Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்

Featured Replies

கறுப்புப் பணம்: நான்காம் இடத்தில் இந்தியா

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்

பிரிட்டனுக்குள் வரும் “கறைபடிந்த பணத்தை” தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஐக்கிய ராஜ்ஜிய அரசு. இப்படியான பணத்தைக் கொண்டு லண்டனிலும் வேறு இடங்களிலும் இருக்கும் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதைத் தடுக்கவேண்டும் என்கிறார் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன். “கறைபடிந்த பணத்தை” லண்டன் விரும்பவில்லை என்கிறார் அவர்.

"உங்களின் ஊழல் பணத்தை சேர்த்துவைப்பதற்கான இடம் லண்டன் அல்ல” என்று அவர் ஒரு உரையின்போது தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்த அல்லது பொய்க் கணக்கு காட்டிய பணத்தைக் கொண்டு பிரிட்டனில் சொத்து வாங்குவதை தடுக்கப் போவதாக சூளுரைத்த உரையின் ஒரு பகுதியாக கேமரன் இதைத் தெரிவித்திருந்தார்.
தேசியக் குற்ற முகாமையின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரிட்டனில் இருக்கும் மேல்மட்டக் குடியிருப்புக்களை வாங்கிக் குவிப்பதன் மூலம், பல நூறு கோடி ஸ்டெர்லிங் பவுண்ட்கள் கறுப்புப் பணம் பிரிட்டனுக்குள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்படியான குடியிருப்புக்களில் பெரும்பான்மையானவை பிரிட்டன் தலைநகர் லண்டனில்தான் இருக்கின்றன. லண்டன் தான் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.


தென் கிழக்கு ஆசியாவில் நான்குநாள் பயணத்தின்போது ஊழல் உலக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்
தென் கிழக்கு ஆசியாவில் நான்குநாள் பயணத்தின்போது ஊழல் உலக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்

இப்படி லண்டனில் வாங்கப்படும் கட்டிடங்கள், பெரும்பாலும் வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளில் தலைமையகங்களைக் கொண்டு செயற்படும் நிறுவனங்களின் பெயர்களிலேயே வாங்கப்படுகின்றன. இந்நிறுவனங்கள் தமது உண்மையான முதலாளி யார் என்பதை வெளிப்படுத்தாமல் வெறும் பெயரளவுக்கு மட்டுமே செயற்படும் தன்மை கொண்டவை.
இந்த செயற்கையான நிறுவனங்கள், தமது ரகசிய முதலாளிகளின் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதன் மூலம், அவர்களின் சொந்த நாடுகளில் வருமான வரி அதிகாரிகளின் பார்வையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற உதவுகின்றன.

இது நேரடியாக பிரிட்டனை பாதிக்கிறது. காரணம் பிரிட்டனில் வீடுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான சொத்துக்களின் மதிப்பை செயற்கையாக பலமடங்கு அதிகரிப்பதோடு, உள்ளூர்வாசிகளால் இவற்றை வாங்கமுடியாமல் செய்துவிடுகிறது.
ஆனால், கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் நடமாட்டம் என்பது உலகளாவிய பிரச்சனை.
காரணம், இந்த கட்டட வர்த்தகத்தில் புழங்கும் கறுப்புப் பணத்தின் பெரும்பங்கு வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து உருவாகிறது.
பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இது மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.


வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி


ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்: சில சுவாரஸ்யமான விவரங்கள்
ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்: சில சுவாரஸ்யமான விவரங்கள்

வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக பல்வேறு சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் மதிப்பிட்டுள்ளன.
2012ஆம் ஆண்டில் மட்டும் 9.912 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கறுப்புப் பணம் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக புழங்கியதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கறுப்புப் பணப் புழக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படத் துவங்கிய காலத்திற்குப் பிறகு மிக அதிகபட்சமாக கறுப்புப் பணம் புழங்கியது இந்த ஆண்டில்தான் என்று கூறப்படுகிறது.

வளர்ந்துவரும் நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 6.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கணக்கில் வராத பணத்தை இழந்துவிட்டதாக, வாஷிங்டனில் இருந்து செயற்படும் 'குளோபல் ஃபைனான்ஸ் இன்டக்ரிடி' அமைப்பு தெரிவித்திருக்கிறது.

150730094407_total_illicit_financial_flo

உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக நாடுகளின் அரசுகள் வெளியிட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள்.
2003ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடையில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளியே சென்ற நிதியின் அளவை அவர்கள் கணக்கிட்டதில், ஆண்டுக்கு ஆண்டு கறுப்புப் பணம் வெளியேறும் வேகம் சுமார் 10 சதவீதம் அதிகரித்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கறுப்புப் பணம் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்தும் ஏழை நாடுகளில் இருந்தும் வெளியேறுகிறது என்கிற புள்ளிவிவரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளிடமிருந்து பெறும் வளர்ச்சி நிதியின் அளவைவிட இந்த தொகை அதிகமானது.


வளர்ந்து வரும் நாடுகளுக்குள் செல்லும் நிதியின் அளவும் அவற்றில் இருந்து வெளியேறும் கறுப்புப்பணத்தின் அளவும்
வளர்ந்து வரும் நாடுகளுக்குள் செல்லும் நிதியின் அளவும் அவற்றில் இருந்து வெளியேறும் கறுப்புப்பணத்தின் அளவும்
மேலும், இந்த நாடுகளுக்கு வளர்ச்சி நிதியாகவும் அன்னிய நேரடி முதலீடாகவும் வரும் தொகையைவிட இந்த நாடுகளில் இருந்து வெளியேறும் கறுப்புப் பணத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
கறுப்புப் பணம் எங்கிருந்து வருகிறது?
சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.


அதிக அளவு கறுப்புப்பணத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள்
அதிக அளவு கறுப்புப்பணத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள்

ஆனால் அதன் பரவல் என்பது ஒரே சீராக இல்லை.
கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி உற்பத்தியாகும் இடமாக ஆசிய கண்டமே இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் புழங்கிய கறுப்புப் பணத்தின் 40 சதவீதம் ஆசிய கண்டத்தில் இருந்தே வந்திருக்கிறது.
ரஷ்யா, துருக்கி, பெரும்பான்மையான கிழக்கு ஐரோபிய நாடுகளை உள்ளடக்கிய “வளர்ந்து வரும் ஐரோப்பிய நாடுக”ளில் இருந்து உருவான கறுப்புப் பணத்தின் அளவு 21 சதவீதமே என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.


பிராந்திய ரீதியில் கறுப்புப்பணத்தை அதிகம் ஏற்றுமதி செய்யும் 15 நாடுகள்
பிராந்திய ரீதியில் கறுப்புப்பணத்தை அதிகம் ஏற்றுமதி செய்யும் 15 நாடுகள்

அமெரிக்க மற்றும் கரீபிய பிராந்தியங்களில் இருந்து சுமார் 20 சதவீத கறுப்புப் பணம் உருவானதாகவும் அதற்கு அடுத்து மத்திய கிழக்கும் வட ஆப்ரிக்காவும் சேர்ந்து 10.8 சதவீத கறுப்புப் பணத்தை உருவாக்குவதாகவும் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்காவிலிருந்து 8 சதவீத கறுப்பு பணம் உருவானதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம், அதிகபட்ச கறுப்புப் பணப் பரிவர்த்தனை செய்யும் நாடுகளே கறுப்புப் பணத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவை என்று சொல்லிவிடமுடியாது.
வளர்ந்து வரும் நாடுகளில் இப்படி “காணாமல்போன பணத்தின்” உண்மையான பாதிப்பு என்ன என்பதை கணக்கிட வேண்டுமானால், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்த பணத்தின் அளவை ஒப்பிட்டு பார்ப்பதே சரியான அணுகுமுறை என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அப்படிப்பார்க்கும்போது, வளர்ந்துவரும் நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.9 சதவீத வருமானம் இப்படி கறுப்புப் பணமாக அந்நாடுகளை விட்டு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

150730094347_gdp_illicit_financial_flow_

இதிலும்கூட சஹாராவுக்குத் தெற்கே இருக்கும் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. காரணம் இந்த நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும்போது 3.9 சதவீதத்தைவிட கூடுதலான பணம் கறுப்புப் பணமாக மாறி நாட்டை விட்டு வெளியேறுகிறது. அதனால் இந்த நாடுகள் கூடுதல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.


கறுப்புப்பணம் எப்படி உருவாகிறது?
உலக அளவிலான மிகப் பெரும் ஊழல் வலைப்பின்னல் கட்டமைப்பு இதை சாத்தியமாக்குவதாக ஐ.நா. கூறுகிறது. இந்த கறுப்புப் பணம் புழங்குவதற்கு, நாடு விட்டு நாடு கைமாற்றப்படுவதற்கு, இயற்கைவள வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு, வரி விலக்கு அளிப்பதற்கு, முதலாளி யார் என்றே தெரியாமல் போலியான நிறுவனங்களைத் துவக்கி நடத்துவதற்கு என பலவகையான செயல்களை செய்வதற்கும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் அவற்றின் மூலமே இந்த கறுப்புப் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் சாத்தியமாவதாகவும் ஐநா கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global/2015/07/150730_illicitmoney

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையிலை கள்ளக்காசு வைச்சிருக்கிற ஆக்கள் வலு கவனமாயிருங்கோ....:cool:
பாங்கிலை ஆர் காசு வைச்சிருக்கினமோ அதுதான் காசு....மற்றதெல்லாம் வெறும் பேப்பர் எண்டு சொன்னாங்களெண்டால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்????  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.