Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் துடுப்பாட்ட வீரனின் மரணம்

Featured Replies

பிரித்தானியாவில் துடுப்பெடுத்தாட்ட விளையாட்டின் போது வீசப்பட்ட பந்து மார்புப் பகுதியில் தாக்கியதனால் உயிரிழந்த பாவலன் பத்மநாதனுடன் விளையாடிய சக அணி வீரரும் ஊடகவியலாளருமான கருணாகரன் அவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மெல்பேர்ணிலிருந்து ஊடகவியலாளர் தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/karunakarans-interview-100715

  • கருத்துக்கள உறவுகள்

கல்விகற்பதற்காக பிரித்தானியா வந்தவர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் எச்சமாக எம்மிடம் அவர்கள் விட்டுப்போன கிரிக்கெட் எனும் விளையாட்டை விளையாடி விபத்தேற்பட்டு இறந்ததையிட்டு மிகவும் மனவேதனையடைகிறேன்.

இதில் கனபேர்களது பங்கிருக்கு என நினைக்கிறேன். தெய்வீகனது  ஒன்றுவிட்ட சகோதரமாகிய முன்னாள் சென் ஜோன்சின் துடுப்பாட்டவீரர் துசாரா ஆகியோரை உள்ளடிக்கிய விழையாட்டுக்கழகங்கள்தான் இவற்றினை ஒழுங்குபடுத்தியது என நினைக்கிறன், அவர்களிடம் ஒரு கேள்வி பொருத்தமான பாதுகாப்புக்கவசங்கள் அனைத்துக்குமான வசதியை இவ்வீரனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தீர்களா?

முதலாவது இவர்களது கழகங்கள் நடைபெறும் விதம் மற்றும் பாதுகாப்புவிடையங்களைக் கைக்கொள்ளும்விதம் ஆகியவைபற்றிய விரிவான விசாரனைகளை மேற்கொள்ளவேண்டும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறுவின் கருத்தே எனதும்!

தவிர்த்திருக்கக் கூடிய ஒரு மரணம்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்விகற்பதற்காக பிரித்தானியா வந்தவர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் எச்சமாக எம்மிடம் அவர்கள் விட்டுப்போன கிரிக்கெட் எனும் விளையாட்டை விளையாடி விபத்தேற்பட்டு இறந்ததையிட்டு மிகவும் மனவேதனையடைகிறேன்.

இதில் கனபேர்களது பங்கிருக்கு என நினைக்கிறேன். தெய்வீகனது  ஒன்றுவிட்ட சகோதரமாகிய முன்னாள் சென் ஜோன்சின் துடுப்பாட்டவீரர் துசாரா ஆகியோரை உள்ளடிக்கிய விழையாட்டுக்கழகங்கள்தான் இவற்றினை ஒழுங்குபடுத்தியது என நினைக்கிறன், அவர்களிடம் ஒரு கேள்வி பொருத்தமான பாதுகாப்புக்கவசங்கள் அனைத்துக்குமான வசதியை இவ்வீரனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தீர்களா?

முதலாவது இவர்களது கழகங்கள் நடைபெறும் விதம் மற்றும் பாதுகாப்புவிடையங்களைக் கைக்கொள்ளும்விதம் ஆகியவைபற்றிய விரிவான விசாரனைகளை மேற்கொள்ளவேண்டும்.


உலகில் ஆபத்து இல்லாத விளையாட்டு ஒன்று சொல்ல முடியுமா? எல்லா விளையாட்டுகளிலும் ஆபத்து இருக்கிறது . எனக்கு தெரிய பலர் கால்பந்து விளையாடி முழங்கால் பிரச்சனையோடு இருக்கிறார்கள் . தெரியாத குளத்தில் நீந்த பழகி இறந்து இருக்கிறார்கள் . அவர்களை எல்லாம் மேற்பார்வையின் கீழ்தான் நீந்த பழக்க வேண்டும் என்றால், இலங்கை போன்ற நாடுகளில் நீச்சல் என்கிற திறமையே இல்லாமல் போகும் . ஏன், இங்கே வளர்ந்த நாடுகளே 2-3 வயதில் நீச்சல் பழகிய குழந்தைகள் , பிள்ளைகள் விபத்தை சந்திகிறார்கள் .

விபத்துக்களை குறைக்க முயலலாம் ஆனால் முற்றாக தவிர்க்க முடியுமோ தெரியாது .

இவருக்கு, சிலவேளையில் இதயத்தில் அரிதாக வருகிற வருத்தங்கள் எதுவும் இருந்திருக்கலாம் என்பதும் எனது ஒரு அனுமானம் . 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆபத்தென்பதல்ல விடையம் ,விளையாட்டை ஒழுங்குபடுத்துபவர்கள் அந்தந்த நாட்டின் நியமங்களுக்கு அமைவாக சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும், ஒரு விளையாட்டுக்கழகத்தில் விளையாடும்போது அவ்விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டதா அதனுடைய நிர்வாகக்கட்டமைப்பு எப்படிப்பட்டது, நிதிநிலை என்ன விளையாட்டு வீரர்களது காப்புறுதிக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா அல்லது விளையட்டுவீரர்களுக்கான காப்புறுதி ஒப்பந்தமாவது எதாவது நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளதா? பயிற்றுவிப்பாளரது கல்வித்தரம் என்ன இன்னபிற சமாச்சாரங்கள் எல்லாம் பார்க்கவேண்டும்,

இவரது மரணத்தின்பின்னரான ஒரு கொசுறுச்செய்தி, இவரது சடலத்தை ஊருக்கு அனுப்ப தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடமெல்லாம் காசுகேட்கிறார்கள் அப்படி இருக்கு அவரது மரணத்தின்பின்னரான நிலை.

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஆபத்தென்பதல்ல விடையம் ,விளையாட்டை ஒழுங்குபடுத்துபவர்கள் அந்தந்த நாட்டின் நியமங்களுக்கு அமைவாக சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும், ஒரு விளையாட்டுக்கழகத்தில் விளையாடும்போது அவ்விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டதா அதனுடைய நிர்வாகக்கட்டமைப்பு எப்படிப்பட்டது, நிதிநிலை என்ன விளையாட்டு வீரர்களது காப்புறுதிக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா அல்லது விளையட்டுவீரர்களுக்கான காப்புறுதி ஒப்பந்தமாவது எதாவது நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளதா? பயிற்றுவிப்பாளரது கல்வித்தரம் என்ன இன்னபிற சமாச்சாரங்கள் எல்லாம் பார்க்கவேண்டும்,.

அவரின் நிலையை உணர்ந்து வருந்துகிறேன். 

ஆனால் ஒரு சமூகமாக , கோச்னின் தராதரம் , இன்சுரன்ஸ் எல்லாம் பார்த்து பழகுகிறது என்றால், இலண்டனில் இருக்கும் 3-4 ம் தலைமுறையால்தான் முடியும். இதைதான் நான், கொஞ்சம் நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன் ..நான் நீச்சல் பழகியது ஒரு குளத்தில் அந்த குளத்தில் ஒரு 4-5 பேருக்கு மேல் செத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த கிராமத்தில் யாருக்காவது தண்ணியில போட்டால் மிதக்க தெரியும் என்றால் அந்த குளம்தான் காரணம் .  அந்த குளத்தில் , தாமரைக்கொடி வெட்டி , சேறு இழுத்த பின்தான்  நீச்சல் பழக வேண்டும் என்று நினைத்தால் அந்த கிராமத்தில் சிவிய காலத்தில் ஒருவரும் நீச்சல் பழக போவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.