Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. விசாரணை அறிக்கை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம்

Featured Replies

ஐ.நா. விசாரணை அறிக்கை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம்
ஐ.நா. விசாரணை அறிக்கை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம்

இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, அது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் என்பன இன்று ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 

இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வழங்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் உருவாக்கும் பரிந்துரை அடங்கிய 16 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அறிக்கையும், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக நிபுணர்களின் 261 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையும் இன்று விவாதத்துக்கு வருகின்றன.

இலங்கை இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 261 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த 16 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் வெளியிட்டிருந்தார்.அத்துடன் இந்த விசாரணை அறிக்கையில் இலங்கையில் கண்டறியப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காகச் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார். இது தொடர்பில் 16 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் ஆணையாளர் வெளியிட்டிருந்தார். இந்த இரண்டு அறிக்கைகளும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 

இந்த விவாதத்தில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கப் பிராந்திய நாடுகளும் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலியுறுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியன இலங்கைக்குச் சார்பாக வாதாடுமென கூறப்படுகிறது. அத்துடன் ஐ.நா ஆணையாளரின் பரிந்துரைகளில் இலங்கை நீதித்துறையை வலுப்படுத்தல், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற அவசியமான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பங்காளர் நாடுகள் வலியுறுத்தும். 

அத்துடன் பொதுநலவாய நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளடக்கிய இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைக்குப் பரிந்துரைக்கும் அமெரிக்காவின் இறுதித் தீர்மானமும் இன்று மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த இறுதித் தீர்மானத்தில் பல பரிந்துரைகளை நீக்கி பலமிழக்கச் செய்யும் நடவடிக்கையில் இலங்கை, இந்திய இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே கலப்பு நீதிமன்றம் என்ற பதம் அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டு பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அமைக்க வேண்டும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

அதற்கும் மேலதிகமாக மேலும் பல திருத்தங்களை மேற்கொண்டு அதனை மேலும் முன்மையாக இலங்கை தீவிரமாக முயன்று வருவதாக ஜெனிவா அரசியல் வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. இதனால் இன்று சமர்ப்பிக்கப்படும் அறிக்கை விவாதத்துக்குப் பின்னர் நாளையே வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

http://onlineuthayan.com/news/721

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.