Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து தனது அவதானிப்புக்களை மக்களுக்கு வெளியிடுவது பொருத்தமானது என அவர் கூறியுள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணைகளுக்கு தனது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் ஐநா மனித உரிமைகள் பேரவை நிறுவப்பட்ட நடைமுறைக்கு புறம்பாக இந்த விசாரணை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரவையில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய சுயாதீன விசாரணைக்குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நியமிப்பது வழமையான செயன்முறை என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சுயாதீன விசாரணை ஆணைக்குழுவினால் இலங் கதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

முதல் முறையாக மனித உரிமைகள் ஆணையாளரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளரின் சுயாதீனத் தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஸ, அநேகமான சந்தர்ப்பங்களில் ஐநாவின் வழமையான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் ஆணையாளருக்கான நிதி வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி, பல மேற்குலக நாடுகள் சுயமாக முன்வந்து நிதிப் பங்களிப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் முக்கியமான பதவிகள் மேற்குலக நாடுகளின் வசமே உள்ளதாகவும், அலுவலகத்தின் அரைவாசி ஊழியர்கள் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநேகமாக ஒவ்வொரு அமர்விலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக ஊழியர் நியமனத்தில் சமமான பிராந்திய பகிர்வு இல்லாவிடின் எந்தவொரு பயனும் இல்லை என அவர் வாதிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து பக்கசார்ப்பற்ற விசாரணையை எதிர்பார்ப்பது சாத்தியமற்றது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை வலுக் குறைந்ததாக அமைந்துள்ளதாக பிரசாரம் செய்யப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஷ

எவ்வாறாயினும் இந்த அறிக்கை வலுக் குறைந்த ஒன்றாக தாம் கருதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின் ஊடாக அதிகபட்சமாக யுத்தக் குற்ற நீதிமன்றம் அமைப்பதற்கான பரிந்துரையையே செய்ய முடியும் எனவும் அந்த விடயம் இடம்பெற்றுள்ளதன் ஊடாக அவர்கள் முடியுமான எல்லை வரை சென்றுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**************************************

கொய்யால,

இந்த மாதிரி நடந்து தான், வீட்டில, ஒட்டடை பிடிக்க குந்திக் கொண்டிருக்குது மனிசன். அதுக்கிளையும் இன்னும் கிரந்தம்.

நிராகரிச்சுப் போட்டு என்ன செய்யலாமாம்? :oO:

Edited by Nathamuni

கொய்யால,

இந்த மாதிரி நடந்து தான், வீட்டில, ஒட்டடை பிடிக்க குந்திக் கொண்டிருக்குது மனிசன். அதுக்கிளையும் இன்னும் கிரந்தம்.

நிராகரிச்சுப் போட்டு என்ன செய்யலாமாம்? :oO:

பாஸ் அந்தாள் சும்மா ஏதோ தமாசுக்கு கதைக்குது. சிங்களவனை விசாரிக்கப்போறங்க என்றவுடன் நம்மவர்கள் கிளர்ந்தெழுந்த திரியை வாசிக்கவில்லையா? 

http://www.yarl.com/forum3/topic/163160-சர்வதேச-தலையீட்டுடன்-கூடிய-விசாரணைப்-பொறிமுறைமை-உருவாக்கப்பட-வேண்டும்-ஐநா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.