Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஈழத் தமிழர் பிரச்னை, கலைஞருக்கு ஊறுகாய்!"

Featured Replies

'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் புதுடில்லியில் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவது தொடர்பில் தான் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

கலைஞர் எமக்கு சார்பாக இருந்தால் எமக்கு மிக்க மகிழ்ச்சி கலஞ்சரின் நடவடிக்கையில் அண்மைக்காலமாக மாற்றங்கள் தென்படுகின்ரன

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மகிந்த ராஜபக்சா பிரதமரைச் சந்தித்த பின்னர் கருணாநிதி சந்தித்தாகச் செய்திகள் கூறுகின்றன. உண்மையாக இருப்பின், அவர் மத்திய அரசுக்கு தமிழீழப் போராட்டத்தின் தேவை குறித்து அக்கறையைக் காட்டியிருப்பார் என நம்பலாம். அது தான் கருணாநிதி இவ்வளவு காலமும் வார்த்தைகளால் எம் மக்களை அணைத்ததற்கு செயற்பாட்டுரீதியான பதிலாகவும் இருக்கும்.

--------------------------------

இலங்கையில் இருந்து செல்லும் போது மகிந்த இலங்கை-இந்தியக் கடல் கூட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக செயற்பட விரும்புவதாகக் கூறிச் சென்றிருந்தார். ஆனால் போனவர் நேற்று அது அவசியமற்றது என்றும், தங்கள், தங்கள் நாட்டுப் பாதுகாப்பை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டாலே போதும் என்று கூறியிருக்கின்றார்.

இம்புட்டுப் பெரிய மீசையை வைத்துக் கொண்டு மண்படவில்லை என்றால் எப்படி மகிந்த?

  • தொடங்கியவர்

சென்னையில் கடந்த 27/11/06 அண்று நடந்த கவிஞர்கள் எழுத்தாளர்களினாலான ஈழமக்கள் (கொலைகளுக்கு எதிரான) ஆதரவு போராட்டம் கவிஞர் வைரமுத்துவால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... அதில் கலைஞருடைய புதல்வியார் கனிமொழி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்...

கனிமொழி அவர்கள் TTN தொலைக்காட்ச்சிக்கு ஈழமக்களுக்கு ஆதரவாக, மனவுறுதியை குடுத்து வழங்கிய செவ்வியையும் கேட்க்க முடிந்தது... மகிழ்ச்சியாக இருந்த்து...

நாளாந்தம் ஈழமக்களுக்காக இந்திய தமிழர்களிடம் குரல்களி உயர்ந்த்து வருகின்றது....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர தமிழ் ஈழம் கிடைத்தாலும் மகிழ்ச்சி மாற்று தீர்வு கிடைத்தாலும் மகிழ்ச்சி - தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி

சுதந்திர தமிழ் ஈழம் பெற்றுக்கொள்ளப்பட்டால் அதற்கு தான் மகிழ்ச்சியடைவேன் என்று தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும்

by: TF November 30, 2006

அப்படியென்றால் தமிழினம் அழிந்துபோனாலும் மகிழ்ச்சியடைவாரா கலைஞர்?

பேசுவதைப்பார்க்கும்போது இப்படித்தான் எடுத்துக்கொள்ளத்தோன்றுகிற து

...

ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தீர்வு என்றும் கூறியவராச்சே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்கள் மீது, புது விதமான போரைத் தொடங்கி உள்ளது இலங்கை அரசு!

இலங்கையில் தமிழர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் யாழ்குடா நாட்டில் ஐந்து லட்சம் தமிழர்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால், இந்தியாவுக்கு வரவிருக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அரசியல் கட்சி கள் ஆயத்தமாகின்றன.

இன்னொரு பக்கம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளாவின் தொடர் துரோகங்கள் இங்கே அரசியல் உஷ்ணத்தைக் கிளப்பி இருக்கிறது. தமிழக, கேரள முதல்வர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கியிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் ஒரு சந்திப்பு...

"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள, தமிழக மாநில முதல்வர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக அறிவித் துள்ளீர்களே, என்ன காரணம்?"

"அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் கேரளம், தமிழகம் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அவர்களை இரு தரப்பையும் கலந்து பேசி, அணையின் நிலைமையைப் பார்வையிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். நிபுணர் குழுவுக்கு முன் 12 காரணங்களைச் சொல்லி, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்றது கேரளம். அந்தக் காரணங்களில் நியாயம் இல்லை எனக் குறிப்பிட்டு, தனது அறிக்கையை அளித்தது நிபுணர் குழு. அதன் அடிப்படையிலேயே, கடந்த பிப்ரவரி மாதம் 27&ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் எனத் தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றம்.

அப்போதைய முதல்வர் ஜெய லலிதா, அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை. காரணம், கேரளத்தில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் அப்போது அ.தி.மு.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணையில் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தினால், கேரள தேர்தலில் தன் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமே! அதே ஜெயலலிதா, இப்போது அணைப் பிரச்னையில் கலைஞரைத் தாக்கி விடுகிற அறிக்கைகளைப் பார்க் கும்போது சிரிப்புதான் வருகிறது.

சரி, இப்போதைய முதல்வர் கலைஞர் என்ன செய்தார்? அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக் குழுவைத் தள்ளுபடி செய்து, தன் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். அதன் பின்னரும் கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தீர்ப்பை அமல்படுத்தத் தவறியதன் மூலம் முதல்வர் கலைஞரும் உச்சநீதிமன்றத்தை அவமதித் திருக்கிறார். ஏற்கெனவே, கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன்."

"யாழ்ப்பாணத்தில் 5 லட்சம் தமிழர்கள் பட்டினியின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றனவே?"

"யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லும் முக்கிய வழியான ஏ&9 யாழ்ப்பாண நெடுஞ்சாலையை சிங்கள அரசு மூடியிருக்கிறது. இன்னொரு பக்கம், தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடைகள் வேறு.

இலங்கையில் இருந்து தன்னைப் பார்க்க வந்த தமிழ் எம்.பி&க்களைச் சந்திப்பதற்கு நேரமும் தேதியும் ஒதுக்கப்பட்ட பிறகும் சந்திக்க மறுத்துவிட்டார் நம் இந்தியப் பிரதமர். காரணம், அவர்கள் டெல் லிக்குச் செல்வதற்கு முன்னால் தமிழக முதல்வரைச் சந்திக்க முயன்றார்கள். கடிதம் எழுதி நேரம் கேட்டார்கள். பதில் இல்லாததால், முதல்வரின் அலுவல கத்துக்கு நேரில் சென்று சந்திக்க முயன்றார்கள். முடியவில்லை. பத்து நாட்கள் காத்திருந்தும் கலைஞரிடம் இருந்து ஒரு பதிலும் இல்லாததால், ஏமாற்றத்துடன் டெல்லி புறப்பட்டார்கள். "தமிழக முதல்வரே தமிழ் எம்.பி.க்களைச் சந்திக்கவில்லை. பிறகு நாம் ஏன் சந்திக்க வேண்டும்" என்று பிரதமரும் அவர்களைச் சந்திக்கவில்லை. "இந்தியாவிலும் தமிழகத்திலும் இவர்களுக்கு ஆதரவில்லை. அதனால் தான் தமிழக முதல்வரும் இந்தியப் பிரதமரும் இவர்களைச் சந்திக்க வில்லை" எனப் புரிந்துகொண்ட ராஜபக்ஷே, தமிழர்களைக் கொன்றால் இனி கேட்பதற்கு ஆளில்லை என்று தன் கொடூரத் தாக்குதலைத் தொடங்கி விட்டார்.

இந்தியா, ஈழத் தமிழரை ஆதரிக்கவில்லை என்ற எண்ணம் தோன்று வதற்குக் காரணமே, இப்போது கலைஞர்தான். 1983 ஜூலைக் கலவரங்களில் 3,000 தமிழர்கள் கொல்லப் பட்டபோது, மூத்த கேபினட் அந்தஸ்துள்ள ராஜ தந்திரி ஜி.பார்த்தசாரதி யையும் அப்போதையை வெளிவிவகாரத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி. "தனது கொல்லைப் புறத்தில் நடக்கும் படு கொலைகளைப் பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருக்காது" என்று ஜெயவர்த்தனாவிடம் கண்டிப்பான முறையில் சொன்னார். ஆனால், இன்று என்ன நடக்கிறது?

தமிழகத்தில் இருந்து நெருக்கடிகள் வந்தால், உடனே கண் துடைப்புக்காக சிவசங்கர மேனன் என்கிற ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். ஜி.பார்த்தசாரதி இலங்கைக்குப் போவதாக இருந்தால், முதலில் தமிழகம் வந்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசிவிட்டுத் தான் செல்வார். ஆனால், சிவசங்கர மேனன் நேரே கொழும்பில் பேசிவிட்டு வருகிறார். அப்புறம், டெல்லியில் இருந்து எம்.கே.நாராயணன் என்கிற அதிகாரியை அனுப்பி, சிவசங்கர மேனன் இலங்கை போய் வந்த தகவலை கலைஞருக்குச் சொல் கிறார்கள். இந்தியாவிலேயே மூத்த முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசு கொடுக்கிற மரியாதை இவ்வளவுதானா? இத்தனைக்கும் அவரால் வந்த 40 எம்.பி&க்களின் ஆதரவுடன் பிழைத்திருக்கிற அரசு இது!"

"ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?"

"எல்லாக் காலத்திலும் ஈழத் தமிழர் உரிமைப் பிரச்னை, கலைஞருக்குச் சோற்றுக்குத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். தேவைப்படும்போது தொடுவார். ஈழத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து, அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவினால், வரலாறு கலைஞரை வாழ்த்தும். ஒதுங்கி நின்றால் வரலாற்றுப் பழியை அவர் சுமக்க நேரிடும். அது என்றும் அழியாத பழியாக இருக்கும்!"

"மேயர்கள் மாநாட்டைத் தொடங்கிவைக்க இந்தியா வரும் ராஜபக்ஷேயின் வருகை பற்றி?"

"தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்மெட்ஸ் என்கிற தலைவருடன், அவர் நிறவெறி பிடித்தவர் என்பதால் கைகுலுக்க மறுத்தார் நேரு. ஆனால், அவருடைய வாரிசுகளான இப்போதைய ஆட்சியாளர்கள் இனவெறி பிடித்த ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப் பது, தமிழர்களுக்குச் செய்கிற துரோகம். தமிழகத்திலிருந்து அந்த மாநாட்டுக்குச் செல்கிற மேயர்கள், ராஜபக்ஷேவுக்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அல்லது மாநாட்டைப் புறக்கணித்து தமிழர் மானத்தை காப்பாற்ற வேண்டும்!"

டி.அருள்எழிலன்

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருடைய நன்றிச் செய்தி பெரிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது என்றால் மிகையாகாது..

கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது: பழ.நெடுமாறன்

[வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 15:26 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத்தமிழரின் பிரச்சனையில் கலைஞரின் அணுகுமுறை தொடர்பாக பதிலளிக்கையிலேயே கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

விரிவான நேர்காணல்:

முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரள, தமிழக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதாக அறிவித்து இருக்கிறீர்களே என்ன காரணம்?

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு திடீரென்று வழங்கப்பட்ட ஒன்றல்ல. இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு கடைசியில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையையும் பார்வையிட்டு இருதரப்பையும் கலந்து பேசி ஒரு அறிக்கை தாக்கல் செய்யச்சொன்னது உச்சநீதிமன்றம்.

அந்த நிபுணர் குழுவிற்கு முன்னால் கேரளம் 12 காரணங்களைச் சொல்லி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று வாதிட்டது. காலம் கடத்துவதற்காக காரணங்களை அடுக்குகிறது கேரளம். இந்த காரணங்களில் நியாயமில்லை, என்று சொல்லி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது நிபுணர் குழு. அதன் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அந்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

என்ன காரணம் என்றால் கேரளத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. முல்லை பெரியாரில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தினால் கேரள தேர்தலில் தன் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் நலனுக்காக நாட்டு நலன் பலியிடப்பட்டதேயொழிய வேறில்லை.

பெரியாறு அணை தொடர்பாக கலைஞரை தாக்கி ஜெயலலிதா விடுகிற அறிக்கைகளைப் பார்க்கும் போது நகைப்புக்கிடமாக இருக்கிறது. சரி கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகாவது பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவரும் செய்யவில்லை. மீண்டும் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து மீண்டும் தன் தீர்ப்பை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை அமல்படுத்த தவறியதன் மூலம் முதல்வர் கலைஞரும் உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். கேரள முதல்வர் அச்சுதானந்தன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசினார். ஆகவே இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன்.

டில்லியில் நடைபாதை கடைகளை மத்திய அரசின் விருப்பத்தையும் மீறி சீல் வைக்கிற நீதிமன்றம் அதுபோல பெரியாறு அணையிலும் உச்சநீதிமன்றமே முன்நின்று செயல்படுத்தலாம் இல்லயா?

ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் சொல்கிற போது அதை செயல்படுத்துகிற உரிமை இரண்டு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. கேரளத்தை விட கூடுதலான பொறுப்பு தமிழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அப்படி எடுக்கும் போது கேரளம் அதை தடுத்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.

ஒன்பது மாதகாலமாக ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் என்ன செய்யும். பெரியாறு அணை விவகாரத்தில் மாநில அரசு தூங்கிக்கொண்டிருப்பதன் விளைவு இப்போ சட்டப்படி ஆறு போலிசார் இருக்க வேண்டிய இடத்தில் முப்பது போலிசாரை கேரளம் நிறுத்தி வைத்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆதிவாசிகளை "லஸ்க்கர்" என்கிற பெயரில் பாதுகாப்பின் பெயரில் நிறுத்தி வத்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டவிரோதமானது. தீர்ப்பு வந்தவுடன் தமிழக போலிசார் நூறு பேரை கொண்டு போய் பெரியாறு அணயில் நிறுத்தி அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டுமா? இல்லயா? எதையுமே செய்யவில்லயே செயலற்று போய்வீட்டீர்களே பின்னர் எப்படி கேரளத்தை குறை சொல்ல முடியும். அணயில் அதிகப்படியாக வரும் நீரை குழாய்கள் மூலமாகவோ குகைபாதை வழியாகவோ கொண்டு வந்து வைகை அணயிலும் பெரியார் பாசன ஐந்து மாவட்ட ஏரி கண்மாய்களையும் தூர் வாரி அதில் சேமித்திருக்க வேண்டும் அதற்கும் திட்டமில்லை. இப்படி திட்டமிடாததன் விளைவு இப்போது தறிகெட்டு ஒடிய தண்ணீர் குமுளி பாலத்தை அடித்துச் சென்றுவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சிறு வெள்ளத்தை தாங்கும் அளவுக்குக் கூட இல்லாமல் அந்த பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது.

இந்நிலையில் வருகிற 29 ஆம் தேதி மத்திய அரசின் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக சொல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன்பே கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொல்கிறார் 136 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றி பேசமாட்டோம் என்கிறார். இப்போ புதிய அணை கட்டுவதைப் பற்றி பேசுகிறார்கள். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனோ அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது பற்றி பேசுவோம் என்கிறார்.

இருவரும் சேர்ந்து போகாத ஊருக்கு புரியாத வழி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி

இந்த இருவரின் மீதும் வளர்ந்து வந்திருக்கிற அதிருப்தியை விஜயகாந்த் அறுவடை செய்திருக்கிறார். ஒரு நல்ல மூன்றாவது அணி உருவாகுமானால் நிலைமை வேறுவிதமாக மாறும். மற்றபடி தமிழகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கிற தமிழர்களை பாதிக்கிற தேசிய பிரச்சனைகள் பற்றிய அவரது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜயகாந்த் இன்னும் வெளியிடவில்லை. வெளியிட்டால் அது பற்றி பேசலாம். அதுதான் அவருடைய நிரந்தரமான வளர்சிக்கு துணையாக இருக்கும் இல்லை பிரமாண்டமாக வளர்ந்த பிறகு கூட விழலுக்கு இறைத்த நீராக போகவும் வாய்பிருக்கிறது.

முன் எல்லா காலத்தையும் விட இலவச திட்டங்களும் கவர்ச்சிகரமான சலுகைகளும் இன்னும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறதே?

நமது மக்களை இன்னும் இலவசங்களை நாடி ஒடும் பிச்சைக்காரர்களாக மாற்றக்கூடாது. அரசாங்கத்தின் வேலை அதுவல்ல. அரசாங்கம் தனது குடிமக்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வியையும் அழித்தால் அவரவர் தேவையை அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் இலவச திட்டங்களாலோ காசு கொடுத்தோ மக்கள ஒட்டுப்போடும் மந்தைகளாக இனியும் நடத்த முடியாது என்று கடந்த தேர்தலில் நிரூபித்துவிட்டார்கள். இரண்டு சாராரும் காசு கொடுத்தார்கள் இரண்டு பக்கமும் மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஒட்டு யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்குத்தான் போட்டார்கள். பெரும்பாலான மக்களை இனி இலவச திட்டங்களால் ஏமாற்ற முடியாது.

நன்றி: ஆனந்த விகடன்

நேர்காணல்: டி.அருள்எழிலன்

-புதினம்

;) ;) மான்புமிகு கருனானிதி அவர்கட்கு

ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்கமுடியும் அனால் கருனானிதி என்னும்

அப்படி இருக்கவில்லையின்கோ....

95 வயசு என்னும் தலரவில்லை நினைக்கவேனும். :rolleyes::lol:

:rolleyes::lol::lol::lol::D:huh::o:)

:P இஞ்cஅறுக்கோ கலைஞர் அவர்களே இஞ்cஅருங் கோ

னாமும் உன்கல் தமிழ் நாட்டு தொப்புஇல் கொடி உரவுமுன்கோ

னேற்று இன்ட்ரு நாலளை M.G.ஆர் ஓட நிரந்தர விசுவசியுமுன்கொ

அவர் என்ட்ரும் என்கல் அறிஞர் அன்னாவுமுன்கொ

உன்கல் தமில் மொலி வசன அர்டல் கன்டு உன்கல் வசமானொமுங்க

பத்திரிகைகலுக்கு பொடி போட்டு தமிலில் அல்வா அரசியல் பன்னுரதில பெரிஅ ஆலூம்ன்க

இன்ட்ரய தமில் முதல்வரும், அன்கிலயர்ருகு அல்வா வியக்கிர வகையில கொடுக்க உன்க உதவி தேவையுன்கொ

மனி அடித்து விட்டது நான் பிரகு அர்ருதலைய் கதைகிரன்

மன்னிகவும்...கனக்க இருக்கு கத்த நான் புதுசு எலுத பலகிரன்... :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.