Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.

Featured Replies

சம் சும் இப்பவே முக்காடு போடுவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களை போராளிகளே இல்லை என்றாச்சு. மிகவும் மலினத்தனமான பிரச்சாரம் கூட்டமைப்பினரால் செய்யப்படுகிறது. 

”பேக்கரி உனக்கு” ‘அக்கா எனக்கு”!! அமுதனுடன் சிறிதரனின் டீலிங் !! அதிர்ச்சித் தகவல்கள்

 

தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விற்றுப் பிழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் புலிகள் அமைப்பில் இருந்து குற்றம் செய்து துரத்தப்பட்டவர்களை எல்லாம் முன்னாள் புலிகள் என தன்னுடன் வைத்துக் கொண்டு பெரும் தில்லுமுள்ளுகளைச் செய்து வருகின்றார்.

சிறிதரனுடன் சேர்ந்து திரியும் சிலர் தங்களைப் முன்னாள் புலிப் போராளிகள் எனக் கூறி மக்களை ஏமாற்றி சிறிதரனுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

உண்மையில் இவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர்கள். புலிகள் அமைப்பால் நீக்கப்பட்ட கருனாவைப் போல் புலிகள் அமைப்பில் இருந்து பல்வேறு குற்றச் செயல்களுக்காக தண்டனை பெற்று கலைக்கப்பட்டவர்கள் ஆவார்.

அண்மையில் சிறிதரனுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மேடையில் தோன்றி அமுதன் எனும் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தப்பட்ட நபர் எவ்வாறு புலிகளில் இருந்து துரத்தப்பட்டார் என்பது இங்கு தரப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு புலிகளுடன் இணைந்த இவர் புலிகளின் தென்றல் என்ற பெயரில் இயங்கிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தும் இடத்தில் பணியாற்றி வந்தார்.

போலியான பற்றுச் சீட்டுக்களை வழங்கி பணத்தைக் கொள்ளையடித்தமை கண்டு பிடிக்கப்பட்டு இவர் தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு தண்டனை வழக்கப்பட்டு பின்னர் புலிகள் அமைப்பில் இருந்து 2001ம் ஆண்டு துரத்தப்பட்டார்.

அதன் பின்னர் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கடையில் வேலை செய்து வந்த இவர் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றார்.

திருமணமாகி இரு பிள்ளைகளுடன் 55ம் கட்டைப் பகுதியில் வசித்து வந்த அமுதனை, புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தன்னையும் புலிகளில் ஒருவராக காட்டிக் கொள்ள முற்பட்ட சிறிதன் இலகுவாக தன்வசப்படுத்திக் கொண்டார்.

இதற்காக சிறிதரன் செய்து கொண்ட டீலிங் புலிகளின் மானத்தையே விலைக்கு வாங்குவது போல் ஆகியது. கிளிநொச்சி சந்தைப் பகுதியில் உள்ள முன்பக்க கடையை குறித்த அமுதனுக்கு சிறிதரன் கொடுத்துள்ளார்.

இந்தச் சந்தை பிரதேசசபைக்குச் சொந்தமானதாகும். அந்தச் சந்தைப் பகுதியில் காலம் காலமாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தமது ஆளுகையில் உள்ள பிரதேசசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறீதரன் இந்தக் கடையை அமுதனுக்குக் கொடுத்துள்ளார்.

இச் சம்பவத்தால் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தமது கடும் எதிர்ப்பைக் காட்டியும் எதுவும் செய்ய முடியாததால் தமது சங்கத்தையே கலைத்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அமுதனுக்கு தனது கடையைக் கொடுத்து அமுதனின் வாயால் விடுதலைப் புலிகளின் மானத்தை விற்றுத் திரியும்படி செய்துள்ள சிறிரனுக்கு காலம் பதில் சொல்லும்.

அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடிவேலுவைப் போல் அமுதனும் செயற்பட்டுக் கொண்டிருப்பது முன்னாள் போராளிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு யாருக்குச் சொந்தம் என்பது இதில் காட்டப்பட்டுள்ளது.

 

 

 

- See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=39689&cat=nnews&sel=current&subcat=14#sthash.05n4TlpX.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.