Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பம்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு. கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதணிகளின் உற்பத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், சந்தைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல், மூலப்பொருள்களைக் கொள்வனவு செய்தல் போன்ற தேவைகளுக்கென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 3.45 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

தென் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றால் வட்டு. கிழக்கு மாதர் அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 14 பெண்களுக்கு பாதணி உற்பத்தி தொடர்பான முழுமையான பயிற்சிகள் கடந்த ஒருமாத காலமாக வழங்கப்பட்டன. இதனையடுத்தே இப்போது உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மனதைக் கவரும் பலவித வண்ணங்களிலும், பல அளவுகளிலும் உருவாக்கப்படும் இறப்பர் பாதணிகளுக்கு ‘ஏ.ஆர்.பீ’ (ARP - Anthiran Rubber Products) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும் ஏ.ஆர்.பீ பாதணிகள் விரைவில் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rubber%2045egt.jpg

rubber%2048egt.jpg

rubber%2046egt.jpg

rubber%2047egt.jpg

 

 http://www.malarum.com/article/tam/2015/07/31/11230/யாழ்ப்பாணத்தில்-இறப்பர்-பாதணிகள்-உற்பத்தி-ஆரம்பம்-.html#sthash.V5gB8I3i.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதணி செய்யும் தொழிலாளர்கள் பாதணி போடாமைக்கு என்ன காரணமோ?தொழிற்சாலை புனிதமானது என்ற கருத்தாக இருக்குமோ?

MGNF909_9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கர நேசனின்... செயற்பாட்டுக்கு, வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனிலை இருக்கிற தமிழ்ச்சனம் கொழும்புப்பக்கம் போகாமலே தம்மைத்தாமே அபிவிருத்தி செய்யக்கூடியபலம் கைவசம் நிறையவே வைத்திருக்கினம்.....அரசியல் சாக்கடைகள் யோசிக்க வைக்குது..

முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.