் விருது பெறும் யூனிஸ் கான். | படம்: ஏ.எப்.பி.

இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் தனது மாரத்தான் 171 ரன்களால் வெற்றிக்கு வித்திட்டு வரலாறு படைக்கச் செய்த யூனிஸ் கான், தனது 4-வது இன்னிங்ஸ் சாதனை மூலம் கார்டன் கிரீனிட்ஜ், டான் பிராட்மேன் வரிசையில் இணைந்துள்ளார்.

அதாவது, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் பேட்ஸ்மென் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அதே போல் வெற்றிகரமான பெரிய துரத்தல் இன்னிங்ஸ்களில் 5-வது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும் யூனிஸ் கானுடையது.

கார்டன் கிரீனிட்ஜ் இங்கிலாந்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்ற போட்டியில் இங்கிலாந்தில் 214 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அதாவது 342 ரன்கள் இலக்கை 66.1 ஓவரில் மேற்கிந்திய அணி கடைசி நாளில் விளாசித்தள்ளி அபார வெற்றி பெற்றது. அதுவும் 344/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரன் விகிதம் ஓவருக்கு 5.19. 242 பந்துகளில் 29 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 214 ரன் குவித்தார் கார்டன் கிரீனிட்ஜ், வெற்றித் துரத்தலில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்ற விதத்தில் கார்டன் கிரீனிட்ஜ் சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

கிரீனிட்ஜுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஏ.ஆர்.மோரிஸ், இவர் 1948-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 182 ரன்களையும், டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றித் துரத்தலில் 173 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001-ம் ஆண்டு 173 நாட் அவுட் என்று வெற்றிபெறச் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலில் யூனிஸ் கானின் 171 நாட் அவுட் உள்ளது.

பாகிஸ்தானின் 382/3 என்ற வெற்றி வெற்றிகரமான அதிகபட்ச ரன் துரத்தலில் 6-வது இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து 2003-ம் ஆண்டு செயிண்ட் ஜான்ஸில் பெற்ற வெற்றி முதலிடத்தில் உள்ளது.

அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி கிரேம் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 2008-ம் ஆண்டு 414/4 என்று எடுத்து வென்றுள்ளது.

1976-ம் ஆண்டு இந்திய அணி வலுவான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் பெற்ற புகழ் பெற்ற வெற்றியில் 406/4 எடுத்தது 3-ம் இடத்தில் உள்ளது.

4-ம் இடத்தில் 1948-இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 404/3 என்று எடுத்து பெற்ற வெற்றி உள்ளது.

5-ம் இடத்தில் மீண்டும் இந்திய அணி, சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 387/4 எடுத்து வென்ற போட்டி உள்ளது. இந்த போட்டியில்தான் சேவாக் 68 பந்துகளில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 விளாச, கம்பீர் 66 ரன்கள் விளாசி 23-வது ஓவரில் 117 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கொடுக்க சச்சின் டெண்டுல்கர் 103 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 85 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்

http://tamil.thehindu.com/sports/கிரீனிட்ஜ்-பிராட்மேன்-வரிசையில்-யூனிஸ்-கான்/article7395682.ece

  • கருத்துக்கள உறவுகள்

யூனிஸ் கானைப் பாராட்டும் அதே வேளையில்... பிராட்மன் காலத்தில்..எந்த விதமான பாதுகாப்புச் சாதனங்களுமற்ற நிலைலயில்.. அவர் புரிந்த சாதனை.. தற்போதைய காலத்துச் சாதனைகளுடன் ஒப்பிடமுடியாதது என்பது எனது கருத்து!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.