Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சியும் மீட்சி தராதா?

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சியும் மீட்சி தராதா?
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சியும் மீட்சி தராதா?

இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழினத்தின் போராட்டமா னது ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்று மூன்று தசாப்தகாலம் வரை அரசுப் படைகளுக்கும்  விடுதலைப் புலிகளுக்குமிடையில் போராக நடைபெற்று வந்தது.

ஆயுதப் போராட்டம் இலங்கையின் கடந்தகால ஆட்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டு ஆறு ஆண்டு காலம் கடந்து விட்டது. முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற தமிழின விடுதலைப் போரில் தமிழினம் விடுதலை பெறாத நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான  சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரது காலத்தில் அரசுப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது இன்று வரையில் விடுதலைக்கான முடிவுக்கு காலம் வராத நிலையில் மைத்திரி ஆட்சியிலும் கேள்விக்குறியாக ஆகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பது நாடறிந்த விடயமாகும். தமிழ் மக்களுக்குதான் கடமைப்பட்டவர் என்பதை பதவியேற்றபோது,  வெளிப்படையாகக் கூறியவர். இருபது வருடங்களுக்கு மேலாக 600 தமிழ் அரசியல் கைதிகள் வரையில் சிறைகளில் வெளி உலகம் தெரியாதவாறு அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இன்னல்கள் சொல்லிலடங்காதவை. வார்த்தைகளில் கூற முடியாதவை.

தமிழ் அரசியல் கைதிகளை இந்த வருட முடிவுக்குள் விடுதலை செய்வோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகின்றோம். விசாரணைக்காக சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், விரைவில் விடுதலையாவார்கள். இப்படி ஜனாதிபதி, அமைச்சர்களான சுவாமி நாதன், விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கூறிக் கொண்டிருக்கின்றனரே தவிர, 600 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலையைத் தீவிரப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் போதாது அல்லது சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது, நடவடிக்கை எடுக்கின்றோம் எனக் கூறுவது, பின்னர் ஆறப்போடுவது என்றவாறு அவர்களின் நிலைமை இருக்கின்றது.

மூன்று தசாப்த காலப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இலங்கை நாட்டிலிருந்து இன்று வரையில் பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படவில்லை என்பதன்  அடையாளம்தான் தமிழ் அரசியல் கைதிகள் என்ற அடையாளப்படுத்தலுடன் இன்னமும்  சிறைகளில் விடுதலையடைய முடியாத நிலையில் நல்லாட்சி அரசிலும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலையும் வேதனையையும் விரக்தியையும், பொறுமையற்ற நிலைமையையும் தீவிரமாக்கியுள்ளது.

மைத்திரி  ரணில் ஒன்று சேர்ந்த தேசிய அரசு பதவியேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தன் செயற்பட்டு வருகின்றார்.கடந்த காலங்களில் நீண்ட காலமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில்  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை காற்றில் பறக்க விடப்பட்ட விடயங்களாகவே இருக்கின்றது.

மகிந்த ராஜபக்சவின் ஆட் சிக்காலத்தில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற நவம்பர் மாத வரவு செலவுத்திட்டத்தின்போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இன்றைய ஆட்சியில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ள திருமதி  விஜயகலா மகேஸ்வரன்  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்த்தரப்பிலிருந்தபோது, அழுத்தம் கொடுத்துப் பேசியிருந்தார். 2014 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவனும் மகசின் சிறைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து பொருள்களை வழங்கியதுடன், அவர்களின் விடுதலைக்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இன்று வரையில் எதுவும் நடைபெறவில்லை.

போரின் எச்சங்களாகப் பயங்கரவாதத்தின் பெயரால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இன்னல்கள், துன்பங்கள் கொடுமையானவை. 18.05.2009 அன்று அப்போதைய ஜனாதிபதியாகப் பதவியிலிருந்தவரான மகிந்த ராஜ பக்ச இலங்கை நாட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் பயங்கரவாதமற்ற ஒரு தேசத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம் என நாட்டு மக்களுக்கும், சர்வ தேசத்துக்கும் தெரிவித்திருந்தார்.

அப்படிக் கூறியவர் தனது ஆட்சிக் காலத்தில் 10 - 20 ஆண்டுகளாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தது ஏன்? போர் முடிந்து விட்டது. தமிழர்களின் வாழ்வில் சுதந்திரமும், அமைதியும் உருவாகிவிட்டது. எந்த வொரு தமிழர்களும் தனது உயிர் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் பயங்கரவாதத்தின் பெயரால் கைது செய்யப்பட்டு 10‡20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 600 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களுக்கு இன்றும் உத் தரவாதம் இல்லாத நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும், படையினரினதும், சிறைச் சாலை அதிகாரிகளாலும் சித்திர வதைப்படுத்தப்பட்டு கை, கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் கொன்றொழிக்கப்பட்டிருந்தனர்.

சிறையில் தடுத்து   வைக்கப்பட் டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எத்தனையோ விதமான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் உறவுகளாலும் மற்றும் தமிழ்க்கட்சிகள், அமைப்புகளாலும் நடத்தப்பட்டிருந்தன. இது சம்பந்தமாக மகிந்த அரசுடன் ஏராளமான பேச்சு வார்த்தைகள் நடந்தேறின. ஜனாதிபதி மைத்திரி ஆட்சியிலும் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக ஆராயப்பட்டிருந்தன. எந்தவிதமான பலா பயன்களும் கிடைக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் கேட்பதெல்லாம் தங்கள் மீது குற்றங்கள் இருப்பின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணை நடத்துங்கள், இல்லையயனில் தங்கள் மீது எந்தவிதமான குற்றச் சாட்டுக்களும் சுமத்துவதற்கு எந்த விதமான போதியளவு ஆதாரங்களும் இல்லையயனில் விடுதலை செய்யுங்கள். நிபந்தனையற்ற விடுதலை என்பதை தங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனவும் கூறிப் போராட்டங்கள் பலவற்றையும் சிறையில் முன்னெடுத்திருந்தனர்.

சிறையிலே சிறைக் கைதிகள் பலர் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா விரதப் போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.மகிந்த ஆட்சிக் காலத்தின்போது, தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைகளில் தாக்குதல்களுக்குள்ளாகினர். படையினரைக் கொண்டும் சிறை அதிகாரிகளாலும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டங் கள் ஒடுக்கப்பட்டன. இரண்டு கைதிகளின் சாவினால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையில் அவல வாழ்வைத் தொடர்ந்தபடியிருக்கின்றனர்.

மகிந்த ஆட்சியின்போது, நீதி அமைச்சராக இருந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை ஓரளவாவது ஏற்றுக் கொண்டு நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர் பார்க்கப்பட்டபோதும் பயன் பூச்சியமாகவே இருந்தது. நீதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபோது, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரணைகளை  துரிதப்படுத்தப் போவதாக உறுதியளித்திருந்தார். எதுவுமே நடைபெற வில்லை. சட்டமா அதிபர் திணைக்களமும் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைக்கான விடயத்தில் குற் றப் பத்திரங்களைத் தாக்கல் செய்யாமல் காலத்தைக் கடத்திவிட்டது.

ஒரு நாட்டின் அரசியல் ரீதியான மோதலின் காரணமாகப் படையினரால் கைது செய்யப்படுபவர்கள் தான் அரசியல் கைதிகள் என்கிற அடையாளப்படுத்தலுடன் சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றவர்களினதும் உயிருக்கு உத்தரவாதமளிப்பதும் அதற்கு பொறுப்புக் கூறுவதும் அவர்களது சுயகெளரவத்துக் களங்கம் ஏற்படாத வகையில் அவர்களது சுயகெளரவத்தைப் பாதுகாப்பதும் அந்தந்த நாட்டு அரசினதும் கட மையா கும்.

ஒரு நாட்டில் இன முரண்பாட்டு மோதல்கள் முற்று முழுதாக முடிவுற்ற பின் அரசியல் கைதிகள் என்ற பெயருடன் சிறை களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது சர்வதேச போரியல் நியதி. ஆனால் மேற்கூறப்பட்டவை யாவையுமே இலங்கையில் மகிந்த ஆட்சிக் காலத்திலும் நடைமுறைப்படுத்தப் படவேயில்லை. ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதமாகி விட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறிதளவேனும் நடவடிக்கைகளுக்குத் தயாராகவேயில்லை.

போர் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு ஏழு ஆண்டுகளாகிய நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் துயரவாழ்வுத் துன்பங்கள் பலமடங்காக அதிகரித்துவிட்டன. இனரீதியிலான துவேசங்கள் இவர்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தாயினும் மேலும் பெரும் மனப் பாதிப்புக்கள் இதனால் உண்டாகி யிருந்தது.தமிழ் அரசியல் கைதியின் சிறை வாழ்வு குறுகிய காலப் பகுதியல்ல. ஒரு பகுதிக்காலமானது இளமை வாழ்வுக்குரியது. அதனை அவர் கள் சிறையில் புதைத்துவிட்டனர். எழுதப்படாத சட்டத்தின் கீழ் நியாயமற்ற தீர்ப்பினால் தண்டனை பெற்றவர்கள் போல் இளவயது வாழ்க்கை என்னவென்று தெரியாத பிறவிகளாகி விட்டனர்.

இலங்கை பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடு, ஜனநாயகநாடு என்று கூறப்பட்டிருக்கின்ற காலப் பகுதியில் பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குள் தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் நீண்ட காலத்துக்குப் புதிய நல்லாட்சியிலும் சிறை வாழ்வை அனுபவிக்க வேண்டுமா? விடுதலை என்பது மைத்திரி ஆட்சியிலும் இல்லையா? 600 தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் யாருடைய தீர்ப்பின் பிரகாரம்  ஆயுள் தண்டனைக் கைதிகள் போல் எந்த விசாரணைகளும் இல்லாமல் 15 ஆண்டுகாலம் தொடக்கம் 20   ஆண்டுகள் வரையில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விகள் நியாயமாக இருக்கின்றது.

வவுனியாவில் பொது மக்களால், சிறைக் கைதிகளின் உறவுகளால் அண்மையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் இல்லை எனில் அவர்கள் மீது விசாரணைக்குட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும் எனக் கோரியிருந்தனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளன.

இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்த, தேசிய அரசின் நல்லாட்சி நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றது. புதிய நாடு, புதிய ஆட்சி என்று ஜனாதிபதி மைத்திரியும், பிரதமரான ரணிலும் கூறிக்கொண்டாலும் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளுக்கு வரவேயில்லை.

இலங்கையில் நல்லாட்சி மலர்ந்துள்ளதாக அரசும் தமிழ்க் கட்சிகளும் வாயாரப் புகழ்ந்தாலும் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட் டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான விடயத்தில் கவன மெடுக்காதது தமிழர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப காலப் பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இன்று வரை யில் ஒரு சிலராவது விடுதலை செய்யப்படவில்லை.

தமிழினத்தின் பார்வையில் அன்றும் சரி, இன்றும் சரி எந்த அரசாக இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் ஒரே மட்டையில் ஊறிய குட் டைகள் தான் என்பதை நன்றாக அறிந்து கொண்டவர்கள். இன்றைய நல்லாட்சியையும் இலகுவில் தமிழ் மக்கள் முழுமையாக நம்பக் கூடிய நிலையில் இல்லை. தமிழ் அரசி யல்வாதிகள் நம்பிக்கை வைத் திருக்கலாம். அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையைப் பொறுத்தது.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி  சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒன்று சேர்ந்த தேசிய அரசின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனும் துர்திர்ஷ்டவசமாகப் பெற்றுக் கொண்டுள்ளனர். மூன்று தமிழ் மாவட்டங்களிலும் மாவட்ட அபிவிருத்தி அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பையும் பெறவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து பெற்றார்களோ, இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பதவிக்கான பலத்தின் அடிப்படையில் பேரத்தின் உச்சத்தில் வைத்து தமிழினத்தின் இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் காலம் தாழ்த்தாது தமிழ் அரசியல் கைதிகளின் மீதான விடுதலைக்கான வழிக்காகவோ விசாரணைக்கான வழிக்காகவோ மைத்திரி அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் போராட வேண்டிய கடமைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குள்ள பதவிகள், அதிகாரங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண் டும். இல்லையயனில் பதவிகளை அலங்கரித்துக் கொண்டு இருப்பதில் பயனேதும் இல்லை.

http://onlineuthayan.com/article/39

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.