Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஜாஹித்துடன் கோத்தாவுக்கு தொடர்பு :விளக்க வேண்டும் : ஐ. தே. க.கோரிக்கை

Featured Replies

Mohamed-Mujaid-and-Gotabaya.jpg?itok=lNr
 
போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. ஆகவே, இது தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்­சரும் கம்­பஹா மாவட்­டத்தின் ஐ.தே.க.வேட்­பா­ள­ரு­மான ரஞ்சன் ராம­நா­யக்க கோரிக்கை விடுத்தார்.

போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்­வி­ப­ரங்­களை ஔடத கட்­டுப்­பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சம­ர­சிங்க உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும்.இல்­லையேல் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடைப்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்:

முக்­கிய போதைப்­பொருள் புள்­ளி­யான மொஹமட் முஜாஹித் என்­பவர் மலே­சி­யாவில் இருந்து கொண்டு இலங்­கையில் போதைப்­பொருள் வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கான செல­வி­னையும் முஜாவே பொறுப்­பேற்­றி­ருந்தார்.
இந்­நி­லையில் இலங்­கையை போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் கேந்­திர நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொண்டு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்.
மொஹமட் முஜாஹித்தின் மலே­சி­யா­வி­லுள்ள வீட்­டிற்கு பல தட­வைகள் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லுள்ள அனை­வரும் சென்று தங்­கி­யுள்­ளனர்.இதற்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் உள்­ளன. போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் உத­வியை கொண்டே ராஜ­ப­க்ஷ­வினர் தனது வாழ்க்­கையை கொண்டு நடத்­தி­யுள்­ளனர்.
மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­டது மாத்­தி­ர­மின்றி போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் தம்­முடன் ஒன்று சேர்த்­துள்­ளனர்.

அத்­துடன் போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. யுத்­ததை மைய­மாக கொண்ட செல்வம் திரைப்­ப­டமும் கூட மொஹமட் முஜாஹித்தின் அனு­ச­ர­னை­யு­டனே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அது மாத்­தி­ர­மின்றி செல்வம் திரைப்­ப­டத்தின் வெளி­யிட்டு வீழா மிகவும் கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிகழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே வருகை தந்­தி­ருந்தார்.
மேலும் இந்த திரைப்­படம் மஹிந்த ராஜ­ப­க்ஷவை போற்றும் விதத்­திலே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த படம் ஜனா­தி­பதி தேர்தல் காலங்­க­ளி­லேயே வெ ளியி­டப்­பட்­டது.
இது தொடர்பில் ராஜ­ப­க்ஷ­வினர் மௌனம் காத்து வரு­கின்­றனர்.போதைப்­பொருள் வர்த்­தகர் முஜாஹித்துடன் தொடர்பு உள்­ளதா என்­பது தொடர்­பான உண்­மையை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.

முஜா போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்ளி என்­பது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் என்ற வகையில் அறிந்­தி­ருக்­க­வில்­லையா? அல்­லது அவர்­க­ளது உள­வுப்­பி­ரி­வினர் அறி­விக்­க­வில்­லையா என்­ப­தனை நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.
மேலும் போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த பெயர்ப்பட்டியல் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க அச்சப்படுகின்றார்.அவ்வாறு அச்சப்படுவாராயின் அவர் அந்த பதவியிலிருந்து உடனடியாக வௌியேற வேண்டும்.
ஆகஸ்ட 18 ஆம் திகதி குறித்த பட்டியலை வெ ளியிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/07/31/முஜாஹித்துடன்-கோத்தாவுக்கு-தொடர்பு-விளக்க-வேண்டும்-ஐ-தே-ககோரிக்கை

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் ராமநாயக்க: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய உடந்தையாக செயற்பட்டார்:



சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான 'முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் கும்பலுக்கு உடந்தையாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய செயற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் வலைப்பின்னல் நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுக்க அரச அனுசரணையை கோத்தபாய வழங்கினார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை போதைப் பொருள் மத்தியநிலையமாக மாற்ற ராஜபக்ச சகோதரர்கள் முயன்றுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிணம் தின்னும் சுறாவை வளர்த்ததை ஒப்புக்கொண்ட கோத்தபாய முஜாஹிம் போதைப் பொருள் கும்பலுடன் உள்ள உறவை குறித்து விரையில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முஜாவிற்கு கோத்தபாய திரைப்பட படப்பிடிப்புக்காக இராணுவ வீரர்கள், ஆயுதம், உலங்குவானூர்தி ஆகியவறறை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவாளிகளின் திரைப்பட வெளியீட்டு விழாவில் கோத்தபாயவும் அவரது பாரியாரும் கலந்து கொண்டதுடன் முஜாவின் நீச்சல் தடாகத்தில் மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகள் நீராடியமைக்கும் அங்கு கார் போட்டிகளில் கலந்து கொண்டமைக்கும் தன்னிடம் ஆதாரம் உண்டு என்று ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122476/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

//போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முஜாவிற்கு கோத்தபாய திரைப்பட படப்பிடிப்புக்காக இராணுவ வீரர்கள், ஆயுதம், உலங்குவானூர்தி ஆகியவறறை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.//

கோத்தா... எங்களை வைத்து, எங்கேயோ போயிட்டான்.
நாங்க தான்..... கே.பி.யைப்  பார்த்து,  கோத்தாவை கட்டிப் பிடிக்க முயல்கிறோம்.
எங்கடை... சனம், திருந்திறத்துக்கு.....  இன்னும், கன தூரம் இருக்கு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.