Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு

திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர்.

கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன்,

நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார்.

மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்டமிட்டு மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோசர் பாவித்து உடைத்து அழித்துள்ளதாக அவர் கூறினார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல்களாலும், சம்பூர் நில ஆக்கிரமிப்பினாலும் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து வாகரை நோக்கிச் சென்றுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் மிகப்பெரிய மாவீரர் துயிலுமில்லத்தை இவ்வாறு நாகரீகமின்றி சிதைத்திருப்பது கேவலமானது என்றும் அவர் தெரிவித்தார்.

1986 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினருடான யுத்தத்தின் போது களப்பலியான மேஜர் கணேசின் வித்துடல் தொடக்கம், அண்மையில் களப்பலியான லெப். கேணல் குஞ்சன் வரை, ஏராளமான மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட புனித பூமியை, திட்டமிட்டு இராணுவத்தினர் அழித்துள்ளனர்.

1995 இல் இதுபோன்று, கோப்பாய், கொடிகாமம் மற்றும் வடமராட்சியில் எல்லங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிறிலங்கா இராணுவுத்தினர் அழித்தனர். இருப்பினும், 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர், இவை மீளவும் புனரமைக்கப்பட்டன

-புதினம்

நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது

ஆனா சிறீலங்கா ராணுவம் செய்யும். :angry:

ஆமா - அரசியல் துறைக்கு

ஏன் இவ்ளோ - கவலை?

நாம் - நம்பிய யாரும் -இப்பிடி

பண்ணிட்டாங்களா? :lol:

Edited by வர்ணன்

உலக யுத்தத்தின் போத ஹிட்லர் கூட தன் படையினருக்கு கட்டளையிட்டான். இராணுவ வீரர்களின் கல்லரைகளை ஒன்றும் செய்யாதீர்கள் என்று. ஆனால் இந்த மிலேச்சர்கள் அந்த நாசிப்பட்டாளத்தையும் விட கேடு கெட்ட கேவலமான செயல் செய்கின்றனர். அழிவு நெருங்குகிற போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடிக்கட்டும். ஏட முட்டாள் சிங்கள வெறியனே மிலேச்சத்தனம் மிக்க காடையர் கூட்டமே உங்களால் முடிந்தது அவ்வளவே. எம் இதயத்துள் எம் மண்ணின் மைந்தருக்குக் கட்டிவைத்துள்ள விதைகுழியை எப்படியழிப்பாய். மமததை பிடித்தவருக்கு அழிவு சீக்கிரம்

ஈழத்திலிருந்து

ஜானா

மோட்டு சிங்களவன் என்று சில பேர் சொல்லுவார்கள். அது சரி போலதான் இப்போது நடக்கும் செயற்பாடுகளைப் பார்த்தால் இருக்கிறது. உண்மையிலேயே அவர்கள் புத்தியீவிகளாக இருப்பார்களேயானால் இப்படியான காரியங்களில் இறங்கமாட்டார்கள். ரணில் ஒரு விதத்தில் அறிவானவர்தான். அவர் இப்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால் புலிகளுக்கு காலம் சனியில்தான் போயிருக்கும். ஆனால் தமிழினத்துக்கு காலம் ஒரு விதத்தில் கை குடுக்கிறது. அதனால்த்தான் மகிந்த ஜனாதிபதியாக வந்தது. தம்பி உள்ளான் சண்டைக்கஞசான் என்பது மகிந்தவுக்கு நன்றாகப் பொருந்தி உள்ளது. ஒருவருக்கும் பயப்பிடாமல் துணிந்து குற்றங்களை தொடர்ந்து செய்கிறார். ஆனால் கூடிய சீக்கிரத்தில் அவருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்துவிடும். அணையப்போகும் விளக்கு அணையமுதல் பிரகாசித்து எரியும் என்பார்கள்.

காட்டுமிராண்டிக்கூட்டமே, உன் ஈனத்தனங்களிற்கு, முற்றுப்புள்ளி வைப்பான் மானத்தமிழன். ஆம்... உனக்கான ஊழிக்காலம், வெகுதொலைவில் இல்லை.

I was really shocked when heard the news about the demolition of our "maaveerar thuyilum illam" by the sinhalese barbarians. The killed our sisters and brothers, mothers and fathers, sons and daughters. now they want to disturb our national heroes !!!!!!!!!!!!!!! what are we are going to do ? i think there is only one and only way to respond to these barbaric sinhala uncivilised nation as our beloved "Thalaivar" said. :angry:

ஒவ்வொரு மாவீரரும் மக்கள் மனதிலே கோவில் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் யாராக இருந்தாலும்.. ஒருவருடைய சமாதியைச் சிதைப்பது.. மிக மிக மோசமான காட்டுமிராண்டி செயல்..

மாவீரர் பூதவுடல்களை கிளறி எறிந்து என்ன வெறியாடுகிறார்கள்.

கைது செய்யும் ஒருவரைக் கூட நம்மவர் எவ்வளவு மரியாதையான முறையில் பேணுகின்ற போது..

இந்த சிங்கள இராட்சசத்தனம்.. இதிலிருந்தாவத உலகம் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒவ்வொரு மாவீரரும் மக்கள் மனதிலே கோவில் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் யாராக இருந்தாலும்.. ஒருவருடைய சமாதியைச் சிதைப்பது.. மிக மிக மோசமான காட்டுமிராண்டி செயல்..

மாவீரர் பூதவுடல்களை கிளறி எறிந்து என்ன வெறியாடுகிறார்கள்.

கைது செய்யும் ஒருவரைக் கூட நம்மவர் எவ்வளவு மரியாதையான முறையில் பேணுகின்ற போது..

இந்த சிங்கள இராட்சசத்தனம்.. இதிலிருந்தாவத உலகம் புரிந்து கொள்ள வேண்டாமா?

இந்த உலகம் புரிந்து கொள்ளகூடிய ஒரு உலகமாக இருந்திருந்தால், நாங்கள் இன்று இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க தேவை இல்லை. என்றோ எங்கள் பிரச்சனை எல்லாம் தீர்ந்திருக்கும். உலகம் ஒரு போதும் புரிந்து கொள்ளாது, புரிந்து கொள்வதற்கான முயற்சி தானும் செய்யாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பேரினவாதிகளின் நயவஞ்சக செயல் இது. எங்கள் மாவீரர்களின் கல்லறை மிகவும் புனிதமானது தேசிய விடுதலைக்காக தங்கள் உயிரைத்தியாகம் செய்த சரித்திரநாயகர்களின் கல்லறையை சிதைப்பதற்கு அவனுக்கு என்ன அருகதை இருக்கின்றது கூலிக்கு வந்த படைக்கு தெரியுமா? எங்களின் இலச்சிய வேட்கை.

post-3090-1164883206_thumb.jpg

:lol::lol: கைந்தபு அன்னை எப்பிடி என்ட தமிழ்....முதலாம் வகுபில படிக்கிரமாதிரி ஒரு உனர்வு.

னீஇன்கல் கவுத்து போடுவன் பாருஇன்கோ.....

சாம்பூர் விடை கூரும் பாருன்கோ :lol::o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழிலன் அண்ணா வடிவா சொல்லியிருக்கிறார்தானே... நாகரீகம் அடைந்த இராணுவம் என்று...

நாகரீகம் என்ற சொல்லுக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கும்தான் சம்மந்தமே இல்லையே.. பிறகு ஏன் அதைபற்றி கதைத்து எமது சக்தியை வீணடிப்பான்..?

:lol::lol: தயவு சைது....சொல்லுன்கோ....என்னன்டு....

எல்லாளனின் கல்லறையை துட்டகைமுனு கட்டி அதை கடந்து சென்ரவரை அஞ்சலி செலுத்த வேணும் எனவும் கட்டளையிட்டானாம் இது துட்டகமுனுவை பற்றி புனையப்பட்ட கதையோ நானறியேன் அது உண்மையானால் தான் துட்டகமுனு என வெளிக்கிடும் இராணூவத்தளபதிகளால் துட்டகமுனுவுக்கு கேடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.