Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தல்...

Featured Replies

மிக அண்மைக்காலமாக  இலங்கையில் பெரும் சவாலாக மாறி இருப்பது வீதிகளில் திரியும் கட்டா காலி நாய்களின் பெருக்கம். வீதிகளில், பள்ளிகூடங்களில் ,ஆலயங்களில் ,சந்தைகளில்,மருத்துவமனைகளில், நலன்புரி நிலையங்களில் மற்றும், இராணுவ,பொலிஸ் நிலைகளில் எல்லாம் இந்த பிரச்னை பாரதூரமாக காணப்படுகிறது.

இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தால் சமூக பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. நாய்க்கடிகளும் நாய்களால் ஏற்படும் விபத்துகளும் அண்மைகாலத்தில் அதிகரித்திருப்பதை பல புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார திணைகளங்களும், நகர மற்றும் பிரதேச சபைகளும் திணறுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலைக்கு என்ன கரணம் யார் இதற்கு பொறுப்பு எப்படி கட்டுபடுத்துவது என்பது பற்றிய கட்டுரை தான் இது. ஒரு விலங்கு மருத்துவராக  எனது   பார்வையை முன்வைக்கிறேன்.
கட்டாக்காலி நாய்கள் (stray dog) என்றால் என்ன என்று ஆராய்கிற போது உரிமையாளர் அற்று சுயாதீனமாக வாழும்/திரியும் நாய்கள் என பொருள் படுகின்றன. இவை பராமரிப்பாளர்கள் அற்று தடுப்பு மருந்துகள் ஏற்றப்படாது மருத்துவ கண்காணிப்புகள் இன்றி சுயாதீனமாக வாழ்கின்றன. இலகுவில் நோய் தொற்றுக்கு உட்படுவதோடு நோய்க்காவிகளாகவும் செயற்படும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றன..

நகரமயமாதலும் அதனுடன் தொடர்புடைய அதிகரித்த சனத்தொகையும் உணவுகழிவுகளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இந்த உணவு கழிவுகள் மீன் இறைச்சிச் சந்தைகள்,உணவு விலங்கு கொல்களங்கள் (slaughter houses), உணவு சாலைகள், பாடசாலைகள், ஆலயங்கள், நலன்புரி நிலையங்கள் இராணுவ பொலிஸ் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் முதலிய அதிகரித்த மனித வளம் உள்ள இடங்களில் தாராளமாக உற்பத்தியாகின்றன. அத்துடன் நகர குப்பைகளை அகற்றும் இடங்களும் உணவுகழிவுகளை அதிகம் கொண்டுள்ளன.இந்த கழிவுகள்தான் கட்டாகாலி நாய்களை போஷிக்கின்றன. அவற்றின் பெருக்கத்தை சவால் இன்றி செய்ய துணை புரிகின்றன. இந்த இடங்கள்தான் பெரும்பாலான கட்டாக்காலி நாய்களின் வாழ்விடங்கள்.


சாதாரணமாக இயற்கையில் ஆண் ,பெண் நாய்களின் விகிதம் 5௦:5௦ ஆகும். எனினும் எமது சமூகங்களில் வளர்ப்பு செல்ல பிராணிகளாக  75% க்கு அதிகமான விகிதத்தில் ஆண் நாய்களும் 25%க்கு குறைவான விகிதத்தில் பெண் நாய்களும் காணப்படுகின்றன. குட்டி ஈனுகின்ற காரணத்தால் ஏற்படும் தொல்லைகளால் பெண் நாய்களுக்கு இந்த மரியாதைக் குறைவு.இதன் மறுதலை என்னவென்றால் அதிக கட்டாகாலி நாய்களாக பெண் நாய்களே காணப்டுகின்றன எனலாம்.


நாய்க்குட்டிகளை சந்தைகளிலும் மீன்,இறைச்சிக் கடைகளிலும் போடுகிற பழக்கம் எம் சமுதாயத்தில் இன்றும் காணப்படுவதையும்,அந்த குட்டிகள் சொறி சிரங்குகளுடன் அங்கு அலைந்து திரிவதையும் வாகனங்களுக்குள் அகப்பட்டு இறப்பதையும் அன்றாடம் காண்கிறோம். ஒரு சில பெண் நாய் உரிமையாளர்கள் தமது நாய் உரிமையை மறைப்பதையும் தடுப்பூசி ஏற்ற பின் நிற்பதையும் காணக் கூடியதாகவும் உள்ளது.
முன்பெல்லாம் பிரதேச சபைகளும் நகர சபைகளும் நாய்களை பிடிப்பதையும் நஞ்சூட்டியும், கடலுக்குள் தள்ளியும், சுட்டும், புகை போட்டும் அவற்றை கொன்றதையும்  பார்த்திருக்கிறோம் இதற்காக விசேட வாகனங்களும் ஊழியர்களும் இருந்தார்கள். .எனினும் மிக நீண்ட கால விலங்கு நல ஆர்வலர்களின் போராட்டமும் அரசாங்கத்தின் மிருக வதை தடை சட்டமும் இந்த மனிதாபிமானமற்ற முறைகளை நிறுத்தியுள்ளன.

எனவே இந்த மித மிஞ்சிய நாய் பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று கேள்வி ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என ஐயம் எழலாம். இருக்கிறது, கருத்தடை முறைகள்..கருத்தடை முறைகள் எனும் போது இரண்டு வகையான முறைகள் உள்ளன. ஆண் நாய்களுக்கான கருத்தடை (castration), பெண் நாய்களுக்கான கருத்தடை (overiohysterectomy) என்பனவே அந்த முறைகள் ஆகும். ஆண் நாய்கள் சத்திர சிகிச்சை மூலமே கருத்தடைக்கு உட்பட வேண்டும். கிராமங்களில் மனிதாபிமானமற்ற ஆண் நாய் கருத்தடை முறைகளும், இதற்காக சில கிராமத்து பரிகாரிகளும் உள்ளனர் என்பது வேறு கதை.

பெண் நாய்களை பொறுத்தவரை ஊசி மூலமான கருத்தடை முறைகளும் காணப்படுகின்றன. dippo provera எனப்படும் மருந்து மூலம் இந்த கருத்தடை  செய்யப்படுகிறது. இந்த மருந்து 3-6 மாதங்களுக்கு மட்டும் நாய்களை கருக்கட்டாமல் தடுக்கும். அதாவது  தற்காலிக கருத்தடை முறை. மீண்டும் மீண்டும் 6 மதத்திற்கு ஒரு முறை ஊசி போடவேண்டிய தேவையும் உள்ளது. இதை விட dippo provera மருந்து மிக அதிக பக்க விளைவுகளை கொண்டது. குறைந்தது இரண்டு தடவைக்கு மேல் ஊசி ஏற்றப்படும் பட்சத்தில் பெரும்பாலும் pyometra எனப்படும் பக்க விளைவை ஏற்படுத்தும். அதாவது கர்ப்பபையில் நோய் தொற்றுடன் கூடிய நிலை ஏற்படும். இந் நிலைமை நாய்களை மரணம் வரை கொண்டு செல்ல கூடியது. எனவே இந்த ஊசி மூலமான கருத்தடை சிறந்தது கிடையாது. நிரந்தர சத்திர சிகிச்சை முறை சாலச்சிறந்தது. ஆபத்து குறைவு.

இந்த சத்திர சிகிச்சைகள் சாதாரணமாக மிருக வைத்திய சாலைகளிலும் தனியார் சிகிச்சை நிலையங்களிலும் பதிவு பெற்ற மிருக வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ள படுகின்றன. பெரும்பாலும் வளர்ப்பு நாய்களைத்தான் இங்கு கருத்தடை செய்ய முடியும்.மிருக வைத்தியர்களின் நேரப் பளுவும் வேலைப் பளுவும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மருந்துகளின் வரையறையும் ஆளணிக் குறைவும் கட்டாக்காலி நாய்களை கருத்தடை செய்யவிடாமல் தடுக்கின்றன.

எனினும் அரசாங்கம் சில கருத்தடை நிகழ்சிகளை சில தனியார் விலங்கு மருத்துவநிறுவனங்களின் ஊடாக செய்கின்றது. சுகாதார திணைகளத்தின் விலங்கு விசர்  தடுப்பு பகுதியூடாக பொது சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இது மேற்கொள்கிறது. இதன் போது தடுப்பூசி ஏற்றுதலும் நடைபெறுகிறது .

இலங்கையின் கிழக்கு, வட மேல், சப்ரகமுவா மற்றும் மேல் மாகாணங்களில் ஓரளவு கட்டாகாலி  நாய்கள் கட்டுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குருநாகல், திருகோணமலை, கேகாலை ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 75 வீதத்திற்கு மேற்பட்ட கட்டா காலி நாய்கள் கட்டுபடுத்தபட்டுள்ளதாக அந்தந்த பகுதிகளின் சுகாதாரத் திணைக்கள புள்ளி விபரங்கள்  இதனை உறுதி செய்கின்றன நாய்களை பொறுத்தவரையில் தங்களுக்குள் ஒரு ஆளுகை பகுதியை(territory) வைத்திருக்கும்.வீட்டு நாய்கள் தத்தமது வீட்டு சூழலை தமது ஆளுகை பகுதியாக வைத்திருக்கும்.அதற்குள் வேறு நாய்களை வரவிடாது. இதே போல் கட்டா காலி நாய்களும் தமக்கு என்று ஒரு ஆளுகைப் பகுதியை கொண்டிருக்கும். நாய்களை கொன்று ஓரிடத்திலிருந்து அப்புறப்படுத்தும் பட்சத்தில் அந்த ஆளுகை பகுதி ஆளுபவர் இன்றி வெற்றிடம் ஆகும். அங்கு காணப்படும் உணவு கழிவுகளும் வேறு நாய்களை கவர்ந்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வழி ஏற்படுகிறது. புதிய நாய்கள் குடியேறுகின்றன. எனவே நாய்களை கொல்வது சரியான கட்டுப்பட்டு முறை அன்று. நிரந்தர கருத்தடை செய்து விசர் நாய்கடி ஊசி ஏற்றி அந்த நாய்களை அதே இடத்தில் விடும் பட்சத்தில் ஒரு 5- 1௦ வருடங்களுக்கு தனது ஆளுகை பகுதியை காக்க புதிய நாய்களை வர விடாமல் தடுப்பதோடு  குட்டி ஈனுவதும் தடைபடும். இலங்கை ஒரு தீவு ஆனபடியால் இந்த வகை கட்டு பாட்டு முறை சாத்தியமானதே.

யுத்த சூழல் காரணமாக தோற்றுவிக்க பட்ட இராணுவ நிலைகளும் நலன்புரி முகாம்களும் அதிக மனித வளம் காரணமாக உணவு கழிவுகளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இவற்றின் மூலம் அதிக கட்டாக்காலி நாய்களின் உணவு தேவை பூர்த்தியாகி இருந்தன. தற்போது படிப்படியாக் அவை அகற்றப்படும் நிலையில் இந்த இடங்களில் தங்கி இருந்த கட்டகாலி    நாய்களுக்கு உணவு சங்கிலியை பூர்திசெய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவை குடிமனைப் பகுதிக்கு வருகின்றன. அத்துடன் சில இராணுவ பாதுகாப்பு நிலைகளில் உள்ள நாய்களின் சரியான விபரம் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் சரியாக தடுப்பூசி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் உள்ளது.இராணுவ அதிகாரிகளுடன் ஒத்துழைத்து இந்த விபரங்களை பெற்று தடை முயற்சிகளையும் தடுப்பூசி சிகிச்சையும் செய்ய வேண்டும்.விலங்குகள் சுயாதீனமாக சகல இடங்களுக்கும் சென்று வர கூடியன. எனவே திட்டமிடும்போது அந்த இடங்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். 
 
வீதிகளில் ஏற்படும் சில வாகன விபத்துகளுக்கு குறிப்பாக மோட்டார் சைக்கிள் விபத்துகளுக்கு நாய்கள் காரணமாக அமைகின்றன. இலங்கையில் வருடம் தோறும் 30-40 விலங்கு விசர் மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறக்குறைய 3௦௦௦௦௦ விலங்குக்கடிகள் நிகழ்வதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மிக அதிகமாக 95% நாய்களாலேயே விலங்கு விசர் நோய் ஏற்படுகிறது. பூனை,நரி,மரநாய் முதலியவற்றால் மிகுதி நோய்த் தொற்று ஏற்படுகிறது.

சுகாதார அமைச்சு வருடம் தோறும் பல மில்லியன் ரூபாய்களை இந்த நோயை ஒழிக்க செலவிடுகிறது. தடுப்பூசிகள், கருத்தடை சத்திரசிகிச்சைகள் விழிப்புணர்வு விளம்பர முயற்சிகளுக்கு இந்த பணம் செலவிடப்படுகிறது இலங்கையில்தான் இந்த சேவைகள் இலவசமாக நடக்கிறது. 1 ; 6 என்று இருந்த நாய் ; மனித விகிதத்தை அதிகரிக்க பாடுபடுகிறது. 2௦2௦ ம் ஆண்டளவில்  முற்றாக விலங்கு விசர் நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. பொதுமக்களும் திணைக்களங்களும் இணைந்து குப்பைகளை, கழிவுகளை சரியாக அப்புறப்படுத்தி,செல்லப்பிராணிகளுக்கு கருதடைகளை செய்து தடுப்பூசி ஏற்றி சரியான இடத்தில சரியான சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பெற்று  இந்த மாபெரும் வேலைத்திட்டத்தை முன் எடுக்க வேண்டும். அப்போதுதான் விலங்கு விசர் நோயை ஒழிக்க முடியும். 

 

- மரங்கொத்தி
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.