Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டிக்கப்பட்டார் இலங்கைப் பிரதிநிதி - பகைமைக் கருத்துக்களை வெளியிட்டமைக்கு

Featured Replies

கண்டிக்கப்பட்டார் இலங்கைப் பிரதிநிதி - பகைமைக் கருத்துக்களை வெளியிட்டமைக்கு
கண்டிக்கப்பட்டார் இலங்கைப் பிரதிநிதி -  பகைமைக் கருத்துக்களை வெளியிட்டமைக்கு

விசாரணை நீதிமன்றில் பொதுநலவாய வெளிநாட்டு
சட்டவாளர்கள் இருப்பர்:-

மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மான முன்வரைவில் இலங்கை அரசுக்கு சார்பாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளபோதிலும், பொறுப்புக் கூறல் தொடர்பாக செயல்படுத்துவதற்கான தீர்மான வடிவின் பகுதி அப்படியே இருக்கின்றது. அது பின்வருமாறு கூறுகின்றது. இலங்கையின் நீதி விசாரணைப் பொறி அமைப்பில் பொதுநலவாய சிறப்பு ஆலோசகர் பணி மனையினதும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டவாளர்கள், அதிகாரம் பெற்ற வழக்கு தொடுநர்கள் போன்றோரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

தீர்மான வாசகத்தில் சர்வதேசம் என்ற சொல் நீக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துக்கொண்ட கடும் முயற்சியே காரணம் என்று தெரியவந்துள்ளது.விசாரணைப் பொறிமுறையை விளக்கும் வகையில் சர்வதேச (International) என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கு பதிலாக இப்போது வெளிநாட்டு (Foreign) என்ற சொல் பயன்படுத்தப்படவிருக்கிறது.

இது பற்றிய தகவல் பரவிய உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நியூயோர்க்குக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித் தூதர் மைக்கல் ஜேசிசனை சந்தித்து தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். இறுதித் தீர்மான வரைவில் சர்வதேசம் என்பதற்குப் பதில் வெளிநாட்டு என்ற சொல் இடம்பெற்றிருக்கும் என்பதுடன் விசாரணையில் பெரும்பாலும் பொது நலவாய நீதிபதிகளும் மற்றவர்களும் இடம்பெறுவதற்கு இது வழி செய்வதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.


இலங்கைத் தூதுவரின் கருத்துக்கு அரசு எதிர்ப்பு:-

அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான கலந்துரையாடல்கள் அதிகார பூர்வமற்ற முறையில் ஜெனிவாவில் இடம்பெற்றபோது இலங்கை யின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரிய சிங்க தீர்மான வரைவில் பல பந்திகள் இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சிகளில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பதாகவும் சமூகங்களை வெவ்வேறாக பிரிக்கும் தன்மை  கொண்டிருப்பதாகவும் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக மிகக் கவனமாக நகர்த்தப்பட்டுவரும் முயற்சிகளை  சீர்குலைப்பவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்னும் இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் கொழும்பில் அரச தலைவர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியிருந்தது. தூதுவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பகைமையைத் தூண்டும் வகையில் இருந்ததாக உணரப்பட்டது. அவர் சரியான பங்களிப்பைச் செய்யாததன் காரணமாகவே பிரதமர் இங்கிருந்து தொலைபேசி இராஜதந்திரத்தை மேற்கொள்ள நேர்ந்தது என்று அரசுத்தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் பிஷா இது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.ஐ.நா. அறிக்கை மீதான தீர்மானம் ஒன்றை வரைவதற்கு ராஜதந்திரிகள் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை ராஜதந்திரிகள் தமது பழைய தந்திரங்களையே பிரயோகிக்க ஆரம்பித்தார்கள். தீர்மான வரைவுக்கு ஒன்றன்பின் ஒன்றாக திருத்தங்களை இலங்கை அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். சர்வதேச பங்களிப்பு, குற்றமிழைப்பவர்கள் காப்பாற்றப்படுவது போன்றவை அடங்கலாக அறிக்கையில் காணப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் செயற்படுத்துவதிலிருந்து தடுப்பதாக அவர்களின் நடத்தை காணப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை  வெளியுறவு அமைச்சு அவருக்கு அனுப்பிய ஒரு பணிப்புரை ஊடகங்களுக்கு  அவர் தமது கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி அறிக்கைகள் விடுப்போர் கொழும்பு ஊடகங்கள் மூலமாகவே அதனை செய்யும்படி அறிவித்துள்ளது. இதன் கருத்து அவர்தம் அறிக்கையை  இங்குள்ள அமைச்சுக்கு அனுப்ப வேண்டும். அதனை வெளியிடுவதா இல்லையா என்பதை அமைச்சு அதிகாரிகளே முடிவு செய்வர் என்பதாகும்.ராஜபக்ச காலத்தில் இருந்து ஆரியசிங்க ஜெனிவாவில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்து வருகிறார். கடந்த காலத்தில் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் கடுமையாக விமர்சிப்பவராகவும் இருந்துள்ளார்.

த.தே.கூ வரவேற்பும் அதற்கான காரணமும்:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செப்ரெம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவிருக்கும் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள தீர்மான வரைவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.சர்வதேசக் குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணையுடன் இலங்கையில் நிறுவப்படவிருக்கும் பொறி அமைப்பில் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நீதிபதிகள் சட்டவாளர்கள், புலனாய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக்கொள்வதான தீர்மான வரைவை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையில் நீதியின் வெற்றிக்கு இது முக்கியமானதொரு வழிமுறையை உருவாக்குவதாய் உள்ளது. அவ்வாறானதொரு நீதிமன்றத்தை தோற்றுவிப்பதற்கும் அதன் செயற்பாட்டுக்கும் இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கும் உதவ வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. இந்தத் தீர்மான வரைவுக்கு இலங்கை சம்மதம் தெரிவித்திருப்பதற்கும் அதனை மனித உரிமை சபையில் இணைந்து முன்வைக்க ஒத்துக்கொண்டமைக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

இந்த வகையிலான நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுவதானது குற்றம் புரிந்தவர்களை தண்டிக்காமல் விடும் முன்னைய நிலைமைகளிலிருந்து விடுதலை  பெறுவதற்கான ஆரம்பத்தை குறிப்பதாக இருக்கும். வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தீர்மான வரைவு மிகக் கடுமையான ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியின்  பலாபலனாக இருந்தது. ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தீர்மான வரைவில் சேர்க்கப்பட்டுள்ள மொழியானது பாதிக்கப்பட் டுள்ள அனைவருக்கும் திருப்தியளிப்பதாய் இருக்காது என்பதை நாம் அறிவோம்.

அவர்களை நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். த.தே. கூ. மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இருந்தபோதிலும் நல்லிணக்கத்தை நோக்கிய தவிர்க்கமுடியாத நீண்ட பாதைக்கு இந்தத் தீர்மானவரைவு ஆக்கபூர்வமான ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தீர்மான வரைவு தொடர்பாக பின்வருமாறு கூறியுள்ளார்.

அரசின் அர்ப்பணிப்பை வரவேற்கின்ற அதேநேரம் தீர்மானத்தை மற்றும் ஆணையாளரின் பரிந்துரைகளையும் செயற்படுத்துவதில் தான் முன்னேற்றத்துக்கான உண்மையான சவால்கள் தென்படப் போகின்றன. வெறும் வார்த்தைகள் பயனளிக்க மாட்டாது என கூறினார் அவர்.அமெரிக்காவின் தீர்மானவாசத்தின் முகவுரைப் பகுதியில் காணப்படும் முக்கிய குறிப்புக்களில் சில பின்வருமாறு:

பாதுகாப்புப் படையணிகளின் சகல மட் டங்களுக்கும் தெளிவான பணிப்புரைகளை விடுத்து கைதிகளை வதை செய்தல், வன்புணர்வுக்கு உட்படுத்தல், பால்நிலை வன்செயல்களுக்கு உட்படுத்தல் உட்பட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித இனத்துக்கு மாறான செயல்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் இவைகளுக்குப் பொறுப்பானவர்கள் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கப்படுகின்றது.

மேலும் எல்லாவித பால்நிலை மற்றும் வன்புணர்வு வன்செயல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் அனைத்தையும் அரசு விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க ஊக்கமளிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் போன்ற செயற்பாடுகளின் முன்னேற்றத்தை தொடர்ச்சியாக ஆய்வு செய்து சபையின் முப்பத்திரண்டாவது மாநாட்டில் வாய்மூலமானதொரு அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் அதன்பின் 34 ஆவது மாநாட்டில் தீர்மானம் செயற்படுத்தப்பட்டிருப்பதற்கான விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து அதன்மீது விவாதம் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளரின் பணிமனை கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

இலங்கை அரசை சபையின் சிறப்பு ஆணை பெற்ற பணியாளர்களுடன் ஒத்துழைக்கும் படியும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களுக்கு முறைப்படி பதிலளிக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றது.

இலங்கை மீது தங்கியுள்ள மிகப்பெரிய பொறுப்பு:-

புதன்கிழமை (நேற்று)  மனித உரிமைகள் சபையில் தாக்கலாகும் தீர்மான வரைவின் கூட்டு முன்மொழிவாளராக இப்பொழுது இலங்கையும் இணங்கியிருப்பதால் இலங்கை அரசின்மீது மிகப்பெரிய பொறுப்பொன்று சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அரசு செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதியுடன் பேணவேண்டியது மிக முக்கியமாகின்றது. பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும்போது அவைகளை பகிரங்கப்படுத்துவது இரண்டு காரணங்களுக்காக முக்கியமாகின்றது. 

ஒன்று அரசு முன்னெடுக்கும் எல்லாக் காரியங்களின் போதும் மக்களை தன்னுடன் இணைத்துச் செல்ல வேண்டும். அடுத்தது இன்னும் மிக முக்கியமானது என்னவென்றால் இந்தச் செயற்பாடுகளை அரசியல் காரணங்களுக்காக குழப்பிவிட முனைபவர்களை ஓரம் கட்டுவது. இவ்வாறான நடவ டிக்கை கசப்பானதாக இருந்தாலும் அவைகளை குழப்பியடித்து நிகழ்வுகளை  உருவாக்க முயல்பவர்களின் தகிடுதத்தங்களுக்கு இடம் கொடுத்து விடாமல் மக்கள் நம்பிக்கையை வெற்றிகொண்டு மேலே செல்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

http://onlineuthayan.com/article/41

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.