Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாக பகுதியில் தொடரும் அடவாடிகளும், சட்டவிரோத செயல்களும், அதனை கண்டுகொள்ளாத சுன்னாக பொலிசாரும்

Featured Replies

சுன்னாக பகுதியில் தொடரும் அடவாடிகளும், சட்டவிரோத செயல்களும், அதனை கண்டுகொள்ளாத சுன்னாக பொலிசாரும்

 
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத செயற்பாடுகளும், அடாவடித்தனங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அப்பகுதிமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
 
சுன்னாக நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வீதமாக மூன்று மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது வந்த கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்த இரு இளைஞர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தது.
 
அதற்கு முன்னரும் சுன்னாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்கள்,  குழு மோதல்கள் , மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் என பல இடம்பெற்று வந்ததனால், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் சுன்னாக பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் சுன்னாக பொலிசாரின் பொறுபற்ற செயல் தொடர்பில் தனது கடும் விசனத்தை தெரிவித்ததுடன் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சுன்னாக பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் , வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் குழு மோதல்ககளில் ஈடுபடுபவர்களை  பொலிஸ் விஷேட அதிரடி படையினரை கொண்டு கைது செய்யுமாறு உத்தரவு இட்டு இருந்தார்.
 
மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்து 24 மணி நேரத்திற்குள் காங்கேசன்துறை வீதி கொக்குவில் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்று இருந்தனர்.
 
அதேவேளை மேல் நீதிமன்ற நீதவான் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த உத்தரவு இட்டு ஓரிரு தினங்களில் சுன்னாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுன்னாக மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த 32வயதுடைய பெண் ஒருவரின் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலி கொடியினை கடந்த 25ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் அறுத்து சென்று இருந்தனர்.
 
அதேபோன்று சுன்னாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏழாலை பகுதியில் கடந்த 26ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டப்பட்டு இருந்த இரண்டு பெறுமதி வாய்ந்த ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடோன்றினுள் வாள்கள் , இரும்பு கம்பிகள் கொட்டன்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்த மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டு வேலியினையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
 
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கமான 119 வீட்டு உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுன்னாக பொலிசார் தாக்குதல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட போது அயல் வீட்டுகாரர் உடன் ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
 
அதனை அடுத்து இரு தரப்பினரையும் சமாதானமாக போகுமாறு சுன்னாக பொலிசார் கூறியுள்ளனர். அதற்கு தாக்குதலுக்கு இலக்கான வீட்டார் தாம் சமாதானமாக செல்ல விரும்பவில்லை எனவும், தாம் தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்ய போவதாகவும் கூறியுள்ளனர்.
 
அதற்கு பொலிசார் முறைப்பாட்டை ஏற்க முடியாது என கூறியதுடன் , இரு வீட்டாரும் சமாதானமாக போங்கள் என மிரட்டும் தொனியில் கூறிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சுன்னாக பொலிசாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் சுன்னாக பகுதியில் அடாவடிதனங்களும் சட்டவிரோத செயல்களும் இடம்பெற்று வருவதாகவும், தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களால் தாம் பயத்தில் உள்ளதாகவும் சுன்னாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
அத்துடன் சுன்னாக பகுதியில் இடம்பெறும் இவ்வாறன விரும்பத்தகாத செயல்களை கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொடர் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்ட சுன்னாகம் பிரதேச முக்கியஸ்த்தர் ஒருவர் இதனை தடுத்து நிறுத்த நீதித்துறையின் நேரடி தலையீடு அவசியம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.


குறிப்பாக சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கும் சட்டவிரோத குழுக்களின் பின்னணியில் பொலிசாரின் மெத்தனப் போக்கும், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளும் தொடர்வதாக தெரிவித்துள்ளார்…


ஏற்கனவே விசேட அதிரடிப்படையின் துணையுடன் சண்டியர்களை, வாள்வீச்சுக்காரர்களை, கொள்ளையர்களை அடக்குவதற்கு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டும் நீதித்துறைக்கு சவால் விடுவதனைப் போல் அடாவடித்தனங்கள் தொடர்வதாக கவலை வெளியிட்டு உள்ளார்…


இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸாரின் இந்த நடவடிக்கைகள் குறித்து வடக்கின் பிரதி பொலிஸ்மா அதிபரும், நீதித் துறையும் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என சுன்னாகம் வாழ் மக்களின் சார்பாக தான் கேட்டுக் கொள்வதாக அந்த முக்கியஸ்தர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124448/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.