Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்!

Featured Replies

நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்!

 

மெல்போர்ன்: இந்த நூற்றாண்டில், ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக வீரேந்திர சேவாக்கின் 195 ரன் விளாசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா (வாரியம்) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட 15 பெஸ்ட் செஞ்சுரிகளை தேர்வு செய்து வருகிறது.

2000வது ஆண்டு முதல் இப்போதுவரையிலான செஞ்சுரிகள் அதில் அடங்கும்.

'Best Test Tons in Australia since 2000': Virender Sehwag's 195 at 13th spot

முதல்கட்டமாக 15 முதல், 10 வரையிலான பெஸ்ட் செஞ்சுரி பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 13வது இடத்தை சேவாக்கின் 195 ரன் பெற்றுள்ளது.

டேவிட் வார்னர் நியூசிலாந்துக்கு எதிராக 2011ல் எடுத்த 123 ரன்கள் 15வது இடத்தை பிடித்துள்ளது.

சைமன் கேட்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக 2008ல் விளாசிய 131 ரன்கள் 14வது இடத்தை பிடித்துள்ளது.

2003ல் வீரேந்திரசேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் விளாசிய 195 ரன்கள் இப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது.

ஹசிம் ஆம்லா 2012ல் எடுத்த 196 ரன்களும், குமார் சங்ககாரா, 2007ல் விளாசிய 192 ரன்களும், முறையே 12 மற்றும் 11வது இடங்களை பிடித்துள்ளன. ஏபிடிவில்லியர்ஸ் 2008ல் விளாசிய 106 ரன் 10வது இடத்தை பிடித்துள்ளது. இம்மூன்று செஞ்சுரிகளும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டவையாகும்.

முதல் 9 இடங்களுக்கான பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெட்லி, நாதன் பிராக்கன் மற்றும் ஸ்டூவர்ட் மெக்கில் போன்ற சிறந்த பவுலர்களுக்கு எதிராக சேவாக் 233 பந்துகளில் 5 சிக்சர், 25 பவுண்டரிகள் உதவியுடன் 195 ரன்கள் விளாசினார்.

சிக்சருடன் இரட்டை சதம் அடிக்க முயன்றபோது, பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து, சேவாக் அவுட் ஆனார். பிற பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அப்போட்டியில் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
ஆஸ்திரேலிய மண்ணில் விளாசப்பட்ட 10 பெஸ்ட் டெஸ்ட் செஞ்சுரிகள்.. சச்சின், லட்சுமணனுக்கும் இடம்!
 
சிட்னி: தங்கள் மண்ணில் விளாசப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் செஞ்சுரிகள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில் சச்சன் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சேவாக் ஆகியோரின் செஞ்சுரிகள் இடம் பெற்றுள்ளன.
 
ஏற்கனவே 15 முதல் 10 இடங்களுக்கான பட்டியலை ஆஸி. கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது. அதில் 13வது இடத்தை சேவாக் பிடித்திருந்தார். அவரது 195 ரன்களுக்காக அந்த கவுரவம் அளிக்கப்பட்டது.
 
முதல் இடம் இப்போது முதல் 10 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸி. வாரியம். அதில் முதல் இடம் மைக்கேல் கிளார்க்கிற்கு சென்றுள்ளது. 2012ல் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக அவர் குவித்த 329 ரன் நாட்-அவுட் இந்த புகழை ஈட்டித் தந்துள்ளது. இதில் ஆஸி. அணி, இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
 
2வது இடம் தென் ஆப்பிரிக்காவின் பாப் டுப்ளசிஸ் 2012ல், அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அடித்த 110 ரன், இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அப்போட்டி டிராவில் முடிந்தது.
 
ரிக்கி பாண்டிங் 2003ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக விளாசிய 257 ரன்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
லாரா செஞ்சுரி 2005ல் ஆஸி.க்கு எதிராக அடிலெய்டு நகர போட்டியில், வெஸ்ட் இண்டீசின் பிரைன் லாரா விளாசிய 226 ரன்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது. ஆயினும், அப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
 
மீண்டும் கிளார்க் 5வது இடம் மீண்டும் கிளார்க்குக்கு சென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த போட்டியில் 128 ரன்கள் எடுத்து அந்த அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திருந்தார் கிளார்க்.
 
ஸ்டீவ் வாக் சதம் 2002ல் சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 225 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. அதில் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் 102 ரன்கள் விளாசினார். அந்த செஞ்சுரி 6வது இடம் பிடித்துள்ளது.
 
டுமினி வெற்றி சதம் 2008ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினியின் 166 ரன்கள் உதவின. அந்த செஞ்சுரிக்கு 7வது இடம்.
 
டிராவில் முடித்த சச்சின் 2004 ஜனவரியில், சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளாசிய 241 நாட்-அவுட் ரன் 8வது சிறந்த செஞ்சுரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டி டிராவில் முடிந்தது.
 
மொத்த வித்தை இறக்கிய சச்சின் ஆஸி. கேப்டன் ஸ்டீவ்வாக்கின் பிரிவு டெஸ்ட் போட்டியான அதில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 705 ரன்கள் குவித்தது. அதற்கு சச்சினின் இரட்டை சதம் காரணம். தொடர் முழுக்க சொதப்பி வந்த சச்சின் மொத்தமாக சேர்த்து, அந்த போட்டியில் அடித்தார். இதற்காக ஆப்-சைடில் வீசப்பட்ட பந்துகளை அடிக்காமலே தவிர்த்தார். அந்த தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
 
லட்சுமண் சதம் அடித்தும் தோல்வி இப்பட்டியலில் 9வது இடம் வெரி, வெரி, ஸ்பெஷல் லட்சுமணன் என்று செல்லமாக அழைக்கப்படும் வி.வி.எஸ் லட்சுமணனுக்கு கிடைத்துள்ளது. 2000வது ஆண்டில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளாசிய 167 ரன்களுக்காக இந்த கவுரவம். அப்போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
 
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் இந்த பட்டியலில் 10வது இடம் பிடித்துள்ளவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். 2008ல் ஆஸி.க்கு எதிராக அவர் விளாசிய 106 ரன்கள் நாட்-அவுட் உதவியுடன், தென் ஆ்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/best-test-tons-australia-since-2000-tendulkar-laxman-sehwag-236501.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.