Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டைப் பிரிக்குமாறு நாங்கள் கோரவில்லை சமத்துவமான மக்களாக வாழ விரும்புகின்றோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

sammanthan_1_0.jpg

நாட்­டைப்­ பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை. ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பில் நேற்றுமுன்தினம் சனிக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­திற்கு முன்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரேம்நாத் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய சம்­பந்தன் நாட்­டைப்­பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை.

ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லாஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம். அதற்கு மேல­தி­க­மாக நாங்கள் எதையும் கேட்­க­வில்லை.

இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு சுதந்­தி­ர­மாக எவ்­வித தடை­யு­மில்­லாமல் சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வை ஏற்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படல் வேண்டும்.

எமது தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாட விட­யங்கள் தொடர்­பாக பொரு­ளா­தார சமூக கலா­சார அர­சியல் ரீதி­யான விட­யங்கள் தொடர்­பாக இணைந்த வட கிழக்கில் எவ­ருக்கும் எவ்­வி­த­மான பாதிப்­பு­மில்­லாமல் எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்டு இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை ஏற்றுக்கொண்ட அடிப்­ப­டை­யிலும் 13 ஆவது திருத்­தத்தின் ஊடா­கவும் வடக்கு, கிழக்கும் இணைக்­கப்­படல் வேண்டும். அது அர­சியல் அல­காக இருக்க வேண்டும் என்­ப­தையும் நாங்கள் கூறி­யி­ருக்­கின்றோம்.

ஒரு­மித்த நாட்­டுக்குள் நாட்டை பிரிக்­காமல் நாடு பிளவுபடாமல் எவ்­வி­த­மான அர­சியல் தீர்வு வர­வேண்­டு­மென்­பதை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளிவாக நாங்கள் கூறி­யி­ருக்­கின்றோம்.

இன்­றைய சூழலில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. ஒரு பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் இந்த இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வரப்­போ­கின்­றதா அல்­லது நீதியின் அடிப்­ப­டையில் நியா­யத்தின் அடிப்­ப­டையில் உலகின் பல் வேறு நாடு­களில் தற்­போது இருந்து வரு­கின்ற அர­சியல் ஒழுங்­கு­களின் பிர­காரம் தனித்­து­வ­மான இனத்தைச் சார்ந்த மக்கள் தனித்­து­வ­மான மதத்­தினை சார்ந்த மக்கள் தனித்­து­வ­மாக மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களின் அடிப்­ப­டையில் இந்த நாட்டில் ஒரு அர­சியல் தீர்வு ஏற்­படப் போகின்­றதா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாகும்.

பத்து இலட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியே­றி­யி­ருக்­கின்­றார்கள். 5 இலட்சம் மக்கள் நாட்டில் குடி­பெ­யர்ந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் இன்னும் மீள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.
ஒன்­றரை இலட்சம் மக்கள் வீடி­ழந்­துள்­ளார்கள். போர் நடந்த காலத்தில் மாத்­திரம் சுமார் எழு­ப­தா­யிரம் மக்கள் இறு­திக்­கட்­டத்தில் உயி­ரி­ழந்­துள்­ளார்கள்.

நாங்கள் பேர­ழி­வு­களை சந்­தித்­துள்ளோம். இது தொடர்­க­தை­யாக இருக்­கப்­போ­கின்­றதா இவை தொடர்­வ­தாக இருந்தால் தமிழ் தேசியம் இந்த நாட்டில் அழிக்­கப்­படும். இன அழிவு ஏற்­படும். இன அழிவு ஏற்­ப­டாமல் இருப்­பதாக இருந்தால் இந்த நாட்டில் நியா­ய­மான நிரந்­த­ர­மான உறு­தி­யான நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடிய நிலை நிற்கக் கூடிய ஒரு அர­சியல் தீர்வு வர­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். அது தான் எமது நிலைப்­பாடு. இதற்கு எல்­லோரும் பதில் சொல்ல வேண்­டிய நிலைமை இந்த தேர்தல் முடிந்த பிறகு ஏற்­படும். ஆகவே இதற்­காக தமிழ் மக்­க­ளு­டைய பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பங்­க­ளிப்பும் முக்­கி­ய­மான பங்­க­ளிப்­பாகும்.யாழ்ப்­பாணம் மாவட்­டத்­திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்­வது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திரு­மலை வட மாகா­ணத்­திற்கும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்­கு­மி­டையில் பால­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த தேர்தலில் நாம் இரு­பது ஆச­னங்­களைப் பெறுவோம் என எதிர்பார்க்­கின்றோம்.
யாழ்ப்­பா­ணத்தில் 6 உறுப்­பி­னர்­க­ளையும், வன்­னியில் 5 உறுப்­பி­னர்­க­ளையும், மட்­டக்­க­ளப்பில் 4 உறுப்­பி­னர்­க­ளை யும் அம்­பா­றையில் ஒரு உறுப்­பி­னரை பெற­வேண்டும்.
திரு­கோ­ண­ம­லையில் இரண்டு உறுப்­பி­னர்­களைப் பெற­வேண்டும்.

தேசியப் பட்­டி­யலில் இரண்டு உறுப்­பினர்­களைப் பெற வாய்ப்­புண்டு.

மொத்­த­மாக இரு­பது உறுப்­பி­னர்­களை பெற­வேண்டும்.

மட்­டக்­க­ளப்பில் நிச்­ச­ய­மாக நான்கு உறுப்­பி­னர்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பெற­வேண்டும். அது நமக்கு அத்­தி­யாவ­சி­ய­மான ஒரு தேவை. வடக்கும் கிழக்கும் இணைந்து ஒன்­றாக இருப்­ப­தற்கு மட்­டக்­க­ளப்பில் நான்கு ஆச­னங்­களைப் பெற்று வெற்­றியை அடைய வேண்­டி­யது நமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை. அதை உணர்ந்து மட்­டக்­க­ளப்பில் வாழ்­கின்ற தமிழ் மக்கள் அனை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிப்­பது ஒரு புனி­த­மான கடமை. தற்­போது வாழும் மக்­க­ளுக்­கா­கவும் பின் சந்­த­தி­யி­ன­ருக்­கா­கவும் நாங்கள் நிறை­வேற்ற வேண்டிய கடமையை நாங்கள் தவறக் கூடாது.

இது நமது உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு போராட்டம். நமது உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

அவை நியாயமானவை. அவை நீதியா னவை, அவற்றை மறுப்பது கடினம் என்ற அபிப்பிராயம் இன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதை உறுதி செய்யக் கூடியவாறு தமிழ் மக்களின் தேர்தல் தீர்வு அமைய வேண்டும்.

அவ்வாறான ஒரு வெற்றியை ஏற்படுத் துவது தமிழ் மக்களின் புனிதமான கடமை. ஒரு போதும் நாங்கள் கைவிடமாட்டோம். இந்தப்பிரச்சினையை விரைவில் நாங்கள் தீர்ப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/08/10/நாட்டைப்-பிரிக்குமாறு-நாங்கள்-கோரவில்லை-சமத்துவமான-மக்களாக-வாழ-விரும்புகின்றோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் நீரை இலகுவாக உருவாக்க முடியும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறோம்!

நீரானது நாம் தினமும் சுவாசிக்கிறோமே.. அந்தப் பிராண வாயுவிலிருந்து ஒரு துணிக்கையையும்..பலூன்களை உயரப் பறக்க விடும்போது உபயோகப்படுத்துகிறோமே .. அந்த ஐதரசன் வாயுவிலிருந்து இரண்டு துணிக்க்கைகளையும் சேர்க்கும் போது உருவாகும்!

பிராணவாயு எங்கும் நிறைந்திருக்கின்றது! ஐதரசன் வாயுவும் இருக்கின்றது!

இரண்டையும் சேர்ப்பது மட்டும் தான் எங்கள் வேலை!

ஏன் தாமதம் என்கிறீர்களா?

காலமும், நேரமும் சரி வரவேண்டும்! இப்போது எல்லாமே சரியாக அமைந்திருக்கின்றன!

தேர்தல் முடிவு மட்டும் தான் தேவை! அதுவும் உங்கள் கையில்...!

ஜெய் ஹிந்த்.... மன்னிக்கவும்.. தமிழீழம் எங்கள் தாயகம்... மன்னிக்கவும்.. சமத்துவம்.. சம உரிமைக் கோட்பாடு.... மன்னிக்கவும்...ஒரே நாடு, இரு தேசங்கள்...மன்னிக்கவும்.. பதின்மூன்றாவது   திருத்தப் படி தீர்வு...மன்னிக்கவும்...தயவு செய்து வாக்களியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.   நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்க்கப்படுகின்றது. வேறு எந்த தமிழ் கட்சிகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை.   இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க விரும்பவில்லை. எமது உடனடி தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய அவர் விரும்பவில்லை. அவருடன் பல தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம் . இந்த பேச்சுக்களின்போது மஹிந்த எங்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டாரே தவிர தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கும், தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் -

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=579084190910746328#sthash.KclyrMgk.dpuf

இச்செய்தியை, கூட்டமைப்பினது ஆஸ்தான செய்தித்தாளாகிய உதயன் இப்படிப் பத்தியிட்டுள்ளது

போர்முடிவுக்கு வந்தபின்னர் என்ற சொற்பதம் எனப்படுவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றது அதாவது விடுதலைப்புலிகள் பலமான விடுதலை இயக்கமாகவிருந்த காலகட்டத்தில் இலங்கைத்தீவை இருகூறுகளாகப்பிரித்து தமிழீழம் காண்பதே எமது நோக்கம் என்பதில் அவர்கள் உறுதியாகவிருந்த வேளையில் அவர்களது ஆயுத பலத்தினூடான போராட்டத்துக்கு இணையான அரசியல் முண்ணணியாகவே அதாவது தமிழீழக்கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியிருக்கையில் சம்பந்தர் ஐயா தேர்தல் மேடைகளில் ஏறிநின்று சிங்களத்துக்குச் சிங்கக்கொடியுடன் வெள்ளைக்கொடியையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முகாமில் நின்று காட்டுவது அவ்வளவு அழகல்ல. 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது எனும் கருத்து இப்போது இருப்பதனால் கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற புலிகளது எச்சங்கள் கூட்டமைப்பில் இருக்கக்கூடாது என்பதைப்போல் தமிழர்விரோததேசம் இந்தியாவினது விருப்பமாக புலிகளது எச்சமாக எஞ்சியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் இல்லாதொழிப்பதெனும் நிகழ்ச்சி நிரலுக்கு சம்பந்தர் ஐயா அவர்கள் தூபம்போடுகிறார்.

இந்நிகழ்ச்சி நிரலின்படியே சுமந்திரனை "தென்னிந்தியத் திருச்சபையின்" மீது இந்திய அரசுக்கிருந்த ஆதிக்கத்தின் காரணமாக பிவழி அங்கத்தவராக உள்நுழைக்கப்பட்டது. இதில் தமிழர்விரோததேசம் இந்தியா முக்கால் கிணறு தாண்டிவிட்டதாகவெ தெரிகின்றது. 

காலப்போக்கில் சம்பந்தர் ஐயா இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்த்ததின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடையங்கள் தவிர எதையுமே நாம் கோரவில்லை எனக்கூறக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.