Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் கடத்தல் குறித்த தமது நியாயத்தை வெளியிடப் போகிறதாம் இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரகீத் கடத்தல் குறித்த தமது நியாயத்தை வெளியிடப் போகிறதாம் இராணுவம்! 
[Tuesday 2015-09-01 07:00]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தப் போவதாக இராணுவம் அறிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளுக்கு அதரவளிக்கும் அதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் சில உண்மைகள் வெளியிடப்படும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தப் போவதாக இராணுவம் அறிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளுக்கு அதரவளிக்கும் அதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் சில உண்மைகள் வெளியிடப்படும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

   

போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினால், போலி புலிப் புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைக்கு “ஒபரேசன் டபள் எட்ஜ்” என பெயரிடப்பட்டிருந்தது. பிரகீத் எக்னெலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமைக்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன.நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் கடமையாற்றி பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்ட தவேந்திரன் என்ற புலி உறுப்பினர், புலிகள் அமைப்பில் இருந்து போது எக்னெலிகொடவை வழி நடத்தியுள்ளார்.

இராணுவத்தினால் போலிப் புலிப் புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு ஒபரேசன் டபள் எட்ஜ் என பெயரிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் முக்கிய செயற்பாட்டு உறுப்பினராக தவேந்திரன் கடமையாற்றினார். புலனாய்வுப் பிரிவினர் எக்னெலிகொட தொடர்பில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் தவேந்திரன் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவர் லெப்டினன் கேணல் பதவிகளை வகித்து வருவதாகவும் இவர்கள் ஒபரேசன் டபள் எட்ஜ் திட்டத்திற்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியவர்கள் எனவும் குறித்த உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=139549&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவமா கொக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.