Jump to content

வரும் தேர்தலும் .... வெற்றி தோல்வியும் ... பின்னணியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நடக்கவிருக்கும் தேர்தல் தமிழருக்கு எதைவாது பெற்றுத்தருமா ? என்ற கேள்வி  பலருக்கும் இருக்கலாம் ...
எனக்கும் இருப்பதால் இதை எழுதுகிறேன்  இவை என்னுடைய சொந்த பார்வை மட்டுமே.
வரும் தேர்தலில் தமிழர் தரப்பில் 3 கட்சிகள் அல்லது மூன்று பிரிவுகள் (பிரதானமாக ) தமிழர்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றன 
யாருக்கு போடவேண்டும் ..? ஏன் போடவேண்டும் ..?
இவை முக்கிய கேள்விகளாக ஆறு அறிவும் செயல்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்க கூடிய ஒன்று 
தமிழ் தேசிய கூட்டமைப்பு (த தே கூ ) இப்போது முன்னணியில் நிற்கும் கட்சி தமிழர்களின் பலமாக இருக்கும் இவர்களை 
ஏன் இன்னமும் பலமாக்கி எமது பலத்தை நாம் கூட்ட கூடாது ? அதற்கு இந்த தேர்தலை நாம் ஏன் பயன்படுத்த முடியாது ?
ஏன் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் என்றாலும் இவர்களை வெறுக்கிறார்கள் ?
இவர்களை நம்ப மறுக்கிறார்கள் ?  இவர்களுடைய கடந்த 5 வருட சித்து விளையாடுக்கள் பதவி ஆசை மக்களை ஏமாற்றி எய்த்து பிழைப்பு 
நான் கூறவில்லை தற்போது தமிழர்கள் நபிக்கை கொண்டிருக்கும் வடக்கு முதலமைச்சர் சி விக்கினேஸ்வரனே கேட்கிறார் ஒதுக்கபட்ட நிதி எங்கே என்று ?
ஆக பனையால் விழுந்த மக்களுக்கு வந்த நிதியை கூட கையாடி இருக்கிறார்கள் சில மாடுகள். ஆக இவர்களுக்கு எதிராக கிளம்பிய ஒரு பகுதியினரை 
இவர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள். தமிழனை பிரித்து குழு குழுவாக பிரித்து அடிக்க வேண்டும் எனும் சிங்களவனின் திட்டத்தை. ராஜதந்திரமாக செயல்படுத்தி இருக்கிறார்கள் தற்போதைய கூட்டமைப்பினர். இவை உள்ளூர் விடயங்கள் ........

என்னுடைய பார்வை எப்போதும் மேலாதிக்க சக்திகளின் திட்டம் என்ன என்பதுதான். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் யாரும் மகிந்தவிற்கு வாக்கு போட மாட்டார்கள் என்று தெரிந்தும். மகிந்தவே வெல்ல வேண்டும் என்று இங்கு எழுதி வந்தேன் சிங்களவரின் வாக்குகளால் மகிந்த வெல்ல வேண்டும் என்று எனக்குள்ளேயே பிரார்த்தித்து கொண்டும் இருந்தேன். காரணம் மகிந்தவை தோற்கடிக்க இலங்கைக்கு வெளியே இருந்து செயட்பட்டுகொண்டு இருந்த சக்திகளின்  ஆதிக்க வெறியை புரிந்து கொண்டதனால். இந்த ஆதிக்க சக்திகள் தமிழர்களின் நலன்களை அல்ல அவர்கள் வாழும் சொந்த நாட்டு மக்களின் நலனையே  தூக்கி வீசியவர்கள் ...... அவர்கள் தமிழரின் நலன் பற்றி சிந்திப்பார்களா? மகிந்த வென்றால் தமிழருக்கு விடிவு வராது ....
மகிந்தவை வேறு வழியாக (மகிந்த வென்றிருந்தால்) தூக்குவதற்கு அவர்கள் தயங்கி இருக்க மாட்டார்கள். அதுதான் தமிழருக்கு சாதகமாக இருந்திருக்க கூடியது. 
வாய்ப்பை நாம் தவற விட்டோம். கூட்டமைப்பு பிரச்சாரம் செய்து தமிழர்களை மகிந்தவிற்கு வாக்கு போடுங்கள் என்று கேட்டிருந்தால் நிலைமை இன்னமும் மோசமாகி  இருக்கும். தமிழர்கள் தாமாக புரிந்து அதை செய்திருக்க வேண்டும் அதற்கு 5வீதம் கூட சாத்தியம் இல்லை என்பது எனக்கும் தெரிந்ததுதான்.

மைத்திரி வந்தால் வெட்டுவார் புடுங்குவார் ..... என்று இங்கும் பலர் குப்பை கொட்டினார்கள்.
எந்த சிங்களவன் வந்தாலும் ஒன்றும் புடுங்க போவதில்லை என்ற அடிப்படையை தேர்தல் வருபோதே தமிழரும் மறந்து விடுவார்கள். சம்பூரின் காணி விடுவிப்பு  மகிந்த குடும்பத்திற்கு எதிராக செய்யபட்ட ஒரு நடவடிக்கை. காகம் இருக்க பனங்காய் விழுந்ததால் பனங்காய்க்கு சுமத்திரன் சொந்தம் கொண்டாட   வெளிக்கிட்டார். சம்பூரில் இருந்தது ஒரு தனியார் (பிரைவேட் ) வேலை திட்டம் என்பதும் அது மகிந்தவுடந்தான் ஒப்பந்தம் செய்தது என்பதையும் பலரும்  மறந்துவிட்டார்கள். பலாலியில் ஒரு அரை கிலோமிட்டர் வந்திருக்கு .... தமிழரின் பலம் சிதறடிக்க பட்டிருக்கிறது.
அரை கிலோமீட்டர் ஏறி  ஆயிரம் கிலோமீட்டர் பின்நகர்ந்து இருக்கிறோம். இதைத்தான் கடந்த தேர்தல் காலத்தில் நான் எழுதிவந்தேன் 
பலருக்கும் புரியவில்லை. பணமும் (ஆதிக்க சக்திகள்) பலமும் (ஆட்சியாளர்கள்) ஒன்றாகிவிட்டால் நாம் பிச்சை எடுக்காவிட்டாலும் பிச்சைகாரர்கள்தான்.
நாம் வாழும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட நிலைமை இதுதான்....
கிரேக்க நாட்டு மக்கள் எமக்கு உதவி வேண்டாம் என்கிறார்கள்........ ஐரோப்பிய யூனியன் உதவி செய்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது. என்ன நடக்கிறது என்று  உங்களுக்கு புரிகிறதா ? இனி புரிந்தும் பலன் இல்லை காலம் கடந்துவிட்டது .... மைத்திரியின் காதல் கதைகள் ரஜனியின் 100 நாள் வெற்றியாக ஓடிய படக்கதைகள் போல் ஆகிவிட்டது.

மீண்டும் என்னால் உணர முடிகிறது ...... இருந்தும் மனதால் ஆசைபடுகிறேன் த தே கூ தோல்வி அடைய வேண்டும் என்று. அதற்கு ஒரே ஒரு காரணம்  சுமந்திரன்  போன்ற ஒரு எட்டப்பன் மட்டுமே. திரைக்கு பின்னால் தயாராகி கொண்டிருக்கும் திரைகதையை கொஞ்சமாவது புரிய முடிவதால்தான் இப்படியொரு  ஆசை. கஜேந்திரன் அவர்கள் வென்றாலும் ..... அவரை சிறையில் தூக்கி போடுவார்கள் அல்லது அவரும் சிங்களவரின் எடுப்பார் பிள்ளையாகவே வேண்டும்.
மற்றது முன்னாள் போராளிகள் இவர்களுக்கு பெயரே பிரச்சனை ... இவர்கள் வென்றால் ..... அவர்கள் முன்னாள் பயங்கரவாதிகள் என்பார்கள். அதனுடனேயே முடிந்துவிடும். அதைவிட முக்கியமானது கிழக்கு மாகனத்தின் தமிழரின் வாக்கு வீதம் என்பது இந்த விடயத்தில் நாமே நமக்கு சொந்த காசில் சூனியம் செய்கிறோம். சம்மந்தன் போன்ற வேடதாரிகளால் கிழக்கு தமிழருக்கு கிடைத்த அவல்  இது ஒன்றுதான் எமது வாக்கை இரண்டாக பிரிக்க முஸ்லிம்கள் முதலாவதாக  வருவார்கள். சம்மந்தன் கருனாநிதிபோல தான் பாடையில் போகுமுன்பு தமிழருக்கு கொள்ளிவைத்துவிட்டு போகவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார் போல. சொந்த காலில் எழுந்து சுதந்திரமாக 2/3 பகுதியை என்றாலும் தாமே ஆண்டுகொண்டு இருந்த தமிழரை சுத்தி நின்று இரசாயனம்  கந்தகம் என்று  காடைகள் கையில் கிடைத்த எல்லாவற்றாலும் அடித்து இன்று நலிந்து  கிடக்கும் தமிழனை கூட விட்டு வைக்க விரும்பதா ஆதிக்க சக்திகளுக்கு  கிடைத்த  வரபிரசாதம்தான் சுமந்திரன். 
இரண்டாவது ரவுண்டுக்கு ரவுடிகள் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது இலக்கு சர்வதேச விசாரணையை நீர்மூலம் ஆக்குவது  (ஆக்க்கிவிட்டர்கள் என்றுதான்  நான் நினைக்கிறேன்) இனி போர்மலுக்காக ஒரு கூட்டம் ஒரு வாக்கு பதிவு ஒரு தோல்வி பின்பு ஏற்கனவே எழுதிய தீர்ப்பை பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பார். 
அடுத்து தமிழரின் சுயநிர்ணயத்தை தவிடு பொடியாக்குவது இதை தமிழரின் கையாலேயே தமிழரின் கண்ணை குத்தவேண்டும் என்பது பெரியார்களின் திட்டம்  ஆதலால்  சுமந்திரன் இப்போ ராஜதந்திரி இப்படிதான் இங்கேயே சிலர் எழுதுகிறார்கள். (வாசித்தால் சிரிப்பு வரும்) 
தெற்கில் மகிந்த மீண்டும் தோற்பார் .... தோற்றபின்பு  அங்கு மாறி இங்கு இங்கு மாறி அங்கு பலரும் கட்சிதாவுவார்கள். சிங்கள பௌத்த வெறியர்கள் எதிர்ப்பார்கள்  .... தமிழாராகிய நாம் பூச்சூடி குதுகலிப்போம் சுமந்திரனுக்கு பல்லக்கு தூக்குவோம் .....
உண்மையிலேயே ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்ந்த தமிழருக்கு பௌத்த வெறியர்கள் செய்யகூடிய முதலாவதும் இறுதியுமான ஒரே உதவி. பெரியவர்களின்  திட்டத்தை குழப்புவதாக்ததான்  இருக்கும் அதற்கு ஆட்சி பலம் ஆதரவு இல்லாது போகும். 
பெரியவர்களின் இரண்டாவது திட்டம் வேறு ஒன்றும் இல்லை .......
அயர்லாந்தில் பரிட்சார்த்து வெற்றி கண்ட தேர்தல்தான்.........   வாக்குகளை உடனடியாகவே எண்ணும் (அயர்லாந்தில் நடந்ததுபோல) இலத்திரனியல் வாக்குபதிவு  நடக்கும்.
சுமந்திரன் நாம் பிரிந்தால் கஸ்ட்ர படுவோம் என்று முழங்குவர் ..... இங்கும் சிலர் அதை ராஜதந்திரம் என்பார்கள். நாம் என்ன போடுகிறோம் என்பது ஒரு பொருட்டே  இல்லை ... மூன்று பேர் வாக்கு போட்டால் 1 ஆம் 2 இல்லை இதுதான் இலத்திரனியல் முடிவு. புலம்பெயர் தமிழருக்கும் ஒரு வலை விரிப்பு நடக்கலாம்  பிறநாட்டு பிரஜை என்றாலும் இலங்கையில் பிறந்த தமிழர்கள் வாக்கு போடலாம் என்று  ஒரு அறிவிப்பு வரலாம். ஒருவர் சென்று $5000.00 வரையில் செலவளிக்கலாம்  ஒரு லட்சம் போனால் இலங்கை பொருளாதாரம் கீசும். 
இப்போது பீற்றுவதை போலவே சில காட்டு  எருமைகள் அப்போதும் சொல்லலாம் மக்கள் தெளிவாக முடிவு எடுப்பார்கள் என்று.
முதாலம் உலகிலேயே பணம்தான் முடிவு எடுக்கிறது ..... இதில் தெளிவாக வேறு ? சுமந்திரன் பெரு வெற்றி பெறுவார் மக்கள் என்பக்கம் என்பார்.
நாம் சொந்த தலையில் மண்போட்டுவிட்டு நிற்போம். (இலண்டனில் நடந்த பேச்சுவார்த்தை இப்போதைக்கு பிள்ளையார் சுழி மட்டுமே) 
பொறுக்கிகளிடம் த தே கூ சிக்கிவிட்டதால் ........
வரும் தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் தமிழருக்கு தோல்விதான். த தே கூ தோற்றால் பெரியவர்களின் திட்டம் தடுமாறும். 
நாம் ஏற்கனவே தோற்றுவிட்டோம் ...... 3ஆக  பிரிந்ததே படுதோல்வி .... இதைவிட இன்னொரு தோல்வி தேவையில்லை. அடி விழுந்து இன்னமும் பலருக்கு வலி கூட ஆறவில்லை என்பதுதான் சோகமானது.  

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.