Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூடியூப் பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு- தெய்வங்கள் வாழும் வீடு செய்வோம்!

 

 
 
 
1_3175301f.jpg
 
 
 

ஜூன் 15 - உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு தினம்

முதியோர்கள்- வயதில் மட்டுமா பெரியவர்கள்? அனுபவத்தில், சொல்லில், செயலில், சிந்தனையில், நற்பண்பில், வாழ்க்கையில் என அனைத்திலுமே பெரியோர்கள்.

குழந்தைப் பருவத்தில் அவர்களைப் பார்த்தே வளர்ந்து, அவர்களால் கவரப்பட்டு, அவர்களையே பின்பற்றிய நாம், நமது இளமைப் பருவத்தில் அவர்களை ஒதுக்கலாமா? சரியான உணவு, உடை அளிக்காதது மட்டும்தான் கொடுமையா? 'உனக்கு இதெல்லாம் தெரியாதும்மா', 'இதுல எதுக்குப்பா தலையிடறீங்க?', 'உங்க அப்பா, அம்மாவுக்கு என்ன தெரியும்?' என்னும் சொற்களும் அவர்களைத் துன்புறுத்தும்.

ஆறில்லா ஊருக்கும், ஆளில்லா வீட்டுக்கும் அழகு பாழ்தானே..

அம்மாவும், அப்பாவும் எந்நாளும் வீட்டுக்கு சாமி போல்தானே...

*

பெற்றவர் இல்லா வெற்றிடம் எல்லாம்

காற்று இல்லா விளைநிலம்தான்..

*

உருவம் வரைந்த உறவுகள் இங்கே உதிர்ந்திடலாமோ..

உயிரை ஊதிய கருவறை சொந்தம் கலங்கிடலாமோ...

வரிகளே போதும், வலியை உணர்த்திச் செல்ல..!

காணொலியைக் காண:

அமலன் ஜெரோமின் வரிகள் குறும்படத்துக்கு வலிமை சேர்க்கின்றன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது.

முகச் சுருக்கமும், கண்களின் கனிவும் முதியோரின் அனுபவம் பேசும். நல்லதை வீசும். ஆனால் அதை என்றாவது காதுகொடுத்துப் பொறுமையாகக் கேட்டிருக்கிறோமா? இனியாவது கேட்கலாமே!

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-முதியோர்-வன்கொடுமை-எதிர்ப்பு-தெய்வங்கள்-வாழும்-வீடு-செய்வோம்/article9727720.ece

  • 2 months later...
  • Replies 158
  • Views 29.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நிஜம் பேசும் யூடியூப் கண்மணி

18chgowprabhuram

இயக்குநர் பிரபுராம் வியாஸ்

18chgowlivin

கண்ணா ரவி, அம்ருதா ஸ்ரீநிவாசன், நவீன் ஜார்ஜ் தாமஸ் (இடமிருந்து வலம்)

 

தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூப் சேனல் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’. ஏழு லட்சம் ரசிகர்களைக் கொண்ட இந்த யூடியூப் சேனல், தன்னுடைய முதல் வலைத் தொடரைச் (Web-Series) சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ‘லிவ்இன்’ (Livin) என்ற இந்த வலைத் தொடர் யூடியூப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமான இந்த வலைத் தொடர்கள், இப்போது தமிழில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. ‘ஆஸ் ஐ’ம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ (As I’m suffering from Kadhal) என்ற வலைத் தொடருக்குப் பின்னர் தமிழில் வெளியான இந்த ‘லிவ்இன்’ தொடர் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 13 எபிசோட்களாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் இதுவரை ஒன்பது எபிசோட்கள் யூடியூப்பில் வெளியாகியிருக்கின்றன.

 

இணைந்து வாழும் கலாச்சாரம்

பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் இந்தத் தொடர், திருமணம் செய்யாமல் இணைந்துவாழும் ஓர் இளம் ஜோடியின் வாழ்க்கையை இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பதிவுசெய்கிறது. ஒளிப்படக் கலைஞரான ஹரிஷ் (கண்ணா ரவி), அவருடைய விசித்திரமான நண்பர் ஸ்வாமி என்கிற சாம் (நவீன் ஜார்ஜ் தாமஸ்), எழுத்தாளர் கனவிலிருக்கும் ஹரிஷின் கேர்ள் ஃபிரண்ட் ஹரிதா (அம்ருதா ஸ்ரீநிவாசன்) என மூவரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது இந்தத் தொடர்.

18chgowlivin3

இணைந்து வாழும் உறவின் பல்வேறு பரிமாணங்களையும் இந்தத் தொடர் அலசியிருக்கிறது. “மில்லேனிய இளைஞர்கள் சுதந்திரமாக வாழ்வதை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் எதற்காக, எப்படி அந்தத் தேர்வைச் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது இரண்டு தனிநபர்களின் தேர்வு. அதை நாம் கேள்விக் கேட்க முடியாது. இந்தக் கருத்துகளைப் பின்னணியாக வைத்தே இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறேன்.

இணைந்து வாழும் ஓர் இளம் ஜோடி எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள், அவர்களுக்குக் காதல் கொடுக்கும் உத்வேகம் போன்ற அம்சங்களை இந்தத் தொடரில் பேசியிருக்கிறோம். அத்துடன், அந்த இளம்ஜோடிக்கு இடையூறாக ஒரு மேதாவி நண்பன் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை சேர்த்தவுடன் அது தொடரை நகைச்சுவையாகவும் மாற்றியிருக்கிறது” என்று தொடர் உருவான பின்னணியைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொறியியல் பட்டதாரி. தற்போது அடுத்த தொடருக்குத் தயாராகிவருகிறார்.

 

துணிச்சலும் பொறுப்பும்

திரைப்படங்களோ தொடர்களோ எதுவாக இருந்தாலும், அதில் நாயகிகளைப் பொறுப்பானவர்களாகவும் நாயகன்களைப் பொறுப்பற்றவர்களாகவும் சித்தரிப்பார்கள். ஆனால், இந்தத் தொடர் சற்று வித்தியாசமாகயிருக்கிறது. இதில் நாயகன் ஹரிஷ், வீட்டைச் சுத்தமாக வைத்துகொள்ள முயல்வதும், நாயகி ஹரிதா குப்பை போடுவதுமாக இருக்கிறார்கள்.

தாங்கள் மூவரும் இணைந்துவாழ்வதைப் பற்றி வீட்டு உரிமையாளர், சகோதரி என மற்றவர்களிடம் சொல்லுவதற்குத் தயங்குகிறான் நாயகன் ஹரீஷ். இதற்கு முற்றிலும் நேர்மாறாக, எல்லோரிடமும் எப்போதும் துணிச்சலுடன் உண்மையைப் போட்டு உடைக்கிறாள் ஹரிதா.

18chgowprabhuram

இயக்குநர் பிரபுராம் வியாஸ்

இவர்கள் இருவருக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு, அறிவியல் புனைவு, ஈரானிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நண்பனாக வரும் சாம். இவர்கள் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“தொடர் வெளியானவுடன் ரசிகர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்தார்கள். சிலருக்கு ‘லிவ்-இன்’ என்ற கருத்து பிடிக்கவில்லை. சிலருக்குப் பிடித்திருந்தது. இப்படி இரண்டு தரப்பும் இயல்பாகவே ‘லிவ்-இன்’ பற்றிய உரையாடலைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கதாபாத்திரங்களை நான் கடந்து வந்த மனிதர்களின் சாயல்களிலிருந்தே உருவாக்கி இருக்கிறேன். இது வேறு எங்கோ நடக்கும் விஷயம் என்று சொல்ல முடியாது.

இந்தத் தொடரில், இணைந்து வாழும் ஜோடிகளின் வாழ்க்கையைக் கூடுமானவரை யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறேன். எந்தவொரு கருத்தைப் பற்றியும் ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்துவதுதான் ஒரு படைப்பாளியின் கடமை. அதை ‘லிவ்இன்’ தொடரில் செய்திருக்கிறேன்” என்கிறார் பிரபுராம்.

திருமணம், குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் தனிமனிதனின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தலையீடுகளைச் செய்கின்றன என்பதை இந்த வலைத் தொடர் அலசுகிறது. திருமணம் எனும் பந்தத்தில் இல்லாத சமத்துவம் இணைந்து வாழும் பந்தத்தில் எப்படி உருவாகிறது என்பதையும் சில அழகான காட்சிகளில் பதிவுசெய்திருக்கிறது இந்தத் தொடர்.

http://bit.ly/2v6Ea1y

 

http://tamil.thehindu.com/society/lifestyle/article19509560.ece

Edited by நவீனன்

  • 4 months later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: என்றென்றும் இதயத்தோடு கலந்துவிட்ட 'அன்னா'வின் கதை

 

 
anna

வாழ்க்கையில் நாம் கடந்துவந்த சில உணர்வுகளை சற்றே புரட்டிப் பார்ப்பதுபோல் உள்ளது அன்னா எனும் மலையாளக் குறும்படத்தைப் பார்க்கும்போது. எட்டரை நிமிடத்திற்குள் அப்படியொரு கதையை சொல்லிவிடமுடியுமா? அதுவும் மனசைத் தைக்கும் விதமாக.

சில விநாடிகளிலேயே கடந்துபோகும் விளம்பரத்தில் கூட ஒரு சின்னஞ்சிறு கதையை சொல்லிவிடுகிறார்கள். ஆண் பெண் அன்பைப் பற்றி பேசும் 'அன்னா' என்ற எட்டு நிமிட மலையாளக் குறும்படம்கூட அத்தகைய அழகோடுதான் மிளிர்கிறது.

கடற்கரையில் தோன்றி பேசிச் செல்கிறான் அபி எனும் இளைஞன்.

''என் பெயர் அபி, நான் என்னைப்பத்தி எதுவும் சொல்ல விரும்பலை, ஏன்னா என்னப் பத்தி சிறப்பா சொல்ல எதுவும் இல்லை. ஆனா எனக்கு அன்னாவைப் பத்தி நிறைய சொல்லணும். என் அன்பிற்குரிய அன்னா எனக்கே சொந்தமானவள். ஆரம்பத்துல அவளை மத்த பொண்ணுங்களை பாக்கற மாதிரிதான் பார்த்தேன்...

என்ன சொல்றது பெண் சுகத்தைத் தரக்கூடியவள்... இப்படித்தான் என் பார்வை இருந்தது. நான் உல்லாசமாக ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். அதே நோக்கத்திலேயே அவளிடம் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்க விரும்பினேன்.. ஆனால் அதற்கு அவள் உடன்படவேயில்லை... என் விருப்பத்துக்கு இணங்கவேயில்லை...

இதனால அவளை வெறுத்தேன். அவளைப் புறக்கணிச்சேன்... ஆனாலும் அவள் என்னைவிட்டுவிலகலை....'' என்று தன் வாழ்வில் இடம்பெற்ற காதலியைப் பற்றித்தான் ஆரம்பத்திலிருந்து படத்தின் கடைசிவரை அவன் பேசி முடிக்கிறான்.

இதற்கிடையில் சின்னச்சின்ன பிரேம்களில் ஒரு அழகிய காதல் கதை விஷுவலாக நம்மைக் கடந்துபோகிறது. இதில் என்ன இருக்கிறது? வழக்கமான கதைதானே என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அவசரப்படாதீர்கள்... படத்தைப் பாருங்கள்.. கடைசிவரை.... வாழ்க்கைக் கடலில்தான் எவ்வளவு பெரிய அலைகள் என்பதை உணர்வீர்கள்...

 

அபியாக வரும் தினுபால், காதலியாக வரும் ஜாய்மி ஆஃப்செல் சிறப்பாக பங்கேற்று நடித்துள்ளனர். உன்னி அபிஜித் குழுவினரின் ஒளிப்பதிவு கண்ணை உறுத்தாத அதேநேரத்தில் மெல்லிய அழகியலோடு வெளிப்பட்டுள்ளது.

நாயகனைப் பற்றி பாவனைகள் அற்ற அறிமுகம் மனசோடு பேசும் உணர்வோட்டம் மிக்க தருணங்கள், சின்னஞ்சிறு பிரேம்களிலேயே நாயகியின் கதையோட்டத்துடனான மனோ பாவங்களைக் வெளிக்கொணர்ந்திருப்பது என நல்லதொரு இக்குறும்படத்தைத் தந்த இயக்குநர் எல்தோஸ் லோமி பெரிய திரைப்படத்தை தரமாக தரக்கூடிய எதிர்பார்ப்பை தருகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22396643.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

 

 
woman%20h2o%20003

நாளுக்குநாள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கோ அத்தி பூத்தாற்போல் பெண்மைக்கு சிலர் உரிய மரியாதையும் கவுரவமும் தரக்கூடும்.

அது பெரிய விஷயமல்ல. காரணம் பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்ளுதலும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் பெண் சார்ந்த புரிதலற்றவர்களின் எண்ணிக்கையும்தான் அதிகம்.

நான் லீனியராக தொகுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கிஷோர், ஜெனோ, நிவேதா, மெல்ட்டன், கல்யாணி, ஷாந்தினி ஆகியோரின் நடிப்பில் 'வுமன் எச்டிஓ' குறும்படம் அதை அழுத்தமாகப் பேசியுள்ளது. நசுக்குபவர்களிடம் அழுத்துபவர்களிடமிருந்து வீறுகொண்டு எழும் பெண் சக்தியின் வீரியத்தையும் பேசத் தவறவில்லை.

காட்சிமொழி சார்ந்த கலை வடிவத்திற்கு எவ்வளவு உண்மையாய் இருக்கமுடியுமோ அவ்வளவு உண்மையாய் உழைத்திருக்கிறார்கள் இதில் பங்கேற்றவர்கள். அதில் முக்கியமானது வசனத்தை முன்னிறுத்தாமல் காட்சி ரீதியாகவும் உருவக ரீதியாகவும் முன்னிறுத்த முயன்றிருப்பது.

தரையில் படரும் நீராய், பாத்திரத்தில் நிறையும் நீராய், அடுப்பில் கொதிக்கும் நீராய், சில்லிடும் தட்பவெப்பத்தில் பனிக்கட்டியாகும் நீராய் ஆரம்பத்தில் பிடிபடாமல் போன உருவகக் காட்சிகள் பின்னர் நமக்குப் பிடிபடுகின்றன.... ''நீரோ இவள்.. துயரில் துயில்கிறாள், கண்ணீரோ இவள் விழிகளில் கசிகிறாள்... மழைச்சாரல் இவள் பூமியை நனைக்கிறாள்..'' என்ற பாடல் குறும்படம் முடிவதற்கு முன் வந்து நான் லீனியராக வந்த காட்சிகளை அழகாக அர்த்தப்படுத்துகிறது. இதன் இசையும் வரிகளும் ஜோசய்யா இம்மானுவேல் படத்தின் முக்கிய பலம்.

'வுமன் எச்டிஓ' எனும் இந்த நவீன முயற்சிமிக்க சங்கர நாராயணனின் படத்தொகுப்பு தகுந்த வேலைப்பாட்டுடன் முக்கிய பங்காற்றியுள்ளது

குறுங்குறு காட்சிகளால் சமூகத்தில் இன்றுள்ள பெண்ணின் இடத்தை கவனமாக பதிவு செய்துள்ளதோடு பெண் சக்தியின் பரிமாணங்களை உருவகமாகவும் காட்சிப்படுத்திய இயக்குநர் க்ருஷி பாராட்டுக்குரியவராகிறார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/article22535464.ece?homepage=true

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வலைதளங்களில் வைரலாகும் 'அருவி' பிரணிதா நடிகர் சூர்யா சந்திப்பு வீடியோ

 

 
surya%20praneetha

அருவி திரைப்படத்தில் குட்டி அருவியாக நடித்துள்ள பிரணிதா நடிகர் சூர்யாவை சந்தித்து வாழ்த்துகள் பெற்ற வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதில், குழந்தை நட்சத்திரத்தின் திறமையை நடிகர் சூர்யா சக நண்பனைப்போல பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள் நம்மீது திணித்துள்ள நுகர்வுக்கலாச்சாரத்தை மட்டுமல்ல, ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட தீங்கை புரிந்துகொள்ளாத சொந்தக் குடும்பம், அவரைச் சுற்றிலுமுள்ள மனிதர்கள், மீடியாக்களின் அட்ராசிட்டி என அனைவரின் பாசாங்குத்தனங்களையும் தோலுரித்துக்காட்டிய படம் அருவி. இப்படத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட அருவியாக வந்து மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகவே பலரது பாராட்டைப் பெற்றிருந்தார் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த நடிகை அதிதி பாலன்.

இப்படத்தில் குட்டி அருவியாக நடித்து பார்வையாளர் மனதைக் கொள்ளைகொண்டவர் குழந்தை நட்சத்திரம் பிரணிதா.

''கொகோ கொக்கோகோ

குன்னாட்டி கொழகட்ட கொழுக்கட்ட

குட்டி குட்டி கொழுக்கட்ட

கொடுத்து கொடுத்து தின்னாக்கா..

இனிக்கும் வாழ்க்கை கொழுக்கட்ட

குட்டி கொழுக்கட்ட வளந்தாச்சி..

சீனி சக்கர இனிப்பாச்சு...

சிட்டுக்குருவி குடும்பத்துல

கொட்டும் அருவி கலந்தாச்சு...''

என்று அருவி, படத்தில் வரும் முதல் பாடலுக்கான காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வந்து சில்லென்ற இளங்காற்றாய் பூமியின் குளிர்ச்சியை உணரவைக்கும்.

பிற்காலத்தில் சமூகத்தின் வெப்பம் தாளமுடியாமல் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியும் அழகுமிக்கதாய் இருந்தது என்பதை பார்வையாளரை உணரும்படி செய்திருப்பார் பிரணிதா. பிரணீதாவின் இக்காட்சிகள், மீதியுள்ள படம்முழுவதும் உள்ளீடாய் இருந்துகொண்டு நம்மனதை பிசைந்துகொண்டே இருக்கும்.

நடிகர் சூர்யா தனது பிஸியான அலுவல்களுக்கிடையிலும் பிரணிதாவை சந்திக்க அனுமதி வழங்கினார். சூர்யாவை சந்தித்தபோது பிரணிதா சூர்யா நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலை உயிர்ப்போடு பாடிக் காட்டினார். அவரது திறமையை  வியந்து பாராட்டிய சூர்யா ஆனால் எப்போதும் கற்பதை மட்டும் நிறுத்தவேண்டாம் எனக் கூறினார்.

 

இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22794907.ece

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'அணுகும்' ஆண்களை இனங்காட்டும் 'பச்சோந்தி' குறும்படம்

 
CapturePNG

’பச்சோந்தி’ குறும்படத்தில் வரும் ஒரு காட்சி

நன்றாகப் படித்து பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களாக இருக்கட்டும், தங்களுடைய அடிப்படை வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வீட்டு வேலை செய்யும் பெண்களாக இருக்கட்டும், யாரும் தங்கள் மேலதிகாரிகளின் பாலியல் சீண்டல்களிலிருந்தும், அவர்களை போகப்பொருளாக பார்க்கும் பார்வையிலிருந்தும் தப்பிக்க முடிவதில்லை.

பணியிடங்களில் மேலதிகாரியாக இருப்பதால் மட்டுமே தனக்கு கீழ் பணிபுரியும் பெண்களை நமக்கு சொந்தமானவர்கள், அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்ட ஆண்களே இங்கு அதிகம்.

அப்படிப்பட்ட ஆண்கள் நமக்கே தெரியாமல் நம் அருகிலேயே, ஏன் அவர்கள் நமக்கு மிக நெருக்கமான உறவாக இருக்கக்கூடும் என்பதை ‘பச்சோந்தி’ குறும்படம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

பெருநிறுவனமொன்றில் வேலை பார்க்கும் லஷ்மியை, அவருடைய மேலதிகாரி தன்னுடைய அறைக்கு அழைக்கிறார். அப்போதே நமக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. ஆனால், உள்ளே என்ன நடந்தது என்பதை நமக்கு காட்டாமல், அடுத்த காட்சியில் லஷ்மி தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெறுகிறது. அறையில் நிகழ்ந்தவற்றை லஷ்மி தன் அம்மாவிடம் எடுத்துக்கூறி அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனைக்காக காத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவருடைய அம்மா எடுத்த எடுப்பிலேயே, “வேலையை விட்டுவிடு”, “கல்யாணம் செய்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது” என, பாதிக்கப்பட்ட தன் மகள் மீதே பழியை சுமத்துகிறார். அப்போது எதிர்பாராமல் வரும் லஷ்மியின் அப்பா, தன் மகளுக்கு நம்பிக்கையளித்து நடந்தவற்றைக் கூறச் சொல்கிறார். அதுமட்டுமின்றி என்ன செய்யவேண்டுமெனவும் ஆலோசனை கூறுகிறார்.

சாமிகள் எங்கும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்கும் வழிமுறைகளையும் கூறியுள்ளது ஆறுதலான விஷயம். இப்படத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகவே தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளார்கள்.

ஏ டென் ஹெட் மீடியா புரடக்ஷன்ஸ் தாயாரித்திருக்கும் இந்தக் குறும்படத்தை நடிகர் சம்பத் ராஜ் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தைப் பார்த்தால் ‘சாமி எல்லா இடத்துலயும் இருக்கு’ன்னு பெரியவங்க ஏன் சொன்னார்கள் என்பது புரிந்துவிடும்.

குறும்படத்தைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/article23279774.ece

  • 1 month later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மறைந்த அபிமான பாடகி ஸ்வர்ணலதாவுக்கு வினைதாவின் இசை அஞ்சலி


 

 

vinaitha-singer-swarnalatha

 

 

''குயில் பாட்டு வந்தது இளமானே...'' என்ற இளையராஜாவின் பாடல் இன்றும் நம் நினைவுகளை வருடிக்கொண்டிருக்கிற ஒரு தாலாட்டு. தேனினும் இனிய இந்தக் குரலுக்கு சொந்தமானவர் மறைந்த தமிழ்த் திரையிசை பாடகி ஸ்வர்ணலதா. 

இந்த ஹம்மிங் ராணிக்கு வித்தியாசமான இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார் அவரது தீவிர ரசிகையும் பாடகியுமான வினைதா சிவக்குமார். இந்த வீடியோ ஆல்பத்தில் ஒரு கனவின் ஜாலங்களைப் போல ஸ்வரக்கோவையில் பின்னிப் பிணைந்து ஸ்வர்ணலதாவின் ராகங்கள் வெளிப்பட்டுள்ளன. 

''நான் 8 வயதிலிருந்தே ஸ்வர்ணலதாவுக்கு ரசிகையாக இருக்கிறேன். எந்தப் போட்டியென்றாலும் அவரது பாடல்களைத்தான் பாடுவேன். உண்மையில் நான் அப்படி தேர்ந்தெடுத்துப் பாடிய பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர் ஸ்வர்ணலதா என்று எனக்குத் தெரியாது'' என்கிறார் வினைதா. 

சில ஆண்டுகள் கடந்த பின்னர், வினைதா ஒரு தொலைக்காட்சி இசைப் போட்டியிலும் வெற்றிபெற்றார். அப்போதுதான் தெரிந்தது, பரிசு வாங்கித் தந்த இந்தப் பாடல் மட்டுமல்ல, தான் இளவயதிலிருந்து பாடி வந்த அனைத்துப் பாடல்களையும் பாடியவர் ஸ்வர்ணலதா என்று. இது தற்செயலான ஒன்றுதான். அதன்பின்னர் யாராவது என்னை உங்கள் மனங்கவர்ந்த பாடகர் யார் என்று கேட்டால் உடனே அவர் சொல்லும் பதில், ''ஸ்வர்ணலதா''

தற்போது யுவன் ஷங்கர் (ராஜா தீராத விளையாட்டுப் பிள்ளை), தாமன் தரன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடுவதில் பிஸியாக இருக்கும் இந்த 29 வயதுப் பாடகி, தனது அபிமான பாடகியைப் பற்றி விரிவாகப் பேசுவதில் மின்சார பாய்ச்சல்....

''என் மரியாதைமிக்க இசைக்கலைஞருக்காக வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனை நிறைவேற்றும்விதமாக, தொடர்ச்சியாக ''தி ஹம்மிங் குயின்'' என்ற பெயரில் இசை வீடியோக்களை வெளியிட்டு வந்தேன். நான் விரும்பியதற்கேற்ப, சாய்நாத் சாய் கிருஷ்ணன் இதற்கான கருத்துருவாக்கம் செய்துகொடுத்தார். இத்திட்டத்தில் வெளிவந்துள்ள சமீபத்திய வீடியோ ஸ்வர்ணலதாவின் புகழ்மிக்க பாடல்களின் சின்னச்சின்ன  வரிகளை எடுத்துக்கொண்டு ஹம் செய்துள்ளேன்.

90களின் தமிழ்த் திரையிசையில் எண்ணற்ற இசையமைப்பாளர்களின் இசைக் கோர்வையில் வேறுபட்ட எண்ணற்ற பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ரசிகர்களைக் கட்டிப்போடும் அவரது தனித்துவமான குரலால் திரையிசைக்கே பெருமை சேர்த்தவர். இதுகுறித்து அவரது குரலை நான் ஓரளவுக்கு உணர்ந்துள்ளேன், 

ஸ்வர்ணலதா குரல் தொழில்நுட்ப ரீதியாகவே தனித்துவமான அதேநேரம் பிரதிபலிக்க கடினமாகவும் இருக்கூடியது. அவரது குரலின் தன்மைக்கு என்று ஒரு ஆற்றல் உண்டு. எந்த மாற்றமும் தேவைப்படாமலேயே அவரால் உயரர்ந்த இடத்தை அடைவதற்கு அந்த ஆற்றலே காரணம்.

என்றாவது ஒருநாள் ஸ்வர்ணலதாவை சந்திப்போம் என்ற நம்பிக்கையில் வளர்ந்துகொண்டிருந்தேன். 2010ல் அவரது மரணம் பேரதிர்ச்சுக்குத் தள்ளியது. "நான் மிகவும் வேதனையுற்றேன், 

இதனால் எனக்கும் ஒரு மனமாற்றம் வேண்டி நான் செய்ய நினைத்தது வேறு... என் அபிமானப் பாடகிக்கு ஒரு இசை அஞ்சலி செய்ய நினைத்தேன். அது ஒரு சில ஆண்டுகளை எடுத்துக்கொண்டது, ஆனால் "ஹம்மிங் ராணி" வீடியோ தொடர் வடிவம்பெற்றுவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடரில் முதல் வீடியோவுக்கான இசை ராஜேஷ் வைத்யா, தற்போதைய வீடியோவுக்கு இசை தாய்-மகள் இரட்டையர்களான மனோமணி மற்றும் தில்ரூபா சரோஜா, இருவரும் இசையமைத்துள்ளனர்.

வருங்காலத்தில் ஸ்வர்ணலதாவை மையப்படுத்தியே ஒரு இசைக்கச்சேரி நடத்தவேண்டும் என்று எண்ணம் உண்டு.. அது எனது லட்சியத் திட்டம்கூட'' என்று நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் வினைதா. அவரது புன்னகையில் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பதை பார்க்கமுடிந்தது.

http://www.kamadenu.in/news/cinema/2338-vinaitha-singer-swarnalatha.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • 3 months later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!


 

 

father-s-day-special-video
 

எந்த ஒரு படிப்பினையாக இருந்தாலும் அது வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தந்தையர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 19) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ நிச்சயம் பார்ப்பவர்களுக்கு மிக எளிதாக ஒரு நன்மதிப்பைக் கடத்தும்.

 

வெறும் 4 நிமிடங்கள் 23 விநாடிகள் மட்டும்தான் இந்த வீடியோ ஓடுகிறது. ஆனால், ஆணாதிக்க சிந்தனையில் வளரும் ஒரு சிறுவனுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

வீடியோவில் அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவர், சிறுமியின் நடிப்பு பிரமாதம். குறிப்பாக அந்தச் சிறுமியின் முக பாவனைகள் சபாஷ்.

அந்த ஆங்கில பஞ்ச்சை தவிர்த்திருக்கலாம்..
அப்பா அரைத்த சட்னி காரமாக இருப்பதால் அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்ப முயலும் சிறுவன் "இது அம்மா எப்பவும் பார்க்கும் வேலைதான் எனக் கூறுவது" ஆணாதிக்கம் துளிர்விடும் மன்ப்பாண்மை. அதற்கு தந்தை, மகனிடம் விளக்கிக் கூறும் இயல்பு ரசிக்க வைக்கிறது. ஆனால், "அன்பையும் அரவணைப்பையும் நாம் காட்டும் நேரத்தில் சற்று ஓய்வும் அவருக்கு அளிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறுவது அழகு. ஆனால், அதே வேளையில் புரிதலைத் தரும் அந்தப் படிப்பினையை தமிழிலேயே பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் சொன்னது மட்டுமே நெருடல்.

https://www.kamadenu.in/news/video/3414-father-s-day-special-video.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பெண்களை எப்படி மதிக்கப் போகிறோம்... கேட்கிறது 'ஷேம் யுவர்செல்ஃப்' குறும்படம்

 

 

 

girlsjpg

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் 'ஷேம் யுவர்செல்ஃப்' குறும்படம் கடும் விமர்சனக் காட்சிகளை முன்வைத்து பெண்களை எப்படி மதிக்கப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கும் இக்குறும்படம் எவ்வளவு முக்கிய சமூக அக்கறையைப் பேசுகிறது என்பதை 9 நிமிட முழுக் குறும்படத்தையும் பொறுமையோடு பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

 

படத்தின் ஆரம்பக் காட்சிகள்.... இப்படித் தொடங்குகின்றன,

விஜய் - பல்லவிஎன்ற தம்பதியினர் காரில் வருகிறார்கள். ஒரு அவென்யூவில் திரும்பி ஒரு வீட்டெதிரே கார் நிற்கிறது. முன்னும் பின்னும் பைக்குகளில் வந்த போலீஸ்கார்கள் அவர்களிடம், ''ம்மா ரொம்ப நேரமெல்லாம் வெயிட் பண்ண முடியாது. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாங்க'' என்கிறார்.

குறும்படத்திற்குள் ஏதோ இருக்கிறது என்பதை இந்தக் காட்சியே நமக்கு உணர்த்துகிறது. என்னது அது.. என்று யோசித்தபடியே காட்சியை நாம் தொடர்கிறோம்.

காலிங் பெல் அடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவர்களை ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள் வீட்டில் உள்ளவர்கள். காபி கொண்டு வரும் பெண்ணை இன்னொரு பெண் அறிமுகப்படுத்துகிறார்.

''இது பவித்ரா லிங்கேஷோட தங்கச்சி.. இவங்க அவளோட ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் கிஷோர், இவங்க செகண்ட் ஹஸ்பெண்ட் கோபி.. போன மாசம்தான் செகண்ட்மேரேஜ் நடந்தது'' என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

''அப்போ துபாயில இருக்கறது?''

அருகிலுள்ள போட்டோவைக் காட்டி, ''அது என்னோட மொதப் பொண்ணு கீர்த்தி. தோ இருக்காளே (என்று போட்டோவைக் காட்டி) இது ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் கவி,இது செகண்ட் ஹஸ்பெண்ட் விக்னேஷ்... என்று அறிமுகப்படுத்துகிறாள்.

இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள்... பேசிக்கொண்டிருக்கும் தம்பியை வந்திருக்கும் பெண்ணுக்கு இரண்டாவது கணவனாக மணமுடிக்கத்தான் பார்க்க வந்திருக்கிறார்கள்.

இப்படிப் போகும் குறும்படத்தை இனியும் பார்க்க வேண்டுமா என்றுதானே தோன்றுகிறது. தன் மகளுக்கு ஒரு கணவன் அமைந்துவிட்டான் என்பது இன்னொரு கணவனைத் தேடப் போன இடத்தில்தான் தெரிந்தது. அந்த வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு கணவர்கள் என்று. இப்படித் தொடங்கும் இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வருவது கலாச்சார அதிர்ச்சிக்காக அல்ல.

 

 

https://tamil.thehindu.com/opinion/blogs/article24704284.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.