Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி

Featured Replies

தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி

Unbenannt

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தாமே வழிநடத்தவிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றதா அன்றேல் அரசுடன் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வழிநடத்தும் அன்றேல் தலைமை தாங்கும் கட்சியாக ஜனநாயக போராளிகள் கட்சி உருவாகவிருப்பதாக வித்தியாதரன் நம்பிக்கை தெரிவித்தார்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் எவ்வாறு கூட்டமைப்பு செயற்பட்டதோ அவ்வாறானதோர் வழிநடத்தல் வழங்கப்படுமெனவும்

கணிசமான அளவிலான ஆசனங்கள் இம்முறை நாடாளுமன்றத்தேர்தலில் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கத்துவமாகக் கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சிக்கு கிடைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தென்னிலங்கை அரசுடன் இணக்க அரசியல் அடிப்படையில் கைகோர்பது தொடர்பிலும் தமது கட்சி பரிசீலிக்கவிருப்பதாகவும்

தென்னிலங்கை கட்சிகளை உதாசீனம் செய்யாது நாட்டினுடைய நலன்கள் மற்றும் இனங்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்க வேண்டிய தேவையிருப்பதாகவும் வடக்கை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பினை முழுமையாக அழிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவின் “ யுத்தம் இல்லாத நாடு- நல்லாட்சியின் பின்னர் இரண்டாகும் நிலை “ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெள்ளை வான் கடத்தல்கள், பாதாள உலக கொள்ளைக்கூட்டம் அனைத்தும் எம்மிடம் தான் உள்ளதென எம்மை விமர்சித்தவர்கள் இன்று ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால் இவர்களின் ஆட்சியில் என்ன நடக்கின்றது. இன்று பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடும், கடத்தல்களும் தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

நல்லாட்சி என்ற இந்த ஆட்சியில் ஒரு தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாது போயுள்ளது. தமது வேலைத் திட்டத்தை தெளிவாக இவர்களால் குறிப்பிட முடியாது. நல்லாட்சியில் இவர்களின் வேலைத்திட்டங்கள் நாட்டில் முழுமையாக சென்றடையவில்லை.

எமது ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கில் உண்மையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு தமிழ் மக்களின் உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற்றுக் கொடுத்தோம். அதேபோல் அனாவசிய காணிகளை நாம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தோம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தவில்லை.

ஆனால் இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலான நிலைமையில் உள்ளது. அரசியல் சுயநல வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி விட்டனர். நாம் புலிகள் பயங்கரவாத இயக்கத்தை அழித்த போதிலும் புலிகளினால் போசனை வழங்கப்பட்ட அரசியல் புலிகளை நாம் அழிக்கவில்லை.

அதன் விளைவு இன்று ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளது. எமது கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இன்று நாம் இல்லாத நிலையில் மீண்டும் நாட்டில் கிளர்ச்சிகள் உருவாக ஆரம்பித்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளோம். தேசிய பாதுகாப்பை சரியான வகையில் பலப்படுத்தியுள்ளோம். ஆனால் இந்த ஏழு மாதகாலத்தில் நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் இந்த நாட்டில் ஆயுத கலாசாரத்தை முழுமையாக தடுத்திருந்தோம்.

சர்வதேச புலிகள் அமைப்புகளை இலங்கையின் விடயங்களில் தலையிடவிடாது தடுத்திருந்தோம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே எமது கட்டுப்பாட்டில் எவ்வாறு நாடு இருந்ததோ அதே நிலைமை மீண்டும் உருவாக வேண்டும். வடக்கை எமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும்.

யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்தில் நெருங்கிவிட்டனர். அவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.

மக்கள் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டுமென்றால் நாட்டின் சிங்கள மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://www.jvpnews.com/srilanka/119160.html

  • கருத்துக்கள உறவுகள்

சிரேஷ்ட பத்திரிகையாளர் நிலையிலிருந்து நல்லதொரு காமெடியனாக மாறியிருக்கிறார் திரு வித்தியாதரன். 

எல்லாம் தேர்தலின் பின் தெரியும் 

புலிகளுக்கு மட்டும் அல்ல  வாலுகளுக்கும் நாட்டில் இனி இடம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இலங்கையில் தான் இன்னமும் உள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரனை வழிநடத்துபவர் கோத்தாபய ராஜபக்ச. கஜே குழுவின் மறைமுக போசகர் மகிந்த ராஜபக்ச. எனவே  இலங்கையில் உள்ள கஜே குழுவை வழிநடத்த வித்தியாதரன் பொருத்தமானவர். தமிழர் தம் விடிவெள்ளி கூட்டமைப்பை இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவரால் வழிநடத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை வெளியிலிருந்து ஒருத்தரும் வழிநடத்தவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை வெளியிலிருந்து ஒருத்தரும் வழிநடத்தவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை வெளியிலிருந்து ஒருத்தரும் வழிநடத்தவில்லையா?

கூட்டமைப்பை வெளியிலிருந்து ஒருத்தரும் வழிநடத்தவில்லையா?

நடைபெற்றவை இனவழிப்புப் படுகொலைகளா? இல்லையா? கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்துமா? சுமந்திரனிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி கேள்வி

நடைபெற்றவை இனவழிப்புப் படுகொலைகளா? இல்லையா? கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்துமா? சுமந்திரனிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி கேள்வி

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் - முள்ளிவாய்க்கால் அவலம் வரை - இடம்பெற்ற கொடூரங்கள் இனவழிப்புப்படுகொலைகளா? இல்லையா? - இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை சுமந்திரன் இப்போதாவது தமிழ் மக்களுக்குத் தெளிவான சொற்களில் வெளிப்படுத்துவாரா? - இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் மூத்த ஊடகவியலாளரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளருமான என்.வித்தியாதரன். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சிலந்திச் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக களம் இறங்கியிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை வேட்பாளரான அவர், இவ்விடயத்தை ஒட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

ஈழத் தமிழர்களின் பல நூற்றாண்டு கால வரலாற்றில் மிகக் கோரமான - மிகக் கொடூரமான - மிக மோசமான - அவலமாக அரங்கேறிய இனவழிப்புப் படுகொலையின் தொடர் நடவடிக்கையே முள்ளிவாய்க்காலில் ஓரங்கமாக முடிவுற்றது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற கொடூரங்கள் பற்றிய விடயங்கள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்பாக வந்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர்களின் சார்பில் அவர்களினால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தாங்களே அவ்விடயங்களை ஊடாடிக் கையாண்டு வருகின்றனர் எனத் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை, அவை பிரேரணை நகல் வடிவத்தில் இருக்கும்போதே தங்களிடம் காட்டித்தான் அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, வவுனியாவில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேசும்போது சொல்கிறார்.

முள்ளிவாய்க்கால் வரை நடந்து முடிந்த அந்தக் கொடூரம் இனவழிப்புப் படுகொலைகள் (Genocide) என்பதே தமிழர்களின் ஒரே நிலைப்பாடு. 1983 இல் தென்னிலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரத்தையே அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 'பெரும் இனப் படுகொலை (Genocide)' செயற்பாடு என்றே இந்திய நாடாளுமன்றத்தில் வகைப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த இனவழிப்புக் கொடூரக் குற்றச்சாட்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் கொழும்பு ஆட்சிப் பீடத்தைக் காப்பாற்றுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுவதாக அதன் செயற்பாடுகள் காட்டுகின்றன.

முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்றவை 'இனவழிப்புக் கொடூரங்கள்' அல்லது 'இனப் படுகொலை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற தலைவர்கள் ஆங்காங்கே கூறி வருகையில், இந்த விடயங்களை சர்வதேச மட்டத்தில் கையாண்டு வரும் சுமந்திரன் மட்டும் அதை அமுக்கி வாசிக்கின்றார். அங்கு இடம்பெற்றவை இனப் படுகொலைக் கொடூரங்கள் அல்ல, வெறும் யுத்தக் குற்றங்கள் மட்டுமே என்று கூறி இலங்கைப் படைகளையும் ஆட்சித் தரப்பையும் காப்பாற்ற முயல்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலை ஒட்டி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சர்வதேச விசாரணை குறித்தெல்லாம் பிரஸ்தாபிக்கப்படுகின்றதே தவிர அங்கு இடம்பெற்றவை இனவழிப்புப் படுகொலைக் கொடூரங்கள் என்று குறிப்பிடப்படவேயில்லை. அந்த விஞ்ஞானபனத்தில் 1983 கலவரங்கள் குறித்து குறிப்பிடுகையில் மட்டும் இனப்படுகொலை (Pogram) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. Genocide என்ற சொல் ஓரிடத்திலும் இல்லை.

1983 இல் இடம்பெற்ற கலவரம் இனப்படுகொலை என்றால் 2009 இல் அரங்கேறிய கொடூரங்கள் அதைவிட மிகமிக மோசனவையல்லவா? அவற்றை இனவழிப்புப் படுகொலைகள் என்று சர்வதேசத்திடம் இடித்துரைக்க கூட்டமைப்பு பின் நிற்பது ஏன்? முள்ளிவாய்க்கால் வரை அரங்கேறியவற்றை - இலங்கைப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட மோசமான கொடூரங்களை - 'இனப் படுகொலை' என்ற வகைக்குள் அடக்கியே வடக்கு மாகாண சபையும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அப்படியான வாசகத்தைத்தான் அதில் பயன்படுத்தியிருக்கிறார். தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச மட்டத்தில் இவ்விடயங்களைக் கையாளும் சுமந்திரனும் சம்பந்தர் ஐயாவும் அங்கு அரங்கேறியவற்றை 'இனப் படுகொலை' என்றே நிலைநாட்டுவதில் இதயசுத்தியுடன் இருக்கின்றார்களா? அதனை அவர்கள் பகிரங்கப்படுத்துவார்களா? பொதுமக்கள் முன்னால் வாக்குக் கேட்டுவரும் இச்சமயத்தில் அதனை வெளிப்படுத்துவது அவர்களது கடமையாகும் - இப்படித் தெரிவித்துள்ளார். வித்தியாதரன்.

http://www.malarum.com/article/tam/2015/08/03/11265/நடைபெற்றவை-இனவழிப்புப்-படுகொலைகளா-இல்லையா-கூட்டமைப்பு-தனது-நிலைப்பாட்டைப்-பகிரங்கப்படுத்துமா-சுமந்திரனிடம்-ஜனநாயகப்-போராளிகள்-கட்சி-கேள்வி.html#sthash.F7PXAFsN.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாண்டுகள் காலம் வாளாவிருந்துவிட்டு தற்போது தேர்தல் வரும்போதுதான் வித்தியாதரனுக்கு இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இவ்வாறான கேள்விகளுக்கு செயல்வீரரான:grin: சுமந்திரன் பதிலளிக்கக் கூடாது என்பதே எனது விருப்பம்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலை ஒட்டி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சர்வதேச விசாரணை குறித்தெல்லாம் பிரஸ்தாபிக்கப்படுகின்றதே தவிர அங்கு இடம்பெற்றவை இனவழிப்புப் படுகொலைக் கொடூரங்கள் என்று குறிப்பிடப்படவேயில்லை. அந்த விஞ்ஞானபனத்தில் 1983 கலவரங்கள் குறித்து குறிப்பிடுகையில் மட்டும் இனப்படுகொலை (Pogram) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. Genocide என்ற சொல் ஓரிடத்திலும் இல்லை.

 அது போக வித்தியாதரனுக்கு ஆங்கில அறிவு அவ்வளவு இல்லை எனவே இவ்வாறான ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ் விளக்கங்களை அகராதியில் தன்னும் பார்த்து பொருள் உணர்ந்தபின் அளிக்கலாம். இவற்றை எழுதுபவர்களுக்கும்:grin: பொருள் தெரியாது இணைப்பவர்களுக்கும்:grin: தெரியாது. தனக்கடா ஆங்கிலமும் சிங்களமும் சேதமே விளைவிக்கும்.  அது Pogram இல்லை Pogrom

Edited by வாலி

  • தொடங்கியவர்
noun of pogrom
1.
an organized massacre, especially of Jews.
 
Examples from the Web for pogromExpand
Contemporary Examples
  • The pro-Nazi Palestinian leader, Haj Amin al-Husseini, instigated the Farhudpogrom against the Jews of Iraq in 1941.

 

noun of genocide
1.
the deliberate and systematic extermination of a national, racial,political, or cultural group.
 
Generally speaking, genocide does not necessarily mean theimmediate destruction of a nation, except when accomplished bymass killings of all members of a nation. It is intended rather tosignify a coordinated plan of different actions aimed at the destructionof essential foundations of the life of national groups, with the aim ofannihilating the groups themselves. 
 
 
  •  

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சொல்லுங்கோ பார்ப்பம் கூட்டமைப்பை உங்களால் வழிநடத்த முடியுமா? முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக் கூடாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.