Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை

Featured Replies

தனக்கு மைத்திரி தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான பல அனுபவமுள்ளவர்கள் இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

 

 

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான்  முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “கடந்த இரண்டு வாரங்களாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதை அறிவேன்.

என்னைப் போல முன்னொரு போதும் சிறிலங்கா அதிபராக இருந்த எவரும் அவமானங்களைத் தாங்கியிருக்கவில்லை.

இது ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், இலங்கையர்களிடம் உள்ள சுதந்திரத்தை அனுபவிக்கும் துடிப்பைக் காட்டுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு நா்ன்  முற்றிலும் எதிரானவன்.

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது போலவே, நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார்.

இது மகிந்த ராஜபக்சவின் தவறு. அல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய பொறிமுறை ஏற்படுத்தியுள்ள தவறு.

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை  ஏற்றுக் கொண்டேன்.

மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தால், அரசியலமைப்புத் திருத்தம் சாத்தியப்படாமல் போகும்.”

அவரது உரை தொடர்கிறது.

http://www.puthinappalakai.net/2015/07/14/news/7814

  • கருத்துக்கள உறவுகள்

"My 49 years of experience in politics was one of the reasons they selected me as the common candidate" - Maithri

1/2 "Although some have criticised me for taking party leadership,.....

2/2 all that my government achieved was possible because I was president of SLFP and UPFA" - Maithri

"If I resigned, anyone Mahinda Rajapaksa wanted would have received nominations" - Maithri

"If they hadn't received nominations from UPFA, they'd have obtained it from a different party. That was inevitable." - Maithri

"Mahinda Rajapaksa who was defeated on January 8th will be defeated again." - Maithri

"I informed UPFA leaders including Dinesh G. and Vasudeva N that I am against granting nominations to Mahinda Rajapaksa" - Maithri

"I continue to stand against Mahinda Rajapaksa" - Maithri

"Whoever wins the next election my hope is to implement the wishes of those who voted for me on Jan 8th" - Maithri

"There are many other SLFP seniors who are qualified to be the Prime Minister of this country" - Maithri

"I am committed to making the upcoming election a free and fair one" - Maithri

"Criticism is an important aspect of a democracy. I applaud those who criticize me" - Maithri

1/2 "I am very happy that I was able to restore the freedom of expression in this country....

2/2 But we should enjoy that freedom with a sense of responsibility" - Maithri

 

--  @MaithripalaS Official Twitter 

யாரவது தமிழ் மொழியில் மெழிபெயர்த்து விடவும்

 

Edited by புலிக்குரல்

தொடர்ச்சி..........

மகிந்தவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு

நான் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானவன். சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் சூழலில், பிரதமராக நியமிக்கக் கூடிய பல மூத்தவர்கள் அங்கே இருக்கின்றனர்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் நான் தெரிவு செய்யப்பட்டேனோ அவற்றைச் செயற்படுத்த முடியும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் இரகசிய முயற்சி ஒன்றை அறிந்தே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன்.

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டா ல், ரணில் விக்கிரமசிங்க பதவி இழப்பார்.

அத்தகைய நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க உரிமை கோரும்.

அதன் பின்னர் தேசியப்பட்டியல் மூலம் மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன்.”

அவரது உரை தொடர்கிறது.

http://www.puthinappalakai.net/2015/07/14/news/7814

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான்  முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “கடந்த இரண்டு வாரங்களாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதை அறிவேன்.

என்னை வில்லன் என்கின்றனர். துரோகி என்கின்றனர். காட்டிக் கொடுத்துவிட்டதாக விமர்சனம் செய்கின்றனர்.

என்னைப் போல முன்னொரு போதும் சிறிலங்கா அதிபராக இருந்த எவரும் அவமானங்களைத் தாங்கியிருக்கவில்லை.

இது ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், இலங்கையர்களிடம் உள்ள சுதந்திரத்தை அனுபவிக்கும் துடிப்பைக் காட்டுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு நான்  முற்றிலும் எதிரானவன். மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான எனது நிலைப்பாட்டின் எந்த மாற்றமும் இல்லை.

மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதற்கு எதிராக எழுத்துமூலமான எதிர்ப்பை தெரிவித்தேன்.

maithri-statement

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது போலவே, நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார்.

இது மகிந்த ராஜபக்சவின் தவறு. அல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய பொறிமுறை ஏற்படுத்தியுள்ள தவறு.

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை  ஏற்றுக் கொண்டேன்.

மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தால், அரசியலமைப்புத் திருத்தம் சாத்தியப்படாமல் போகும்.

மகிந்தவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு

நான் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானவன். சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் சூழலில், பிரதமராக நியமிக்கக் கூடிய பல மூத்தவர்கள் அங்கே இருக்கின்றனர்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் நான் தெரிவு செய்யப்பட்டேனோ அவற்றைச் செயற்படுத்த முடியும்.

நான் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன். எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் இரகசிய முயற்சி ஒன்றை அறிந்தே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன்.

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், ரணில் விக்கிரமசிங்க பதவி இழப்பார்.

அத்தகைய நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க உரிமை கோரும்.

அதன் பின்னர் தேசியப்பட்டியல் மூலம் மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். அதன் மூலம் அவர்களின் முயற்சியை தோற்கடித்தேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்லில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மாட்டேன்.  நடுநிலையாகவே இருப்பேன். நீதியான நியாயமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவேன்.

ஜனவரி 8 தேர்தலில் வழங்கப்பட்ட ஆணையை பாதுகாப்பேன். அந்தக் கொள்கைக்கு மதிப்பளிக்கும் நாடாளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கிறேன்.”

http://www.puthinappalakai.net/2015/07/14/news/7814

மகிந்தவுக்கு பிரதமர் பதவியை மறுப்பது ஏன்? – மைத்திரி அளித்த விளக்கம்

JUL 15, 2015 | 2:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

maithriவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

“வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார்.

மகிந்த ராஜபக்சவை விடவும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான பல மூத்த தலைவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றனர்.

தகுதியுள்ள மூத்த தலைவர்களுக்கு மகிந்த ராஜபக்ச உரிய இடத்தை அளிக்க மறுத்து விட்டார் மகிந்த ராஜபக்ச.

இரண்டு தடவைகள் அதிபராக இருந்த பின்னரும் கூட, கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து. மீண்டும் அவர் பிரதமர் பதவியைப் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவில் இடமளிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுக்காதமைக்கான காரணத்தையும் அவர் விபரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்க வேண்டும் என்றும் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. முதலாவது, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொள்வது.

ஆனால் நான் அதைச் செய்திருந்தால், மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராகியிருந்திருப்பார்.

அவர் தனது ஆதரவாளர்களை மட்டும் வேட்பாளர்களாக நிறுத்தி விட்டு, அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்களையெல்லாம் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்.

எனவே தான், அதனைத் தடுப்பதற்காக கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில்லை என்று முடிவெடுத்தேன். அது, மகிந்த ராஜபக்சவை அவர்கள் வேட்பாளராக நிறுத்த இடமளித்தது.

எனினும் மகிந்த ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதற்கு நான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தேன்.

இருந்தபோதிலும் நான் ஊடகங்களாலும் ஏனைய தரப்பினராலும் வில்லன் என்றும் துரோகம் என்றும் விமர்சிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சர்ச்சையில் சிக்கிய போது, அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டேன்.

சுத்தமான கறைபடியாதவராக இருக்கும் நீங்கள், உங்களின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/15/news/7834

  • கருத்துக்கள உறவுகள்

SLFP வெற்றியீட்டினால் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை: தேர்தலில் நடுநிலை-

 

பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்வதை விரும்ப வில்லை:- முழுமையான தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

2ஆம் இணைப்பு SLFP வெற்றியீட்டினால் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை: தேர்தலில் நடுநிலை-



எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை ஏற்கனவே எழுதி டெலி ப்ரொம்டர் ஊடாக வாசிப்பது வழமை என்ற போதிலும், ஜனாதிபதியின் இன்றைய உரை நேரடியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு தரப்பினரும் தம்மை கடுமையாக விமர்சனம் செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

துஸ்டன், காட்டிக் கொடுத்தவன், துரோகி என தம்மைப் பலர் விமர்சனம் செய்ததாகவும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் வெளியிட ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தம்மை விமர்சனம் செய்வோர், நாட்டின் ஜனநாயகம் தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது என்பதனை நடைமுறைச் சாத்தியாப்பாட்டுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியை விமர்சனம் செய்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ எதிர்காலத்தில் தொடர் தோல்விகளை சந்திப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்தால் நல்லது என தாம் பிரதமரிடம் கூறியதாகவும் பிரதமருக்கு நாட்டில் நல்ல பெயர் காணப்படுவதாகவும் இதனால் மத்திய வங்கியின் ஆளுனரை பதவி விலகுமாறு கோருமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தாம் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவும் பிழையில்லை, இந்தப் பிரச்சினைக்கான மூல காரணம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயர்தனவின் தேர்தல் முறைமையினலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைமையிலேயே பிரச்சினை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்ட முடியவில்லை எனவும், அதற்கு முன்னர் வெற்றியீட்டிய ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய தமக்கு எவ்வித தேவையும் கிடையாது எனவும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தாம் எழுத்து மூலம் எதிர்த்தாகத் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றமொன்றை அமைத்துக் கொள்வதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே மக்களிடம் வாக்கு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சி எது என்பது பற்றி கவலைப்படவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்வதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்தே  பாரர்ளுமன்றம் கலைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்து மஹிந்தவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு கொண்டு வந்து, பிரதமர் பதவி வழங்குவதே மஹிந்த ஆதரவு தரப்பின் திட்டமாக அமைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்களை தாம் பாராட்டுவதாகவும் விமர்சனங்களை தடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை வெற்றியீட்டும் அரசாங்கமொன்றை தமக்கு தேவையில்லை எனவும் ஜனவரி 8ம் திகதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதே தமது நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்தவிதமான உறவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ எப்படியாவது பிரதமராக முயற்சிப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்டினால் பிரதமராக நியமிக்க வேண்டியளவு சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என அ வர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் போது சுயாதீனாமாக இருக்கப் போவதாகவும் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்களை நடாத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்காக வென்றெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம். ஜநாயகத்தை துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121987/language/ta-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.