Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு: அமைச்சர் சத்தியலிங்கம்

Featured Replies

வடமாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு: அமைச்சர் சத்தியலிங்கம்
வடமாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு:  அமைச்சர் சத்தியலிங்கம்

வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. 

இறுதிப்போரின் போது காயமடைந்து பலர் சுயமாக இயங்க முடியாதவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்து படுக்கையில் உள்ளனர். மீள்குடியேறிய பிரதேசங்களில் வாழும் பெரும்பாலானவர்களை வீடுகளில் வைத்து பராமரிப்பதில் பிரச்சனைகள் உள்ளன. 

இதன் ஒருகட்டமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்க முடியாத மற்றும் வீடுகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களை பராமரித்து மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நிலையமொன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வவுனியாவில் 'வைகறை' எனும் பெயரில் இயங்கி வருகின்றது. 

வடக்கு மாகாண சகாதார அமைச்சின் கீழ் இயங்கி வரும் இந்த விசேட பிரிவு வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. 

இந்த நிலையத்தில் ஒரு தடவையில் 20 முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன.

இவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், உளவளத்துறை ஆலோசனைகள் மற்றும் சக்கரநாற்காலி பயன்படுத்துதல், திருத்தம், சலப்பை முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு தமது தேவைகளை தாமாகவே செய்யக்கூடிய வகையில் புனர்வாழ்வழிக்கப்பட்டு கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். 

மேலும் இதற்கு மேலதிகமாக இவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிய பின்னர். இவர்களுக்கான விசேட மலசலகூடம் அமைப்பதற்கான மானிய உதவியும் வழங்கப்படுவதுடன் சுயதொழில் முயற்சிக்கான உதவிகளும் வழங்க மாகாண புனர்வாழ்வு திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://onlineuthayan.com/news/682

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.