Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்

Featured Replies

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்

JUL 21, 2015 | 2:21by அ.எழிலரசன்in செய்திகள்

Arrestதமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தக் காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழ் அகதிகளாவர். ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஸ்ணகுமார் (39), சசிகுமார் (26), ராஜேந்திரன் (44) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/07/21/news/8001

இது இலங்கை சிங்கள அரசுகளுக்கு "றோ" வினால் காட்டப்படும் பூச்சாண்டி அலது ஒர் எச்சரிக்கையாகக் கூடவிருக்கலாம்; தமிழ் நாட்டில் இவ்வளவு செய்தி நிறுவனங்கள் இருக்கும் போது இந்தச் செய்தியை பி ரி ஐ வெளியிடுகின்றது

  • தொடங்கியவர்

பிரபாகரனின் முக்கியஸ்தர்கள் தமிழகத்தில் கைதால் பதட்டம்.

 

இந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீ சாரால் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார் கள்.

அனைத்து மாவட்டங்களி லும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாத புரத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் வாகன சோதனையின் போது பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-

மதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.

சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கிருஷ்ணகுமார் (39) இன்னொருவர் பெயர் ராஜேந்திரன் (44) என்பது தெரிய வந்தது. 2 பேரின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது கிருஷ்ணகுமார் வைத்திருந்த பையில், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 4 ஜி.பி.எஸ். கருவிகள், 8 செல் போன்கள் ஆகியவை இருந்தன.

42, ஆயிரத்து 200 ரூபாய் இந்தியன் கரன்சியும் 19 ஆயிரத்து 300 ரூபாய் இலங்கை கரன்சியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கிருஷணகுமாரை தனிமைப் படுத்தி அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதி காரிகள், கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இவர்கள் அனைவரும் விடுதலைப்புலி கிருஷ்ண குமாரிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார் கள். ரகசிய இடத்தில் வைத்து கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அலவெட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் கடந்த 1990-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அவருடனேயே நீண்ட நாட்கள் ஒன்றாகவே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்துள் ளார்.

இறுதிக்கட்ட போர் நடந்த போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் அணி அணியாகவும், தன்னந் தனியாகவும் இலங்கையை விட்டு வெளியேறினர். அப்போது தான் கிருஷ்ண குமாரும் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

திருச்சியில் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட் பட்ட பகுதியில், அவர் தங்கி இருந்து வந்துள்ளார். அகதிகள் முகாமில் தங்காமல் வெளியிலேயே வாடகை வீட்டில் கிருஷ்ணகுமார் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலமாக ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது தான் போலீசில் சிக்கிக் கொண்டார்.

இதை யடுத்து கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறப்பு அகதிகள் முகாமில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் கடல் மார்க்கமாக கள்ளத்தோணி யில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டு செயல் பட்டுள்ளார். 75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பொட்டலங்களுடன் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு சப்ளை செய்வதற்காக இவர் இதனை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தி னர் வலுவாக தடம் பதிக்க தயாராகி வருவதும் உறுதி யாகி உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

கிருஷ்ண குமாருக்கு உதவி கள் செய்த குற்றத்துக்காக டிரைவர் சசிகுமார், ராஜேந் திரன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

http://www.jvpnews.com/srilanka/117449.htmlPrabhakaran Assistant

  • தொடங்கியவர்
தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர் தொடர்பில் புதிய தகவல்கள்
[ புதன்கிழமை, 22 யூலை 2015, 09:36.38 AM GMT ]
kiris.jpg
சயனைட் குப்பிகள் 75 மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் இருந்தவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா பாதுகாப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உச்சிபுல்லி பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள் மற்றும் 07 கையடக்க தொலைப்பேசிகளும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தன.

கிருஸ்ணகுமார் 39 வயதுடைய நபர் 90ஆம் தசாப்த்ததில் இருந்தே புலிகள் அமைப்பிற்காக செயற்பட்டுள்ளதோடு, தமிழ்நாட்டிற்கு 2009ஆம் ஆண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் தமிழ்நாடு முகாமில் இருந்து இரகசியமான முறையில் கடல் வழி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி வருவதற்கு ஆயத்தமாக இருந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

http://www.tamilwin.com/show-RUmtyHRWSVnu4F.html#

இவர்களை வைத்து விரைவில் தேசியத்தலைவரை கைது செய்து விடுவோம் என இந்தியப்பொலீஸ் சூளுரைத்தால் மகிந்தா தேர்தலில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை.தொடர்ந்து வரும் செய்திகளை பார்த்தால் பெரிய பின்புலச் சதி மஹிந்தவுக்கு எதிராகவுண்டு என்பது மட்டும் புலனாகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா சொல்லுகிறார்; பிரபாகரன், அவரின் மனைவி பிள்ளைகள் எல்லாம் சரணடைந்தார்கள் என்று ....இங்கே இவர்கள் சொல்லுகிறார்கள் 75 சயனைட் கொண்டு போனது என்று ....யாருக்கு இந்த சயனைட் என்றுதான் தெரியவில்லை ...இப்ப புளொட்தான் சயனைட் கட்டிக்கொண்டு திரியுதோ யாருக்கு தெரியும் :( 

இல்லாட்டி சம்பந்தர் தான் இப்ப சயனைட் ஓட திரிகிராறோ தெரியவில்லை :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.