Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டதாரிகள் போராட்டத்துக்கு முடிவுதான் என்ன?

Featured Replies

பட்டதாரிகள் போராட்டத்துக்கு முடிவுதான் என்ன?
பட்டதாரிகள் போராட்டத்துக்கு முடிவுதான் என்ன?

வேலையில்லாத பட்டதாரிகள் வடக்கு மாகாண சபை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெளிவந்த செய்திகள் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

படித்துவிட்டு வேலை எதுவுமின்றி இருக்கும் இளைஞர்கள் விரக்தியின் எல்லையைத் தொட்டதன் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையும் இல்லை, வருமானமும் இல்லை என்றால் கைச் செலவுக்குக் கூடப் பிறரது கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையில் இவர்கள் உள்ளனர்.

ஒரு காலத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்று விட்டாலே அரச வேலையொன்று நிச்சயம் என்றதொரு நிலை காணப்பட்டது. பட்டதாரிகள் எவரும் வேலையின்றி இருக்கவுமில்லை, வேலை தேடிப் போராட் டத்தில் ஈடுபடவுமில்லை  இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களை விட, இந்தியாவில் பட்டம் பெற்றவர்களுக்கும் இங்கு வேலை வாய்ப்புக்கள் தாராளமாகக் கிடைத்தன. அப்போதெல்லாம் இந்தியாவில் எம்.ஏ படித்தவர்கள் சிலர் தேநீர்க் கடைகளில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டதுமுண்டு.

அந்த அளவுக்கு அங்கு வேலையில்லாத பிரச்சினை உச்சக் கட்டத்தில் இருந்தது. இன்று அந்த நிலை எமது நாட்டில் உருவாகி விட்டது. மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் உயர் கல்வி வழங்கப்படுகின்றது. பின்னர் வெற்றிடங்களுக்கு ஏற்ற வகையில் நியமனங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் உயர் கல்வியைக் கற்று முடித்தவர்கள் வேலைதேடி அலைகின்ற நிலை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஒரு பட்டதாரியாகிவிட்டால், போதும் என்ற எண்ணமே இங்குள்ள இளைஞர்கள் பலரின் இலட்சியமாக உள்ளது. ஆனால் தாம் பெற்றுக் கொள்ளப்போகும் கல்வி இந்த நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமா என எவருமே எண்ணிப் பார்ப்பதில்லை. பட்டங்களைப் பெற்று விட்டு வேலை தேடிப் போராட்டங்களில் ஈடுபடவே இவர்களால் முடிகின்றது.

அபிவிருத்தியைப் பொறுத்தமட் டில் நாட்டின் தென் பகுதிக்கும், வட பகுதிக்கும் இடையில் பெரிய தொரு  இடைவெளி காணப்படுகின்றது. தெற்கில் தொழிற்சாலைகள் பல அமைந்துள்ளதால் அங்குள்ளவர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.அங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் வடபகுதிக்கு எடுத்து வரப்பட்டு பெருமளவில்  விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இங்கு தொழிற்சாலைகளை அமைப்பதில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

முன்னர் போரைக்  காரணம் கூறி தொழிற்சாலைகள் அமைப்பது உட்பட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் அரசு அசமந்தமாக இருந்தது. ஆனால் போர் ஓய்ந்து ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறானதொரு நிலை நீடிப்பதை இனப்பாகுபாட்டின் வெளிப்பாடு எனவும் கொள்ள முடியும்.

முன்னர் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் என்பன சிறப்பாக இயங்கி வந்ததால் வடபகுதி மக்கள் பலரும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் உள்ளூர் மூலப் பொருள்களைக் கொண்டு சிறிய கைத்தொழில் முயற்சிகளும் இடம்பெற்று வந்தன. ஆனால் இன்று அந்த நிலை காணப்பட வில்லை.ஓரளவு கல்வியைப் பெற்றுவிட்ட எமது இளைஞர்கள் கூட, அலுவலகங்களில் பணியாற்றுவதையே பெரிதும் விரும்பி நிற்கின்றனர். உடைகள் கசங்காத வகையில் பணியாற்ற வேண்டும் என்பது தான் இவர்களது இலட்சியமாகவும் உள்ளது.

தொழிற் கல்வியயான்றைப் பெறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தற்போதைய நவீன உலகில் ஏதாவதொரு தொழிற் கல்வியைப் பெற்றுக் கொள்வது அவசியமாக உள்ளது. இதன் மூலமாகவே தொழிலையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பொருத்தமான கல்வித் தகைமை உடையவர்களுக்கு எப்போதுமே தொழில் வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆகவே இளைஞர்கள் இதில் கூடிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அவர்களது விரக்தியான மனநிலையைப் புடம்போட் டுக் காண்பிக்கின்றது. அவர்களுக்கு ஏதோவொரு வேலை வேண்டும். அதுவும் அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு வேண்டும். ஆனால் இதற்குத் தீர்வு காண்பதற்கு மாகாண சபைக்கு அதிகாரமோ அல்லது தேவையான வளங்களோ உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண் டும்.

ஏனென்றால் அதிகாரங்கள் யாவும் மத்திய அரசிடம் குவிந்துள்ள நிலையில் மாகாண சபையை நம்பி இருப்பதில் பயனொன்றும் இல்லை. பட்டதாரிகளின் போராட் டம் தொடர்பாக மத்திய அரசுக்குத் தெரிவிக்க மட்டுமே அதனால் முடியும். போராட்டக்காரர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரே  பதவி வகிக்கின்றார். அவரும் தமது சக்திக்கு ஏற்றவகையில்தான் வேலையில்லாத பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டதால் அவர்களாலும் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.ஆண்டுதோறும் புதிது புதிதாகப் பட்டதாரிகள் இங்கு உருவாகத்தான் போகின்றனர். இவர்களும் நாளை வேலைதேடிப் போராடத்தான் போகின்றனர். இதற்கு முடிவுதான் என்ன?

http://onlineuthayan.com/article/42


Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.