Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிம்பாவே எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

அன்வர் அலிக்காக ஆமீர் யமின்
 
 

article_1443361034-TAwobem4j5.jpgசிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார்.

ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர்.

எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்கெட் பெறுதி உட்பட 58 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/155165/அன-வர-அல-க-க-க-ஆம-ர-யம-ன-#sthash.Z1lLAYde.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்று நடந்த T20 போட்டியில் பாகிஸ்தான் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தான்    136/8 (20/20 ov)
சிம்பாவே         123/9 (20/20 ov)
 
  • தொடங்கியவர்

முதல் டி-20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாக்.- 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஹராரேயில் நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சோயப் மாலிக் (35), முகமது ரிஸ்வான் (33) கைகொடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே தரப்பில் சிபாபா 3 விக்கெட் வீழ்த்தினார். 137 ரன் இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வேயில், மஸகாட்ஸா 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தனி நபராகப் போராடிய கேப்டன் சிகும்பரா கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் 31 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியுற்றது. பாகிஸ்தானின் இமாத் வாசிம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/முதல்-டி20-போட்டி-ஜிம்பாப்வேயை-வீழ்த்தியது-பாக்-13-ரன்கள்-வித்தியாசத்தில்-வெற்றி/article7697650.ece

  • தொடங்கியவர்

இரண்டாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 136/6 (20 ov)

  • தொடங்கியவர்
பாகிஸ்தான்   136/6 (20/20 ov)
சிம்பாப்வே     121/7 (20/20 ov)
பாகிஸ்தான் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது
  • தொடங்கியவர்

தொடரை வென்றது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று நடந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஜி்ம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான்.

http://tamil.thehindu.com/sports/தொடரை-வென்றது-பாகிஸ்தான்/article7705363.ece

  • தொடங்கியவர்
 
சிம்பாவேயில் - பாகிஸ்தான்
 

article_1443711491-vimal.jpgபாகிஸ்தான், சிம்பாவே அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு ட்வென்டி ட்வென்டி போட்டிகள். 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இந்த தொடரில் நடைபெறவுள்ளன. இந்த தொடர் என்ன அவ்வளவு முக்கியமானதா என்ன? இல்லைதான். சிம்பாவேயில் நடந்தாலும் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது என நம்பலாம். அண்மையில் பாகிஸ்தானுக்கு துணிச்சலாக சென்று கிரிக்கெட் தொடரை சிம்பாவே நிறைவு செய்து வந்திருக்கும் நிலையில் அந்த தொடருக்காக மீண்டும் பாகிஸ்தான் சிம்பாவே செல்கின்றது. இந்த நிலையில் நாங்கள் தற்போதைய தொடருக்கு முன்னிலை கொடுப்போம். 

இம்மாதம் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் 20-20 போட்டிகளும், முதலாம். மூன்றாம், ஐந்தாம் திகதிகளில் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. சொந்த நாட்டில் விளையாடுவதனால் சிம்பாவே அணி தனது பலத்தைக் காட்டும். 5 போட்டிகளில் குறைந்தது 1 போட்டியையாவது வெற்றி பெற முயற்சிக்கும். அதற்க்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. உலகக்கிண்ண தொடரில் சிம்பாவே அணி பெரிய சவால் ஒன்றை வழங்கியது. பாகிஸ்தான் அணி மயிரிழையில் தப்பித்துக்கொண்டது. பாகிஸ்தானில்  நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்திய போதும் இலகுவான வெற்றியைப் பெறமுடியவில்லை. சிம்பாவே அணி சிறப்பாக போராடி இருந்தது. எனவே இந்த தொடரில் சிம்பாவே அணியை ஒரு முழுமையான பலமான அணியை எதிர்கொள்வதைப் போன்றே பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்க்குமிடையிலான முதற்போட்டி 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத தொடரில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு உலக 20-20 தொடரில் முதல் 20-20 போட்டி நடைபெற்றது.  இரு அணிகளும் இதுவரை 51 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 45 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் சிம்பாவே அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை 1 போட்டி சமநிலையிலும், 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையிலும் நிறைவடைந்துள்ளன. 7 ட்வென்டி, ட்வென்டி போட்டிகள் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்றுள்ளன. இவற்றில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. முதற்போட்டி 2008 ஆம் ஆண்டு உலக 20-20 தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 4 போட்டிகள் சிம்பாவேயிலும், 2 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளன. 

1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சிம்பாவே நாட்டிற்கான முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஒற்றை ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்குமிடையில் சிம்பாவேயில் 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2 போட்டிகளில் சிம்பாவே அணி வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை ஒரு போட்டி சமநிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் நிறைவடைந்துள்ளன.  

2013ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற ரீதியில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிக்கொண்டது. ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தலில்  எட்டாவது இடத்தில் 90 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் தானும் தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற நிலை உள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் 2 புள்ளிகளை இழந்து 9 ஆம் இடத்திற்கு பின் தள்ளப்படும் நிலை உள்ளது. சோகம் என்னவென்றால் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 1 புள்ளிதானும் கிடைக்கப்போவதில்லை. 

பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி ஓரளவு புதிய அணி. எனவே இந்தப்புதிய அணி இலகுவாக சிம்பாவே தொடரில் பிரகாசிக்க முடியாது. சிம்பாவே அணி பலமில்லாத அணி என்றாலும் கூட அவர்கள் சவால்களை வழங்குவார்கள். பலமான அணிகளையே தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியும் வழங்கும் அவர்கள் பாகிஸ்தானுக்கு அவ்வாறன அதிர்ச்சி ஒன்றை வழங்கினால் நாம் அதிர்ச்சி அடையத்தேவையில்லை என்றே கூறலாம்.

- See more at: http://www.tamilmirror.lk/155550/ச-ம-ப-வ-ய-ல-ப-க-ஸ-த-ன-#sthash.2y9zjejr.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாக்., அபார வெற்றி

sarfraz ahmed, pakistan

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று ஹராரேவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி  ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் அசார் அலி (11), ஷேசாத் (12), ஹபீஸ் (10) ஏமாற்றினர். சர்பராஸ் அகமது 44 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தார். இமாத் வாசிம் (61) அரை சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் (75), ஆமிர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் (16), சிபாபா (12) சொதப்பினர். யாசிர் ஷா ‘சுழலில்’ மசகட்சா (15), சிக்கந்தர் (19) சிக்கினர். சீன் வில்லியம்ஸ் 26 ரன்களில் திரும்பினார். மற்றவர்களும் விரைவில் வெளியேற, ஜிம்பாப்வே அணி 37 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 131 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார். 

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது.

http://sports.dinamalar.com/2015/10/1443720636/sarfrazahmedpakistan.html

 

சற்று முன் நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் சிம்பாவே 5 ஓட்டங்களால் வெற்றி

 

 

Zimbabwe 276/6 (50.0 ov)
Pakistan 256/8 (48/48 ov, target 262)
Zimbabwe won by 5 runs (D/L method)

 

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே அணி வெற்றி

Pakistan, Zimbabwe, Cricket, One Day International

ஹராரே: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சிபாபா அபாரம்: முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு சிபாபா (90), கேப்டன் எல்டன் சிகும்புரா (67) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். பிரைன் சாரி (39), சிக்கந்தர் ராஜா (32) ஓரளவு கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

மாலிக் அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் அசார் அலி (1), பிலால் ஆசிப் (0) மோசமான துவக்கம் தந்தனர். ஹபீஸ் (27), ஆசாத் சபிக் (1) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய சோயப் மாலிக் அரைசதம் கடந்தார். சர்பராஸ் அகமது (9), முகமது ரிஸ்வான் (8) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஆமர் யாமின் (62) தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். வாகாப் ரியாஸ் (3) ‘ரன்–அவுட்’ ஆனார்.

வெளிச்சம் குறைவு: பாகிஸ்தான் அணி 48 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு கணக்கிடப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணி 48 ஓவரில் 262 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் 256 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  சோயப் மாலிக் (96), யாசிர் ஷா (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1–1 என சமநிலை பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்., 5ல் ஹராரேயில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றி கோப்பை வெல்லலாம்.

http://sports.dinamalar.com/2015/10/1443894925/PakistanZimbabweCricketOneDayInternational.html

  • தொடங்கியவர்
தொடரை வென்றது பாகிஸ்தான்
 
05-10-2015 10:13 PM
Comments - 0       Views - 2

article_1444063615-TA0it5upk7.jpgசிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி, ஹராரேயில் இடம்பெற்ற இறுதியும், தீர்மானமிக்கதுவுமான மூன்றாவது போட்டியில் இலகுவாக 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 2-1 க்கு என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

 
- See more at: http://www.tamilmirror.lk/155810/த-டர-வ-ன-றத-ப-க-ஸ-த-ன-#sthash.gO1qcZFQ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.