Jump to content

திருமலை பாலத்தடிச்சேனை பகுதியில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு!


Recommended Posts

பதியப்பட்டது

 

திருகோணமலை மாவட்டத்தின் பாலத்தடிச்சேனை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தபோது, அந்தப் பகுதி மக்கள் கூட்டம் நடத்துவதானால் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட்டமைப்பினர் பதில் அளிக்கவேண்டும் என்று கேட்டு இருந்தனர் முதலில் அதற்கு உடன்பட்டவர்கள். பின்னர் கூட்டம் ஆரம்பமாக முன்னர் இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒரு வேட்பாளர் விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளார் அதனை அறிவிப்பதற்காக கூட்டம் தான் என்று கூறியுள்ளார். அதனால் அங்கு நின்ற மக்கள் இங்கு கூட்டத்துக்கு அனுமதி எடுக்கும் போது சொன்னது ஒன்று இப்போ கூட்டம் வேறு நோக்கம் என்றால் இங்கு  கூட்டம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று அதனை எதிர்த்து மக்கள் முரண்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூதூர் தொகுதி கிழக்கு மாகாண அவை உறுப்பினர் திரு நாகேஸ்வரன் தனது குழுவினருடன் சென்று அந்த மக்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் கூட்டம் நடத்தவிடாமல் தடுத்தால் பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று களத்தில் இருந்து தகவல் அனுப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனனியின் பாலத்தடிசேனை செயற்பாட்டாளர் திரு பிரபா (பாலத்தடிசேனை கிராம அபிவிருத்தி சங்க தாலைவர்) அவர்களிடம் விசாரித்தோம்,

எங்களிடம் கூடத்துக்கு அனுமதி எடுக்கும் போது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கூட்டமாக நடைபெறும் என்று கூறித்தான் அனுமதிஎடுத்தார்கள்.

பின்னர் கூட்டம் ஆரம்பமாகப்போகின்றது நீங்க இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார்கள். ஏன் என்று கேட்டதற்கு இது கூட்டமைப்பின் இரகசியக்கூட்டம் என்றும் இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒரு வேட்பாளர் பிரிந்து வந்து எம்முடன் சேர்ந்துள்ளார் என்றும் கூறி எம்மை வெளியேற்ற முற்பட்ட போது, இந்த ஊர்க்காரர்களான எம்மை எப்படி வெளியேபோ என்று சொல்வீர்கள் மற்றது  கூட்டத்துக்கு அனுமதி எடுக்கும் போது ஒரு காரணமும் இப்போ வேறு ஒரு காரணமும் சொல்வதால் பொய்சொல்லி அனுமதி எடுத்த இந்தக் கூட்டத்தை நடத்த விட்டமாட்டோம் என்று எதிர்த்தோம்.
என்று பதில் அளித்துள்ளார்.

குறிப்பு : திரு ரூபன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் களம் இறங்கிய நாள் முதல், இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டு சினத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றார்கள் என்று கூறப்டுகின்றது.

http://www.pathivu.com/news/42154/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.